உளியின் மொழி

“என்ன செய்கிறாய், தம்பி? அந்த இடைச்சி  கையில் குழைகளில்லை, காதுகளில் பாம்படமில்லை, இடையில் கூடையுமில்லை, அவள் கழுத்தை சுற்றிப் பிடிக்கும் அட்டிகையுமில்லை, இதில் நீ நடனப் பெண்ணை வடிக்க சந்தர்ப்பம் கேட்கிறாய்? கற்பனையே இல்லை, கவனமும் இல்லை.”

மாயையில் துளிர்க்கும் மலர்கள்

அந்த அறையின் கதவைத் தட்டிப்பார்த்துவிட்டு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள். வயதாகியும் அபுவின் மீதான ஈர்ப்பு அப்படியே இன்னுமிருக்கிறது. அவனும் அப்படியே. திங்கள் வெள்ளை, செவ்வாய் மஞ்சளும் சிகப்பும் எனப் பல வண்ணங்களில் ஒவ்வொரு நாளும் கைக்கொள்ளும் அளவு மாத்திரைகள் இருவருமே எடுத்துக்கொள்ளவேண்டியதாகிவிட்டது. இருந்தாலும் என்னைப் படுக்கையிலிருந்து எழுப்பிக் கைதாங்கலாகக் குளியலறைக்கு அழைத்துச் செல்லவும், வெளியே செல்லும்போது என்னை வண்டியில் அமரவைத்துத் தள்ளிக்கொண்டும் செல்கிறான். என்னிடம் அவன் முழுமையாகவே திரும்பி வந்துவிட்டான்.

தாபம்

போதும்’ என்ற குமாரிக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. நெடுநாள் கழித்த ஒரு ஆணின் ஸ்பரிசம் அவளில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அவள் எழுந்து சென்று அவளிடத்தில் படுத்துக்கொண்டாள். அவள் மனது குழம்பிப் போயிருந்தது. பகல் முழுவதும் ஈர உடையுடன் அலைந்ததால் அவளில் காய்ச்சலும் தொற்றிக்கொண்டது. நள்ளிரவில் உக்கிரம் கொண்ட காய்ச்சலால் அவள் புலம்பிக்கொண்டிருந்தாள். 

அடையாளத் தேர்வு

பாலச்சந்தரும், பார்வதியும் ஒருவர் மாற்றி ஒருவர் இரவெல்லாம் விழுத்திருந்து, வெழிலனுக்கு தேனீர் தந்து அவன் தேர்வுக்கு தயார் செய்ய உதவினார்கள். பாலச்சந்தர் தன் பங்கிற்கு மிக வினோதமான வழிமுறைகளைப் (algorithm) பயன்படுத்தி கேள்வித்தாள் தயார் செய்து தந்தார். அதிலிருந்து புதியதாக பன்னிரண்டு கேள்விகள் கிடைத்தது. அதற்கும் பதில்கள் தயார் செய்தான் வெழிலன். 

ஸ்ரீவாணி மேடம் 

சுஜாதாவுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த தற்பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று நினைத்துக் கொண்டாள். அதை மறைத்துக் கொண்டு, “அன்றொருநாள் உன் வீட்டுக்கு போன் செய்தோம் அக்கா. அந்த நம்பரில் போன் எதுவும் இல்லை என்று பதில் வந்த்து. பாக்டரிக்கு போன் செய்தால் அங்கே மாமா இல்லை என்றார்கள். எங்கே போயிருக்கிறார்? உங்கள் போனுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள் சுஜாதா. 

ட்டி.கல்லுப்பட்டி நகுலின் 418 வது கேட்ச்

ஏன் நண்பரே அந்த கேட்ச்சை விட்டீர்கள். எனக்குத் தெரியும் அது மிகச்சுலபமான கேட்ச் என்று. 418 வது கேட்ச். எவ்வளவு விலைமதிப்பில்லாத கேட்ச் என்று உலகமே அறியும். உங்களின் இரக்கத்தால் தானே நாங்கள் ஜெயித்தோம்.  அனைத்தையும் விளக்கிச்சொல்லி எங்கள் பத்திரிக்கைக்கு சொல்ல நினைத்திருந்தேன். அதற்குள் என் தந்தையின் மரணம் நிகழ்ந்து விட்டது. முப்பது நாட்கள் நான் எங்கும் போகக்கூடாது.

வட்டம்

அர்ச்சுன வாயிலினுள் நுழையும் முன்  வலது புறமாக காட்டுக்குள் நுழைந்து சென்றால் கழுகுப் பாறையை அடையலாம். அருகிலேயே பிரசன்னரின் மடம் உள்ளது. பிரசன்னரின் மடத்தில் விழுப்புண்களுடன் கொஞ்ச காலம் அணங்கர் தங்கியிருந்தார். குருவின் அருளினால்தான் இந்நகரம் நிறுவப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கழுகுப் பாறையின்  நுனி நின்று நோக்குகையில்தான் ஒரு கணம் தோன்றி மறைந்தது இந்த மாநகரம்.

