தொலைந்த நதிகள் – மொரீஷியஸ் அத்தியாயம்

இந்தியனைத் தாண்டி பின்னால் நின்றிருந்த கறுப்பர்களைப் பார்த்தான். வேலையை நிறுத்தியிருந்தார்கள். அதில் ஒருவன் எங்கோ பார்த்தவன் போலிருந்தான். அவனது சிவப்புக் கண்கள் வேலுச்சாமியை ஆழமாகப் பார்த்தது. எவ்விதமான சஞ்சலமும் இல்லாது இந்தியர்களையும், கறுப்பர்களையும் பார்க்கக் கற்றுக்கொண்டதே தனது முன்னேற்றத்துக்குக் காரணம் என்பதை நன்கு உணர்ந்தவன் போல மேல் தளத்தில் நின்றிருந்த காரியஸ்தனிடம் கையை ஆட்டினான். ஏதோ சொல்ல வந்த இந்தியன் பக்கம் திரும்பாமலேயே சுங்க அலுவலகத்தை நோக்கித் திரும்பினான்.

அக விழிக்கும் புற உலகுக்கும் நடுவே: சூசன் சான்டாக்கும் திரைக் காதலின் தீராத வேட்கையும்

சான்டாக் தன்னை ஒரு திரைப்பட விமர்சகராகவோ, ஏன், ஒரு விமர்சகராகவோ கூடக் கருதவில்லை. “நான் விமர்சகர் அல்ல, அது கட்டுரையாளரிலிருந்து வேறானது,” என்று அவர் பாரிஸ் ரிவ்யூ நேர்காணலில் குறிப்பிட்டார்; “என் கட்டுரைகளை ஒருவிதக் கலாச்சாரச் செயல்பாடாகவே நான் பார்த்தேன்; எவை எழுதப்பட வேண்டுமோ அந்த அவசியத்தின் உந்துதலால் எழுதப்பட்டவை அவை.” தான் வியந்து போற்றியவற்றைப் பற்றியும், புறக்கணிக்கப்பட்டதாகத் தான் உணர்ந்தவற்றைப் பற்றியுமே அவர் பெரும்பாலும் எழுதினார்.⁴ அவர் திரைப்படங்களையும் இயக்கினார்: 1969 முதல் 1983 வரை சுவீடன், இஸ்ரேல் மற்றும் இத்தாலி நாடுகளில் எழுதி இயக்கிய நான்கு முழுநீளத் திரைப்படங்கள் அவை; இதில் 1973ஆம் ஆண்டுப் போர்க்களத்தின் முனையிலிருந்து ஆவணப்படுத்தப்பட்ட வாக்களிக்கப்பட்ட தேசங்கள் (Promised Lands) ஆவணப்படமும் அடங்கும்.

காலத்திற்கு வெளியே ஒரு குரல்

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவனுக்கு மனச்சிதைவு நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. மருந்துகளை முறையாக எடுத்துக்கொண்டிருந்தான். ஹார்வர்டிலும் எம்ஐடியிலும் நரம்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அவனுக்குத் தன்னுடைய நோயைப் பற்றிய மருத்துவ விளக்கங்கள் தெரிந்திருந்தன. மூளைக்குள்ளிருந்து உருவாகும் குரல்கள் வெளியிலிருந்து வருவதைப்போல அனுபவிக்கப்படலாம் என்பதையும் அறிந்திருந்தான். அப்படிப்பட்ட அனுபவங்களை ஓரளவிற்கு அமைதியாக எதிர்கொள்ளக் கற்றுக்கொண்டிருந்தான். ஆனால் அன்று இரவு அந்த ஒலி வித்தியாசமாக இருந்தது. மழையின் பின்னணியில் ஒரு சிறுமி அழுதுகொண்டிருந்தாள்.

யாருங்க அந்த நாலு பேரு?

