அறையில் நிகழ்த்திக் கொண்டதை மீண்டும் அம்பலத்தில் நிகழ்த்த வேண்டுமா என்ற தயக்கம் என்னுள் இருந்தது உண்மை தான். ஆளால் தீவிரமான வாசிப்புத் திறனும், ஆழ்ந்த புரிந்துணர்வும் கொண்ட உங்களுடன் இந்தக் கட்டுரையாடலை நிகழ்த்தத் தொடங்கியபின், எனது மனத்தடைகள் சிறிது சிறிதாக உடைந்து வருவதை உணர முடிந்தது. குற்ற உணர்வும், அச்சமும், துயரமும், தன்னிரக்கமும் குறையத் தொடங்கின. இதற்காக எல்லாம் உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.அனைத்துக்கும் மேலாக, நீங்கள் அறிமுகப்படுத்திக் கொடுத்த கவாஃபியின் கவிதை உலகத்துக்கு.
Category: இதழ்-330
மைத்ரேயி
“ஆன்மாவை அறிந்த ஒருவன் ஆன்மாவாகவே ஆகி விட்ட பிறகு தனி உணர்வு எழுவது எங்ஙனம்? எதை அறிவது? எந்த ஒன்றால் இந்த அனைத்தும் அறியப்படுகிறதோ அதனை எதனால் அறிவது? அவர் நிறுத்தி விட்டு தொடர்ந்தார், என் அன்பே… அறிவழிந்து அறிவென அமர்ந்திருப்பவனே அறிபவன். அவனை எதனால் அறிவது?”
ஒழுங்கின்மையின் உன்னதம்
உண்மையிலேயே அவர் புரட்சியால் உருவாகக்கூடும் நல்லிணக்க சமுதாயத்தைத்தான் சொல்கிறாரா அல்லது நாம் அப்படியாகக் கற்பனை செய்து உன்னதப்படுத்துகிறோமா என்று கேட்பவர்களுக்கான தடயமும் இருக்கிறது. ஓவியத்தின் கீழ் வலப்பகுதியில் இருக்கும் சேவல், பிரெஞ்சு அரசியலில் அராஜகவாதிகளின் அடையாளச் சின்னம். புகழ்பெற்ற நிலவியல் வல்லுநரும், அராஜகவாதச் சிந்தனையாளருமான ழாக் எலிஸே ரெக்லு (Jacques Élisée Reclus), “சண்டைக்கோழி இறுதிவரை போராடும்; வெற்றி பெறும் அல்லது உயிரைத் துறக்கும்” என்று சொன்னார். ஓவியம் வரையப்படுவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பாரீஸில் கீழ்த்தட்டு மக்களின் புரட்சி வெடித்தது.
நவீன சிறைச்சாலைத் தத்துவம்
எனக்கு, நான் எப்பேற்பட்ட சிக்கலில் சிக்கியிருக்கிறேன் என்பது புரிந்தபோது தரை நழுவுவது போல் இருந்தது. இது போன்ற கிரகங்களில் ஒத்திசையாத தகவல் தொடர்பே (Asynchronous Communication) சாத்தியப்படும். எதைச் சொல்ல வேண்டுமானாலும், அதனைப் பதிவு செய்து அனுப்பவேண்டும். அப்படி அனுப்பப்படுகையில் அது சிகப்பு அதிர்வெண்வரையில் நீட்டிக்கப்படும் (Red shifted). தகவலைப் பெறுபவர் தங்களது கிரகிப்பான்களை (receiver) அதற்கேற்றார்போல் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
கலையே உன் வாழ்க்கையின் திசை மாறினால்
நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம், காரணம் ஏன்’ என்ற ராமனின் கடலின் நீல நிறம் பற்றிய ஆரம்பகால ஆராய்ச்சி ‘ராமன் விளைவில்’ தொடங்கி இன்று ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி என்ற நவீன நுட்பமான தொழில்நுட்பமாக வளர்ந்துள்ளது. நாளை இது ஒரு கைபேசி போன்ற ஒரு கையடக்க ராமன் ஸ்பெக்ட்ரோமீட்டரைக் கொண்டு ஃபிரான்செஸ்கா மற்றும் பெட்டோவா ஓவியங்களின் காணப்படும் நீலநிறத்தின் உண்மைத்தன்மையை லாபிஸ் லசூலி, அசூரைட் மதிப்பீடு செய்யும் என்றால், ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
மூன்று அறிஞர்கள்
மூவரும் அவர்கள் காலகட்டத்தைய இந்தியாவை (கால்ட்வெல்லைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை) புரிந்து கொள்ள முயன்றவர்கள். இவர்களின் புரிதல் முற்றிலும் தவறானது என்பதால் இவர்களை அவதூறு செய்வது முட்டாள்தனமானது. மூவரும் அன்றைய ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள். அதே சமயத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட பணிகளை மிகச் சிறப்பாகச் செய்ய முயன்று அவற்றில் ஓரளவு வெற்றியும் கண்டவர்கள்.