லெமன் சாதம்

என் அண்ணன் நல்ல பெயரெடுப்பதற்காகவே, “நானே சமைக்கிறேன்..அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்கடா..ஓட்டல்லாம் வேணாம்..” என்றான். என் சின்ன அண்ணன் சரி என்பது போல் தலையாட்டினான். எனக்கு கோபம், அழுகை பொத்துக்கொண்டு வந்தது. கோபம் காட்ட இயலாத இடத்தில், அழுகைதானே வரும். என் சின்ன அக்காதான், “நம்ம வேணா வீட்டில சாப்பிட்டுக்கலாம்..பாவம் போத்தி ஓட்டல்ல வாங்கி சாப்பிட்டுக்கிட்டும்” என சொன்னாள்.

மனக்கணக்கு

“எனக்கா தொழில் நுட்பம் தெரியாது? பார்த்தாயா உன் கண் முன்னே வந்து நின்றுவிட்டேன். குவாண்டம் பிணைப்பு இணைப்பை (Quantum Entangled Connection) எனக்கும் பயன்படுத்தத் தெரியுமாக்கும். அதுமட்டுமல்ல, எனக்கும் அறிவியல் புரியும் கண்ணா. அதை நிரூபிக்கத்தான் இப்படி வந்தேன்.. ஹா ..ஹா” என்று இடித்துச் சிரித்தாள் புவனா.

அமானுஷ்யம்

ஒரு சமாதி மேல ஒரு உருவம் ஒன்னு உக்காந்திருக்கு. அலை அலையா தெரியுது. தலை நிறைய பூவு. முகதத்துல மஞ்சள் தடவி அந்த நேரத்துல எப்பிடின்னு எங்களுக்கு லேசா உதர ஆரம்பிக்குது. எங்களுக்கு அதுக்கும் ஒரு பத்தடி நீளம் இருக்கும். அது அங்க நின்னுட்டே அதோட கைய்ய பத்தடிக்கு மேல நீட்டி கண்ணனோட கழுத்த பிடிச்சது. கண்ணன் கத்துறான். எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரில. கண்ணனை பிடிச்சி நாங்க இந்த பக்கம் இழுக்குறோம். ஒரு ரெண்டு நிமிஷம் இந்த போராட்டம் நடந்துருக்கும்.

கானல் குருதி

செல்போன் மணியடித்து விழிக்கும் போது பேருந்து, திண்டுக்கல்லை தாண்டியிருந்தது. அரைத்தூக்கத்தில் போனை எடுத்து பேச காதோரம் வைக்கும் போது “போன் பேசதாடா” என கத்தியபடி போனை பிடுங்கி வீசினான் பக்கத்தில் இருந்தவன். நல்லநேரமாய், போன் சொத்தென வெற்றிலைகூடையில் விழுந்தது, கொஞ்சம் தவறியிருந்தாலும் போன் பணால் ஆகியிருக்கும். விமல் கன்னத்தில் அந்தப் பையனின் நகம் பட்டு லேசான கீறல், தொட்டு பார்த்தான் லேசாய் எரிந்தது.

கர்மவீரன் நாகுவும் கத்தேமார் மாங்காய் மூட்டையும்

ஒருவேளை தூரத்தில் இருந்து ஆண் ஜாடையாகத் தெரிந்தாலும் அந்தப் பெண் கிட்டப்பார்வையில் சுமாரான அழகாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நம்புவதற்கு முயற்சித்தான். சரி போய்த்தான் பார்ப்போம். யார் கண்டது? எது எப்படிப் போனாலும் சங்கரன் மாமா ஜனாதிபதி மாளிகையில் நல்ல செல்வாக்கோடு திகழ்ந்து அதனால் தனக்கு அலுவலக ரீதியாக ஏதேனும் நல்ல வாய்ப்பும் சவுகரியங்களும் கிடைக்கலாமே என்றும் நினைத்தான்.

மாலையும் மாதவிடாய் நாட்களும்

அவன் எப்படியும் வருடா வருடம் மாலையிடத்தான் செய்வான்.தனக்கு எப்படியும் இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்கு மாதவிடாய் வரவே செய்யும். உண்மையில் அவளுக்கு அவன் மாலையணிவதில் அவளுக்கு சந்தோசமே .காரணம் காலையில் அவனுக்காக சமைக்க வேண்டியதில்லை . பிள்ளைகளுக்கு மட்டும்தான் அதுவம் சிறிய அளவில். மதியம் கொஞ்சம் கூடுதலாக அப்பளமோ பொரியலோ செய்வதில் அவளுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.

