- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- புல்நுனியில் பனிமுத்து
- கொடிவழிச் செய்தி
- இறை நின்று கொல்லுமோ?
- காணும் பேறைத் தாரீரோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்
- ஜப்பானிய பழங்குறுநூறு 47-50
- வலிவிடு தூது
- வாள்போல் வைகறை
- நெஞ்சம் மறப்பதில்லை
- நிலவினும் நெடிது!
- இடம் மாறினும் மணம் மாறுமா?
- காவலும் தாண்டுவது காதல்
- பனிவிலகலில் அக்கரை வெண்மை
- எனக்கெனவே மலர்ந்தாயோ?
- விழியிலிருந்து நினைவுக்கு
- உள்ளும் புறத்தும் தனிமையே!
- காதல்மொழிகள் கடலலை போலே!
- கேட்டதும் கிடைத்ததும்
- துள்ளிவரும் வெள்ளலையே!
- இடம்பெயரும் புள்ளினங்காள்!
- மைக்குழற் செறிவன்ன காதல்
- துயரறுத்தலே துயரமோ?
- உள்ளத்தில் உள்ளேனா?
- தூவானமும் வெண்வானமும்
- ரகசியமானது காதல்
- உடைகளும் சுமையடி தனிமையிலே!
- காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!
- துன்பம் போக்குவதே தூயப்பணி
- எரிதழல் உள்ளம்
- துயர்சூழ் உலகில் தனிமை
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
村雨の
露もまだひぬ
まきの葉に
霧立ちのぼる
秋の夕暮れ
கனா எழுத்துருக்களில்
むらさめの
つゆもまだひぬ
まきのはに
きりたちのぼる
あきのゆふぐれ
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: மதகுரு சதாநகா
காலம்: கி.பி 1139 – 1202.
இத்தொடரின் 83வது பாடலை (துயரறுத்தலே துயரமோ?) இயற்றிய தொஷினாரியின் வளர்ப்பு மகன். தொஷினாரி தனது தம்பி மகனைத் தத்தெடுத்துக்கொண்டார். இவரது சமகாலத்தில் புகழ்பெற்றிருந்த மிகோஹிதாரி பாடல் புனைவகத்தில் (புலவர்கள் சங்கமம் போன்ற அமைப்பு) ஒருவராக விளங்கினார். தனது 53ம் வயதில் துறவறம் பூண்டார். பின்னர் 64ம் வயதில் அரசவைப் புலவர் குழுவில் இடம்பெற்றார். ஷின்கொக்கின்ஷூ எனும் தொகுப்பை உருவாக்கப் பேரரசர் ட்சுச்சிமிகாதோ இவரைப் பணித்தார். ஆனால் தொகுப்பு முற்றுப்பெறும் முன்னரே இவர் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் தொகுப்பாளராக வரலாறு இவர் பெயரைப் பதிவு செய்யவில்லை. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 117 பாடல்களும் ஒரு தனிப்பாடல் திரட்டும் இடம்பெற்றிருக்கின்றன.
பாடுபொருள்: இலையுதிர்கால மழையின் அழகு
பாடலின் பொருள்: மழை நின்றபிறகும் ஊசியிலைகளின் நுனியில் துளிகள் இருக்கின்றன. அவை வடியும் முன்பே பனிமூட்டம் மேலெழுந்து பள்ளத்தாக்குக்கு அழகூட்டுகிறது.
பொதுவாக ஜப்பானிய இலக்கியங்களில் இலையுதிர்காலம் என்பது காதலர்களின் பிரிவுக்கு உவமையாகக் கூறப்படும். ஆனால் இப்பாடல் காதல் தொடர்பான குறிப்புகள் ஏதுமில்லை. ஜப்பானில் இலையுதிர்காலத்தில் பலவிதமான மழைகள் பெய்யும். திடீரெனப் பெய்யத் தொடங்கித் திடீரென நிற்கும் கனமழை (முராசமே அல்லது ஷிகுரே), சிறு தூறல் (ஷூரின்), நனையவைக்காத சாரல் (கொசமே) எனப் பலவிதமாகப் பெய்யும். இப்பாடலில் வருவது முராசமே எனப்படும் திடீர்மழை. புலவரின் வீட்டுக்கு வெளியே உள்ள ஊசியிலைக் காட்டில் பெய்த மழையின் துளிகள் ஊசியிலைகளின் நுனியிலிருந்து வடிவதற்குக் காத்திராமலே வெண்ணிறப் பனிமூட்டம் மேலெழுகிறது. ஈரமான சூழலில் வெண்பனி சூழ்ந்த பள்ளத்தாக்கின் அழகுக்கு இணையே இல்லை.
