கண்ணாடிச்சுவரின் இந்தப்புறம்: ஐந்து நிலப்பரப்புகளில் பெண்

நாவலின் தொடக்கத்தில் நாற்பதை நெருங்கும் பெண்ணாக அறிமுகமாகும் லீலா தன் கடந்த காலத்தை நினைவுகூறுவதன் வழியாக, அவளது குழந்தைப் பிராயம், பதின்ம வயது மாற்றம் பின் இளவயதிலேயே திருமணம் எனத் தன் வாழ்வை மீண்டும் மீண்டும் கனவுகளாலேயே அர்த்தப்படுத்திக் கொள்ள முயல்வதாக இந்தக் குறுநாவல் அமைந்திருக்கிறது. லீலா தனது நினைவுகளை மீட்டெடுக்கும் விதம், அவளுக்கு கடந்தகாலம் என்பது நினைவுகள் அல்ல; காலத்தின் முன் எப்போதும் பதினாறு வயதுப் பெண்ணாகத் துள்ளிக்குதிக்க விரும்புகின்ற அவளால், இயல்பாக சுவாசிக்க முடிகின்ற ஒரே உலகம் எனக் காட்டுகிறது.