ஒருவேளை தூரத்தில் இருந்து ஆண் ஜாடையாகத் தெரிந்தாலும் அந்தப் பெண் கிட்டப்பார்வையில் சுமாரான அழகாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நம்புவதற்கு முயற்சித்தான். சரி போய்த்தான் பார்ப்போம். யார் கண்டது? எது எப்படிப் போனாலும் சங்கரன் மாமா ஜனாதிபதி மாளிகையில் நல்ல செல்வாக்கோடு திகழ்ந்து அதனால் தனக்கு அலுவலக ரீதியாக ஏதேனும் நல்ல வாய்ப்பும் சவுகரியங்களும் கிடைக்கலாமே என்றும் நினைத்தான்.
Category: இந்தியச் சிறுகதை
மாலையும் மாதவிடாய் நாட்களும்
அவன் எப்படியும் வருடா வருடம் மாலையிடத்தான் செய்வான்.தனக்கு எப்படியும் இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்கு மாதவிடாய் வரவே செய்யும். உண்மையில் அவளுக்கு அவன் மாலையணிவதில் அவளுக்கு சந்தோசமே .காரணம் காலையில் அவனுக்காக சமைக்க வேண்டியதில்லை . பிள்ளைகளுக்கு மட்டும்தான் அதுவம் சிறிய அளவில். மதியம் கொஞ்சம் கூடுதலாக அப்பளமோ பொரியலோ செய்வதில் அவளுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.
மதுக்கூடம்
சார், உங்களுக்கு விஷயம் தெரியாதா? ரெண்டு நாள் முன்னாடி கடையில நடந்த ஒரு சண்டையில அந்த கவுன்சிலர் பையனும் அவனோட கூட்டாளிங்களும் சேர்ந்து தொரக்கண்ணு தலையில பீர் பாட்டிலால அடிச்சிட்டாங்க. மண்ட ஒடஞ்சு ரத்தம் கொட்டுச்சு. ஓனர் உடனே அவன பக்கத்துல இருக்குற நர்சிங் ஹோமில சேத்துட்டார். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரின்னா கேஸ் ஆயிடும்ல
வூப்பி-பை
“லெகோ ரூமில்” ப்ளாக்குகளை அவர்கள் கலவரத்துடன் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கையில் அங்கு ஒலித்துக் கொண்டிருந்த “ஜிம்மி திங்” பாடலின் கிட்டார் கோவைகள் இந்நினைவுகளைக் கிளர்த்தெழுப்பின. லெகோ அறை என்பது பல பிறந்தநாட்கள் வழியே படிப்படியாக இயல்பாக உருவான ஒன்று. அவர்கள் மேலும் மேலும் ப்ளாக்குகளை சேர்க்கச் சேர்க்க அந்தக் கட்டுமானம் பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு அவர்கள் “Life Desired – WIP” என்று பெயரிட்டிருந்தார்கள்.
சிப்பிகளின் சிதறல்
வார்த்தைகள் உதடுகளில் நறுநறுக்க ஆரம்பித்திருந்தன. படிக்கட்டுகளை சுற்றிலும் பதற்றத்தோடு துளாவ ஆரம்பித்திருந்தாள். மண்டபம் வழக்கமான ஆள்நடமாட்டம் இல்லாமல் கலையிழந்து கிடப்பதை பற்றியோ, எங்கிருந்தோ வாரி இறைக்கப்பட்ட ஏதேதோ பொருட்கள் அங்குமிங்குமாக சிதறிக் கிடப்பதை பற்றியோ அவளிடம் எந்த புகாருமில்லை. அவளது கவனம் முழுவதும் அவளது அழுக்கு மூட்டையை கண்டடைவதில் இருந்தது.
லக்ஷ்மி சிரித்தாள்!
தன் மருமகள் செல்வி ‘உண்டாகியிருக்கிறாள்’ என்ற நற்செய்தியை மகன் சபேசன் சொன்னதில் இருந்து முருகேசருக்கு ஒரே குதூகலம். “மகன், மூண்டு நாலு மாதத்திற்கு செல்விக்கு நல்ல சத்தான சாப்பாடுகள் கொடுக்கவேணும் கண்டியோ….தண்ணி கலக்காத நல்ல சுத்தமான பால் கொடுக்கவேணும். எங்களின்ட வயல்காறன் ராசு கிட்ட சொல்லி ஒரு கறவை மாடு ஒண்ட வாங்கி இஞ்ச கட்டி வச்சா நான் பால் கறந்து செல்விக்கு கொடுக்கலாம் கண்டியோ” என்ற முருகேசரின் ஆலோசனை உதாசீனப்படுத்தப்படவில்லை.