மதுக்கூடம்

சார், உங்களுக்கு விஷயம் தெரியாதா?  ரெண்டு நாள் முன்னாடி கடையில நடந்த ஒரு சண்டையில அந்த கவுன்சிலர் பையனும் அவனோட கூட்டாளிங்களும் சேர்ந்து தொரக்கண்ணு தலையில பீர் பாட்டிலால அடிச்சிட்டாங்க. மண்ட ஒடஞ்சு ரத்தம் கொட்டுச்சு. ஓனர் உடனே அவன பக்கத்துல இருக்குற நர்சிங் ஹோமில சேத்துட்டார். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரின்னா கேஸ் ஆயிடும்ல

வூப்பி-பை

“லெகோ ரூமில்” ப்ளாக்குகளை அவர்கள் கலவரத்துடன் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கையில் அங்கு ஒலித்துக் கொண்டிருந்த “ஜிம்மி திங்” பாடலின் கிட்டார் கோவைகள் இந்நினைவுகளைக் கிளர்த்தெழுப்பின. லெகோ அறை என்பது பல பிறந்தநாட்கள் வழியே படிப்படியாக இயல்பாக உருவான ஒன்று. அவர்கள் மேலும் மேலும் ப்ளாக்குகளை சேர்க்கச் சேர்க்க அந்தக் கட்டுமானம் பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு அவர்கள் “Life Desired – WIP” என்று பெயரிட்டிருந்தார்கள்.

சிப்பிகளின் சிதறல்

வார்த்தைகள் உதடுகளில் நறுநறுக்க ஆரம்பித்திருந்தன. படிக்கட்டுகளை சுற்றிலும் பதற்றத்தோடு துளாவ ஆரம்பித்திருந்தாள். மண்டபம் வழக்கமான ஆள்நடமாட்டம் இல்லாமல் கலையிழந்து கிடப்பதை பற்றியோ, எங்கிருந்தோ வாரி இறைக்கப்பட்ட ஏதேதோ பொருட்கள் அங்குமிங்குமாக சிதறிக் கிடப்பதை பற்றியோ அவளிடம் எந்த புகாருமில்லை. அவளது கவனம் முழுவதும் அவளது அழுக்கு மூட்டையை கண்டடைவதில் இருந்தது. 

லக்ஷ்மி சிரித்தாள்!

தன் மருமகள் செல்வி ‘உண்டாகியிருக்கிறாள்’ என்ற நற்செய்தியை மகன் சபேசன் சொன்னதில் இருந்து முருகேசருக்கு ஒரே குதூகலம். “மகன், மூண்டு நாலு மாதத்திற்கு செல்விக்கு நல்ல சத்தான சாப்பாடுகள் கொடுக்கவேணும் கண்டியோ….தண்ணி கலக்காத நல்ல சுத்தமான பால் கொடுக்கவேணும். எங்களின்ட வயல்காறன் ராசு கிட்ட சொல்லி ஒரு கறவை மாடு ஒண்ட வாங்கி இஞ்ச கட்டி வச்சா நான் பால் கறந்து செல்விக்கு கொடுக்கலாம் கண்டியோ” என்ற முருகேசரின் ஆலோசனை உதாசீனப்படுத்தப்படவில்லை.

காலிங் பெல்  

சத்யா அவனைக் குளிக்க வைத்தாள். மெதுவாகப் படுக்கையில் சாய்த்தாள். மாமியாரிடம் பொதுவாகப் பேச விரும்பாத சத்யா, இன்று போன் செய்து ஒன்றுவிடாமல் ஒப்புவித்தாள். அவனின் அம்மா சத்யாவைத் திட்டித் தீர்த்தாள். உடனே சென்னைக்கு பஸ் பிடித்தாள். ராம் விடிய விடிய உறங்காமல் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். சத்யா அவன் தலையில் எலுமிச்சைப் பழம் தேய்த்துப் பார்த்தாள். பித்தம் குறைந்தபாடில்லை. அவனது அம்மா வந்தவுடன், ராமின் உடல்நிலைக் கண்டு பதற்றமடைந்தாள்

தோசையம்மா  தோசை

என்றைக்காவது இட்லியோ உப்புமாவோ  சப்பாத்தி பூரியோ செய்தால்  ஏதோ ஒப்புக்கு சாப்பிடுவோமே தவிர  தோசை என்றால்தான்  எல்லார்க்கும் குஷி. எங்களுடன்  அம்மாவும் தோசையை தட்டில் போட்டு க்கொண்டு சாப்பிடும்போது அதிலிருந்து ஒரு விள்ளலை  பிடுங்குவது சுஜியின் வழக்கம். அம்மா சிரித்தபடி  அந்த விள்ளலை அவள் வாயில் ஊட்டிவிடுவாள்.

