அரவிந்தன் என்னைப் பார்த்து கை கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தானா? என்ன திமிர்! அவன் கையைப் பிடித்து முறுக்கி கன்னத்தில் ஓங்கிக் குத்திக் கொண்டிருந்தேன். ஆனால், பெட்டிக் கடை அண்ணாச்சி தடுக்கவேயில்லையே! ஏன் சிரித்துக் கொண்டிருந்தார்? ‘இவன் என்ன பெரிய இவனா? எனக்கு அறிவுரை சொல்ல இவன் யாரு? சின்னப் பய? அவன் கத என்னன்னு வீட்டுல பாத்தாதான தெரியும்.
அசுரகணத்தின் 66வது அத்தியாயம் முதலிய இழப்புகள்
நாட்டுடைமையாக்கம் க.நா.சு.வின் படைப்புகள் மறுமதிப்பு காணவும் அதிக வாசகர்களைச் சென்றடையவும் வழிகோலியது என்றாலும், இவ்வழியில் மீண்டும் புழக்கத்துக்கு வந்த க.நா.சு.வின் படைப்புகளில் சகட்டுமேனிக்குப் பிழைகள் மிகுந்துள்ளன. பதிப்புணர்வு இல்லாத தமிழ் வாசகர் கூட்டம் அந்தப் புத்தகங்களை வாங்கிக் குவித்திருக்கிறது. அந்த நூல்களில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி அறியும் முன்பாக க.நா.சு.வின் காலத்தில் அவரது படைப்புகள் வெளியான வரலாற்றை நெட்டோட்டமாகப் பார்க்கலாம்.
காற்றையும் நீரையும் போல் நித்தியம்
நாவலின் நெடிய நூலிழையாக காந்தி. காந்தியை சாதாரண மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் பிரிக்கிறார்கள் என்று சொல்லும் ரமேஷிலிருந்து நாவல் தொடங்குகிறது. காந்தியர்களை, காந்தியவாதத்தைச் சிறு எள்ளலுடன் விவரிக்கிறான். அசாமின் முன்னால் முதல்வர், ராஜவம்ஷியை சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே தன்னை எரிச்சலூட்டும், ஆனாலும் அவர் சிரிப்பில் குறுகுறுக்கும் ரமேஷ், அதே அலட்சியமான, இரக்கமற்ற அதிகார அமைப்பை மிக யதார்த்தத்துடன் கையாளும் ராஜவம்ஷியை இவர் நிஜமானவர்தானா? என வழிபடுகிறான்.
காணுமாறு காணேன்
சுந்தரம் புன்னகைத்தார். அப்புறம், மெல்லக் கையை உயர்த்த முயற்சி செய்து, ராமசாமியையும், தமயந்தியையும் இன்னமும் அருகே வருமாறு அழைத்தார். படுக்கையில் இருந்த அவருடைய விரல்கள், அவர்களது கைகளைத் தொட முயன்றன. இருவரும் முன்னே நின்று, அவர் கரங்களைப் பற்றினர். மிகுந்த சிரமத்துடன், சுந்தரம் சில வார்த்தைகளைக் கோர்த்தார். “சாம்பியன்ஸ்…” ஏதோ நினைவுகள் மனத்தில் ஓடின.
மகட்பாற் காஞ்சித் துறைப் பாடல்களில் பொதுமுனைவுக் கருத்து
மக்கள் இனக்குழுச் சமுதாயமாக வாழத் தொடங்கியதன் பிறகு அரசு உருவாக்கம் ஏற்பட்டது. இவ்வாறு உருவான அரசுகள் பல்வேறு இனக்குழுச் சமுதாயங்களைத் தமக்குள் உள்வாங்கிக் கொண்டு விரிவடையத் தொடங்கின. தமிழ்ச் சமுதாயம் எவ்வாறு இனக்குழுச் சமுதாயத்தில் இருந்து வேந்தர்களின் ஆட்சியின் கீழ் வந்ததெனச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. இனக்குழுத் தலைவனுக்கும் வேந்தனுக்கும் இடையில் நடந்த பூசல்களின் பதிவாகவே மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் உள்ளன.