காலிங் பெல்
சத்யா அவனைக் குளிக்க வைத்தாள். மெதுவாகப் படுக்கையில் சாய்த்தாள். மாமியாரிடம் பொதுவாகப் பேச விரும்பாத சத்யா, இன்று போன் செய்து ஒன்றுவிடாமல் ஒப்புவித்தாள். அவனின் அம்மா சத்யாவைத் திட்டித் தீர்த்தாள். உடனே சென்னைக்கு பஸ் பிடித்தாள். ராம் விடிய விடிய உறங்காமல் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். சத்யா அவன் தலையில் எலுமிச்சைப் பழம் தேய்த்துப் பார்த்தாள். பித்தம் குறைந்தபாடில்லை. அவனது அம்மா வந்தவுடன், ராமின் உடல்நிலைக் கண்டு பதற்றமடைந்தாள்
தோசையம்மா தோசை
என்றைக்காவது இட்லியோ உப்புமாவோ சப்பாத்தி பூரியோ செய்தால் ஏதோ ஒப்புக்கு சாப்பிடுவோமே தவிர தோசை என்றால்தான் எல்லார்க்கும் குஷி. எங்களுடன் அம்மாவும் தோசையை தட்டில் போட்டு க்கொண்டு சாப்பிடும்போது அதிலிருந்து ஒரு விள்ளலை பிடுங்குவது சுஜியின் வழக்கம். அம்மா சிரித்தபடி அந்த விள்ளலை அவள் வாயில் ஊட்டிவிடுவாள்.
சாய்ந்தாடி
‘கடும் பஞ்சத்திலும், மைசூர் போரின் அவதிகளிலும் சிக்குண்ட இந்த மக்களை பிரித்தானிய அரசாங்கம் ஒரு போதும் கை விடாது’ என்றார் பெல்லி. நாராயண பிள்ளையின் உதட்டோரம் பூத்த புன்னகையின் அர்த்தத்தை வில்பர் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. சிறு தோல் பையிலிருந்து ஒரு சிறு தாளை வெளியே எடுத்தான் வில்பர். ஏதோ பேங்க் ஆப் பெங்கால் அச்சடித்து விநியோகிக்கும் ஐநூறு சிக்கா ருபாய் தாளை முதன் முதலாகப் பார்ப்பது போல பெல்லியின் கண்கள் விரிந்தது.
வெற்றி
நகுலன் கண்களில் மட்டுமே சினேகம் தெரிந்தது. ஐவரில் ஆசைகள் அற்றவன் அவனே. அவன் காதோரம் ஓடி இருக்கும் நரை கூட அவனுக்கு அழகாகவே இருந்தது. துச்சாதனனுக்கும் அதே போல நரை ஓடும் காதோர முடி. இப்போதும் செதுக்கியது போலிருக்கும் தன் உடலின் அழகு மட்டுமே இந்த நகுலன் கண்களுக்கு புலப்பட்டுக் கொண்டிருக்கும். நகுலன் தன்னிச்சையாக தண்ணீரைப் பார்த்து தன் தலைமுடியை ஒதுக்கிக் கொள்ள, துரியோதனன் தன் புன்னகை வெளிவராமல் அடக்கிக் கொண்டான்.
பிண்ட தானம்
தனது பிஞ்சுக் கரங்களை என் மீது போட்டு அவள் தூங்கும் நினைவுகள் லேசில் மறக்க கூடியதா? அவள் பிறந்த பின் தான் நான் என்னையே புதிதாக உணர்ந்தேன். அவள் இந்த உலகில் இருந்த இரண்டு வருடங்களும் எனது வாழ்க்கையின் உச்ச கட்ட சந்தோஷ நாட்கள். காரில் போனாலும் என் மடியில் தான் உட்கார்ந்து கொண்டு என் விரலைப் பிடித்த படி வருவாள். என்னுடன் இருக்கும் போதெல்லாம் என் விரல்களை பிடித்த படியே இருப்பாள்.அந்த ஸ்பரிசம் ஈடு இணையற்ற மகா ஆனந்தம்.
தொவள மறி
கோவிலின் வாசலில் பெண்கள் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தார்கள். மின்னலங்காரத்தில் பொங்கல் வைக்கும் புகை சூழ அந்த இடமே கோலாகலம் நிரம்பி வழிந்தது. சிரிப்பு சத்தங்களும், பேச்சுக்களும், பொங்கல் பொங்கும் பொது பெண்கள் விடும் குலவை சத்தமும் அந்த இடத்தை நிறைத்திருந்தது. கோவிலின் உள்ளே மலரலங்காரங்கள் நடந்து கொண்டிருந்தன. அம்மனுக்கு அலங்காரம் செய்ய அலங்காரக் காரர்கள் கருவரையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு புறம் வில்லுப்பாட்டுக்காரர்கள் அவர்களின் வாத்தியங்களை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.