நம்ம ஊரில் ஒரு பெண்ணுக்கான தகுதிகள் என்னென்ன என்று யாராவது கேட்டால், என்னால் ஒரு பெரிய பட்டியலே கொடுக்க முடியும். அதில் முக்கியமானவை என்ன தெரியுமா? காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்.பெரியவர்கள் பேசும்போது எதிர்த்துப் பேசக்கூடாது.

நிஜமெனும் நாடகம்

நம் அன்றாட வாழ்வில் சூழலில் நாம் காணும் திருமண ஏற்பாடுகள் என்ற சகஜமான நடப்புக்குப் பின் எத்தனை அழுத்தங்கள், சமூக அமைப்புகள்/ அவற்றில் ஏற்பட்டு வருகிற மாறுதல்கள், சமூக அமைப்பு என்பதால் அதன் பின்னே உள்ள பொருளாதார மாற்றங்கள், வாழ்நிலைத் தெர்வுகள்/ அமைவுகள், பின் நிலப்பரப்பு/ குடிபெயர்தல் போன்றனவற்றின் தாக்கங்கள், கல்வி, ஊடகம், அரசியல் ஆகியவற்றின் பாதிப்புகள் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்பதற்கான ஒரு சுட்டல் கிட்டுகிறது. இவற்றிலிருந்து தப்பித்துப் போய, தனிமனிதர் கம்பு சுற்றினால் களத்தை ஆளலாம் என்பது ஒரு நம்பிக்கை, சிறு அளவில் இது சாத்தியமாவது கூட நடக்கலாம்- அது போதுமே என்று சிலர் சொல்லக் கூடும்- ஆனால் கூட்டத்தினளவில் இதன் தாக்கம் மெல்லியதாகத்தான் இருக்கும். 

புலரியின் பேரழகும் போர்க்களமும்

இந்த நூல் அவருடைய வாழ்க்கையில் வெறும் ஐந்து வருடங்களை மட்டுமே விவரிக்கிறது. அந்த ஐந்து வருடங்களுக்குள் வேறு மனிதராக மாறிவிடுகிறார்; அவர் மட்டுமல்ல, மொத்தக் குடும்பமும் மாறிவிடுகிறது. பள்ளியில் படிக்கும் சிறுவனாக இருந்தவர், மொத்தக் குடும்பத்தையும் கனடாவுக்கு வரவழைத்துக் காத்து வழிநடத்தும் பொறுப்புள்ளவராக மாறுகிறார். அப்பாவைத் தவிர அனைவரும் பாதுகாப்பாகக் கனடா வந்து சேர்கின்றனர். ராணுவத்தால் சுடப்பட்டு இறக்கிறார் அப்பா. இறப்புச் செய்தி கேட்டுக் குற்றவுணர்வுக்கு ஆளாகிறார் லோகதாசன்; குற்றவுணர்விலிருந்து மீள, அப்பாவின் மேல் இருக்கும் வெறுப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார்.

தாரா

அவள் மீண்டும் கோப்பைகளைக் கழுவத் தொடங்கினாள். பிற்பகலில் மழை பலமானது. வள்ளியின் தேநீர்க்கடையின் பக்கவாட்டில் இருந்த குப்பைத்தொட்டி கவிழ்ந்துகிடந்தது. வள்ளி அதைத் தூக்கி ஓரமாக வைப்பதற்குச் சென்றாள். மழைநீர் வடிகாலின் ஓரமாகப் பெருக்கெடுத்து ஓடியது. இரும்பு மூடி அகற்றப்பட்டிருந்த இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் பள்ளம் தெரியவில்லை. வள்ளியின் இடது கால் அதற்குள் சிக்கியது. அவள் நிலைதடுமாறி விழுந்தாள். முதலில் யாருக்கும் சத்தம் கேட்கவில்லை. பிறகு அவள் அலறியபோது எதிர்ப்புறக் கடையிலிருந்து இரண்டு பேர் ஓடிவந்தார்கள். பாலனும் ஓடினான். அவளைத் தூக்க முயன்றபோது அவனுடைய சட்டையைப் பிடித்துக்கொண்டாள்.