சாய்ந்தாடி

‘கடும் பஞ்சத்திலும், மைசூர் போரின் அவதிகளிலும் சிக்குண்ட இந்த மக்களை பிரித்தானிய அரசாங்கம் ஒரு போதும் கை விடாது’ என்றார் பெல்லி. நாராயண பிள்ளையின் உதட்டோரம் பூத்த புன்னகையின் அர்த்தத்தை வில்பர் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. சிறு தோல் பையிலிருந்து ஒரு சிறு தாளை வெளியே எடுத்தான் வில்பர். ஏதோ பேங்க் ஆப் பெங்கால் அச்சடித்து விநியோகிக்கும் ஐநூறு சிக்கா ருபாய் தாளை முதன் முதலாகப் பார்ப்பது போல பெல்லியின் கண்கள் விரிந்தது.

வெற்றி

நகுலன் கண்களில் மட்டுமே சினேகம் தெரிந்தது. ஐவரில் ஆசைகள் அற்றவன் அவனே. அவன் காதோரம் ஓடி இருக்கும் நரை கூட அவனுக்கு அழகாகவே இருந்தது. துச்சாதனனுக்கும் அதே போல நரை ஓடும் காதோர முடி. இப்போதும் செதுக்கியது போலிருக்கும் தன் உடலின் அழகு மட்டுமே இந்த நகுலன் கண்களுக்கு புலப்பட்டுக் கொண்டிருக்கும். நகுலன் தன்னிச்சையாக தண்ணீரைப் பார்த்து தன் தலைமுடியை ஒதுக்கிக் கொள்ள, துரியோதனன் தன் புன்னகை வெளிவராமல் அடக்கிக் கொண்டான்.

பிண்ட தானம்

தனது  பிஞ்சுக் கரங்களை என் மீது போட்டு அவள் தூங்கும் நினைவுகள் லேசில் மறக்க கூடியதா?  அவள் பிறந்த பின் தான்  நான் என்னையே புதிதாக உணர்ந்தேன். அவள் இந்த உலகில் இருந்த இரண்டு வருடங்களும் எனது வாழ்க்கையின் உச்ச கட்ட சந்தோஷ நாட்கள். காரில் போனாலும் என் மடியில் தான்    உட்கார்ந்து கொண்டு என் விரலைப் பிடித்த படி  வருவாள். என்னுடன் இருக்கும் போதெல்லாம் என் விரல்களை பிடித்த படியே இருப்பாள்.அந்த ஸ்பரிசம் ஈடு இணையற்ற மகா ஆனந்தம்.

தொவள மறி

கோவிலின் வாசலில் பெண்கள் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தார்கள். மின்னலங்காரத்தில் பொங்கல் வைக்கும் புகை சூழ அந்த இடமே கோலாகலம் நிரம்பி வழிந்தது. சிரிப்பு சத்தங்களும், பேச்சுக்களும், பொங்கல் பொங்கும் பொது  பெண்கள் விடும் குலவை சத்தமும் அந்த இடத்தை நிறைத்திருந்தது.  கோவிலின்  உள்ளே மலரலங்காரங்கள் நடந்து கொண்டிருந்தன. அம்மனுக்கு அலங்காரம் செய்ய அலங்காரக் காரர்கள் கருவரையில்  வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு புறம் வில்லுப்பாட்டுக்காரர்கள் அவர்களின் வாத்தியங்களை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

பிழைப்பு

கடந்த ஒரு வார காலமாக அவனின் நிறுவன உரிமையாளர் அவர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்க அந்த அலுவலரிடம் பேசச் சொல்லி இவனைக் கோருகிறார். ஏனென்றால் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான அவருக்கு அனைத்திலும் சில்லறையான அலுவலரிடம் கெஞ்சுவது அவரால் ஆகாது. என்ன செய்வது? சம்பளம் வாங்கும் வரை நிறுவனத்திற்கு வேலை செய்துதான் ஆக வேண்டும்.நிறுவனம் இடும் கட்டளைகளை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். கடந்த ஒருவாரமாக தினமும் சென்று அவன் அலுவலரைப் பார்க்கிறான்.ஆனால் முதல் மூன்று நாட்கள் அவர் அவனைக் கண்டுகொள்ளவில்லை. நேற்றும் அதற்கு முந்தின நாளும் இவனது வேண்டுகோளை கேட்டவர், அதற்கு எந்த பதிலும் தராமல் வெறுமனே வேலை விசயங்களை மட்டும் பேசி அவனை அனுப்பிவைத்துவிட்டார்

காமாட்சிசுந்தரியும் அப்பாவும்

நடு வீட்டில் அப்பா புன்னகையோடு படுத்திருந்தார். வெண்ணிற மேல்சட்டை. நீல நிற கால்சட்டை. இரண்டும் அவரது முந்தய வருட பிறந்த நாளுக்கு அம்மா வாங்கிப் பரிசளித்தது. ஆனால் அது காமாட்சி தேர்ந்தெடுத்தது. அவரது தொப்பை மேல் இணைந்திருந்தபடி இருந்த அவரது விரல்களைத் தொட்டாள். சில்லென்று இருந்தது. அப்பாவுக்கு சூடாக இருப்பது தான் பிடிக்கும். சின்ன மழைக்காலக் குளிர் கூட அவருக்கு ஆகாது. தன் இரு கைகளைக் கொண்டு தேய்த்து சூடு கொடுக்க முயன்றாள்.