ஜீவநதி
தனிமைக்கூட்டினுள் உடல் ஒடுக்கி வாழும் நோயுற்ற பட்சியென பின்வந்த நாட்களில் மாறிப்போனாள் சிவகாமி கிழவி. தெருவாசிகளும் அவள் விழிகளைச் சந்திப்பதை ஏனோ தவிர்க்கத் துவங்கினர். ஆனாலும் கிழவி இறப்பது வரை அங்கு நடந்தேறிய அனைத்து சுபநிகழ்வுகளும் அவளது ஆசியுடனே துவங்கியது. அவளும் ஒவ்வொருவரையும் கண்களில் நீர் வழிய மனதார வாழ்த்தி வந்தாள்.
செயற்பாலது ஓரும் அறன்
மோக்ஷம் என்பது சகல துயரங்களிலிருந்தும் விடுதலை என்று வர்ணிக்கப்படுகிறது. அது நிரந்தரமானதும் கூட. ஒரு முறை அடைந்தால் அதை இழக்க முடியாது. ஒரு செயலின் மூலம் அடையப்படும் எல்லாப் பொருட்களும் காலவரையறைக்குட்டப்பட்டவை. ஒரு காலத்தில் அடையப்பட்ட பொருள், இன்னொரு காலத்தில் இழக்கப்பட்டே தீரும். எனில், இழக்கவே முடியாத பொருளை அடைதல் எங்கனம்?
அந்த முக்கிய நபர்
“இந்த விசிட்டிங் கார்டை அவரிடம் காட்டுங்கள்” பையிலிருந்து எடுத்து அவனிடம் தந்தார். பளபளப்பான தாளில் அழகாக இருந்த அந்தக் கார்டை, முக்கிய நபர் ராமன் மிக நுணுக்கமாகப் பார்த்தான். அந்தக் கார்டோடு சேர்த்து என்ன தரவேண்டும் என்பதை அறியாதவர் அந்த மனிதர் என்பது வெளிப்படை.
பாதுகாப்பு, அடையாளம், கட்டுப்பாடு: சீனாவின் இஸ்லாமிய தீவிரவாத அணுகுமுறை
உய்குர் முஸ்லிம்களின் மீதான சீன அரசின் கொள்கைகள் மீது உலகளாவிய தவறான புரிதல் இருந்தாலும் சீனாவைப் பொறுத்தவரை “எந்த விலை கொடுத்தாவது சிரியா போன்ற சரிவைத் தடுப்பது” மட்டுமே நோக்கமாக உள்ளது. குறிப்பாக பல நூற்றாண்டு கால மோதல்களாலும் எல்லை தாண்டிய தாக்கங்களாலும் வடிவமைக்கப்பட்ட பிராந்தியங்களில், பாதுகாப்பு, கலாச்சார அடையாளம், தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது எளிதல்ல. ஆனால் சீனா அதனை நன்கு புரிந்து கொண்டுள்ளது.
மற்றுமோர் அற்புதமான விஷயம்
அவளும் பென்னியும் குழந்தை பிறக்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கையில், கடைகளுக்குப் போய் மேலும் வேண்டுவனவற்றை வாங்கிக் கொண்டு வந்தார்கள். கடைசி நிமிடம் வரை இவற்றை ஒத்திப் போடாமலிருந்ததற்கு அவள் சந்தோஷம் கொண்டாள், ஏனெனில் ஏதும் நடக்காது சாதாரணமாக முன்னேறிய கர்ப்பகாலத்தில் ஒன்பதாவது மாதம் துவங்கிய போது அவள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாள். பிறகு அவள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டாள். தான், க்ரே மேலும் பிறக்காத அந்தக் குழந்தை மட்டும் இருக்கும் தனிமையுணர்வை அவள் ரசித்திருந்தாள்,
லியோனார்டோ டா வின்சியின் ஈயக் கலைமூலம் ஒளியின் ரசவாதம்
ஈயத்தையும் எண்ணெயையும் சாதாரணத் தணிந்த சூழலின் வரம்பை விட்டுச் சேர்த்த இடத்துக்குத் தள்ளியதனால், நமது காலத்தில் பெயரிட்டு, ஒரு பெட்டகத்தில் வைத்துக் காணக்கூடிய ஒரு அரிய தாதுவை அவர் உருவாக்கி விட்டார். அவருக்கு அப்போது எவ்வித சூத்திரஙகளும், கட்ட வரைபடங்களும் இல்லாமல் இருந்தாலும், விரலின் தொடுதல், பரவுதலின் நடத்தை, உலர்தலின் வேகம், வெளிச்சம் பற்றுகிற விதம் – ஆகியவை எல்லாம், அவருக்கு இன்று நாம் தேடுமா அதே அறிவியலை அளித்தன.