ஜப்பான்: பெண்களின் மொழி, பெண்களின் இலக்கியம்

“ஜப்பானியப் பெண்களின் மொழி” ஒரு பழங்கால மரபு அல்ல. அது நவீன தேசம் உருவாக்கிய ஒரு கட்டமைப்பு. பெண்கள் எப்படிப் பேச வேண்டும் என்பதை ஆண் அறிவுஜீவிகள் “கேட்டு”, பெயரிட்டு, வரையறுத்தார்கள். பெண்களின் பெயரால் பரவலாகப் பேசப்பட்டது, ஆனால் பெண்களால் அல்ல.

 ‘கடாவர்’ அம்மா 

சில தசாப்தங்களாக நான் புஷ்கரம் திருவிழாக்களில் பார்த்த பரபரப்பான சூழல் இங்கே சற்றும் தென்படவில்லை. கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. “இங்கும் சந்திரபாபு நாயுடு போன்ற ஒருவர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று எனக்குத் தோன்றியது. ஆனால் இங்கு ஒரு பிரச்சினை எழுந்தது. இங்கு நடைபெறும் புஷ்கரத்  திருவிழாவுக்கு அவ்வளவு முக்கியத்துவத்துவம் இல்லை என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, கோதாவரி பிராமணர்கள் யாருமே அங்கு இல்லை. சொல்லப்போனால், தர்ப்பணச் சடங்குகளை நடத்துவதற்கு வட இந்திய பூசாரி ஒருவர் கூட அங்கு இல்லை.  மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் அந்த முழு படித்துறையிலும் தேடிப் பார்த்தோம். யாரும் தென்படவில்லை.

சுத்த அறிவே சிவம்

யாக்ஞ்யவல்கியர் கூறுகிறார்: “ஆத்மாவா அரே த்ரஷ்டவ்ய: ஷ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாசிதவ்ய:” இந்த ஆத்மா ஒன்றுதான் காணப்பட வேண்டியது (த்ரஷ்டவ்ய:). இந்த ஆத்மாவைக் குறித்த விளக்கங்களைக் கேட்கவேண்டும் (ஷ்ரோதவ்ய:); கேட்டதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும் (மந்தவ்ய:); பின்னர் அதையே தியானித்து அது மயமாகி விடவேண்டும் (நிதித்யாசிதவ்ய:) எப்போது ஆத்மாவை ஒருவன் தரிசித்து, கேட்டு, சிந்தித்து, முழுமையாக அறிந்து கொள்கிறானோ, அப்போது இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே அவனுக்கு அறியப்பட்டதாகி விடுகிறது.

எவ்வினையும் என் செய்கேன்

This entry is part 5 of 5 in the series காலகாலம்

ஒவ்வொரு குடும்பமும் வேறு வேறு பாடல்களைச் சுமந்து வந்தது. ஒரு குடும்பம் இருப்பும் இல்லை இன்மையும் இல்லை என்று தொடங்கும் படைப்பின் பாடலைச் சுமந்தது. இன்னொன்று ஒரே மரத்தில் அமர்ந்த இரண்டு பறவைகளின் பாடலை; ஒன்று பழம் உண்கிறது, மற்றது பார்த்துக்கொண்டே இருக்கிறது. மற்றொன்று நெருப்புக்கான பாடல்களை. சுமேதாவின் குடும்பம் எட்டுப் பாடல்களை மட்டும் சுமந்தது. அவளுக்கு அதுவரை தெரிந்த உலகம் அணையா நெருப்பும் எட்டுப் பாடல்களும். அன்று அவள் கரை முழுவதும் பார்த்தாள். நூறு நெருப்புகள். ஒவ்வொன்றின் அருகிலும் ஒரு குடும்பம்.