பிழைப்பு
கடந்த ஒரு வார காலமாக அவனின் நிறுவன உரிமையாளர் அவர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்க அந்த அலுவலரிடம் பேசச் சொல்லி இவனைக் கோருகிறார். ஏனென்றால் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான அவருக்கு அனைத்திலும் சில்லறையான அலுவலரிடம் கெஞ்சுவது அவரால் ஆகாது. என்ன செய்வது? சம்பளம் வாங்கும் வரை நிறுவனத்திற்கு வேலை செய்துதான் ஆக வேண்டும்.நிறுவனம் இடும் கட்டளைகளை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். கடந்த ஒருவாரமாக தினமும் சென்று அவன் அலுவலரைப் பார்க்கிறான்.ஆனால் முதல் மூன்று நாட்கள் அவர் அவனைக் கண்டுகொள்ளவில்லை. நேற்றும் அதற்கு முந்தின நாளும் இவனது வேண்டுகோளை கேட்டவர், அதற்கு எந்த பதிலும் தராமல் வெறுமனே வேலை விசயங்களை மட்டும் பேசி அவனை அனுப்பிவைத்துவிட்டார்
காமாட்சிசுந்தரியும் அப்பாவும்
நடு வீட்டில் அப்பா புன்னகையோடு படுத்திருந்தார். வெண்ணிற மேல்சட்டை. நீல நிற கால்சட்டை. இரண்டும் அவரது முந்தய வருட பிறந்த நாளுக்கு அம்மா வாங்கிப் பரிசளித்தது. ஆனால் அது காமாட்சி தேர்ந்தெடுத்தது. அவரது தொப்பை மேல் இணைந்திருந்தபடி இருந்த அவரது விரல்களைத் தொட்டாள். சில்லென்று இருந்தது. அப்பாவுக்கு சூடாக இருப்பது தான் பிடிக்கும். சின்ன மழைக்காலக் குளிர் கூட அவருக்கு ஆகாது. தன் இரு கைகளைக் கொண்டு தேய்த்து சூடு கொடுக்க முயன்றாள்.
ஒருபக்கம். மறுபக்கம்?
லக்மினி அங்கிருந்தபடியே அமலனுக்குக் கண் எறிகின்றாள். ஏதோ புரியவில்லை என்பதை அமலன் தெரிந்து கொண்டான். கொஞ்ச நாட்களாக லக்மினியுடன் வரும் பெண்ணுடன், தன் சக நண்பன் மணி மினைக்கெடுகின்றான். இப்போதுகூட மணி அந்தப் பெண்ணுக்கு ஏதேதோ சொல்லிக்குடுத்து, தொட்டுத்தொட்டுக் கதைத்து சிரித்தபடி இருக்கின்றான். அவளின் உடல் அசைவுகளில் குப்புற விழுந்துகொண்டான் மணி.
கல்யாணி
மஞ்சுவின் அண்ணன் ஆனந்த் அறையின் வாசலில் ஒரு நாள் கயிற்றைக் கட்டி பெண்களுக்கு அனுமதி இல்லை என்றான். பழுத்த மாம்பழங்களை விநியோகிக்கும் உரிமை தனக்கே உண்டு என புதிதாக சட்டம் கொண்டுவந்தான். அதிகார மையமாக தன்னை மாற்றிக் கொண்டான். வியாபாரம் நடக்குமிடத்தில் பெண்களுக்கு என்ன வேலை என்று வஞ்சகமாக யோசித்தான். வஞ்சகம் செய்பவர்களை வீழ்த்த காற்றில் நஞ்சைக் கலத்தோம்.
ஈஸ்வர அனுக்ரஹம்
சிறிது காலம் முன்பு ஒரு சினிமா நடிகரை அழைத்து வந்தோம். வர போக செலவு, ஹோட்டலில் தங்குமிடம், அதைத் தவிர பணக் கவர் கொடுத்தோம் அவர் வந்து பெண்கள், பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் சீரழிந்த ஜோக்குகளைப் பேசினார். ஒவ்வொரு ஆண்டும் யார் யாரையோ அழைக்கிறோம். சன்மானம் செய்கிறோம்
சராசரிக்கும் கீழே
குடும்பத்தில் அமைதியின்மை சதா சர்வ காலமும் இருப்பதாகவும். குலாவின் மனைவி வீட்டில் இருக்கும் சிக்கல்களைத் தவிர்க்க வேலைக்குச் செல்ல துவங்கியிருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ரொம்ப நாட்களுக்குப் பின் குலா ஒரு நாள் ஃபோன் செய்தார். ‘’ஆராவமுதன் ! குழந்தை பொறந்திருக்கு. பெண் குழந்தை’’ என்றார். பெண் குழந்தை எனக் கூறிய போது தழுதழுத்து விட்டார்.