எல்லையற்றவன்
வறண்ட நிலத்தை மழை நீர் நனைத்தது போல கிருஷ்ணனின் சொற்கள் ராதையின் மனத்தை பக்தியால் நிறைத்தன. முன்பு பாடிய இனிய கீதத்தை மீண்டும் கேட்டாள். வம்சிமோகன் வேணுகானத்தை மனத்துக்கினிமையாக இசைத்தான். இன்னிசை மழையில் நனைந்து அடித்துச் செல்லப்பட்ட ராதைக்கு நேரம் போனதே தெரியவில்லை.
உரையாடும் பொருட்கள்
நனைவதில் அத்தனை அலாதி
வரவேண்டுமென
மனதுக்குள் விரும்புகிறார்கள்
மேலே படாதவரை
இதமாயிருக்கிறது அவர்களுக்கு
றெக்கை– அத்தியாயம் 11
தங்கவேலு அய்யங்கார் எப்படி வைத்தியரானார்? வளநாடு சிறு நகரில் பள்ளிக்கூடம் இருக்குதே தவிர கல்லூரி எல்லாம் இல்லை. ஆனால் என்ன? க்ருஹ வைத்தியம் மூன்று வோல்யூமும் தலைகீழாக பாடம் சொல்ல முடியும் அவரால். போதுமே. அவர் வைத்தியர் ஆகி விட்டார். மேலும், அலோபதி, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி அறிமுகப் புத்தகங்களை எல்லாம் வாங்கி வந்து வீட்டில் ரெண்டு பெரிய அலமாரிகளில் அடுக்கி வைத்து தினமும் தூசி தட்டிக் கொண்டிருந்தார்.
நியுஃபின்லாண்ட் – ஒரு புவியியல் பாடசாலை
கடந்த 5 ஆண்டுகளில், நியுஃபின்லாண்டின் பொருளாதாரம், மீன்பிடிப்புத் தொழிலைத் தாண்டி ஏராளமாக மாறிவிட்டது. முதலில், எனக்குப் பேய்க்காற்று என்று தோன்றிய விஷயம், நியுஃபின்லாண்ட் மக்களுக்கு சாதரணமான ஒன்று என்றே தோன்றுகிறது. இந்தத் தீவில், ஏராளமான காற்று டர்பைன்கள் (wind turbines and wind farms) நிறுவப்பட்டு வருகிறது. இவற்றின் குறிக்கோள், தீவின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதல்ல. தேவையான மின்சாரம் நீர்சக்தி மின்சாரத்தால் தாராளமாக பயனில் உள்ளது. காற்று டர்பைன்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம், பச்சை ஹைட்ரஜன் (green hydrogen), மற்றும் பச்சை அமோனியாவாக மாற்றி, யுரோப்பிற்கு ஏற்றுமதி செய்ய முடிவெடுத்துள்ளார்கள்.
தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன?
ஃப்ளூ வைரஸ்கள் தங்களை மிக வேகமாக மாற்றிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிய வடிவில் இவை வருவதால், பழைய தடுப்பூசியால் உருவான ஆன்டிபாடிகளால் புதிய வைரஸை அடையாளம் காண முடியாது.சில தடுப்பூசிகள் வாழ்நாள் முழுதும் பாதுகாக்கும் போது, ஃப்ளூ போன்ற தடுப்பூசிகளை ஆண்டுதோறும் ஏன் போட வேண்டும் என்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.
