குழப்பம் உதிர்காலம்

பல சமநேர மண்டலங்கள் கொண்ட நாட்டில் ஒரு மண்டலத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்லும் பொழுது  கடிகாரங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தச் சமநேர மண்டலத்தின் எல்லைக்கு இரு புறத்தில் இருக்கும் அடுத்தடுத்த ஊர்களில் நேரம் வேறாக இருக்கும். பேருந்து, தொடர்வண்டி, விமானம் போன்றவற்றின் நேர அட்டவணைகள் அந்தந்த ஊர்களின் உள்ளூர் நேரப்படி இருக்கும். அவற்றைக் குழம்பாமல் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றுக்கெல்லாம் பழகிக் கொள்ள வேண்டும். பல சமநேர மண்டலங்கள் இருக்கும் நாட்டில் பிரச்சினை இப்படி என்றால் இந்தியா போல ஒரே மண்டலம் கொண்ட நாடுகளில் அவை வேறு மாதிரி வடிவெடுக்கும்.