தன்மை விலையிடல் –  பேரம் பேசுதலின் நவீனப் பரிணாமம்!

நான்கு நகரங்களில் கிட்டத்தட்ட ஐந்நூறு நுகர்வோர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தன்மை விலையிடல் காரணமாகக் குறைந்தபட்ச விலைக்கும் அதிகபட்ச விலைக்கும் கிட்டத்தட்ட 25% சதவிகித வித்தியாசம் இருப்பதாகக் கண்டறிந்திருக்கின்றனர். வெறும் பலசரக்கு மட்டும் வாங்குவதில் இந்த வித்தியாசமானது ஒரு வருடத்தில் ஆயிரத்து இருநூறு டாலர் வரை செலவினத்தை அதிகமாக்கும் எனச் சொல்கின்றனர். இப்படி மாறுபடும் விலைகளை வைப்பதே ஒரு விதத்தில் பேரம் பேசுவதுதான்

போதும் என்ற மனமே…

நம்மிடையே மிகச் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுதுமே சரி செய்ய வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்களே தவிர, சமயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. எதைக் கட்டாயம் சரி செய்ய வேண்டுமோ அவற்றை சரி செய்து, மற்றவற்றைக் கொஞ்சம் பாராமுகமாகக் கடந்து, வயதில் மூத்தோருக்கு எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட அவர்கள் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

வளரிளம் பருவத்தினர் எதிர்நோக்கும் சவால்கள்

இந்தப் பிரிவினரில் எவருடனாவது தாங்கள் சார்ந்திருக்கவில்லை என வளரிளம்பருவத்தினர் உணரும்போது குறிப்பிட்ட அந்தப் பிரிவினரின் கவனத்தைத் தங்கள்மீது ஈர்ப்பதற்கு அவர்கள் மிகுந்த பிரயத்தனப்படுவார்கள். அந்தக் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவர்கள் விரும்பும்வகையில் எதிர்வினைகள் கிடைக்காதபோது, தங்களிடமும் அதிகாரம் இருக்கிறது எனக் காட்டுவதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள். அது பெற்றோருடனும் ஆசிரியர்களுடனுமான அதிகார மோதலாக விஸ்வரூபம் எடுக்கிறது.

சமூக உணர்ச்சி கற்றலும் நேர்மறையான பள்ளி சூழலும்

This entry is part 6 of 12 in the series சமூக உணர்ச்சி

நேர்மறையான பள்ளி சூழல் சமூக உணர்ச்சி கற்றலுக்கான அடித்தளமாக செயல்படுகிறது. பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலில் மாணவர்கள் தங்கள் புதிய திறன்களை தயக்கமின்றி பயிற்சி செய்ய முடிகிறது. தவறுகள் செய்து அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பும், ஆதரவான உறவுகளின் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைக்கிறது.

பாங்சி (Banksy) யார்?

இரண்டாம் பிரிவினர் விசித்திரமானவர்கள் , மர்மமானவர்கள். இப்பிரிவினர் எக்காரணத்திற்கும் தங்கள் நிஜ அறிமுகத்தைக் கொடுக்கமாட்டார்கள். தங்கள் தனிமைக்கும் ஆக்க சுதந்திரத்திற்கும் சுய அறிமுகம் பாதமாக அமைந்துவிடக்கூடாதென நினைப்பவர்கள். புகழின் பின் விளைவுகளை முற்றிலும் தவிர்க்கவோ அல்லது அதை வரம்பிக்க விரும்புவார்கள். பிரபல தமிழ் இலக்கிய ஆளுமை ‘பேயோன்’ , “நான் பப்ளிக் ஃபிகராக இருப்பதை விட வெறும் ஃபிகராக இருக்கவே விரும்புகிறேன்” எனச் சொல்வதில் வாசகர்களுடன் கண்ணாமூச்சி ஆடுவதில்  விருப்பமில்லாதவர் என்பது தெளிவாகிறது.

