பலூன்

சாந்தியின் கவனம் முழுவதும் கீழே அனாமத்தாய் கிடந்த அந்த பொம்மை வாகனத்தின் மீதே இருந்தது. மேசைமேல் வைத்திருந்த செல்போன் திடீரென அதிர்ந்ததும் ஒருவித ஆர்வத்துடன் அதை எடுத்தாள். ஆனால் திரையில் கடம்பூர் சித்தியின் பெயரைப் பார்த்ததும் உச்சுக்கொட்டிவிட்டு அதை அப்படியே கீழே வைத்தாள்.

கீடம்

நமது அவதானிப்பு, கீடம் எனும் சொல்லை மாணிக்கவாசகர் ஆண்டுள்ளார் என்பதில் நிலை கொள்கிறது. சேக்கிழார் அருளிய பெரியபுராணம் நூலில் 4286 பாடல்கள். அதாவது 17,144 அடிகள். அங்கு எங்கும் கீடம் இல்லை. கம்பன் கீடம் எனும் சொல்லைப் பயன்படுத்தியிருப்பானே எனும் வினா நமக்கு எழாமல் இராது. 10,368 பாடல்களில் இரு இடங்களில் கீடம் கண்ணில் பட்டது.

கிரிஸ்டோஃப் கீஸ்லோவ்ஸ்கியின் அழகியல்: ஊழ்வினை, உணர்வெழுச்சி, உருவகம்

அவனது உலகில், தற்செயல் என்பது கடவுளின் இன்னொரு பெயர். ஓடும் ரயிலைப் பிடிப்பதிலோ அல்லது தவறவிடுவதிலோதான் ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையும் ஊசலாடுகிறது. அங்கே விதியென்பது வானத்திலிருந்து எழுதப்படும் சாசனம் அல்ல; அது நாம் தினமும் கடந்து செல்லும் அந்நியர்களின் பார்வையில், தவறவிட்ட தொலைபேசி அழைப்புகளில், காற்றில் மிதந்து வரும் ஒரு பழைய பாடலின் மெட்டில் ஒளிந்திருக்கிறது. அவன் நமக்காகப் பின்னிய திரைக்கதைகள், வெறும் கதைகள் அல்ல; அவை கண்ணுக்குத் தெரியாத நூலிழைகளால் இணைக்கப்பட்ட மனிதத் தீவுகளின் வரைபடம்.

’புத்தம்’ நாவலின் முதல் அத்தியாயம்

நூற்றாண்டுகள் தாண்டிய அந்த அரச மரத்தினடியில் கால் மடக்கிச் சம்மணமிட்டு அமரும் வேளை மழை விம்மிச் சாரலாய் இறங்கிக் காற்று சில்லென உடல் ஊடேறிற்று. பெருமரத்தண்டின் உட்புறமாக மடிந்திருந்த மரயிடுக்கின் உள்ளே மேலும் நுழைந்து போய் அமர்ந்து கொண்டார். ஏதோவொரு முன்னுணர்வு, அவ்விரவில் பல்லாண்டு காலத் தவத்திறத்தின் பயனாக இம் மானுடனுக்கு அர்த்தமிக்கதொரு ஞானதரிசனம் வாய்க்குமென்று. குசா புல்மெத்தை மேல் இன்னும் வசதியாகக் கால்மடக்கித் தன்னை அமர்த்தி முதுகு நிமிர்த்தித் தவத்தில் நிலைக்கத் தொடங்கினார்.

போதி மரத்தடியில்

இந்த அறிதலுக்கு, வெளியிலிருந்து சான்றுகள் ஏதும் தேவையற்று இருக்கிறது. பொருள்களை அறியத்தான் வெளிச்சம் தேவையாகிறது. வெளிச்சத்தை இன்னொரு வெளிச்சம் கொண்டு அறியத் தேவை இல்லை. இவ்வறிதல்களை அறிந்துணர்ந்து கடந்துசெல்வது ஞானம் என்றால் அது அளிக்கும் உயரிய கொடை என்பது விடுதலையே என்றாகிறது. 