கல்யாணி

மஞ்சுவின் அண்ணன் ஆனந்த் அறையின் வாசலில் ஒரு நாள் கயிற்றைக் கட்டி பெண்களுக்கு அனுமதி இல்லை என்றான். பழுத்த மாம்பழங்களை விநியோகிக்கும் உரிமை தனக்கே உண்டு என புதிதாக சட்டம் கொண்டுவந்தான். அதிகார மையமாக தன்னை மாற்றிக் கொண்டான். வியாபாரம் நடக்குமிடத்தில் பெண்களுக்கு என்ன வேலை என்று வஞ்சகமாக யோசித்தான். வஞ்சகம் செய்பவர்களை வீழ்த்த காற்றில் நஞ்சைக் கலத்தோம்.

ஈஸ்வர அனுக்ரஹம்

சிறிது காலம் முன்பு ஒரு சினிமா நடிகரை அழைத்து வந்தோம். வர போக செலவு, ஹோட்டலில் தங்குமிடம், அதைத் தவிர பணக் கவர் கொடுத்தோம் அவர் வந்து பெண்கள், பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் சீரழிந்த ஜோக்குகளைப் பேசினார். ஒவ்வொரு ஆண்டும் யார் யாரையோ அழைக்கிறோம். சன்மானம் செய்கிறோம்

சராசரிக்கும் கீழே

குடும்பத்தில் அமைதியின்மை சதா சர்வ காலமும் இருப்பதாகவும். குலாவின் மனைவி வீட்டில் இருக்கும் சிக்கல்களைத் தவிர்க்க வேலைக்குச் செல்ல துவங்கியிருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ரொம்ப நாட்களுக்குப் பின் குலா ஒரு நாள் ஃபோன் செய்தார். ‘’ஆராவமுதன் ! குழந்தை பொறந்திருக்கு. பெண் குழந்தை’’ என்றார். பெண் குழந்தை எனக் கூறிய போது தழுதழுத்து விட்டார்.

குறியீடு

“இரண்டு எலும்பு வகைகள் இருக்கின்றன” லிடியா. “ஒன்று மனிதன். பதின்ம வயது பையனாக இருக்கலாம் என்று கணிக்கிறேன். மற்றது குதிரை.” மித்ரன் குழியில் பார்த்தார். மனித உருவம் பக்கவாட்டில் முட்டி மடக்கி ஆங்கில “என்” போல் இருந்தது. பக்கத்தில் பெரிய உருவமாக இன்னொரு எலும்பு தொகுப்பு.

மூர்க்கரோடு இணங்கேல்

அவ இப்ப இல்ல.. எங்கள விட்டு போய்ட்டா.அதிர்ந்து பார்த்தாள்.இன்னையோட நாற்பத்தியெட்டு நாட்கள். டாக்டராகணும் டாக்டராகணும்னு சொல்லிட்டே இருப்பா. ஆனா அவளால ரெண்டு தடவையும் பாஸ் பண்ணமுடில.  அந்தப் பயத்துலேயே இந்த எக்ஸாமுக்கு முன்னாலேயே போய்ட்டா.

இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது

இந்தியக்கடலில் க்ரீன்ஹவுஸை சுற்றி மட்டுமே நாங்கள் இருபது பண்ணைகள் வைத்திருந்தோம். ஒவ்வொன்றிலும் நாற்பதுக்கும் மேலான மிதவைக் காற்றாலைகள். அங்கிருந்து வரும் தகவல்களை சேகரித்துத்தரும் நிரலியை ஆய்வது மட்டுமே என் வேலை. அலைமின்பெருக்கி அசுர வேகத்தில் சுற்றத் தயாராக இருந்ததை என் திரை ஓரப்பச்சை சக்கரம் காட்டியது. மாலைக்குள் அன்றைய மின்னணு கொள்முதலை மையக்கட்டுப்பாட்டு செயலகம் இருக்கும் முப்பந்தலுக்கு அனுப்ப வேண்டும்

பிரமோபதேசம்

அம்மாவும் நானும் முதன்முதலில் சந்தித்தபோது எங்களுக்கு பதினாறு வயது. புன்சிரிப்புகளும், எப்போதாவது பேசிய ஒருசில வாக்கியங்களும் சிறுவர்கள் விளையாட்டு. இருபத்திநான்கு வயதில் சம்மதம் கேட்டு அம்மாவுக்கு நான் கடிதம் எழுதியது நான் வயதுக்குவந்த தருணம். வீட்டுக்கு பக்கத்தில் ஒரு முக்கோணப் பூங்கா. கடிதத்தின் பதிலை எதிர்பார்த்து அதைச் சுற்றி நடந்தபோது தீவிர யோசனை. மாணவ வாழ்க்கையில் திருமணம் என்கிற பொறுப்பை என்னால் ஏற்கமுடியுமா? இருவரும் எப்படி எங்கே வாழப்போகிறோம்?” 

