எரிதழல் உள்ளம்

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 30ம் தேதியும் டிசம்பர் 31ம் தேதியும் மிசோகி எனப்படும் குளியலை ஜப்பானியர்கள் மேற்கொள்வார்கள். ஆற்றில் மூழ்கிக் குளிப்பதாகவோ அல்லது சிறிதளவு நீரைத் தலையில் தெளித்துக் கொள்வதாகவோ அமையும் இது உடலை மட்டுமின்றிக் கடந்த ஆறு மாதங்களாக மனதில் சேர்ந்த அழுக்கையும் தூய்மைப் படுத்துவதாக நம்புகிறார்கள். 

கோடையை கொண்டாடும் மனம்

பருவத்தின் அனைத்து நெடிகளையும் வரவேற்கும்.
ஆண்டின் இந்த தருணத்தில்
நாளின் ஒரே நல்ல நேரமாம் அந்தியில்
நாய்களை நடத்தி செல்லும்
அண்டை வீட்டாரின் அரவமும்
வீட்டில் நுழையும்.
அந்தக் காலம்
எவ்வளவு ஒழுங்கமைதியாய் இருந்தது?

விதைகளின் பயணம்

ஒரு முறை அவளின் தந்தை கூறிய விதைகளின் பயணம் நினைவில் வந்தது. வரண்ட பாலைவனங்கள் மற்றும் வளமான மண், வனப்பகுதிகள் வழியாக, பெருங்கடல்கள் மற்றும் ஆறுகள் வழியாக சென்டிமீட்டர்கள் அல்லது கிலோமீட்டர்கள் கணக்காக அவைகள் பயணிக்கின்றன. ஆனால், எல்லாமும் பிழைப்பதில்லை.

“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 1

This entry is part 45 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார் தமிழாக்கம் : நா.கிருஷ்ணா குறிப்பு வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு, கிரேக்க வரலாற்றின் அடிப்படையில் அதிரியின் நினைவுகள் என்கிற இப்புதினத்தைப் படைத்த மார்கெரித் யூர்செனார் இந்நாவல் உருவாக்கத்திற்கான கூறுகளை ஒன்றிணைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் பிறவற்ரையும் தமது வாசகர்களுடன் பகிர்ந்துகொணடுள்ளார். தமிழ்வாசகர்களுக்கு  பயனளிக்கக் கூடுமென்கிற நம்பிக்கையில், நாவலின் ““அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 1″

வாழ்க தலைவரே!

செவ்விந்தியர்களின் கசீனோவா? வடக்கு டகோடாவிலா? சரி. எத்தனை செனட்டர்கள்? பதிமூன்று? அவர்கள் நேற்றிரவு அங்கிருந்தார்களா? நீங்கள் சொல்வது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்தானா? அவர் குடித்திருக்கவில்லைதானே? அப்படியா, குடித்திருந்தாரா? சரி, இப்போது தாமதமாகி விட்டது. நான் அதிபரை அழைத்துத் தெரிவிக்கிறேன்.”

துன்பம் போக்குவதே தூயப்பணி

பனி பொழிந்தால் மீண்டும் அடுத்த சுழற்சியில் புதிய பனி உருவாகும். சக்குரா உதிர்ந்தால் மீண்டும் அடுத்த பருவத்தில் புதிய மொட்டு உருவாகும். ஆனால் முதுமை என்பது தொடர்ச்சியாக நிகழ்வது. எனவே, உண்மையில் உதிர்ந்து கொண்டிருப்பது நாம்தான் என்கிறார் புலவர்.

கருப்பு எஜமானி

இலக்கின்றி நடந்தாள்; தாழ்வாரம், அறைகள், சமையலறை என்று
எங்கும். ..கண்கள் பொறுமையின்றி கேட்டையே பார்த்துக் கொண்டிருந்தன,
அதற்கு அப்பாலும். சூரிய கதிர்கள் நடனமாடுகிற வயல் வெளியிலும்,
அதற்கு அப்பாலும், அவள் மனம் மட்டுமே போகிற இடமாய் ;
சிறுமியின் பாதங்கள் சிறு அடி எடுத்து வைக்கும் நடைபாதைக்கு
அப்பால், வேலிக்கு அப்பால் பரந்திருக்கும் வயல் வெளியில், தொலை
தூரத்தில் தன் மகள் நடந்து வருவதை பார்க்க முடிந்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும்.

