புலவர்த்தி கமலாவதி தேவி எழுதிய ‘குமுத்வதி’ வரலாற்று நாவல்

1924 ல் புலவர்த்தி கமலாவதி தேவி ‘குமுத்வதி’ என்ற வரலாற்று நாவலை எழுதி,  நாவல் இலக்கிய வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக தன் பெயரை பதிவு செய்து கொண்டுள்ளார். இந்த நாவலை ராஜமகேந்திரவரத்தில் உள்ள சரஸ்வதி கிரந்த மண்டலி பிரசுரித்தது. சிவசங்கர சாஸ்திரி இதன் எடிட்டர். முன்னுரையில் நாவலாசிரியை இது மகாராஷ்டிராவில் சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன் சம்பாஜியின் அரசாட்சி காலத்தில் நடந்த அரசியல் குழப்பத்தைச் சித்தரிக்கும் நாவல் என்றும் கொமர்ராஜு வெங்கட் லக்ஷ்மணராவு எழுதிய சிவாஜி சரித்திரம், சில்லகிரே சீனிவாச ராவு எழுதிய மகாராஷ்டிரர்களின் சரித்திரம் ஆகியவற்றைப் படித்து தன் நாவலுக்கு வரலாற்று உபகரணங்களைத் தொகுத்ததாகவும்  குறிப்பிட்டுள்ளார்.