மானுடப் பயணம்

ஊமையாகக் கண்ணால் பேசும் நிறைமாத கர்ப்பிணியான அவனுடைய இல்லாள். அவள் நினைவு வந்தால் போதும் இதயக் கதவு திறந்து கொண்டு அன்பு பெருக்கெடுக்கிறது. எவ்வாறு அவர்களையெல்லாம் விட்டு அவன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டான்? இந்த விடுதலை ஹோமத்தில் தன்னைத்தானே ஒரு சமித்தாக சமர்ப்பித்துக் கொண்டானா? துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் மனித உடல்கள் எத்தனை நேரம் தான் எதிர்க்க முடியும். அவனுடைய இதயத்தில் மெல்லிய திகில் தோன்றத் தொடங்கியது.

சலூன் நாற்காலியில் சுழன்றபடி கோணங்கி

கோணங்கியின் உரைநடை தனித்துவமானது. கனவு, கானல் நீர், ரசாயன மயக்கம், கட்புலனுக்கிடையே எச்சரிக்கையின்றி சுமூகமாகத் தாவும் வரிகள். புனைவு எழுதுபவர்கள் பொதுவாக காட்சிச் சிந்தனையாளர்களாக இருப்பது அரிது. ஆனால் அந்த அரிய பகுப்பைச் சேர்ந்தவர் கோணங்கி. வண்ணதாசன் படைக்கும் பாத்திரங்களைக் காட்டிலும் கோணங்கியின் பாத்திரங்கள் நிலையற்று காணப்படுகின்றன.

நாடக அரங்கக்கலையில் நவீனத்துவத்தை உட்புகுத்திய நாடகர்

இவருடைய அரங்க கலைப்படைப்புகள் சில மக்களின் உளவியல் ரீதியிலான பாதிப்புகளை சரியான முறையில் அடையாளம் கண்டு அந்தப்பாதிப்புகளை தத்ரூபமாக வெளிக்கொணர்வதாய் அமைந்தன. மிக முக்கியமாக போர்ச்சூழலால் ஏற்பட்ட பாதிப்புகளின் மூலம் உருவாகியிருக்கக் கூடிய உள ரீதியான பாதிப்புகள் மிகத் தெளிவாக உணரப்பட்டு சில நாடகங்களின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன

றெக்கை அத்தியாயம் 14

இந்த வகைப்படுத்தல் யாருக்காக செஞ்சிட்டிருக்கேன்? லெவி இருந்தால் வாங்கி படிச்சுட்டு, பாத்ரூம் எங்கேன்னு பகடி பண்ணுவான். ஆல்பீ இருந்தால் படிக்கறதுக்கு முன்னாலேயே இதிலும் ஒரு ரசம் உண்டு என்று குறும்புச் சிரிப்போடு சொல்வான். ரெண்டு பேரையும் நான் இழந்துட்டேன். ரெண்டு பேரோடு உறவு வச்சுக்கறது   குடும்பப் பொண்ணுக்கு அதென்ன சொல்றா இழுக்கு தான். ரெண்டு பேரோடு எங்கே உறவு கொண்டாடினேன்? ஆல்பீ போய்ச் சேர்ந்து ஆறு மாதம் கழிச்சுத்தானே லெவியை கல்யாணம் செஞ்சது.

பீட்டரும் பக்கிரியும் : டேக் 5 புத்தக வெளியீடு – ஏற்புரை

சில சமயங்களில் புறத்தின் நிதர்சனங்களே கட்டுரையின் முடிவை நிர்ணயிக்கிறது. பெல்லோ கட்டுரை இறுதியில் அமெரிக்கத் தேர்தல் மிக மூர்க்கமாக தன்னை இருத்திக் கொள்கிறது, ஹெர்சாக் பாணியில் அமைந்தருக்கும். பெல்லோ வாசகி ஒருவள், அவருக்கு எழுதும் காத்திரமான கடிதத்தின் வழியே. க்ரஸ்நஹொர்கையின் சேடன் டாங்கோவப் பத்திப் பேசறச்சே பெய்லா டாரோடா படத்தையும் பேசறது இயல்பாகவே கட்டுரையின் போக்கே நிர்ணயிக்கிறது.