ஐந்து நாற்பத்தி எட்டு

அவளுக்கு வேலைத் திறமை இருந்தது, நேரம் தப்பாது வந்தாள், நல்ல தட்டச்சாளியாக இருந்தாள், அவளிடம் அவர் ஒரே ஒரு விஷயத்தில்தான் குறை காண முடிந்தது – அவளுடைய கையெழுத்தில். அவளுடைய தோற்றத்தோடு அவளுடைய சீரற்ற கையெழுத்தை அவரால் பொருத்திப் பார்க்கவியலவில்லை. அவள் வட்டமான சாய்வெழுத்துகளில் எழுதுவாள் என்று எதிர்பார்த்திருந்தார், அவளுடைய கையெழுத்தில் ஆங்காங்கே அப்படிச் சில தடயங்கள் இருந்தன, ஆனால் அவை நேர்த்தியற்ற அச்சு வடிவ எழுத்துகளோடு கலந்து இருந்தன. 

சந்திரஹாரம்

அம்மா என் தலை வீங்கும் அளவுக்கு என்னைத் திட்டித் தீர்த்தாள். “இப்போதே கழுத்து வரை கடனில் முழுகி உள்ளோம். இது வேறயா? பணம் கொடுத்து வாங்கினாலும், அது தெரியாதவர்கள் நாம்தான் பாட்டியின் சங்கிலியை பிடுங்கிக் கொண்டோம் என்பார்கள்.  நமக்கு எதற்கு இந்த அவப்பெயர்? நான் ஏன் சொல்கிறேன் என்று புரிந்து கொள்ளடா, சின்னா” என்றாள் அம்மா

ஹெட்மாஸ்டர்

கமலா பெட்ரூமைத் தாளிட்டு விட்டு படுத்திருந்தாள். சோர்வோடும்,
நடுக்கத்தோடும், சாவின் விளிம்பை உரசிவிட்டு வீடு திரும்பியிருந்த
அவருக்கு ஓர் அருமையான வரவேற்பைத்தான் அவர் மனைவி
தந்திருக்கிறாள். முழு இரவும் ஹாலிலேயே படுத்திருந்தார். அந்த
அமைதியான குற்றச்சாட்டு அவரை வறுத்தியெடுத்தது. அவருடன் பணி
புரியும் அந்தப் பெண்ணிற்கு உடல் நலமில்லை. நடுங்கிக் கொண்டிருக்கும்
அந்தப் பெண்ணை அவர் அணைத்தபடி அழைத்து வந்தார்

 காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!

தறியில் துணியை நெய்து முடித்தபின் அதைத் துவைத்து ஒரு கல்லின்மேல் காயவைப்பார்கள். நன்றாகக் காய்ந்தபின் கல்லின் மேற்பரப்புக்கு ஏற்பத் துணி சீரற்ற வடிவத்தில் மேடுபள்ளமாக இருக்கும். எனவே, கினுதா என்றொரு கருவியைப் பயன்படுத்தி அதைத் தட்டித்தட்டிச் சீராக்குவார்கள். பின்னர் அத்துணி துவைத்த மற்றும் காயவைத்த சுவடே தெரியாமல் அப்போது நெய்த புதுத்துணிபோல் காட்சியளிக்கும்

அதிரியன் நினைவுகள் – 45

This entry is part 44 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மருந்துகளால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை என்கிற நிலைமை. கைககால்களில் வீக்கம் கூடியிருந்தது. இப்போதெல்லாம் படுத்து உறங்குவதில்லை ; உட்கார்ந்தபடித் தூங்குகிறேன். மரணத்தின் நன்மைகளில் ஒன்று, அது மீண்டும் படுக்கைக்கு நம்மை அழைத்துச் செல்வதாகும். ஆண்ட்டொனைனஸ(Antoninus) ஆறுதல் படுத்துவது இப்போது என் கையில்.   எனது பிரச்சினைக்கு, மரணம் சரியானத் தீர்வாக  இருக்குமென்கிற எண்ணம் வெகுநாட்களாக  என்னிடத்தில் இருப்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன்.

உடைகளும் சுமையடி தனிமையிலே!

ஓஷிமா மீனவர்களின் உடையை உவமையாகக் கூறுவது ஒருவகை என்றால் கடலுக்குள் எப்போதும் ஈரமாகவே இருக்கும் பாறையை உவமையாகக் கூறுவது தொடர்ச்சியாக நிற்காமல் கண்ணீர் பெருகிக்கொண்டிருக்கிறது என்று பொருள்தரும்படி இயற்றுவது அடுத்தவகை.

