காலவெளிக் குமிழியில் காசி

This entry is part 3 of 3 in the series காசி

அநித்தியம், முடிவு, பிறப்பு-இறப்புச் சுழற்சி, வாழ்க்கையின் அர்த்தம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று பல தெளிவில்லாச் சிந்தனைத் துணுக்குகள் தீப்பொறிகள் போல் மனதில் எழுந்தன. இவ்விடத்தை விட்டு நகர்ந்த உடன், காற்று புகையைக் கலைப்பது போல், அன்றாடத்தின் விசை இந்த எண்ணங்களைக் கலைத்துப் போட்டுவிடும் என்று தெரிந்திருந்தும், ‘மா குரு தன ஜன யௌவன கர்வம் ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்’ என்று சில வினாடிகளுக்காவது எண்ண வைக்கும் இடங்களில் ஹரிஷ்சந்திரா படித்துறையும் ஒன்று. ஒரு சில வினாடிகளே இருந்தாலும், வாழ்க்கை என்னும் அபத்தம் தீ நாக்குகளாக, அடர் புகையாக மனதில் புகுந்து கமற்கிறது.