குறியீடு
“இரண்டு எலும்பு வகைகள் இருக்கின்றன” லிடியா. “ஒன்று மனிதன். பதின்ம வயது பையனாக இருக்கலாம் என்று கணிக்கிறேன். மற்றது குதிரை.” மித்ரன் குழியில் பார்த்தார். மனித உருவம் பக்கவாட்டில் முட்டி மடக்கி ஆங்கில “என்” போல் இருந்தது. பக்கத்தில் பெரிய உருவமாக இன்னொரு எலும்பு தொகுப்பு.
மூர்க்கரோடு இணங்கேல்
அவ இப்ப இல்ல.. எங்கள விட்டு போய்ட்டா.அதிர்ந்து பார்த்தாள்.இன்னையோட நாற்பத்தியெட்டு நாட்கள். டாக்டராகணும் டாக்டராகணும்னு சொல்லிட்டே இருப்பா. ஆனா அவளால ரெண்டு தடவையும் பாஸ் பண்ணமுடில. அந்தப் பயத்துலேயே இந்த எக்ஸாமுக்கு முன்னாலேயே போய்ட்டா.
இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது
இந்தியக்கடலில் க்ரீன்ஹவுஸை சுற்றி மட்டுமே நாங்கள் இருபது பண்ணைகள் வைத்திருந்தோம். ஒவ்வொன்றிலும் நாற்பதுக்கும் மேலான மிதவைக் காற்றாலைகள். அங்கிருந்து வரும் தகவல்களை சேகரித்துத்தரும் நிரலியை ஆய்வது மட்டுமே என் வேலை. அலைமின்பெருக்கி அசுர வேகத்தில் சுற்றத் தயாராக இருந்ததை என் திரை ஓரப்பச்சை சக்கரம் காட்டியது. மாலைக்குள் அன்றைய மின்னணு கொள்முதலை மையக்கட்டுப்பாட்டு செயலகம் இருக்கும் முப்பந்தலுக்கு அனுப்ப வேண்டும்
பிரமோபதேசம்
அம்மாவும் நானும் முதன்முதலில் சந்தித்தபோது எங்களுக்கு பதினாறு வயது. புன்சிரிப்புகளும், எப்போதாவது பேசிய ஒருசில வாக்கியங்களும் சிறுவர்கள் விளையாட்டு. இருபத்திநான்கு வயதில் சம்மதம் கேட்டு அம்மாவுக்கு நான் கடிதம் எழுதியது நான் வயதுக்குவந்த தருணம். வீட்டுக்கு பக்கத்தில் ஒரு முக்கோணப் பூங்கா. கடிதத்தின் பதிலை எதிர்பார்த்து அதைச் சுற்றி நடந்தபோது தீவிர யோசனை. மாணவ வாழ்க்கையில் திருமணம் என்கிற பொறுப்பை என்னால் ஏற்கமுடியுமா? இருவரும் எப்படி எங்கே வாழப்போகிறோம்?”
நவதீப்
“உங்களுக்கு எந்த ஊர் தம்பி?” என்று கேட்டுக் களத்தில் புகுந்தாள் என் அக்கா. அவளுக்குக் கேள்வி கேட்கும் கெட்டப் பழக்கம் உண்டு. “எந்த ஊர்? எந்த ஜாதி? திருமணம் ஆயிற்றா? எத்தனை குழந்தைகள்? உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்? என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தது வந்தவரை வாட்டுவது அவள் வழக்கம். எல்லோர் வீடுகளுக்கும் சென்று அவர்களின் விவரங்களைச் சேகரித்து அறிவுரை கூறி வருவாள். அப்படிச் செய்யாதே என்று சொன்னால் கேட்கமாட்டாள்.
மிதவை
ஆனால் அடுக்கத்தில் கதவைத் திறந்து வராந்தாவில் கூட நிற்கக் கூடாது. எவரையும் உற்றுப் பார்க்கக்கூடாது. எதையும் சத்தமாகப் பேசக் கூடாது. அதோடு இன்னொரு சங்கடமும் இருந்தது. பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக் கொள்ளும்போது இவர் இருக்கும் பக்கம் ஒருமுறை பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேசுவது இவருக்கு கேட்காததுபோலவே இருக்க முயன்றாலும் முகம் காட்டிக் கொடுத்து விடுகிறது.