நவதீப்

“உங்களுக்கு எந்த ஊர் தம்பி?” என்று கேட்டுக் களத்தில் புகுந்தாள் என் அக்கா. அவளுக்குக் கேள்வி கேட்கும் கெட்டப் பழக்கம் உண்டு. “எந்த ஊர்? எந்த ஜாதி? திருமணம் ஆயிற்றா? எத்தனை குழந்தைகள்? உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர்?    அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்? என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தது வந்தவரை வாட்டுவது அவள் வழக்கம். எல்லோர் வீடுகளுக்கும் சென்று அவர்களின் விவரங்களைச் சேகரித்து அறிவுரை கூறி வருவாள். அப்படிச் செய்யாதே என்று சொன்னால் கேட்கமாட்டாள்.

மிதவை

ஆனால் அடுக்கத்தில் கதவைத் திறந்து வராந்தாவில் கூட நிற்கக் கூடாது. எவரையும் உற்றுப் பார்க்கக்கூடாது. எதையும் சத்தமாகப் பேசக் கூடாது. அதோடு இன்னொரு சங்கடமும் இருந்தது. பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக் கொள்ளும்போது இவர் இருக்கும் பக்கம் ஒருமுறை பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேசுவது இவருக்கு கேட்காததுபோலவே இருக்க முயன்றாலும் முகம் காட்டிக் கொடுத்து விடுகிறது.

உயிர்த்தாம்பு

எதற்காகவும் இயல்பான மரபணு மாற்றத்தை குறைக்கும்விதமாக மேல் அதிகாரத்தை மனிதன் உருவாக்கும் மருந்துகள் உருவாக்ககூடாது என்பது தான் அவரது ஆய்வின் அடிப்படை. லிவர் மறு உருவாக்கத்திற்கு முக்கியமான பங்களிப்பை அளிப்பது காமா உயிரணுக்கள். செயற்கையாக உருவாக்கப்படும் காமா உயிரணுக்கள் இயற்கையாக உடலில் உருவாக்கப்படும் காமா செல்களை செயலிழக்கச் செய்யும் என்பது உயிரி இயற்பியலின் அடிப்படை. அவரது ஆய்வகத்தில் செய்யப்படும் சோதனைகளின் முக்கியமான விதியாக இது இருந்துள்ளது.

மேபெல்

அதிருஷ்டவசமாக மறுநாள் ஒரு ஃபிரெஞ்சுக் கப்பல்  சைகோனுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது. அவன் அதில் ஏறிக்கொண்டான். சைகோனில் பத்திரமாக இருக்கலாம்; அவன் அங்கே போகக்கூடும் என்று அவளுக்கு ஒருபோதும் தோன்றாது. அப்படித் தோன்றியிருந்தால் நிச்சயமாக இதற்குள் மோப்பம் பிடித்திருப்பாள். பாங்காக்கிலிருந்து சைகோன் செல்ல ஐந்து நாட்கள் பயணம் செய்தாக வேண்டும். செல்வதற்கான படகுகளும் அழுக்காகவும் கூட்ட நெரிசலோடும் அசௌகரியமாகவும்தான் இருக்கும். 

வெற்றிடம்

நீ இல்லாம பொண்ண எப்புடி வளர்த்துருவான்னு பாத்துரலாம் என்று சொன்ன அவனது அக்கா, அவளது குடும்பத்தோடு சந்தோஷமாகத்தானே இருக்கிறாள். இவங்க பேச்சக் கேட்டு நான் தான் தனியா நிக்குறேன். வெறும் ஏழு வருச நினைவுகளோட. நிலா தொட்டு வெளையாடின பொம்மைகளோட.. அந்தரத்துல.. இந்தப் பத்தாவது மாடியில..”  என்று எண்ணிக்கொண்டே அடுத்த மாத்திரையை விழுங்கினான்.