அதிரியன் நினைவுகள் – 44

This entry is part 43 of 48 in the series அதிரியன் நினைவுகள்

இருந்தபோதிலும், என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பொய்யான கனவுலகில் திரும்பப் பிரவேசிப்பதை  நான் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். கனவுகள்தோறும் ஒரு சில கணங்கள் சில இரகசியங்கள் எனக்குச் சொந்தமானவை. ஆம், நான் தெரிவிப்பதைப் போலச் சில கணங்கள் மட்டுமே சொந்தம் ; பின்னர் அவை என்னிடமிருந்து தப்பிவிடும்.

ஸ்ரீவாணி மேடம் 

சுஜாதாவுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த தற்பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று நினைத்துக் கொண்டாள். அதை மறைத்துக் கொண்டு, “அன்றொருநாள் உன் வீட்டுக்கு போன் செய்தோம் அக்கா. அந்த நம்பரில் போன் எதுவும் இல்லை என்று பதில் வந்த்து. பாக்டரிக்கு போன் செய்தால் அங்கே மாமா இல்லை என்றார்கள். எங்கே போயிருக்கிறார்? உங்கள் போனுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள் சுஜாதா. 

அதிரியன் நினைவுகள் – 43

This entry is part 42 of 48 in the series அதிரியன் நினைவுகள்

இவை அனைத்திற்கும், ஏற்றுகொள்ளப்பட்ட வழிபாட்டு மரபுகளில் தொடர்ந்து ஏற்பட்ட  அபரிதமான வளர்ச்சியும், ஒருசில மக்களின் இச்சகப் போக்கும்,   அரசு மானியங்களை எதிர்பார்க்கிற சில சமயக்குருமார்களின் கேவலமான நடவடிக்கைகளுமே காரணமாக இருக்கக்கூடும். சோகமும் இனிமையும் கொண்ட ஆண்ட்டினூஸ் முகம் பாமர பக்திகாரணமாக ஏழைகளுக்கும், நலிந்தோர்க்கும் சகாயத்தின் வடிவம் ; தங்கள் பிள்ளைகள் இளம்வயதில் பறிகொடுத்த ஒரு சிலருக்கு அவன் முகம் ஆறுதலையும் தருகிறது

ரகசியமானது காதல்

இப்பாடலுக்கு மறுமொழியாக இப்புலவர் இயற்றியது “ஓஷிமா மீனவர்களின் உடையைவிட அதிகமாக நனையும் அளவுக்கு என் கண்ணீர் வற்றாமல் இருக்கிறது” என்பது. இப்பாடலின் இறுதி அடியில் கைப்பகுதியின் வண்ணம் மாறியிருக்கிறது என்று வருகிறது.

தூவானமும் வெண்வானமும்

நாணல் தண்டின் ஒரு கணுவின் வெட்டப்பட்ட சிறு பகுதியும் துளிர்த்து வளர்ந்து பரிசலுக்கு நீர்மட்டம் காட்டும் கோலைச் சூழ்ந்து மறைப்பதுபோல் ஓர் இரவு மட்டும் நிகழ்ந்த நமது சந்திப்பு குறுகியதாக இருப்பினும் அந்நினைவுகள் வளர்ந்து வாழ்வில் குறுக்கிடுகின்றன.

அதிரியன் நினைவுகள் – 42

This entry is part 41 of 48 in the series அதிரியன் நினைவுகள்

எனது தற்கொலைக்கு உதவக்கூடிய ஒரு நல்ல கூட்டாளியைத் தேடினேன். கடந்த கோடையில், தான் இல்லாதபோது எனக்கு மருத்துவம் பார்க்க ஹெர்மோஜேனெஸ் அலெக்ஸாந்திரியாவைச் சேர்ந்த ஓர் இளம் மருத்துவரைத் தெரிவு செய்திருந்தார் ; பெயர் ஐயோலாஸ் ; அவனிடம் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தேன். அவனும் நானும் அவ்வப்போது கூடிப் பேசுவோம். பொருட்களின் இயல்பு மற்றும் தோற்றம் பற்றிய கருத்தியங்களை இந்த இளம் மருத்துவனிடம் சேர்ந்து கட்டமைப்பதில் எனக்கு உண்மையில் மகிழ்ச்சி. அவனிடமுள்ள துணிச்சலும், கற்பனையும், ஆழமான கண்களில் கனல்போல எரிகிற  உற்சாகமும் எனக்கு விருப்பமானவை.