பூவன்பழம்

அவள் இடுப்பளவு உயரத்தில் தான் அந்தச் சுவர் இருந்தது. தோள்களைச் சுற்றிக் கம்பளி அணிந்திருந்தாள். அவளது அழகான நீண்ட கூந்தலின் ஒரு கற்றை முடி முகத்தில் அடிக்கடி விழுந்து கொண்டிருந்தது. தனக்கான சொந்தம் என்று இந்த உலகில் யாரையும் சொல்லிக் கொள்ள இயலாத அந்தப் பெண்மணியிடம், கட்டுக்கடங்காமல்  தங்களால் நடந்து  கொள்ள முடியுமென்று அவைகளுக்குத் தெரியும்.

அச்சு இயந்திரத்திற்கு முன் ஒரு புத்தகம் 

ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு தேவை. முதலில் இந்த எழுத்துருக்கள் கடினமான இரும்பு ஒன்றில் இடம்வலமாகச் செதுக்கப்படவேண்டும். அப்படிச் செதுக்கப்பட்ட எழுத்துரு செப்புத் தட்டின் மேல் வைத்து அடிக்கப்பட்டு, அச்சுப் பாதிக்கப் படவேண்டும். இப்படி உருவாக்கப்பட்ட செப்பு அச்சில் உலோகக் கலவை ஊற்றப்பட்டு, எழுத்துருக்கள் உருவாக்கப்படவேண்டும்.

தூய்மணி சிந்திடும் தோய்ந்த நெருப்பு

இந்த நான்கு தலைப்புகளில் விஷயம், பிரயோஜனம், சம்பந்தம் ஆகிய மூன்றும் வேதாந்த நூலைப் பற்றிய தலைப்புகளாகும். இந்த மூன்றையும் வேதாந்தம் தீர்மானிக்கிறது. இவற்றைத் தன்னுள் கொண்டிருப்பதாக ஒரு வேதாந்த மாணவனுக்கு உறுதியளிக்கிறது. அதிகாரி என்ற தலைப்பு மட்டும் மாணவனைச் சார்ந்தது. அதிகாரித்துவம் எனப்படுகின்ற வேதாந்தக் கல்வியை அடைவதற்கான தகுதிகளை அவன்தான் அடைந்திருக்க வேண்டும்.

கல்வெட்டுகள்

This entry is part 2 of 2 in the series கலிங்கம்

ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் அசோகரின் கல்வெட்டை மறைத்திருந்த சிறு காடு இன்று ஒரு பூங்காவாக உருவெடுத்திருக்கிறது. இயற்கையிடமிருந்து பாதுகாக்க ஒரு மண்டபமும், மனிதனிடமிருந்து காக்க இரும்புக் கம்பி தடுப்புகளையும் தாங்கி நிற்கிறது இன்று. சுற்றிலும் அலங்காரப் புல் தரை. விளிம்பில் இருந்த புதர்களை செதுக்கிக் கொண்டிருந்தார் முண்டாசு கட்டியத் தோட்டக்காரர். ஒரு சிறு பாறையில் சாய்ந்து நின்ற அலைபேசியில் இருந்து ஹிந்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

கண்ணனேந்தல் பறவைகளின் ஒளிப்பாய்ச்சி

தான் ஒரு இயற்கைக் காதலன் என்பதனை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றன சிவக்குமார் கணேசனின் கவிதைகள். அதிலும் குறிப்பாக “மாங்குயில்களின் கருங்கொண்டை” என்ற வார்த்தையை கவிதைகளில் நிறைய இடங்களில் புழங்குகிறார். கொன்றை மலர் அரும்பிய மரத்தைப் போன்றிருக்கும் மயிலின் கொண்டைகளை யார் தான் ரசிக்காமல் இருக்க முடியும். ஆசிரியரையும் அகவியலைக்கின்றன மாங்குயிலின் கருங்கொண்டைகள் என்பதனை உணர்த்துகிறது.

