தாரா

அவள் மீண்டும் கோப்பைகளைக் கழுவத் தொடங்கினாள். பிற்பகலில் மழை பலமானது. வள்ளியின் தேநீர்க்கடையின் பக்கவாட்டில் இருந்த குப்பைத்தொட்டி கவிழ்ந்துகிடந்தது. வள்ளி அதைத் தூக்கி ஓரமாக வைப்பதற்குச் சென்றாள். மழைநீர் வடிகாலின் ஓரமாகப் பெருக்கெடுத்து ஓடியது. இரும்பு மூடி அகற்றப்பட்டிருந்த இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் பள்ளம் தெரியவில்லை. வள்ளியின் இடது கால் அதற்குள் சிக்கியது. அவள் நிலைதடுமாறி விழுந்தாள். முதலில் யாருக்கும் சத்தம் கேட்கவில்லை. பிறகு அவள் அலறியபோது எதிர்ப்புறக் கடையிலிருந்து இரண்டு பேர் ஓடிவந்தார்கள். பாலனும் ஓடினான். அவளைத் தூக்க முயன்றபோது அவனுடைய சட்டையைப் பிடித்துக்கொண்டாள்.