அதிரியன் நினைவுகள் -41

This entry is part 40 of 48 in the series அதிரியன் நினைவுகள்

கடலோரக் காவல்படைகளை ஆய்வு செய்தேன். கடமையில் நேர்மை, துருப்புகளுக்கு அளித்த பயிற்சியில் புதிய முறை,பொறியியல் வேலைகளின் தரம் ஆகியவற்றிற்காக அவர்களின் தளபதிகள் மிகச்சிறந்த பாராட்டுதலுக்கு உரியவர்கள்…… நன்கு அறியப்படாமலும், பராமரிப்பின்றியும் கிடந்த   கடலோரப் பகுதிகளெங்கும், கள ஆய்வைமேற்கொண்டு தேவையெனில் எனக்கு முன்பாகப் பயணம்செய்த கடலோடிகளின் குறியீடுகளைத் திருத்தவும் செய்தேன்

உள்ளத்தில் உள்ளேனா?

வானத்தில் வட்டநிலா என்னை அழச்சொல்கிறது. இல்லையில்லை. அழவைப்பது என் உள்ளத்தின் நினைவுகளே. கண்ணீர் பெருக்கெடுப்பதற்கு நிலவைக் குறை கூறுவானேன்?

அதிரியன் நினைவுகள் – 40

This entry is part 39 of 48 in the series அதிரியன் நினைவுகள்

லூசியஸ் ஒருபோதும் கேள்விகளை எழுப்புவதில்லை; பதிலாக  என் சிந்தனைக்குள் பிரவேசித்திருந்தான். எனது அசைவுகள் ஒவ்வொன்றையும் அவனுடைய கண்கள் பின்தொடர்ந்தன. இரண்டாவது முறையாக அவனைக் கான்சல் ஆக நியமித்தேன். ஆனால் இம்முறை  அப்பணிகளைத் தம்மால் நிறைவேற்ற முடியுமாவென்கிற அச்சம்,. என்னை விரக்தியடையச் செய்கிறோம் என்கிற வேதனை அவனுடைய உடல் நிலையை மோசமாக்கியது

துயரறுத்தலே துயரமோ?

வாழ்வின் துயரங்களிலிருந்து விலகியிருக்க விரும்பினாலும் மலைக்குடிலுக்குத் தொலைவில் கேட்கிறது அடிபட்ட மானின் துயரக்குரல்.

ஈஸ்வர அனுக்ரஹம்

சிறிது காலம் முன்பு ஒரு சினிமா நடிகரை அழைத்து வந்தோம். வர போக செலவு, ஹோட்டலில் தங்குமிடம், அதைத் தவிர பணக் கவர் கொடுத்தோம் அவர் வந்து பெண்கள், பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் சீரழிந்த ஜோக்குகளைப் பேசினார். ஒவ்வொரு ஆண்டும் யார் யாரையோ அழைக்கிறோம். சன்மானம் செய்கிறோம்

அதிரியன் நினைவுகள் – 39

This entry is part 38 of 48 in the series அதிரியன் நினைவுகள்

எனது மனைவி பாலட்டைனில் உள்ள அவளுடைய  இல்லத்தில் இறந்திருந்தாள்; தீபுரைக்காட்டிலும் அவள் விருப்பம் தொடர்ந்து பாலட்டைனாக இருந்தது;  அவளுக்கு முக்கியமென நினைத்த ஸ்பெய்ன் நண்பர்கள், உறவினர்கள் என்கிற சிறு சுற்றத்தோடு அந்நகரில் வசித்து வந்தாள். வார்த்தைகளில் கவனம், மரியாதை,  புரிந்துகொள்ள எடுக்கும் பலவீனமான முயற்சிகள் அத்தனையும் படிப்படியாக விலகிக்கொள்ள  எங்கள் உறவில் பகையும், கோபமும், மனக்கசப்பும் தலைகாட்டின; அவளும் தன் பங்கிற்கு கடும் வெறுப்பைப் பிரயோகித்தாள்.

மைக்குழற் செறிவன்ன காதல்

மே மாதங்களில் ஹொதொதொகிசு என்றொரு குயிலினம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு வலசை வரும். மே மாதம் என்பது ஜப்பானில் வசந்தகாலம் முடிந்து கோடை தொடங்குவதற்குச் சற்று முன்னர் என்பதால் இக்குயிலின் முதல் கூவல் கோடையின் வரவை அறிவிப்பதற்கானது என்று ஜப்பானியர்கள் காத்திருப்பார்கள். இப்படித்தான் இப்பாடலாசிரியரும் அவ்வாண்டின் முதல் கூவலைக் கேட்டுக் குயிலைக் காண ஆவலோடு ஓடிவந்து பார்த்திருக்கிறார்.

