பழத்தோட்டத்தில் ஒரு காவல்

கங்குவின் பேச்சு உற்சாகமானதாக இருந்தது. பணம் இரட்டிப்பாகும் போது யாரும் எதுவும் சொல்வதில்லை. ஆனால் முதியவர் மனம் நிறைந்திருந்தது. தன்னோடு ஒட்டிக் கொண்டிருந்த முதுமையால் அவர் சிலவற்றை இழந்திருந்தாலும், மிக வேகமாக மரங்களை நோக்கி நடந்தார்.கங்கு திரும்பவும் படுத்துக் கொண்டான். தாப்பியின் ஞாபகங்கள் அவனுக்குள் படர்ந்து அவனை இறுக்கமாகக் கட்டிக் கொண்டன. ஒரு எலும்பு, ஒரே ஒரு விலா எலும்பு உடைந்திருந்தாலும், தாப்பி பக்கத்தில் உட்கார்ந்து அந்தக் கட்டை நீவிக் கொண்டிருந்திருப்பாள்