உயிர்த்தாம்பு
எதற்காகவும் இயல்பான மரபணு மாற்றத்தை குறைக்கும்விதமாக மேல் அதிகாரத்தை மனிதன் உருவாக்கும் மருந்துகள் உருவாக்ககூடாது என்பது தான் அவரது ஆய்வின் அடிப்படை. லிவர் மறு உருவாக்கத்திற்கு முக்கியமான பங்களிப்பை அளிப்பது காமா உயிரணுக்கள். செயற்கையாக உருவாக்கப்படும் காமா உயிரணுக்கள் இயற்கையாக உடலில் உருவாக்கப்படும் காமா செல்களை செயலிழக்கச் செய்யும் என்பது உயிரி இயற்பியலின் அடிப்படை. அவரது ஆய்வகத்தில் செய்யப்படும் சோதனைகளின் முக்கியமான விதியாக இது இருந்துள்ளது.
வெற்றிடம்
நீ இல்லாம பொண்ண எப்புடி வளர்த்துருவான்னு பாத்துரலாம் என்று சொன்ன அவனது அக்கா, அவளது குடும்பத்தோடு சந்தோஷமாகத்தானே இருக்கிறாள். இவங்க பேச்சக் கேட்டு நான் தான் தனியா நிக்குறேன். வெறும் ஏழு வருச நினைவுகளோட. நிலா தொட்டு வெளையாடின பொம்மைகளோட.. அந்தரத்துல.. இந்தப் பத்தாவது மாடியில..” என்று எண்ணிக்கொண்டே அடுத்த மாத்திரையை விழுங்கினான்.
ஆயன்
உண்டிக்கோலும் கதிரருவாளுமில்லாமல் சோமன் மேய்ச்சல் விட வருவதில்லை. சிறு சிறு கற்களைப்பொறுக்கி சேமித்துக்கொண்டான். அதுநாள் வரை சாமியை கும்பிட வேண்டும் என்பதனால் ஒரு வணக்கம் போட்டு வைப்பான். ஆனால் இப்பொழுதெல்லாம் அவரிடம் பாதுகாப்பை தைரியத்தை கோர வேண்டிய அவசியம் உருவாகி விட்டது. வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையோ பூக்களோ என்ன முடிகிறதோ அதை பறித்து வந்து உண்டியல் முன் வைத்துவிடுவான். மேய்ச்சலுக்கு அருகிலேயே கல்லில் புடைத்து நிற்கும் வீரன் சிலை ஒன்றிருந்தது. தினமும் ஒரு எலுமிச்சையை வீரனுக்கு காணிக்கையாக வைத்துவிட்டுத்தான் தன் பாறைக்குடைக்கு திரும்புவான்.
வீதித்தாய்களும் பத்துதர்மக்காரியும்
ஒரு நாள், ராசாத்தி காய்கறி வாங்கிக்கொண்டு உள்ளே வந்தபோது, “டெய்லி, அவ கூட என்னடி பேச்சு? அவங்களைத்தான வேண்டாத குடும்பம், ஆகாத குடும்பம், அசிங்கமான குடும்பம், போலீஸ்ல புகார் சொல்லுவோம்”-ன்னு சொல்லிச்சொல்லி செத்திங்களே, சாவடிச்சிங்களே. இப்ப எதுக்கு அப்படி பேசறே? பழகறே, ஒன்னுமே புரியல, எனக்கு
ராமு
தகுதியிருக்கோ இல்லையோ ஒரு சம்பந்தம் “முறிந்தது” என்றவுடனேயே அரிவாளை தீட்டும் இன்றைய உலகில், பெண்ணும் ஆணும் சம்மதித்து நெருங்கிய உறவினர்களான இரு வீட்டார் சம்மதித்து, கடைசியில் ஒரு வாழைப்பழத்தால் ஒரு கல்யாணம் நின்று போயிற்று.
ஆதரவு
நான் பதவி ஓய்வு பெற்றேன். சொந்தமாக வீடு கட்டினேன். பென்ஷன் வந்தது. பொருளாதார ரீதியாகக் குறை ஒன்றுமில்லை. அந்தச் சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவள் ரமணி. வீட்டுக்கு வருபவர்களுக்கு பதில் சொல்வது, பணியாளர்களை வேலை வாங்குவது, வீட்டைச் சுத்தம் செய்து அடுக்கி வைப்பது, கடையிலிருந்து சாமான்கள் வாங்கி வருவது, மின்சார பில் கட்டுவது என்று வீட்டுப் பொறுப்புகள் எல்லாம் அவளே பார்த்துக் கொண்டாள்
1954 – Y2K பிரச்சினை
அப்பா அவனை சைக்கிள் முன்னால் வைத்து அழைத்து வந்தார். அவனுக்குத் தெரிந்து ஆஸ்பத்திரிக்குப் போவது அது தான் முதல் தடவை. டாக்டர் மார்பில் ஸ்டெதஸ்கோப்பை நகர்த்தி ஏதோ கேட்டிருக்கிறார். வாயை ஆஆஆவென்று திறக்கச்சொல்லி விளக்கில் உற்றுப் பார்த்திருக்கிறார். அதெல்லாம் கொஞ்ச நேரம்.