அதிரியன் நினைவுகள் – 38

This entry is part 37 of 48 in the series அதிரியன் நினைவுகள்

ஒரு சராசரி மனிதனாக இருந்த காலத்தில்,  சேபைன்ஸ்(Sabines) மலைகளின் அடிவாரத்தில், நீர்க்கரையோரம் பரந்துகிடக்கும் இந்நிலங்களை ஒன்றன் பின்னொன்றாக வாங்கிச் சேர்த்தேன்,  விவசாயி ஒருவன் தளராத பொறுமையுடன் தனது திராட்சைத் தோட்டத்திற்கு வேண்டிய நிலத்தை வாங்கி முடித்ததுபோல; பின்னர், இராச்சிய விவகாரங்கள் தொடர்பான  இரு பயணங்களுக்கிடையில் கொத்தனார்கள்,  கட்டிடக்கலைஞர்கள் ஆகியோர் பிடியில் சிக்கி இச்சிறியகாட்டில் நான் தங்க நேர்ந்தது; ஆசியக் கண்டத்தின் அனைத்துவகையான மூடநம்பிக்கைகளிலும் திளைத்திருந்த ஓர் இளைஞன்  பயபக்தியுடன், மரங்களைக் காப்பாற்றக் கேட்டுக்கொண்டான்.

இடம்பெயரும் புள்ளினங்காள்!

புதினத்தின் நாயகன் கென்ஜி, சுமா என்னும் ஊரில் தங்கியிருக்கும்போது கடற்பறவைகள் இரைதேடிக் கிளம்பும் ஒலியைக்கேட்டுத் துயிலெழுவார். இப்பாடலும் புதினமும் சமகாலத்தவை. 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்ட பல இலக்கியங்களில் கென்ஜியின் கதையில் வரும் நிகழ்வுகள் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கின்றன

நவதீப்

“உங்களுக்கு எந்த ஊர் தம்பி?” என்று கேட்டுக் களத்தில் புகுந்தாள் என் அக்கா. அவளுக்குக் கேள்வி கேட்கும் கெட்டப் பழக்கம் உண்டு. “எந்த ஊர்? எந்த ஜாதி? திருமணம் ஆயிற்றா? எத்தனை குழந்தைகள்? உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர்?    அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்? என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தது வந்தவரை வாட்டுவது அவள் வழக்கம். எல்லோர் வீடுகளுக்கும் சென்று அவர்களின் விவரங்களைச் சேகரித்து அறிவுரை கூறி வருவாள். அப்படிச் செய்யாதே என்று சொன்னால் கேட்கமாட்டாள்.

நா. சந்திரசேகரன் கவிதை

அலைகளின் இடைவெளியில்
விரைந்து வளைபுகும் சிறுநண்டுகள்.
அப்போதுதான் உணர்ந்தேன்
அலை கொணரும் வரிகள்
வேறு வேறென!
ஆமென்று ஆர்ப்பரித்து
ஆடை நனைத்துச் சென்றது ஓரலை

பேரழகி ப்யூ

ஹாட்டெ, ஹோன்ஸ்,லெரிஷ், தங்கக் கடிகாரம் அணிந்த வியாபாரிகள், செல்வம் மிகுந்த பயணிகள், விடுமுறையில் வந்திருந்த போர்வீரர்கள், ஷெரிஃப் அலுவலக எழுத்தர்கள் என வெவ்வேறு சமூக அமைப்பைச் சார்ந்த ஆண்கள் எங்கள் தெரு வழியே கால் கடுக்க நடப்பதைக் காண முடியும். சீரான சிகை அலங்காரத்துடன் அன்ன நடையிடும் அந்தப் பேரழகு “தையல் கலைஞர்” நாநாவிடம் அவர்கள் தங்களுடன் நடனமாட, மாலைப் பொழுதைக் கழிக்க என அழைப்பதைக் காண முடியும்.

துள்ளிவரும் வெள்ளலையே!

நதியின் ஓட்டத்தில் எதிர்ப்படும் பாறை நதியின் பாதையை இரண்டாகப் பிரித்தாலும் பாறையைத் தாண்டியபின் ஒன்றாகக் கூடுவதைப்போல் இப்போது பிரிவை எதிர்கொள்ளும் நாமும் பின்னர் ஒன்று சேர்வோம்.