வெண்பா:
மழையது நிற்பினும் நீர்த்துளி இன்னும்
பிழையற நீங்கா திலையில் – பிழைத்திட
வான்முகில் சூழவே நீள்வரை எங்கினும்
வெண்பனி கூட்டும் அழகு

குறுங்கூடலின் நெடுநினைவு
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
難波江の
葦のかりねの
ひとよゆゑ
みをつくしてや
恋ひわたるべき
கனா எழுத்துருக்களில்
なにはえの
あしのかりねの
ひとよゆゑ
みをつくしてや
こひわたるべき
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: சேடிப்பெண் பெத்தோ
காலம்: பிறப்பு, இறப்பு தெரியவில்லை. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
பேரரசர் சுதொகுவின் பட்டத்தரசி கோகாமொன் அவர்களின் அந்தப்புரத்தில் முதன்மை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். பிறப்பும் இறப்பும் தெரியவில்லை எனினும் கி.பி. 1181ல் துறவறம் பூண்டார் என்ற தகவல் வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது. ஏராளமான கவிதைப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றிருந்தாலும் ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 9 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன.
பாடுபொருள்: முதல் சந்திப்பில் பறிகொடுக்கப்பட்ட மனது
பாடலின் பொருள்: நாணல் தண்டின் ஒரு கணுவின் வெட்டப்பட்ட சிறு பகுதியும் துளிர்த்து வளர்ந்து பரிசலுக்கு நீர்மட்டம் காட்டும் கோலைச் சூழ்ந்து மறைப்பதுபோல் ஓர் இரவு மட்டும் நிகழ்ந்த நமது சந்திப்பு குறுகியதாக இருப்பினும் அந்நினைவுகள் வளர்ந்து வாழ்வில் குறுக்கிடுகின்றன.
இருபொருள் தரும் மூன்று சொற்களை வைத்து இச்செய்யுளைச் சிலேடையாக்கி இருக்கிறார் ஆசிரியர். இத்தொடரின் 19வது பாடலிலும் (எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?) 20வது பாடலிலும் (உயிரையும் தருவேன் உனைக்காண) இம்மூன்று சொற்களும் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 21ம் பாடலில் (மலைவளி வீழ்த்து தருக்கள்) கூறியதுபோல் ஜப்பானிய மொழியில் கான்ஜி எழுத்துருக்கள் ஒரே ஒலிப்பின் வெவ்வேறு பொருட்களை உணர்த்துமாறு பயன்படுத்தப்படுவதை வைத்துக் கவிதைகளில் சிலேடையைக் கையாண்டிருக்கிறார்கள்.
இப்பாடலில் கரினெ, ஹிதோயொ, மிவோட்சுகுஷி ஆகிய சொற்கள் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
கரினெ(かりね) – கணுவின் வெட்டப்பட்ட சிறுபகுதி(刈り根) / மிகக் குறுகியகாலக் கூடல்(仮寝)
ஹிதோயொ(ひとよ) – ஒரு கணு(一節) / ஓர் இரவு(一夜)
மிவோட்சுகுஷி(みをつくし) – நீர்மட்டம் காட்டும் கோல்(澪標) / வாழ்க்கை(身を尽し)
ஜப்பானிய மொழியில் இத்தகைய ஒலிப்பு ஒற்றுமைகள் சிலேடைக்கு உதவினாலும் தமிழில் சொற்கள் பொருந்தி வராததால் இரு வேறு வெண்பாக்களாக இயற்றப்பட்டிருக்கின்றன.
வெண்பா:
கணுவது வெட்டிட வெட்டிட மீண்டும்
மணுவென மாறிச் சிறிது – அணுவும்
தளராது நீண்டு துளிர்த்தே பெருகிடச்
சூழ மறைவது கோல்
மணு – எட்டு வீசை கொண்ட மணங்கு என்னும் அளவின் பேச்சு வழக்கு
இரவினில் சேர்ந்தது இம்மியே ஆயின்
கிரக்கம் குறையா நினைவே – சிரக்கும்
நலனை; அதன்வழி மீளலும் அன்றியே
சூழக் கெடுவது வாழ்வு
சிரக்கும் – அழிக்கும் அல்லது கெடுக்கும்
(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
