ஏழாவது தளம்

கோபால்ராவுக்கு அத்தகைய ஆச்சர்யம் விளைவித்த அனுபவம் ஐம்பது ஆண்டு கால வாழ்க்கையில் இன்னொன்று ஏற்படவில்லை. லஞ்சம் வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் ஏமாற்றியவர்களைப் பார்த்திருக்கிறான். தொகையை நீட்டினாலொழிய  கோப்புகளை நகர விடாதவர்களையும் பார்த்திருக்கிறான். ஆனால் கேட்டும் கேட்காமலும் இருக்கும் போதே வேலையை முடித்து விட்டு பணத்தைப் பற்றியே பேசாமல் அனுப்பிவிட்ட மனிதரை முதல் முறையாகப் பார்த்தான். அப்படி நினைத்து மகிழ்ந்து போனான் கோபால்ராவ்.