சாய்ந்து அழ ஒரு தோள்

குழந்தைப் பருவத்தில் இருந்த
என் அன்னையை இன்னொரு உலகில் சந்தித்தேன்.
கை கோர்த்து கடற்கரையில் நடந்தோம்.
உலகில் அவள் நேசித்த
அத்தனை விசயங்களையும் ஆர்வத்துடன் பேசினாள்.
ஆயிரம் அங்கதங்கள்

அதிரியன் நினைவுகள் – 37

This entry is part 36 of 48 in the series அதிரியன் நினைவுகள்

இராணுவத் தலைமை அதிகாரிகளோடு, ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வுக் கூட்டமொன்றில் என் மூக்கில் இரத்தம் கசிந்தது ; ஆரம்பத்தில் அவ்வளவாக நான் அதைப் பெரிதுபடுத்தவில்லை, ஆனால் இரவு உணவின்போதும் தொடர்ந்து ஒழுகியது ; அன்றிரவு கண்விழித்தபோது இரத்தத்தில் நனைந்திருந்தேன். அருகிலிருந்த கூடாரத்தில்  செலெர் படுத்திருந்தான், அவனை அழைத்தேன்; அவன் என்னுடைய மருத்துவர் ஹெர்மோஜேனெஸிடம் உடனடியாக இப்பிரச்சினையைக் கொண்டுபோனான்,

கேட்டதும் கிடைத்ததும்

இப்பாடலின் ஆசிரியர் முன்பு தனது காதலியின் வெறுப்பைக் குறைக்கப் போதிசத்துவரிடம் வேண்டியிருக்கிறார். ஆனால் அது குறையாமல் வளர்ந்துகொண்டே வருவதைக்கண்டு அடுத்தமுறை இக்கோயிலுக்கு வந்தபோது இப்பாடலை இயற்றினார். வளர்ந்துகொண்டே வரும் காதலியின் கோபத்தை அதிகரித்துவரும் மலைக்காற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.

அதிரியன் நினைவுகள் – 36

This entry is part 35 of 48 in the series அதிரியன் நினைவுகள்

நம்முடைய  தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஒரு நீண்டகாலப்போரின் பாதிப்பை எதிர்கொள்ள சக்தி இன்றில்லை; நம்முடைய இன்பவிரும்பிகளுக்கு, தற்போது மகிழ்ச்சி கசக்கிறது. ஒழுக்கநெறிகளை எளிமைபடுத்துதலும், சிந்தனைகளில்  முன்னேற்றமும், கடந்தநூற்றாண்டில் நல்லெண்ணங்கொண்ட  சிறுபான்மையினரின் பணியாக இருந்துள்ளது;  இன்றைக்கும் வெகுசனமென்பது அறியாமையில் உழலும் மக்கள்;முடிந்தபோது தங்கள் கடுஞ்சினத்தை வெளிப்படுத்துகிறார்கள்

மேரா பாரத் மகான்

மணாலியில் இருந்து ரோஹ்தாங் பாஸ் வழியாக ‘லடாக் லெஹ்’ செல்லும் மார்க்கம் குளிர் காலத்தில் முழுமையாக பனியால் மூடப்பட்டிருக்கும். பிப்ரவரி மாத இறுதியில் பனியை நீக்கத் தொடங்கி ஏப்ரல் பதினைந்து தேதிக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்தை அனுமதிப்பார்கள். அதுமட்டுமின்றி, பியாஸ் நாலா வரை டூரிஸ்ட்டுகளை அனுமதிப்பார்கள் அங்கு வரை அனைவரும் வாகனங்கள் மீது சென்றால் தமக்கு வருமானம் இருக்காது

காதல்மொழிகள் கடலலை போலே!

இடைக்கால ஜப்பானிய இலக்கியங்களில் சட்டையின் கைப்பகுதி நனைவது காதலரின் பிரிவால் வாடும்போது உகுக்கும் கண்ணீரை உணர்த்துவது என்றும் அரண்மனைக் காதல்கள் எல்லாம் குறுகிய வாழ்வை உடையவை என்றும் பார்த்தோமல்லவா? போட்டிப்பாடல் பாடியவர் தனது செயலுக்குக் கடலலையை உவமையாகக் காட்டியதால் இவரும் இப்பாடலில் அத்தகைய பிரிவைக் கடற்கரையில் உடையை நனைக்கும் அலையுடன் இணைத்துப் பாடியிருக்கிறார்

