தானாக இசைக்கும் பியானோ ராயல்டி கேட்குமா 

This entry is part 12 of 12 in the series காப்பிரைட் கதைகள்

புதிய சட்டம், இயந்திரங்கள் மூலம் ஒரு பாடலை பிரதி எடுப்பதை மையமாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டது. பியானோ ரோல், போனோகிராஃப் தட்டுக்கள், போன்ற வடிவங்களில் பாடல்கள் வெளியானால், அவை “இயந்திரங்கள் மூலம்  மீட்டுருவாக்கம்”  செய்வதாக கருதப்படும் என்று சொன்னது புதிய சட்ட விதிமுறை. அப்படி மீட்டுருவாக்கம் செய்வதை அனுமதிக்க இசையமைப்பாளர்களுக்குத் உரிமை வழங்கியது.  காப்பிரைட் பெற்ற ஓர் இசைப்படைப்பை இப்படி இயந்திரங்கள் மூலம் மீட்டுருவாக்கம் செய்ய விரும்பும் எவரும் காப்பிரைட் உரிமை கொண்டவரிடம் அனுமதி பெறலாம். அதற்கு பாடலுக்கு இரண்டு சென்ட் ராயல்டி செலுத்த வேண்டும். அந்த ராயல்டி “மெக்கானிக்கல் ராயல்டி” என்று வரையறை செய்யப்பட்டது.