யாக்ஞ்யவல்கியர் கூறுகிறார்: “ஆத்மாவா அரே த்ரஷ்டவ்ய: ஷ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாசிதவ்ய:” இந்த ஆத்மா ஒன்றுதான் காணப்பட வேண்டியது (த்ரஷ்டவ்ய:). இந்த ஆத்மாவைக் குறித்த விளக்கங்களைக் கேட்கவேண்டும் (ஷ்ரோதவ்ய:); கேட்டதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும் (மந்தவ்ய:); பின்னர் அதையே தியானித்து அது மயமாகி விடவேண்டும் (நிதித்யாசிதவ்ய:) எப்போது ஆத்மாவை ஒருவன் தரிசித்து, கேட்டு, சிந்தித்து, முழுமையாக அறிந்து கொள்கிறானோ, அப்போது இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே அவனுக்கு அறியப்பட்டதாகி விடுகிறது.
