ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு

மாலதி சந்தூர் சொந்தமாக நாவல்களை எழுதியதோடு கூட சுவாதி பத்திரிகையில் பாத்தகெரடாலு என்ற தலைப்பின் கீழ் முன்னூற்றைம்பது ஆங்கில நாவல்களை அறிமுகம் செய்துள்ளார். அவை முன்னர் பாத்தகெரடாலு என்ற பெயரோடே பிரசுரமாயின. அது இப்போது 160 உள்நாட்டு வெளிநாட்டு மொழி நாவல்களின் அறிமுகம் – நவலா மஞ்சரி என்ற பெயரில் ஆறு தொகுதிகளாகக் கிடைக்கிறது. உலக நாவல் இலக்கியத்தை தெலுங்கு வாசகர்களுக்கு அத்தனை சரளமாகவும் சுந்தரமாகவும் அறிமுகம் செய்த மாலதி சந்தூரின் முயற்சி அசாதாரணமானது.

மாலதி சந்தூர், ரேணுகா தேவி

மாலதி சந்தூருக்கும் அவ்விதமாக பெண் வாசகர்கள் மிக அதிகம். 1952 லேயே பிரமதாவனம் என்ற பெயரோடு ஆந்திரபிரபா பத்திரிக்கையில் வெளிவந்த மாலதி சந்தூரின் பத்திக்காகக் காத்திருந்த பெண் வாசகர்கள் மிகப் பலர். அந்த நாட்களில் குக்கிராமங்களில் வசித்த பெண்கள் கூட அந்த பத்திரிகையை தபால் மூலம் வரவழைத்துக் கொண்டார்கள் என்றால், மாலதி சந்தூர் போன்ற பெண் எழுத்தாளர்கள் பெண் வாசகர்களை எத்தனை ஏற்படுத்திக் கொண்டார் என்பது புரிகிறது. பல வெளிநாட்டு மொழி நாவல்களை தெலுங்கு மக்களுக்கு அறிமுகம் செய்து எழுதிய கதைகள் ‘பாத்த கெரடாலு’ (பழைய அலைகள்) என்ற பெயரோடு பிரசுரமாயின.