தஞ்சம் புகுந்த தமயந்தி
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து யோசித்து பார்க்கிறேன் – என்ன தவறு, எங்கே யாருக்கு செய்தேன். அருமையாக செல்வச் செழிப்பில் வளர்ந்தேன். இந்த அளவு என் வாழ்க்கை பந்தாடப் படும் வகையில் யாருக்கும், மனம், சொல், உடலால் எந்த துன்பமும் இழைத்ததில்லையே. அந்த லோக பாலர்கள் வந்து என் சுயம் வரத்தில் கலந்து கொண்ட சமயம் அவர்களை நிராகரித்தேனே, அது அவ்வளவு பெரிய குற்றமா.?
நழுவும் பாதரசம்
மேல்சபையின் (Senate) வெளியுறவுக் குழுவின் தலைவர், ஜோ பைடன், 2008ல், சீனாவுடனான அமெரிக்க வர்த்தகம் சம நிலையில் இல்லாததைப் பற்றிய கருத்துக்களை வரவேற்றார். தான் வாங்குவதை விட அதிகமாக பொருட்களை அமெரிக்காவிற்கு விற்ற சீனா, அதிலிருந்து கிடைக்கும் இலாபங்களை, அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் முதலீடும் செய்து, தன் செல்வ நிலையை உயர்த்திக் கொண்டது. சீனாவின் மிகப் பெரிய கடனாளியாகியது அமெரிக்கா.
தெய்வநல்லூர் கதைகள்- 30
தயாராக இருந்த டிரிப்பிள் எஸ் சார் தனக்கு வந்திருக்கும் புகாரில் மாணவர் தாக்கப்பட்டதை நேரில் கண்ட சாட்சிகள் பலர் இருப்பதாக குறிப்பிட்டார். அதன்பிறகும் இதை எம் எஸ் சி சார் மறுப்பாரேயானால் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் பள்ளியில் விசாரணை செய்யப்படும் என்றார். முதல் சுற்றில் தோல்வி அடைந்ததாக உணர்ந்த எம் எஸ் சி சார் தான் தாக்கவில்லை எனவும் தண்டித்தது அம்மாணவனின் கல்வித்தரம் உயரவே எனவும் அதனால் அம்மாணவன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் எனவும் வாதிட்டார்.
புறாவின் அழைப்பு
வசந்தகாலத்தில் மழை பொழிகிறது. எப்போதும் பொந்துக்குள் இருக்கும் ஆந்தைக்கு மழை பொழிவது பிடிக்கவில்லை, தன்னுடைய முகத்தில் சலிப்பைக்காட்டுகிறது. ஆந்தை இப்படி மழையைப் பார்த்துச் சலிப்பை வெளிப்படுத்துவது புறாவுக்குப் பிடிக்கவில்லை. ஆந்தையை அழைத்துத் தன் பார்வையை வெளிப்படுத்துகிறது.
கண்ணியமான கடைசிக் காலம்
இந்தியா வெகுவேகமாக மூப்படைந்து கொண்டு இருக்கிறது. அடுத்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஐந்து இந்தியர்களில் ஒருவர் அறுபது வயதிற்கு மேலானவராக இருப்பார். தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதாலும், குடும்பங்களில் சிறிதாகிக் கொண்டே போவதாலும் மூப்பின் பாதிப்பு அதிகம் இருக்கப் போகிறது.
வட்டமும் மையமும்
அந்தப் பறவை
வட்டமிட்டு
வட்டத்தை முடிப்பதற்குள்
வட்டமும் மையமும்
குவியும் ஒரு புள்ளியாய்
மோனத்தில்
மிக உயரத்தில்
சலனமின்றி
சிறகுகள் விரித்தபடி
பறக்கிறது
தீசியஸ் (Theseus)
இந்திய ஆயுர்வேத முறை, உடலை ஒரு இயக்கம் இல்லாத இயந்திரமாகவோ, அதற்கான மாற்றுப் பொருட்களை தயாரிப்பதையோ முன்னிறுத்திச் சொல்லவில்லை என்றாலும், உடல் உறுப்பை சரி செய்வதும், மாற்றுவதும் அறுவை சிகிச்சையினால் செய்ய முடியும் என்று சொல்கிறது. 1938ல் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கினார்கள். இப்போது இந்த துறையானது கிரிஸ்பர் (CRISPER) முதலான மரபணு திருத்தங்கள் மூலம் பல அற்புதங்கள் செய்து வருகிறது. எனினும், பயணிக்க வேண்டியது தூரம் அதிகமே.