தெய்வநல்லூர் கதைகள்- 33

This entry is part 33 of 33 in the series தெய்வநல்லூர் கதைகள்

அந்த இன்னொரு குறிப்பேடு கலையக்காவுடையது. பிரேம் மிக இயல்பாக டெஸ்க்கின் உள்ளே வைத்து அக்குறிப்பேட்டை சோதித்தார். அவர் எதிர்பார்த்தது போலவே நான்காக மடிக்கப்பட்ட இரு பக்க கடிதம் ஒன்று குறிப்பேட்டின் உள்ளட்டைக்குள் இருந்தது. இன்னும் இயல்பாக அக்கடிதத்தை எடுத்த பிரேம் தன் புத்தகத்திற்குள் செருகி, விரித்து  பாடத்தை புத்தகத்தில் கவனிப்பதுபோல  அக்கடிதத்தை படிக்க ஆரம்பித்தார். இவை அனைத்துமே பிரேம் சொல்லி நாங்கள் தெரிந்து கொண்டவை.

ஸீப்ரா (Zebra)

சில முகங்களை மிகத் தெளிவாக பார்த்தாலும் நம்மால் அடையாளம் காண முடியவில்லை. கண்கள் இருக்கின்றன, ஒரு முகத்தில் சரியான கட்டமைப்பு இருக்கிறது அது ஒரு நல்ல பொருளாக உங்களுக்கு தென்படுகிறது ஆனால் அதை ஒருங்கிணைத்து அது ‘பாலாஜி’ என்று உங்களால் நினைவு கூற முடியவில்லை. முகங்கள் மாற்றக்கூடிய முகமூடிகள் ஆகி விடுகின்றன

மாறும் திசையை உணர்த்திடும் வௌவாலின் மறைமுக அறிவு

ஆராய்ச்சியாளர்கள் கவனித்த விஷயம் உண்மையிலேயே வியப்பிற்குரியது. வௌவால்கள் பறக்கும்போது, அவற்றின் மூளையில் உள்ள தலைத் திசை செல்கள் (head direction cells) எனப்படும் குறிப்பிட்ட நரம்பணுக்கள், அந்த விலங்கு எந்தத் திசையை நோக்கி இருக்கிறதோ அதற்கேற்ப செயல்பட்டன. இவை உயிரியல் திசைகாட்டி (biological compass) போலச் செயல்படுகின்றன: வௌவால் குறிப்பிட்ட திசையை நோக்கித் திரும்பும்போது, உதாரணமாக, வடகிழக்கு – குறிப்பிட்ட நரம்பணுக்கள் மின்னின.

தன்மை விலையிடல் –  பேரம் பேசுதலின் நவீன பரிணாமம்!

நான்கு நகரங்களில் கிட்டத்தட்ட ஐந்நூறு நுகர்வோர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தன்மை விலையிடல் காரணமாகக் குறைந்தபட்ச விலைக்கும் அதிகபட்ச விலைக்கும் கிட்டத்தட்ட 25% சதவிகித வித்தியாசம் இருப்பதாகக் கண்டறிந்திருக்கின்றனர். வெறும் பலசரக்கு மட்டும் வாங்குவதில் இந்த வித்தியாசமானது ஒரு வருடத்தில் ஆயிரத்து இருநூறு டாலர் வரை செலவினத்தை அதிகமாக்கும் எனச் சொல்கின்றனர். இப்படி மாறுபடும் விலைகளை வைப்பதே ஒரு விதத்தில் பேரம் பேசுவதுதான்

அரசியலின் விலை: அழியும் விளைச்சலும் விவசாயியும்

அமெரிக்க விவசாயத்தின் எதிர்காலம் இன்று குறுக்குவெட்டு பாதைகளின் சந்திப்பில் நின்றுள்ளது. குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக உலக சந்தைகளுடன் மோதும் ஒரு பாதை; விவசாயியை மையமாக வைத்து நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் கட்டியெழுப்பும் மற்றொரு பாதை. விவசாயி உதவித் தொகைகளால் மட்டுமே வாழ வேண்டியவன் அல்ல. அவன் உழைப்புக்கான நியாயமான விலையை எதிர்பார்க்கும் மனிதன்.