சாம்பல் பூத்த நிலம்
அபர்ணாவின் அடி நாக்கில் ஒரு அமிலச் சுவை. எங்கோ மின் இயந்திரங்களில் கசிவினால் உண்டான வாடை அவளது மூக்கைச் சீண்டியது. அவளது சிசுவினுடைய நோட்டக்காட்சிகளில் வந்தது தனது குழந்தையா அப்பாவா எனும் குழப்பம் அவளுக்கு மின்னல் போல வந்து வந்து போனது. கூடவே ராஜேஷின் குரலும். சிறு குழந்தையாக, சிறு தீண்டலாக, கெஞ்சலாக, மன்றாடலாக, ‘அம்மா, அப்பா, இடக்கையா வலக்கையா எங்க இருக்கு தொடுங்க’, எனச் சிணுங்கும் ஒரு குரல்.
காமம் காமம் என்ப
நான் நீங்கள் எனக்கு யார் என்று சொல்லிவிட்டால் போதும், அப்படியே ஆடிவிடுவார். ஒரு முறை எனக்கு குற்றாலம் போக ஆசை, கூட்டிப் போக யாரும் இல்லை என்றேன், அடுத்த நாளே நாங்கள் மூன்று பேரும் குற்றாலம் போனோம். அங்கே நான் குளிக்கும் கோலத்தை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார். இரண்டு மூன்று நாள் கழித்து எவனோ ஒரு சனியன் சார் உங்க பொண்ணு கிட்டே அங்கே போக வேணாம்னு சொல்லுங்க ரொம்ப வழுக்குது என்றான்.
கதவு
கண் மங்கலாக தெரிவது போல் இருந்தது அவனுக்கு. மரப்பலகையின் மேல் அடித்த தகரம் மறைந்து முழு கதவும் கெட்டி இரும்பால் ஆனது போல் தோன்றியது. கதவின் பளபளப்பு அதிகரித்துக்கொண்டே செல்வது போலவும், எல்லோரையும் பார்த்து ஏளனமாக சிரிப்பது போலவும் தோன்றியது, கூர்மையான மெல்லிய ஒளியை எதிரே நிற்பவர்கள் மீது பாய்ச்சி கொல்லத் துடிப்பது போலவும், மங்கலாக அதன் மேற்புறம் தெரியும் அனைவரையும் அது விழுங்கிவிடுப் போகிறது என்றும் தோன்றியது.
அட! என்ன ஊர்யா இது?
“பணம் எங்கே போகுதுங்க? இருக்கட்டும். இப்போ நீங்களே வச்சிக்குங்க. இருட்டிப் போச்சுங்க தலைவரே! பேசாம நீங்க இன்னைக்கு இங்கேயே தங்கிடுங்க!” என்றான். ஒன்றும் புரியாமல் முருகேசன் அவனைப் பார்க்க, “நாளைக்குக் காலையில விசேஷத்தில கலந்து கிட்டு ஒங்க கையாலேயே பாப்பாக்கு இதையெல்லாம் கொடுங்க தலைவரே! அது எங்களுக்கு மருவாதை இல்லீங்களா தலைவரே!” என்றான் கைகளைக் கூப்பி.
புதிய அனுபவம்
ஒவ்வொன்றாக சரி பார்த்ததில் வயர் தான் சரியில்லை என உறுதி செய்து கொண்டு , வேறு வயர்கொண்டு பார்த்ததில் பேன் ஓடியது.இடையே புதிய வாடிக்கையாளரும் அவர் நண்பரும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல இத பாருங்க அத பாருங்க சுட்சு சரியில்லாம இருக்கும் அத பாருங்க என அருகிலிருந்து எதையாவது சொல்லிக் கொண்டிருந்தனர்.
பாடல் பெறாதவர்கள்
ஒருவித பரவசத்துடன் முத்தழகு கொடியேற்ற நிகழ்ச்சியை கவனித்தான். கும்பினி சிப்பய்களின் ஒழுங்கான நடை, அவர்களின் நேர்கொண்ட பார்வையோடு கொடிக்குத்தரப்பட்ட மரியாதை, முத்தழகு கேட்டே அறியாத தேசிய கீதம், அவர்கள் அடித்த ராயல் சல்யூட் அவனை புல்லரிக்க வைத்தது. கும்பினி மீது அவனுக்கு மரியாதை பன்மடங்கு பெருகி அங்கே சேர்ந்து வேலைசெய்யப்போகும் நாள் குறித்த எதிர்பார்ப்பும் கர்வமும் மேலோங்கியது.