காட்டுப்பன்றி இலச்சினையை நாட்டுப் பன்றியெனத் தவறாகப் புரிந்துகொண்டு…

This entry is part 34 of 48 in the series அதிரியன் நினைவுகள்

காட்டுமிராண்டியான  மித்திரா(Mithra)வுக்குத் தான் அப்பல்லோ கடவுளின் சகோதரர் என்கிற நினைப்பு உண்டு. ஒரே தெய்வமென்கிற கருத்தியத்தின்  குறுகிய எல்லைக்குள் உண்மையை முழுமையாகப்  பூட்டிவைத்து, அனைத்துப் பண்பையும் உள்ளடக்கிய கடவுளின் பன்முகத்தமையை அவமதிக்கும் ஆணவம் இஸ்ரேலியரிடம் மட்டுமே இருந்தது, இதனை உலகில் வேறுமக்களிடம் காணமுடியாது; 

டெர்மினல்

ட்ராமின் ஜன்னல் கம்பிகளின் மீது கனத்த போர்வை போல தூசு படிந்திருந்ததில் நடைபாதையில் இருந்த மரம், விளக்குக் கம்பம் மற்றும் தெருவில் சென்று கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் ஏதோ பழைய படத்தின் மீது படிந்திருக்கும் அழுக்கைப் போல வழுக்கியபடி மங்கலாகக் காட்சியளித்தார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் சில பயணிகள் இறங்கினார்கள். நடத்துநர் மணி கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுக்கும்போதெல்லாம் ட்ராம் விக்கலுடன் முன்னால் சென்று நின்றது.

குமார சம்பவம் மஹா காவ்யம்

ஈசனின் பிரிய பத்னியாக அவருடைய மடியில் அமர ஏதுவாக இருக்கவே என்பது போல இடை பாகமும் பின்னழகும் விளங்கின. அடுத்து அழகிய நாபியும், அதைச் சுற்றி ரோம ராசியும், மேகலையில் பதித்த மணி போலவும், வளித்ரயம் என்ற கோடுகள், அழகிய ஸ்தனங்கள், உத்பலம் போன்ற கண்கள் என  ஒவ்வொரு அங்கமும் யௌவனம் வந்து விட்டதை பறை சாற்றின போலும்

இரத்தம் வரும்வரைத் தனதுடலைச் சொறிந்துகொள்ளும்…

This entry is part 33 of 48 in the series அதிரியன் நினைவுகள்

சமீபத்தில் கப்படோசியாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்ரியன் சமர்ப்பித்த அறிக்கை, காஸ்பியன் கடலோரமுள்ள சிறு இராச்சியத்தை ஆண்டுகொண்டிருந்த பராஸ்மன்ஸ்(Pharasmanès) மீது குற்றம் சாட்டியிருந்தது. இவர், மன்னர் திராயான் காலத்தில் உரோமானிய அரசுக்கு விசுவாசமாக இருக்கத் தவறி, பெரும் இழப்பை ஏற்படுத்தியிருந்தார் ; அதைத் தற்போதும் தொடர்வதாக அறிக்கை தெரிவித்தது.

உள்ளும் புறத்தும் தனிமையே!

தனிமையின் வெறுமையை விளக்கும் இன்னோர் எளிய பாடல். இத்தொடரில் பல பாடல்கள் தனிமை குறித்தனவாக இருக்கின்றன. பல பாடல்கள் துணையைப் பிரிந்த காதல்வலியையும் சில பாடல்கள் காதல் குறித்த சுட்டலின்றித் தனிமையை மட்டும் குறிக்கின்றன.

குங்கும பரணி

தேடல், பரிசோதனை இரண்டும் வேறுவேறானவை. புதிதாக ஒன்றை அறிவது தேடல். ஏற்கெனவே இருந்து மறைந்தவற்றை மீண்டும் கண்டுபிடிப்பது பரிசோதனை. இரண்டும் வேறுவேறான செயல்கள். இதுவரை யாரும் கண்டுபிடிக்காததை, யாரும் இதுவரை தொடாத ஒன்றை ஆராய்ந்து தெரிவிப்பது மனித இனத்திற்கு நவீன வெளிப்பாடாக இருக்கும்

துக்காராம் கவிதைகள்

எல்லா மனிதர்களும்
எனக்கு கடவுளைப் போன்ற
கடவுளர்கள்!
இனியும் என் கண்களுக்கு
தெரியாது குற்றமும் தவறும்.
இத் துயரமான உலகில் வாழ்க்கை இப்போது முடிவில்லா மகிழ்ச்சி;