இருளில் ஒளிரும் கலைப்படைப்புகள் பின் ஒளிந்த வேதியியல்

ஒரு ஓவியத்தில் நிறத்தை உருவாக்குவது சவால் என்றால், அந்த நிறத்தை நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கச் செய்வது இன்னும் பெரிய சவால். ஒளி பொருளின் மீது விழும்போது, அதன் ஆற்றல் அந்தப் பொருளின் மூலக்கூறுகளுடன் தொடர்பு கொள்கிறது. சில பொருட்களில் இந்த ஆற்றல் வெப்பமாக மாறுகிறது. மற்ற சில பொருட்களில் வேதியியல் மாற்றங்களைத் தொடங்குகிறது. இதனால் நிறமிகள் மங்கலாம், அவற்றின் நிறம் மாறலாம், சில நேரங்களில் அவை வேறு பொருட்களாக மாறலாம். குறிப்பாக ஒளிரும் நிறமிகளில், ஒளியை உறிஞ்சும் மூலக்கூறுகளின் அமைப்பு மிகவும் முக்கியமானது.

ஆழிக்குழியோசை

நிரஞ்சனுக்கு அவையெல்லாமே தொலைதூரங்களாகிவிட்டன. அம்மாவே எங்கோ அடியாழத்தில் நெளியும் நீர்ப்பிம்பம்போல்தான் காட்சியளிக்க ஆரம்பித்திருந்தார். வருத்தம் வலிந்து வரவழைத்துக் கொள்ளவேண்டிய ஒன்றாக இருந்தது. அப்படி வலிந்து சிந்தனைக்குள் ஆழ்ந்திருப்பதும் வேலைக்குச் சேர்ந்தபின் அரிதாகிவிட்டது. காலையும், மாலையும் வேலைக்குச் செல்வதும், அறைக்குத் திரும்புவதுமான ஓட்டத்திற்குள்ளே ஒளிந்துகொண்டன. அவற்றிற்கிடையே அவனிடம் பேசிய அம்மாவிடமும் உணவு, உறக்கம், பணி சார்ந்த சொற்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. நிரஞ்சனுக்கும் அம்மூன்று மட்டும்தான் அவ்வாழ்வில் இருந்தன. அவற்றுக்கு அப்பால் எதையும் தருவித்துக்கொள்ளும் துணிவு அவனிடமில்லை.

கூண்டு

“ஐநூறு ஃபேமிலீஸ் இருக்கிற லக்சுரி காம்ப்ளக்ஸ். எங்களது பசங்க பயங்கர ஜாலியா, கூட்டமா வளர்ந்தாங்க. எங்களுக்கும் ஈஸியா இருந்தது. நானும் ஃப்ரீயா விட்டுட்டேன். என்ன, மிஞ்சிப் போனா லவ்வுன்னு வந்து சொல்லுவா. ஒண்ணும் பிரச்சனையில்ல, பார்த்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா இப்படியெல்லாம் ஆகும்னு யோசிக்கல.

மீரா ஜாலியாத்தான் இருக்கா. ‘உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை நீ பண்ணும்மா. எனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை நான் பண்ணுறேன்’ங்கிறா. ஒண்ணுமே பேச முடியல. அவள் பண்றது தப்புன்னுகூட அவளுக்கு புரிய வைக்கவே முடியல.

இசை – உணர்வுகளின் சுருக்கெழுத்து

This entry is part 5 of 5 in the series கற்று கேட்டு ஆய்ந்தவை

இது ஒரு மேற்கத்திய கலை வடிவம், இசை, பாடுதல், நடித்தல், மேடை ஜோடனைகள், ஆடையணிகள் எல்லாம் அமைந்து ஒரு மேடையில் பலர் முன்னால் அமர்ந்து பார்க்கும்படி செயல்படுத்துவதாகும். மக்கள் அதிக ஆர்வம் காண்பித்தமையால் பற்பல ஆபராக்கள், புனைகதைகள், சரித்திரக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு எழுதி அவ்வப் பாத்திரங்களாக வேடமிட்டுக்கொண்ட கலைஞர்களால் மேடைகளில் நடிக்கப்பட்டன; இன்றும்கூட நடிக்கப் படுகின்றன. இது ஒருவகையான முக்கியமான இசை அமைப்பு என்றே கருதப்படுகின்றது.