மேரா பாரத் மகான்
மணாலியில் இருந்து ரோஹ்தாங் பாஸ் வழியாக ‘லடாக் லெஹ்’ செல்லும் மார்க்கம் குளிர் காலத்தில் முழுமையாக பனியால் மூடப்பட்டிருக்கும். பிப்ரவரி மாத இறுதியில் பனியை நீக்கத் தொடங்கி ஏப்ரல் பதினைந்து தேதிக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்தை அனுமதிப்பார்கள். அதுமட்டுமின்றி, பியாஸ் நாலா வரை டூரிஸ்ட்டுகளை அனுமதிப்பார்கள் அங்கு வரை அனைவரும் வாகனங்கள் மீது சென்றால் தமக்கு வருமானம் இருக்காது
சரபம்
கண்மணி அப்போது ஊரில் புதிதாக உருவாகி கொண்டிருந்த மசாலா பூரி கடை ஒன்றை அப்போதுதான் திறந்திருந்தான். வீட்டிற்கு மூன்று பெண்களுக்கு பின் பிறந்ததால். கொஞ்சம் செல்லமாக வளர்க்கப்பட்டான். எப்படியோ மீசைக்கார தண்டல்காரரிடம் கடன் வாங்கி இந்த கடைய போட்டு விட்டான். புதிய தின்பண்டங்கள் கிடைத்த மகிழ்ச்சியில், ஊரில் உள்ள அனைத்து பையன்களும், நாக்குக்கு சுவை தேடும் பெரியவர்கள் என்று மாலை வேலையில் பெரும் கூட்டம் இருக்கும்.
அரவு உறை புற்று
ஏனென்று தெரியாமல் உடலெல்லாம் எரிவது போல் இருந்தது. அது அப்பாவின் மீது வந்த எரிச்சல் இல்லை என்று உள்மனது சொன்னது. உடலின் மீது ரத்தம் வழிய கீறிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. எவ்வளவோ சிந்தித்தும் என்னுள் அப்பவின் கையை பற்றிக் கீழிறக்கும் எண்ணம் எப்படி உருவாகி செயலாகியது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
பூனையும் கோமதிசங்கரும்
“உன் காதுல விழுந்த, நீ அலட்சியப்படுத்தின உரையாடல்கள், நீ கண்ணால் பார்த்து மனதில் பதிவு செய்யாத காட்சிகள், அலசிப் பார்க்காத சம்பவங்கள் இப்படி ஏராளமாக இருக்கும் உன் மூளையோட பதிவில். உன் மூளையில் கடந்த காலங்களில் பதிஞ்சிருக்கிற, ஆனால் நீ கவனம் செலுத்தாமல் இருந்த சில பதிவுகளை மறுபடி ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்கும்.
அறிவுப்புருசன்
“அவரும் ஐ.ஏ.எஸ் அகாடமி வச்சு நடத்திட்டிருக்காரு. அவர் எம்.ஏ.எம்.பில் முடிச்சுவரு. பி.எச்.டி. படிச்சுட்டு இருக்காரு, மெட்ராஸ் யுனிவர்சிட்டியிலே. ஆந்தரபாலஜிப்பா. உணவைப்பத்தி ஆராய்ச்சி பண்றாரு. சரியான ஆளு. மோத்தேபாளையம் சொந்த ஊராம். இங்கேயே வந்துட்டாங்களாம்.
இலைகளுதிர்ந்த பின் மலைகள்
அந்த நீண்ட திண்ணையில் ஜாதிமல்லி, காக்கரத்தான், ஜெவ்வந்தி, மரிக்கொழுந்து, நந்தியாவட்டை , மருக்கு, டிசம்பர் பூ, ரோஜா எனப் பலவிதமான வண்ண வண்ண பூக்களின் சிறு சிறு குவியல்களின் மத்தியில் அமர்ந்து பூக்களை ஜோடியாக எடுப்பதும் நாரில் வைத்து விரல்களால் வளைத்து சரக் சரக் என இழுப்பதுமாக ஒரு தாள நயத்துடன் சரம் சரமாக பூக்கள் கட்டுவதும் மாலைகள் சுற்றுவதுமாக அவர் வேறு ஒரு ஆளாக உருவெடுத்திருப்பார். பூ கட்டும்போது அவர் முகமும் கைகளும் வெவ்வேறு பாவனைகளும் அசைவுகளுமாக மாறி அதனுடன் உரையாடிக்கொண்டிருப்பதுபோல இருக்கும்
மாதாவின் செவி
“மாதா ஆலயத்தப் பார்த்து மரியசூசை ஜெபிச்சாருன்னா அந்த மாதா எங்க இருந்தாலும் வந்துருவாங்க… இது நானே ஆலயத்துல பல தடவ சாட்சி சொன்ன வார்த்த…” அங்குள்ள பலரும் சொல்லும் வாடிக்கையான வார்த்தைகள் அவை. மரியசூசை வேண்டாமென்றாலும் அப்போதைக்குக் குருவானவர் இடத்தில் இருந்து திங்கி மக்களின் துயரங்களை மாதாவிடம் கொண்டு செல்லும் சக்தி மரியசூசைடுக்கு இருப்பதாகப் பேசி வந்தனர்.