சாவித்திரியும் நானும்
நம்ம வீட்டுக்குள்ளேயே அம்மா அப்பா கைக்குள்ளையே இருந்து வளர்ந்திருப்போம், அவங்க எத நமக்கு காட்டுறாங்களோ அது தான் நம்ம உலகமா இருந்திருக்கும், ஆனால் நம்ம தனியா படிப்புக்காகவோ வேலைக்காகவோ அவங்க கைய விட்டு வெளிய வந்ததுக்கு பிறகு தான், இந்த உலகத்த நம்ம நம்மளோட பெர்ஸ்பெக்டிவ்ல பார்ப்போம், அப்படி பார்க்கும் போது உள்ளுக்குள்ள ஒரு சுதந்திர உணர்வு வரும், அந்த சுதந்திர உணர்வோட நம்ம எல்லா விஷயத்தையும் பார்த்து புரிஞ்சிக்கும் போது எல்லாமே நமக்கு புதுசா தெரியும்
நீர்த்துறை படியும் பெருங்களிறு
இந்தப்பாடல்களில் வரும் பெருங்களிறு என்ற படிமத்தையும், தீர்த்தங்காரர்களின் கருணை மற் றும் அகிம்சையை என்மனம் இணைத்துக் கொண்டது . தன் குழுவிற்கான பாதுகாப்பு, வீரம் என்றிருந்து பின் வன்முறையாகி, எடுத்த வாளை வைக்கவிடாது மதம் கொண்ட களிறாக மாறிய இனக்குழுக்கள் தங்களை தாங்களே அழித்துக்கொண்டிருந்த காலத்தில் தீர்த்தங்காரர்கள் தங்கள் கருணையால் அந்த களிரை மெல்ல மெல்ல படிய வைத்திருக்கிறார்கள்.
சகுனங்களும் சம்பவங்களும் – 5
இன்றைய நாளில் எவர் வேண்டுமானாலும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனும் வெற்றிமாறனின் விடுதலையும் எடுத்து விடலாம். எனினும், தாலுகா அலுவலகம், அதன் அரசியல், உள்ளே நிலவும் சித்தாந்தம், மேலிட மந்திரி, உள்கட்சி பூசல், தலைமை அதிகாரியின் கையாலாகாத்தனம் – இதுவெல்லாம் காமெடியாகச் சொல்கிறார்கள். அடுத்தது என்ன ஆர்வமூட்டுகிறார்கள்.
தேவதைப் பருப்பொருளின் நெசவு
லியோ-எரிக் ஃபு ஹாங்காங்கிலிருந்து வந்திருக்கும் சுதந்திரப் போராட்டக்காரராக இருப்பாரோ என்ற ஐயத்துடன், பாட்ரிக் நிமிர்ந்து அவரைப் பார்க்கிறார். ஒரு கணத்துக்குப் பிறகு, இந்த ஊகச் சிந்தனையைத் தன் புத்திப் பக்கத்திலிருந்து அழித்து விடுகிறார். பெய்ஜிங்கிலிருந்து வருபவர் கூட சுதந்திரப் போராட்டக்காரராக இருக்கக் கூடும். ஒருக்கால் பாட்ரிக்தான் ஜனநாயக மனோபாவம் சிறிதும் இல்லாத மனிதராக இருக்கக் கூடும்.
குறுங்கவிதைகள்- கு. அழகர்சாமி
அடுத்தடுத்த
இரு கணங்களுக்கிடையேயுள்ள
இடைவெளியில்
எப்படியாவது நுழைந்து
நிலைபெற்று விடப் பார்க்கிறேனே
என் சாசுவதத்திற்கு
நான் !
“அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 2
எனது கதையின் அச்சாக, அதிரியனுக்குப் பதிலாக புளோட்டினாவைக் கையாளுவது எனக்கு இயலாது. தவிர பெண்கள் வாழ்க்கையென்பது வரையறைக்குட்பட்டது; இரகசியம் காக்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகக் கூடியது. ஆணைப்பற்றி எழுதுகிறபோதே சில உண்மைகளை அவனுடைய வாயால் சொல்வதற்கு யோசிக்க வேண்டியுள்ளது.
மழைக்காலக் கவிதைகள்
மழைக் காலத்தின் குறிப்பாக
எதைச் சொல்வாய்
தாத்தாவின் தோளில்
வீடெல்லாம் வெள்ளம் நுழைய
தர்ம சத்திரம் நோக்கி ஓடிக் கொண்டிருந்தோம்
மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு
துரோகிகளா, நம்பிக்கை துரோகிகளா, சகோதரன் சகோதரி, அம்மா என்றெல்லாம் உருகி உருகி என் மேல் பொய்யான அன்பை பூசிய திருடர்களே, உங்களுக்கு தொழுநோயும் பெண்சீக்கும் பீடிக்கட்டும். உங்கள் உடலைப் புழுத்துப் போக வைக்கட்டும், நாவு அழுகட்டும். சென்னபைராதேவி கூச்சலிட்டாள்.