விக்ட்ரோலா

This entry is part 13 of 13 in the series காப்பிரைட் கதைகள்

பாடலை இயற்றியவர்களுக்கு, அதாவது இசையமைப்பாளர், பாடலாசிரியர் அல்லது அவர்களின் பதிப்பாளர்களுக்கு, நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்தபடி, ஒவ்வொரு பிரதிக்கும் இரண்டு சென்ட் மெக்கானிக்கல் ராயல்டி கொடுக்கப்பட்டது. பாடியவர்களுக்கும் இசைத்தவர்களுக்கும் அதுவும் இல்லை. மற்றபடி லாபம் பெற்றவை, இசைத்தட்டுக்களைப் பிரதி எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கையில் வைத்திருந்த ரெகார்ட் நிறுவனங்களே.

யாரின் மேல் பிழை?

பல வர்ண ஜாலங்கள் காட்டும் பிளவுஸிற்கும் ஸ்கர்டுக்கும் இடையே தொப்புளில் கம்மல் குத்தியிருந்தாள் மஹதி. குட்டையான கையுடைய பிளவுஸிற்குள்ளால் நீண்டிருந்த அவளின் வழுவழுப்பான கைகளைப் பார்க்க திவினேஷிற்கு படபடப்பாக இருந்தது. மஹதி திவினேஷிற்குக் கை குடுத்தாள். ஒரு மெல்லிய குளிர் ஐஸ் ஒன்று திவினேஷின் நாடி நரம்புகளுக்குள்ளால் ஊடுருவிப் பாய மூச்சே நின்றுவிடும் போலிருந்தது அவனிற்கு. ஒரு பத்து நிமிடங்கள் தான் மஹதி அங்கே நின்றிருந்தாள். இருவருக்கும் ஹாய் சொல்லிவிட்டுப் பறந்துவிட்டாள்.

தன்னிச்சையான முக்கியத்துவம் – 2

நான் பார்த்ததால மட்டும் தான் அந்த மீனுங்க ஏதோ ஒண்ணா ஆச்சு. யோசிக்கத் தகுந்ததா ஆச்சு. என் கண்ணு அதுங்களைத் தாண்டிப் போயிருந்தா, அதுங்க ஒண்ணுமில்லாமலே இருந்திருக்கும். அது என்னைப் பயமுறுத்திச்சு. நான் எந்தப் பொருளுக்குக் கொடுக்கற முக்கியத்துவமும் இவ்ளோ தன்னிச்சையா இருக்க முடியும்ங்கறது. டிரெஞ்ச் கோட் ஆளு சொன்னது சரி தான்ங்கறது. ஒண்ணை அழகா பார்த்துட்டு, அப்புறம் திடீர்னு அது அசிங்கமாவோ போரடிக்கிறதாவோ ஆயிடலாம், ஏன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியாதுங்கறது.

கொலம்பஸ் கைதும் விசாரணையும்!

This entry is part 14 of 14 in the series கொலம்பஸ்

நெடும் பயணத்துக்குப்பிறகு புதிய கண்டத்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியுடன் அங்கே வந்த கொலம்பஸ் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறினார். கலகக்காரர்களின் தலைவனான ரொல்டனுடன் சமரச ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் வேறு வழியின்றித் தள்ளப்பட்டார். அவர்களுக்கு நிலங்களையும் உள்ளூர் இந்திய அடிமைகளையும் வழங்குவதாக ஒப்புக்கொண்டு பதிலுக்கு அமைதியை விலைக்கு வாங்கினார். இந்தச் சமரசம் ஸ்பெயின் அரசர்களிடம் கொலம்பஸின் மதிப்பை அடியோடு மங்கச் செய்தது.

