- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- புல்நுனியில் பனிமுத்து
- கொடிவழிச் செய்தி
- இறை நின்று கொல்லுமோ?
- காணும் பேறைத் தாரீரோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்
- ஜப்பானிய பழங்குறுநூறு 47-50
- வலிவிடு தூது
- வாள்போல் வைகறை
- நெஞ்சம் மறப்பதில்லை
- நிலவினும் நெடிது!
- இடம் மாறினும் மணம் மாறுமா?
- காவலும் தாண்டுவது காதல்
- பனிவிலகலில் அக்கரை வெண்மை
- எனக்கெனவே மலர்ந்தாயோ?
- விழியிலிருந்து நினைவுக்கு
- உள்ளும் புறத்தும் தனிமையே!
- காதல்மொழிகள் கடலலை போலே!
- கேட்டதும் கிடைத்ததும்
- துள்ளிவரும் வெள்ளலையே!
- இடம்பெயரும் புள்ளினங்காள்!
- மைக்குழற் செறிவன்ன காதல்
- துயரறுத்தலே துயரமோ?
- உள்ளத்தில் உள்ளேனா?
- தூவானமும் வெண்வானமும்
- ரகசியமானது காதல்
- உடைகளும் சுமையடி தனிமையிலே!
- காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!
- துன்பம் போக்குவதே தூயப்பணி
- எரிதழல் உள்ளம்
- துயர்சூழ் உலகில் தனிமை
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
こぬ人を
まつほの浦の
夕なぎに
焼くやもしほの
身もこがれつつ
கனா எழுத்துருக்களில்
こぬひとを
まつほのうらの
ゆふなぎに
やくやもしほの
みもこがれつつ
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: புலவர் சதாய்யே
காலம்: கி.பி. 1162-1241.
இப்பாடல் தொகுப்பைத் தொகுத்தவர் இவர். இத்தொடரின் 83வது பாடலின் (துயரறுத்தலே துயரமோ?) ஆசிரியர் தொஷினாரியின் புதல்வர். அரசவையில் மூன்றாம் நிலை அதிகாரியாகப் பதவி வகித்திருந்தாலும் வரலாறு இவரைப் புலவராகவே நினைவு கூர்கிறது. இந்தப் பாடல் தொகுப்பு மட்டுமல்ல. ஷின் கொக்கின்ஷூ மற்றும் ஷின்ச்சோக்குசென்ஷூ உள்ளிட்ட பல தொகுப்புகளையும் இவர்தான் தொகுத்தார். பல இடைக்கால இலக்கியங்கள் இன்றும் ஜப்பானிய வரலாற்றில் நிலைபெற்றிருக்க இவர்தான் காரணம் என்றால் அது மிகையல்ல. இவை தவிர, ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 465 தனிப்பாடல்கள் ஷூய்கூசோ எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
பாடுபொருள்: காதலனுக்காக ஏங்கும் வலியை உரைத்தல்
பாடலின் பொருள்: முடிவில்லாமல் காத்திருந்து காத்திருந்து மட்சுஹோ நதிக்கரையில் எரியும் கடற்பாசிகள் போல் என் உள்ளமும் எரிந்துகொண்டே இருக்கிறது.
இப்பாடலாசிரியர் சதாய்யேவின் பாடல்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள் குறிப்பிடும் ஒரு கருத்து, இவர் பழைய பாடல்களின் கருவை எடுத்துப் புதிய வடிவத்தில் தருபவர் என்பது. இப்பாடலின் கருத்து இதற்குமுன் தொகுக்கப்பட்ட மான்யோஷு தொகுப்பின் 935வது பாடலிலிருந்து பெறப்பட்டது என்கிறார்கள்.
இப்பாடலில் பழங்காலத்தில் உப்பு தயாரிக்கப்பட்ட முறை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக உலகெங்கும் கடற்கரையோர உப்பளங்களில் பாத்திகட்டிக் கடல்நீரை நிரப்பி அதை ஆவியாகச் செய்து மீந்து படியும் உப்புப்பாளங்களைத் தூய்மைப்படுத்தி உப்பு தயாரிப்பார்கள். ஜப்பானிலும் அதுபோல உப்பு தயாரிக்கப்படுவதுண்டு. ஆனால் ஜப்பானியர்களின் உணவில் தவறாது இடம்பெறும் ஒரு பொருள் கடற்பாசி. இந்தியர்கள் தமது பெரும்பாலான உணவுகளில் மசாலா வாசனையைச் சேர்த்துக் கொள்வதுபோல ஜப்பானியர்கள் கடற்பாசி வாசனையைப் பெரும்பாலான உணவுகளில் சேர்த்துக் கொள்வர். வெளிநாடுகளில் நீண்டகாலம் பயணம் செய்யும் ஜப்பானியர்கள் உலரவைத்துத் தாள் போல் ஆக்கப்பட்ட கடற்பாசிகளைக் கொண்டுசென்று அவ்வப்போது சோற்றுடன் சேர்த்து உண்பார்கள். எனவே, கடற்பாசி வாசனை கொண்ட உப்பும் ஜப்பானில் மளிகைக்கடைகளில் விற்கப்படுவதைக் காணலாம்.