ஆயன்

உண்டிக்கோலும் கதிரருவாளுமில்லாமல் சோமன் மேய்ச்சல் விட வருவதில்லை. சிறு சிறு கற்களைப்பொறுக்கி சேமித்துக்கொண்டான். அதுநாள் வரை சாமியை கும்பிட வேண்டும் என்பதனால் ஒரு வணக்கம் போட்டு வைப்பான். ஆனால் இப்பொழுதெல்லாம் அவரிடம் பாதுகாப்பை தைரியத்தை கோர வேண்டிய அவசியம் உருவாகி விட்டது. வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையோ பூக்களோ என்ன முடிகிறதோ அதை பறித்து வந்து உண்டியல் முன் வைத்துவிடுவான். மேய்ச்சலுக்கு அருகிலேயே கல்லில் புடைத்து நிற்கும் வீரன் சிலை ஒன்றிருந்தது. தினமும் ஒரு எலுமிச்சையை வீரனுக்கு காணிக்கையாக வைத்துவிட்டுத்தான் தன் பாறைக்குடைக்கு திரும்புவான்.

வீதித்தாய்களும் பத்துதர்மக்காரியும்

ஒரு நாள், ராசாத்தி காய்கறி வாங்கிக்கொண்டு உள்ளே வந்தபோது, “டெய்லி, அவ கூட என்னடி பேச்சு? அவங்களைத்தான வேண்டாத குடும்பம், ஆகாத குடும்பம், அசிங்கமான குடும்பம், போலீஸ்ல புகார் சொல்லுவோம்”-ன்னு சொல்லிச்சொல்லி செத்திங்களே, சாவடிச்சிங்களே. இப்ப எதுக்கு அப்படி பேசறே? பழகறே,  ஒன்னுமே புரியல, எனக்கு

ராமு

தகுதியிருக்கோ இல்லையோ ஒரு சம்பந்தம் “முறிந்தது” என்றவுடனேயே  அரிவாளை தீட்டும் இன்றைய உலகில், பெண்ணும் ஆணும் சம்மதித்து நெருங்கிய உறவினர்களான இரு வீட்டார் சம்மதித்து, கடைசியில் ஒரு வாழைப்பழத்தால் ஒரு கல்யாணம் நின்று போயிற்று.

ஆதரவு

நான் பதவி ஓய்வு பெற்றேன். சொந்தமாக வீடு கட்டினேன். பென்ஷன் வந்தது. பொருளாதார ரீதியாகக் குறை ஒன்றுமில்லை. அந்தச் சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவள் ரமணி. வீட்டுக்கு வருபவர்களுக்கு பதில் சொல்வது, பணியாளர்களை வேலை வாங்குவது, வீட்டைச் சுத்தம் செய்து அடுக்கி வைப்பது, கடையிலிருந்து சாமான்கள் வாங்கி வருவது, மின்சார பில் கட்டுவது என்று வீட்டுப் பொறுப்புகள் எல்லாம் அவளே பார்த்துக் கொண்டாள்

1954 – Y2K பிரச்சினை

This entry is part 5 of 5 in the series 1950 களின் கதைகள்

அப்பா அவனை சைக்கிள் முன்னால் வைத்து அழைத்து வந்தார். அவனுக்குத் தெரிந்து ஆஸ்பத்திரிக்குப் போவது அது தான் முதல் தடவை. டாக்டர் மார்பில் ஸ்டெதஸ்கோப்பை நகர்த்தி ஏதோ கேட்டிருக்கிறார். வாயை ஆஆஆவென்று திறக்கச்சொல்லி விளக்கில் உற்றுப் பார்த்திருக்கிறார். அதெல்லாம் கொஞ்ச நேரம்.

சாம்பல் பூத்த நிலம்

அபர்ணாவின் அடி நாக்கில் ஒரு அமிலச் சுவை. எங்கோ மின் இயந்திரங்களில் கசிவினால் உண்டான வாடை அவளது மூக்கைச் சீண்டியது. அவளது சிசுவினுடைய நோட்டக்காட்சிகளில் வந்தது தனது குழந்தையா அப்பாவா எனும் குழப்பம் அவளுக்கு மின்னல் போல வந்து வந்து போனது. கூடவே ராஜேஷின் குரலும். சிறு குழந்தையாக, சிறு தீண்டலாக, கெஞ்சலாக, மன்றாடலாக, ‘அம்மா, அப்பா, இடக்கையா வலக்கையா எங்க இருக்கு தொடுங்க’, எனச் சிணுங்கும் ஒரு குரல்.

காமம் காமம் என்ப

நான் நீங்கள் எனக்கு யார் என்று சொல்லிவிட்டால் போதும், அப்படியே ஆடிவிடுவார். ஒரு முறை எனக்கு குற்றாலம் போக ஆசை, கூட்டிப் போக யாரும் இல்லை என்றேன், அடுத்த நாளே நாங்கள் மூன்று பேரும் குற்றாலம் போனோம். அங்கே நான் குளிக்கும் கோலத்தை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார். இரண்டு மூன்று நாள் கழித்து எவனோ ஒரு சனியன் சார் உங்க பொண்ணு கிட்டே அங்கே போக வேணாம்னு சொல்லுங்க ரொம்ப வழுக்குது என்றான்.

