தென்னேட்டி ஹேமலதா

ஒன்பதாம் வயதிலேயே அதாவது 1944 ல் தென்னேட்டி அச்சுதராவு என்பவரோடு திருமணம் நடந்தது. அப்போதிலிருந்து இவர் தென்னேட்டி ஹேமலதா என்று அழைக்கப்பட்டார். 18 வயதில் 1952ல் ரேடியோவில் பணிபுரியும் நிமித்தம் உத்தியோக வாழ்க்கையை ஆரம்பித்ததோடு ரேடியோவில் நடிகை, நாடக எழுத்தாளர் என்று பல துறைகளில் நுழைந்தார். (ஏபி ஆனந்த் இன்டர்வியூ யூ ட்யூப்).சுமார் அதே நேரத்தில் நாவல்கள் கூட எழுதத் தொடங்கினார். 1982ல் ‘நிடுதவோலு’ மாலதிக்குக் கடிதம் எழுதிய போது லதா எழுதிய நாவல்களின் எண்ணிக்கை நூறு.  1997 ல் லதா காலமானார். அந்த பதினைந்து ஆண்டுகளில் லதா மேலும் சில நாவல்கள் எழுதி இருப்பார் என்று கூறுகிறார் எழுத்தாளரும் இலக்கிய விமரிசகருமான மாலதி. (Eminent scholars and other essays in Telugu literature 2012 e- book edition    2011).