புலரியின் பேரழகும் போர்க்களமும்

இந்த நூல் அவருடைய வாழ்க்கையில் வெறும் ஐந்து வருடங்களை மட்டுமே விவரிக்கிறது. அந்த ஐந்து வருடங்களுக்குள் வேறு மனிதராக மாறிவிடுகிறார்; அவர் மட்டுமல்ல, மொத்தக் குடும்பமும் மாறிவிடுகிறது. பள்ளியில் படிக்கும் சிறுவனாக இருந்தவர், மொத்தக் குடும்பத்தையும் கனடாவுக்கு வரவழைத்துக் காத்து வழிநடத்தும் பொறுப்புள்ளவராக மாறுகிறார். அப்பாவைத் தவிர அனைவரும் பாதுகாப்பாகக் கனடா வந்து சேர்கின்றனர். ராணுவத்தால் சுடப்பட்டு இறக்கிறார் அப்பா. இறப்புச் செய்தி கேட்டுக் குற்றவுணர்வுக்கு ஆளாகிறார் லோகதாசன்; குற்றவுணர்விலிருந்து மீள, அப்பாவின் மேல் இருக்கும் வெறுப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார்.