வரிசையில் ஒரு சிநேகம்

தன் வாழ்க்கையைப் பற்றி இன்னும் கூட ஏதோ சொல்லிக் கொண்டே போனாள் தபலேய். இருவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிப் பகிர்ந்து கொண்டிருந்தனர். பின்னால் நீண்டு தொடர்ந்து போய்க் கொண்டிருந்த வாகன வரிசையின் மீதும் ஒரு கண் வைத்தபடியேதான் இருந்தாள் சகி.  இன்னும் நிறையப் பேர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கக் கூடும் என்றே அவளுக்குத் தோன்றியது.

குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்

தோட்டாக்கள் துளைத்து இடிந்து போன சுவரின் மறைவில் சிறிதுகாலம் முன்புதான் யாரோ பயன்படுத்தியிருந்த தரையில் நான் சிறுநீர் கழித்தேன். பாதி அழிந்த ஒரு அரிசிமாவுக் கோலம் இருந்தது. அதன் மீது படிந்திருந்த கறை அநேகமாக இரத்தமாகத் தான் இருக்கவேண்டும். அதன் மீது போக சங்கடப்பட்டு சிறிது நேரம் தயங்கியதும் ‘சீக்கிரம்’ என துரிதப்படுத்தினார் கணவர். இடம் மாறி அமரக்கூட அவர் அனுமதிக்கவில்லை. இடிந்த சுவர்களுக்கும் ஜன்னல்கள் கழன்ற இடைவெளிகளுக்கும் ஊடாக வெளியே இருந்து பார்த்தால் தெரியாத அப்படியான ஒரு மறைவிடம் வேறு இருக்கவில்லை.

குவாரண்டீன்

உயரத்தில் தீச்சுவாலைகள் மாலை நேரத்தின் ஆரஞ்சு நிறம் கலந்த அடிவானத்துடன் கலக்கும் போது, இன்னும் அரைகுறை உயிருடன் இருந்த நோயாளிகள், ஏதோ உலகமே தீப்பற்றி எரிகிறதோ என்று நினைத்தார்கள். குவாரண்டீன் இப்படி மேலும் பல மரணங்களுக்குக் காரணமாக இருந்தது. ஏனென்றால் வலுக்கட்டாயமாக குவாரண்டீன் மையத்தில் அடைக்கப்படும் அச்சத்தினால் மக்கள்  தங்கள் நோயின் அறிகுறியை யாருக்கும் சொல்லாமல் மறைக்கத் தொடங்கினார்கள்.

விழியிலிருந்து நினைவுக்கு

கவிஞர்களை இரு வரிசைகளில் எதிரெதிரே அமர்த்தி இருவர் இருவராகக் கவிதைகள் புனைந்து சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. கவிஞர் யுய்யே எழுதிய பாடலுக்குப் போட்டியாகப் புனையப்பட்ட இப்பாடல் பரிசை வென்றது. இரு பாடல்களும் உதிர்ந்து கிடக்கும் செந்நிற மேப்பிள் இலைகள் அவ்விடத்தை அழகுபடுத்துவதாகப் புனையப்பட்டவைதான்.

அதிரியன் நினைவுகள் – 33

This entry is part 32 of 48 in the series அதிரியன் நினைவுகள்

ஏதென்ஸின் அரசியல் சாசன வித்தகரான  கிளிஸ்தனீஸின்(Clisththenes) பழைய குடியரசு அரசியல்  சட்டங்களைத் திரும்பக் கொண்டுவந்ததாக அதைக் கருதமுடியும். அரசு ஊழியர்களின் எண்ணிக்கைக் குறைப்பு, அரசாங்கத்தின் பொதுச் செலவு சுமைகளைக் குறைக்க உதவியது; நிலக்குத்தகை வரியைத் தடைசெய்தேன் ; பெரும் கேட்டினைத் தரக்கூடிய இவ்வரிமுறை துரதிஷ்ட வசமாக இன்னமும் ஒரு சில உள்ளாட்சி நிர்வாகங்களில் பயன்பாட்டில் இருந்தது.  அக்காலக்கட்டத்திலேயே பல்கலைக் கழங்களுக்கு அடிக்கல் நாட்டியதும், நிறுவியதும் ஏதென்ஸ் நகரை ஒரு முக்கியக் கல்வி மையமாக மாற்ற உதவியது.