குழப்பம் உதிர்காலம்

பல சமநேர மண்டலங்கள் கொண்ட நாட்டில் ஒரு மண்டலத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்லும் பொழுது  கடிகாரங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தச் சமநேர மண்டலத்தின் எல்லைக்கு இரு புறத்தில் இருக்கும் அடுத்தடுத்த ஊர்களில் நேரம் வேறாக இருக்கும். பேருந்து, தொடர்வண்டி, விமானம் போன்றவற்றின் நேர அட்டவணைகள் அந்தந்த ஊர்களின் உள்ளூர் நேரப்படி இருக்கும். அவற்றைக் குழம்பாமல் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றுக்கெல்லாம் பழகிக் கொள்ள வேண்டும். பல சமநேர மண்டலங்கள் இருக்கும் நாட்டில் பிரச்சினை இப்படி என்றால் இந்தியா போல ஒரே மண்டலம் கொண்ட நாடுகளில் அவை வேறு மாதிரி வடிவெடுக்கும்.

யதார்த்தமும் தகவலும்

யதார்த்தத்தை அறிந்து கொள்ள, யதார்த்தம் என்பது உலகை நெய்திருக்கிற தொடர்புகளின் வலைப்பின்னல் மற்றும் நேர்மாறான தகவல்களே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம்மைச் சூழ்ந்துள்ள யதார்த்தத்தை பொருட்களாக துண்டுபடுத்தியுள்ளோம். ஆனால் யதார்த்தம் தனித்த பொருட்களால் ஆனதல்ல. அது ஒரு நிலைமாறும் சுழல்

AI வசமாகும் சினிமா: புதிய படைப்புலகமா, மனிதக் கலைஞர்களுக்குப் புதிய சவாலா?

2025ம் ஆண்டு அறிமுகமான Tilly Norwood என்ற மெய்நிகர் நடிகை ஹாலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது செய்திகளில் வெளிவந்தது. AI நடிகர்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா, உண்மையான நடிகர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விகளும் எழுந்தன. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக AI நடிகர்களை உருவாக்க முடிகிறது என்பதற்காக உண்மையான கலைஞர்களின் முகத்தையும் குரலையும் அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்தலாம் என்று பொருளல்ல.

இரு கவிதைகள் – ரேகா வசந்த்

ஏன்? எதற்கு? எப்படி?
வினாக்களின் கூர்முனைகள்
தைத்துக்கொண்டிருக்க,
ஏறெடுத்தும் பார்க்காதிருந்தாள்
அப்பெருந்தேவி!

அஞ்சலி: சேரன் உருத்திரமூர்த்தி

பதினொரு வயதில் தான் படித்த தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவல் தன் ஆர்வத்தின் போக்கை முற்றாக மாற்றியதாகக் குறிப்பிட்டார். சென்ற வருடம் எழுத்தாளர் யுவன் சந்திரசேகருடன் சேரனை அவர் இல்லத்தில் சந்தித்தபோது காந்தியின் ‘சத்திய சோதனை’ வாசிப்பு, பள்ளி நாட்களில் மாமிச உணவை மறுத்து மரக்கறி மாத்திரம் உண்பவராகத் தன்னை மாற்றியது என்று சொன்னார். வீட்டில் எல்லோருக்கும் ஒரு (பெரிதும் மீன்) உணவும், தனக்கு மட்டும் மரக்கறி உணவு என அம்மா எப்படி இரட்டைச் சமையல் செய்யவேண்டியிருந்தது என்று எங்களிடம் சிரிக்கச் சிரிக்கச் சொன்னார். யாழ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தாலும், தமிழும் அரசியலுமே அவரை முழுவதும் ஆக்கிரமித்தன. அதற்கான முக்கிய காரணம், 1981-ல் 95,000 புத்தகங்களுடன் யாழ் பொது நூலகம் இலங்கை காவல்துறையினரால் எரியூட்டப்பட்டமை.