மண்ணில் விழுந்த கோதுமை மணி- நிகோலாய் வாவிலோவ்

நிகோலாய் ரஷ்ய மக்களின் பட்டினியைப்போக்கவும் பசியில்லா உலகமொன்றை உருவாக்கவும்  முனைந்தார். அரும்பாடுபட்டு ஐந்து கண்டங்களுக்கும் பயணம் செய்து உணவுப்பயிர்களின் விதைகளைச் சேமித்து விதை வங்கியை உருவாக்கினார். பஞ்சத்தையும் பசியையும் போக்க உழைத்த தாவரவியலாளரான அவருக்குத்தான் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இருளின் குதிரைவீரர்கள் – ஸ்டீபன் கிரேன்

“கசப்பு- கசப்பாக இருக்கிறது
ஆனால் பிடித்திருக்கிறது
கசப்பாக இருப்பதாலும்,
எனது இதயம் என்பதாலும்.”

யதேச்சையின் தாட்சண்யங்கள்

அந்தப் பெண்ணின் முகம் எனக்குச் சரியாக நினைவில் இல்லை. அவர் அணிந்திருந்த ஆடை நினைவில் இருக்கிறது. பார்த்தால் அவர் முகத்தை அடையாளம் கண்டு விட முடியும். ஒரு வேலை அந்தப் பெண் இது என்னுடையது இல்லை என்றால் என்ன செய்வது என்ற சிந்தனை வந்ததும் நாப்கினை அழுத்தாமல் அதன் எடையை அவதானிக்க முயன்றேன். அது பஞ்சு மெத்தையைப்போல இலகுவாகக்தான் இருந்தது.

நடவுப் பாடல்

This entry is part 8 of 6 in the series ஹைக்கூ

ஹஜிமே என்னும் இந்தச் சொல் ஜப்பானிய உரையாடலில் இடம்பெறும். ‘முதன்முறையாக சந்திப்பதில் மகிழ்கிறேன்’ என்னும் சொற்றொடர் ஜப்பானிய உரையாடல்களில் ஒருவரை முதலில் சந்திக்கும்போது அவசியம் சொல்லப்படும் வாக்கியம். ஜப்பானிய மொழியில் ‘ஹஜிமேமாஷிதா’.

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்தனர்

This entry is part 8 of 8 in the series நள சரித்திரம்

ஓ நளனே! அவள் ஒரு தவறும் செய்யவில்லை. அரசனே, அவள் உன்னையோ, உன் உறவு மக்களையோ, குற்றம் சொல்லவும் இல்லை, எதையும் விட்டுக் கொடுக்கவும் இல்லை.  மூன்று ஆண்டுகளாக உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறாள். யோசித்து யோசித்து உன்னை உசுப்பி எழுப்பவே இப்படி ஒரு செய்தி உன் காதில் விழச் சொல்லியிருக்கிறாள்.  நாங்கள் சாட்சி

உடல்நலக் கல்வி

This entry is part 18 of 7 in the series பொது நலம்

சமூகக் கூட்டுக் கற்றல்: ஒரு சமூகத்தையே மாற்றும் வல்லமை கொண்டது. நீண்ட கால மாற்றத்தைத் தரும். ஒரு மாற்றத்தைத் தொடங்க அதிக நேரமும், பெரும் சமூக முயற்சியும் தேவைப்படும். புகைப்பிடித்தல், போதைப் பொருள் பயன்பாடு போன்ற பழக்கங்களைக் குறைக்கவும், தடுக்கவும் இந்த மாதிரி பயன்படும். இதன் பலன் உடனடியாகத் தெரியாவிடினும், நீண்ட காலப் பலன்களையும் சமூக மாற்றங்களையும் ஏற்படுத்த வல்லது.