மூன்றாம் அண்ணனின் இரண்டாம் மகன் மட்டும் இதில் விதிவிலக்கு. ஊருக்கு சென்று திரும்பி வருகையில் வழியில் கிடந்த செத்தப் பாம்பை பார்த்துவிட்டு அண்ணி “பாம்பு, பாம்பு” என்று அலறியபடி கக்கத்தில் இருந்த இவனைத் தூக்கிக்கொண்டு ஓட, அன்று இரவு”ஆம்பூ” என்று அலறி எழுந்து அண்ணியைக் கட்டிக்கொண்டிருக்கிறான். என்னத்தான் நான் அவர்களின் முதல் வார்த்தைகளை உடனிருந்து கேட்காவிட்டாலும், அக்குழந்தைகள் முதன்முதலாக என்னிடம் பேசிய வார்த்தைகள் இரசமானவை. அவை ஞானிகளின் பேச்சுகளைப்போல் மறக்க இயலாதவை.

கிடா வெட்டு

பண்டிகைக் காலங்களில் ஆட்டுக்கறியோ, மாட்டுக்கறியோ, கோழிக்கறியோ கண்டிப்பாக வீட்டில் இருக்கும்.ஒன்றுமே இல்லையெனில் அப்பா மாலையில் வலையுடன் கிளம்பிப்போய் அடுத்த நாள் காலையில் காடை,கௌதாரி மற்றும் காட்டுக் கோழிகளைப் பிடித்துக்கொண்டு வருவார். சில சமயம் கறி மிகும் போது உப்புக் கண்டம் போட்டு, தினம் கொஞ்சமாக பொறித்துத்தின்றதும் உண்டு. இப்பொழுது அப்பா இல்லை. மாடுகள் இல்லை.

காகங்கள் சுட்ட வடைகள்

பசி வயிறைக் கிள்ள ஆரம்பித்தது. வடைப் பொறித்து எடுக்கும் சப்தமும் வாசனையும் ஒருங்கே கலந்து வர, இவர்கள் அனைவரும் வடைப்பாயசம் சாப்பிடப்போவதை நினைத்து சப்புக்கொட்டினார்கள். மணி இவனைப்பார்த்து சொன்னான்:
”தம்பி, வடைப்பாயசம் வாங்குனவுடன, நம்மவூட்டுக்கு எடுத்துட்டுப்போய் திங்கலாண்டா. நேத்துத் தம்பா(இவர்களது எதிர்வீட்டுப்பையன், பெரியப்பள்ளிக்கூடத்தில் படிப்பவன்) எனக்கு முட்டாயி தராம காமிச்சு காமிச்சித்தின்னான். இன்னைக்கி நாம அவனுக்கு வடைப்பாயசம் தராம காமிச்சு காமிச்சித் திம்போம், என்ன?”