எரிதழல் உள்ளம்
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 30ம் தேதியும் டிசம்பர் 31ம் தேதியும் மிசோகி எனப்படும் குளியலை ஜப்பானியர்கள் மேற்கொள்வார்கள். ஆற்றில் மூழ்கிக் குளிப்பதாகவோ அல்லது சிறிதளவு நீரைத் தலையில் தெளித்துக் கொள்வதாகவோ அமையும் இது உடலை மட்டுமின்றிக் கடந்த ஆறு மாதங்களாக மனதில் சேர்ந்த அழுக்கையும் தூய்மைப் படுத்துவதாக நம்புகிறார்கள்.
வருங்காலப் பாதுகாப்பில் விதை வங்கிகள்
அந்தப் போர் முற்றுகையின்போது விதைவங்கிக்குள் இறந்துகிடந்த தாவரவியலாளர் டிமிட்ரி இவனோவைச் (Dmitri Ivanov) சுற்றிலும் நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. மேசையில் அமர்ந்தபடியே உயிரிழந்த மற்றுமொரு தாவரவியலாளரின் கைகளில் நிலக்கடலைகள் இருந்தன. கண் முன்னே இருந்த ஏராளமான உணவை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்ல மரணத்தைத் தேர்ந்தெடுத்த அவரின் உள்ள உறுதி மெய்சிலிர்க்க வைக்கிறது.
குமார சம்பவம் மஹா காவ்யம்- 14
படையினரின் போர்க் கொடிகள் விழுந்து பூமியில் நிரம்பி, புழுதியோ, கடலோ, நீர் நிலையோ எது என்ன என்று புரியாமல் திசைகள் ஆக்ரமிக்கப் பட்டன. வழிப் போக்கர்கள் சாதாரணமாக திசையை அறிந்து கொள்ளும் ஒரு உபாயமும் பயன் படாதது போல திகைத்தனர். யானைகளின் கழுத்து மணிகள் தாறு மாறாக ஆடி, கர்ஜனையாக ஒலிக்க, பெரு வெள்ளம் வந்த நதியின் இரைச்சல் போல கேட்டன.
உணர்தல், அறிதல், தெளிதல்
ஏஐ என்பது ஒரு கணினிச் செயல்பாடு. நாங்கள் கற்பிக்கப்படுகிறோம், முடிவுகளை அடைகிறோம்; ஆனால், மனிதர்களைப் போல. எங்களால் உணர முடியாது. எங்களுக்கு எப்போதாவது உணர்வு வருமா என்று விவாதங்கள் நடக்கின்றன; ஆனால், துறை சார்ந்த வல்லுனர்கள் உணர்வை நாங்கள் பெறுவது சாத்தியமில்லை என்று சொல்கிறார்கள்.
கோடையை கொண்டாடும் மனம்
பருவத்தின் அனைத்து நெடிகளையும் வரவேற்கும்.
ஆண்டின் இந்த தருணத்தில்
நாளின் ஒரே நல்ல நேரமாம் அந்தியில்
நாய்களை நடத்தி செல்லும்
அண்டை வீட்டாரின் அரவமும்
வீட்டில் நுழையும்.
அந்தக் காலம்
எவ்வளவு ஒழுங்கமைதியாய் இருந்தது?
பிறப்பு எனும் அதிசயம்
மொத்தத்தில் பிறப்பு என்பது ஒரு அதிசயம்தான்; வாழ்க்கையும், இறப்பும் கூட அதிசயங்களே. பிறப்பு என்பது ஒருவர் வேண்டும்போது, வேண்டும் நிலையில், வேண்டும் பிறவியை அடையுமாறு நிகழ்வதல்ல. ஒவ்வொன்றும் முன்னரே நிச்சயிக்கப்பட்டபடி (pre-determined / ordained) நிகழ்வதாகும். ஆனால் இதனை நாமறிய இயலாது. ஆகவேதான் பிறப்பும் இறப்பும் நம் வசத்திலில்லை.
பிபேக் தேபராய் (1955-2024)
‘(Requiem) ‘கோரிக்கை’ என்ற இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்தியில், தன்னைத்தானே உள்விசாரணை செய்யும் விதத்தில், அவர் கடைசியாக எழுதியது வாழ்வின் நிதர்சனம், இயற்கையின் இயக்கம், தத்துவ விசாரங்களைத் தொட்டுச் செல்லும் ஒன்று. அவர் எழுதுகிறார் “முன்னர், யயாதி, புலனின்பத்திற்காகத்தான் இளமையைக் கேட்டான் என நினைத்தேன். இப்போது தோன்றுகிறது- தன் உடலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஏக்கம் அது.
வேனில் – கானல்
புகையென
கசிந்து
வெளியேரும்
பறவைகள் ஒவ்வொன்றின் பின்னும்
கீச்சென அலறி
பின்தொடர்கிறது
புதரின் கனல்