கதவு

கண் மங்கலாக தெரிவது போல் இருந்தது அவனுக்கு.  மரப்பலகையின் மேல் அடித்த தகரம் மறைந்து முழு கதவும் கெட்டி இரும்பால் ஆனது போல் தோன்றியது. கதவின் பளபளப்பு அதிகரித்துக்கொண்டே செல்வது போலவும், எல்லோரையும் பார்த்து ஏளனமாக சிரிப்பது போலவும் தோன்றியது, கூர்மையான மெல்லிய ஒளியை எதிரே நிற்பவர்கள் மீது பாய்ச்சி கொல்லத் துடிப்பது போலவும், மங்கலாக அதன் மேற்புறம் தெரியும் அனைவரையும் அது விழுங்கிவிடுப் போகிறது என்றும் தோன்றியது. 

அட! என்ன ஊர்யா இது?

“பணம் எங்கே போகுதுங்க? இருக்கட்டும். இப்போ நீங்களே வச்சிக்குங்க. இருட்டிப் போச்சுங்க தலைவரே! பேசாம நீங்க இன்னைக்கு இங்கேயே தங்கிடுங்க!” என்றான்.  ஒன்றும் புரியாமல் முருகேசன் அவனைப் பார்க்க, “நாளைக்குக் காலையில விசேஷத்தில கலந்து கிட்டு ஒங்க கையாலேயே பாப்பாக்கு இதையெல்லாம் கொடுங்க தலைவரே!  அது  எங்களுக்கு மருவாதை இல்லீங்களா தலைவரே!” என்றான்  கைகளைக் கூப்பி.

புதிய அனுபவம்

ஒவ்வொன்றாக சரி பார்த்ததில் வயர் தான் சரியில்லை என உறுதி செய்து கொண்டு , வேறு வயர்கொண்டு பார்த்ததில் பேன் ஓடியது.இடையே புதிய வாடிக்கையாளரும் அவர் நண்பரும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல இத பாருங்க அத பாருங்க சுட்சு சரியில்லாம இருக்கும் அத பாருங்க என அருகிலிருந்து எதையாவது சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஓரிரவு

மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தாலும் அந்த அறையில் புழுக்கம் நிறைந்திருந்தது. அவள் தனது பையில் இருந்து ஒரு காண்டம் பாக்கெட்டை எடுத்து என்னிடம் கொடுத்து அவள் உடையை கழற்றிவிட்டு படுக்கையில் மல்லாந்து படுத்துக்கொண்டாள். அவள் உடம்பில் எந்த கவர்ச்சியும் இல்லை. நானும் எனது உடையை கழற்றிவிட்டேன். ஆனால் காண்டத்தை மாட்டும் அளவுக்கு இன்னும் உணர்ச்சி வரவில்லை. அதை கையிலேயே வைத்துக்கொண்டு அவள் உடல் மேல் சென்று படுத்து என் முகத்தை அவள் முகத்தில் இருந்து விலக்கி தலையணையை பார்த்தவாறு வைத்து கண்களை மூடி

பாடல் பெறாதவர்கள்

ஒருவித பரவசத்துடன் முத்தழகு கொடியேற்ற நிகழ்ச்சியை கவனித்தான். கும்பினி சிப்பய்களின் ஒழுங்கான நடை, அவர்களின் நேர்கொண்ட பார்வையோடு கொடிக்குத்தரப்பட்ட மரியாதை, முத்தழகு கேட்டே அறியாத தேசிய கீதம், அவர்கள் அடித்த ராயல் சல்யூட் அவனை புல்லரிக்க வைத்தது. கும்பினி மீது அவனுக்கு மரியாதை பன்மடங்கு பெருகி அங்கே சேர்ந்து வேலைசெய்யப்போகும் நாள் குறித்த எதிர்பார்ப்பும் கர்வமும் மேலோங்கியது.

மேரா பாரத் மகான்

மணாலியில் இருந்து ரோஹ்தாங் பாஸ் வழியாக ‘லடாக் லெஹ்’ செல்லும் மார்க்கம் குளிர் காலத்தில் முழுமையாக பனியால் மூடப்பட்டிருக்கும். பிப்ரவரி மாத இறுதியில் பனியை நீக்கத் தொடங்கி ஏப்ரல் பதினைந்து தேதிக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்தை அனுமதிப்பார்கள். அதுமட்டுமின்றி, பியாஸ் நாலா வரை டூரிஸ்ட்டுகளை அனுமதிப்பார்கள் அங்கு வரை அனைவரும் வாகனங்கள் மீது சென்றால் தமக்கு வருமானம் இருக்காது