முடிவாக ஒரு முதன்மைக் கோடு!

ஒரு கடிகாரம் இயங்க வேண்டுமென்றால் சீரான இடைவெளியில் திரும்பத் திரும்ப நிகழும் ஓர் இயக்கம் தேவை. பெண்டுலம் கடிகாரத்தில் ஊசல் (Pendulum) ஆடுகிறது. குவார்ட்ஸ் கடிகாரத்தில் படிகம் (Quartz) அதிர்கிறது. அதே போல அணுக்களுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. குறிப்பிட்ட அதிர்வெண்ணில் மின்காந்த அலைகளைச் செலுத்தும் பொழுது அவை ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுகின்றன. இந்த அதிர்வெண் ஒரே வகையான அணுக்களுக்கு அவை உலகில் எங்கிருந்தாலும் ஒன்றாகவே இருக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு மிகத் துல்லியமான கடிகாரங்களை உருவாக்க முடிந்தது.