கடலிலிருந்து பாசிகளைக் கொணர்ந்து கடல்நீருடன் கொதிக்கவைத்து வடிகட்டி அந்நீரைப் பாத்திகளில் இட்டு நீர் ஆவியானபின் எஞ்சும் உப்பைப் பிரித்தெடுக்கும் முறையை இப்பாடல் சுட்டுகிறது. இதிலும் சிலேடைச் சொற்கள் சில பயின்று வந்திருக்கின்றன. இதில் சுட்டப்பெறும் உப்பளம் அமைந்துள்ள மட்சுஹோ விரிகுடாவின் பெயரில் இருக்கும் மட்சு என்ற சொல்லுக்குக் காத்திருக்கும் என்ற பொருளும் உண்டு. இது காதலனை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பெண்ணைக் குறிக்கிறது. பேரரசர் ஜுந்தொக்கு கி.பி. 1216ல் நடத்திய ஒரு பாடல் போட்டிக்காக இயற்றப்பட்டது இப்பாடல்.
வெண்பா:
கடலுள் பறித்திடும் தாவரம் நீரின்
சுடருள் எரிந்திடல் போலே – உடலுள்
கடற்பாசி அன்ன இதயம் எரிந்தே
உனக்கென ஏங்கும் மனது

மயக்கும் மாலைப்பொழுதே!
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
風そよぐ
ならの小川の
夕暮れは
みそぎぞ夏の
しるしなりける
கனா எழுத்துருக்களில்
かぜそよぐ
ならのをがはの
ゆふぐれは
みそぎぞなつの
しるしなりける
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: அமைச்சர் இயேதக்கா
காலம்: கி.பி. 1158-1237.
இத்தொடரின் 83வது பாடலின் (துயரறுத்தலே துயரமோ?) ஆசிரியர் தொஷினாரியின் மாணவர். தொஷினாரியிடம் கவிதை பயின்றபோது அவரது வளர்ப்பு மகன் சதாநகாவின் (87வது பாடலான தூவானமும் வெண்வானமுமை இயற்றியவர்) மகளை மணந்துகொண்டார். ஷின் கொக்கின்ஷூ தொகுப்பைத் தொகுத்தவர்களுள் ஒருவர். பேரரசர் கோதொபாவின் அமைச்சராக மட்டுமின்றி அரசவைப் புலவராகவும் இருந்தவர். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 280 தனிப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பாடுபொருள்: குளிர்ந்த கோடைகால அந்தி
பாடலின் பொருள்: நரா மரங்களினூடே சிலுசிலுவென வீசும் குளிர்காற்று இலையுதிர்காலம் வந்துவிட்டதோ என எண்ணவைத்தது சுற்றுலாப் பயணிகளின் புனிதக் குளியலைக் காணும்வரை.
இப்பாடலில் ஷிண்டோ மதத்தின் வழக்கம் ஒன்று ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 30ம் தேதியும் டிசம்பர் 31ம் தேதியும் மிசோகி எனப்படும் குளியலை ஜப்பானியர்கள் மேற்கொள்வார்கள். ஆற்றில் மூழ்கிக் குளிப்பதாகவோ அல்லது சிறிதளவு நீரைத் தலையில் தெளித்துக் கொள்வதாகவோ அமையும் இது உடலை மட்டுமின்றிக் கடந்த ஆறு மாதங்களாக மனதில் சேர்ந்த அழுக்கையும் தூய்மைப் படுத்துவதாக நம்புகிறார்கள்.
ஜப்பானில் முன்பு சந்திரமான முறையிலான நாள்காட்டியைப் பின்பற்றினார்கள். நிலாவின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு 30 நாட்கள் கொண்ட மாதங்கள் இருந்தன. அப்போது ஜூன் 30ம் தேதி கோடைகாலத்தின் முடிவாகவும் டிசம்பர் 30ம் தேதி குளிர்காலத்தின் முடிவாகவும் கருதப்பட்டது. இப்போது சூரிய நாள்காட்டிக்கு மாறியபின் கோடைகாலம் செப்டம்பர் 22ம் தேதியும் குளிர்காலம் மார்ச் 19ம் தேதியும் முடிவடைந்தாலும் இந்தக் குளியல் வழக்கம் மட்டும் இன்னும் ஜூன் 30ம் தேதியிலும் டிசம்பர் 30ம் தேதியிலுமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இங்கு நரா எனக் குறிப்பிடப்படுவது முந்தைய தலைநகர் நராவை அல்ல. தலைநகர் கியோத்தோவின் கமிகமோ கோயிலின் இருபுறத்தும் ஓடும் சிற்றாறான மிதராஷி ஆற்றைக் குறிக்கிறது.
ஜப்பானிய இடைக்கால இலக்கியங்களில் இயற்றப்படும் சிறந்த பாடல்களை அரண்மனையின் திரைச்சீலைகளில் ஓவியங்களுடன் எழுதி வைப்பார்கள் எனப் பார்த்தோமல்லவா? இப்பாடலும் பட்டத்தரசி குஜோ ஷுன்ஷி பேரரசர் இரண்டாம் ஹொரிகவாவை மணந்து புகுந்தவீடான கியோத்தோ அரண்மனைக்குள் நுழையும்போது அவரை வரவேற்க அளிக்கப்பட்ட சீதனங்களில் ஒன்றாக இருந்த திரைச்சீலை ஒன்றில் வரையப்பட்டிருந்தது.
வெண்பா:
குளிரிலும் வாடிடா வெம்மையிலும் காயாத்
தளிரிலும் ஊடோடி மெல்ல – வெளிறிடும்
அந்தியின் தண்மையால் கூதிரின் காலமென
எண்ணிட வைத்தது காற்று
(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
