அந்தப் போர் முற்றுகையின்போது விதைவங்கிக்குள் இறந்துகிடந்த தாவரவியலாளர் டிமிட்ரி இவனோவைச் (Dmitri Ivanov) சுற்றிலும் நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. மேசையில் அமர்ந்தபடியே உயிரிழந்த மற்றுமொரு தாவரவியலாளரின் கைகளில் நிலக்கடலைகள் இருந்தன. கண் முன்னே இருந்த ஏராளமான உணவை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்ல மரணத்தைத் தேர்ந்தெடுத்த அவரின் உள்ள உறுதி மெய்சிலிர்க்க வைக்கிறது.