நதி
அந்தக் கடிதம் வந்ததிலிருந்து மூன்றாவது மாதம் லாஸ் ஏஞ்சலஸ் ஏர்ப்போர்ட்டில் அவருக்காகக் காத்திருந்தேன். வேஷ்டியுடன் தான் வந்திருந்தார். மேலே வெளிர் கருப்பில் போன முறை சென்றபோது அவருக்கு நான் கொடுத்திருந்த சட்டை. அன்றிரவு ஆஷா சொன்னாள் ‘ஸீம்ஸ் லைக் அ ஜென்டில்மேன்” என்றாள். ஆஷா நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை என இருப்பவள். ஆனால் இருப்பது வெறும் செருக்கு. சக மனிதரை ஆணவத்துடன் திமிருடன் எதிர்கொள்ள வாழ்க்கை அவளுக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. ஒரு வாரத்தில் அவள் சொன்னாள் “ஐ லைக் யுவர் தாத்தா”.
இரண்டொழிந்தது
எது எதையோ பொருத்தம் பார்த்த எழிலின் மனம் எப்படி சாதியை மறந்தது எனத் தெரியவில்லையே என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தான் இருப்பது கொல்லப் பக்கம் என்ற தெளிவு வரவே, துளிர் விட்ட மொட்டு காற்றின் விசையால் மண்ணில் விழுந்தது போல் ஆனாள் எழில். காப்பியை வாங்காமலேயே கோதையின் வீட்டை விட்டு புத்தகப் பையோடு வெளியேறினாள்
டெர்மினல்
ட்ராமின் ஜன்னல் கம்பிகளின் மீது கனத்த போர்வை போல தூசு படிந்திருந்ததில் நடைபாதையில் இருந்த மரம், விளக்குக் கம்பம் மற்றும் தெருவில் சென்று கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் ஏதோ பழைய படத்தின் மீது படிந்திருக்கும் அழுக்கைப் போல வழுக்கியபடி மங்கலாகக் காட்சியளித்தார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் சில பயணிகள் இறங்கினார்கள். நடத்துநர் மணி கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுக்கும்போதெல்லாம் ட்ராம் விக்கலுடன் முன்னால் சென்று நின்றது.
குங்கும பரணி
தேடல், பரிசோதனை இரண்டும் வேறுவேறானவை. புதிதாக ஒன்றை அறிவது தேடல். ஏற்கெனவே இருந்து மறைந்தவற்றை மீண்டும் கண்டுபிடிப்பது பரிசோதனை. இரண்டும் வேறுவேறான செயல்கள். இதுவரை யாரும் கண்டுபிடிக்காததை, யாரும் இதுவரை தொடாத ஒன்றை ஆராய்ந்து தெரிவிப்பது மனித இனத்திற்கு நவீன வெளிப்பாடாக இருக்கும்
வரிசையில் ஒரு சிநேகம்
தன் வாழ்க்கையைப் பற்றி இன்னும் கூட ஏதோ சொல்லிக் கொண்டே போனாள் தபலேய். இருவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிப் பகிர்ந்து கொண்டிருந்தனர். பின்னால் நீண்டு தொடர்ந்து போய்க் கொண்டிருந்த வாகன வரிசையின் மீதும் ஒரு கண் வைத்தபடியேதான் இருந்தாள் சகி. இன்னும் நிறையப் பேர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கக் கூடும் என்றே அவளுக்குத் தோன்றியது.
குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்
தோட்டாக்கள் துளைத்து இடிந்து போன சுவரின் மறைவில் சிறிதுகாலம் முன்புதான் யாரோ பயன்படுத்தியிருந்த தரையில் நான் சிறுநீர் கழித்தேன். பாதி அழிந்த ஒரு அரிசிமாவுக் கோலம் இருந்தது. அதன் மீது படிந்திருந்த கறை அநேகமாக இரத்தமாகத் தான் இருக்கவேண்டும். அதன் மீது போக சங்கடப்பட்டு சிறிது நேரம் தயங்கியதும் ‘சீக்கிரம்’ என துரிதப்படுத்தினார் கணவர். இடம் மாறி அமரக்கூட அவர் அனுமதிக்கவில்லை. இடிந்த சுவர்களுக்கும் ஜன்னல்கள் கழன்ற இடைவெளிகளுக்கும் ஊடாக வெளியே இருந்து பார்த்தால் தெரியாத அப்படியான ஒரு மறைவிடம் வேறு இருக்கவில்லை.