யானை – மனிதன் வாழ்வுராய்வின் இலக்கணம்

நேற்று இரண்டு யானைகள் துண்டுச் சோலைக்குள் இருந்தன. மாலை வெளியே வரும் என எதிர்பார்த்தேன், வரவில்லை. காலை வெளியே வந்து தோட்டத்திற்குள் சென்று அடுத்த மலைமேட்டைக் கடந்து சென்றிருப்பதற்கான காலடித் தடங்களோ, உடைந்த மரக்கிளைகளோ எதுவும் காணவில்லை. கண்டிப்பாக இரண்டு யானைகளும் இப்பொழுதும் சோலைக்குள் தான் இருக்க வேண்டும். வெளியே வருவதென்றால் காலை 6, 7 மணிக்குள் வெளியே வந்திருக்கவேண்டும், அப்படித் தெரியவில்லை.

இன்க்ளூசிவ் – உள்ளடக்கிய நிலை

This entry is part 4 of 12 in the series சமூக உணர்ச்சி

ஆனால், அறிமுகம் செய்து பல கலாசார வேறுபாடுகளை உணர்ந்துகொண்டால் மட்டும் போதாது. மாறுபட்ட கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை அந்தக் குடும்பத்தில், சமூகத்தில், வகுப்பில் சேர்ந்தவர்களாக உணர்வதும் முக்கியம். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘பிலாங்கிங்’ என்கிறார்கள். இதன் பொருள் “நான் இங்கே சொந்தமானவன், என் தேவை இங்கே அவசியம், என் கருத்துகளுக்கு மதிப்பு இருக்கிறது” என்ற உணர்வு.

பொறுப்புணர்வோடு முடிவுகளை எடுத்தல்

This entry is part 3 of 12 in the series சமூக உணர்ச்சி

இங்கேதான் பெற்றோர்கள், ஆசிரியர்களின் தேவை இருக்கிறது. மாணவர்கள், இளம் வயதினர்களை உணர்ச்சியால் எடுக்கும் முடிவின் பின்விளைவுகள், மாறுபட்டு எடுக்கும் முடிவுகளின் பின்விளைவுகள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியிலிட்டுக் காட்டி சிந்திக்க கற்றுத் தர வேண்டும். நல்லது என்ன அல்லது என்ன அவர்களே புரிந்து கொள்வார்கள்.

தன்னைத் தெரிந்து கொள்ளல்

This entry is part 2 of 12 in the series சமூக உணர்ச்சி

ஒரு பொருளை மற்றொரு குழந்தையிடமிருந்து மாணவர் பறித்தபோது, அந்தச் செயலால் மற்ற குழந்தை எப்படி வருத்தமடைந்தது என்பதை விளக்குதல். “அவர் எப்படி உணர்ந்திருப்பார்? ஏன் அவர் அழுதார்?” போன்ற கேள்விகள் மூலம் விளக்குதல்.

உறங்காமை

தூக்கமின்மை உள்ளவர்கள் நன்றாகத் தூங்குபவர்களுடன் சரியாக இணைகிறார்கள், ஆனால் அந்த நல்ல தூக்கம் உள்ளவர்கள் கூட அவர்கள் தூங்க வேண்டிய அளவுக்குத் தூங்குவதில்லை. மனிதர்கள் “இருநிலை” (biphasic) தூக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளனர் என்று வாக்கர் கூறுகிறார் – அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு தூக்க அமர்வுகள் தேவையாம். நவீனமயமாக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்களை விட  நீண்ட காலம் தூங்கும் பாரம்பரிய சமூகங்களில் உள்ளவர்கள்,  சிறிது நேரம் உயிர் காக்கும் தூக்கத்தை, அதாவது இரு வேளை தூக்கத்தை மேற்கொள்கிறார்கள்.

ஜோ ஸ்டீவன்ஸ் – இசைவழி மூன்றாம் பாலுக்கான மாற்றுவெளி

தன் இருபதாவது வயதில் நண்பருடன் பயணம் செய்த வண்டி, தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றபோது ஜோ அதை சரிசெய்ய முற்பட்டார். பெண்களால் முடியாத காரியம் என நண்பர் கேலி செய்ய, ஒரு மணிநேரத்தில் பழுதைச் சரி செய்தார். பல பெண்கள் ஆண்களைப் போலக் காரியங்கள் செய்தாலும், தன் செயல்பாட்டில் சில வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்திருந்தார்.  ஆண்கள் செய்யும் காரியங்களைச் செய்வதோடு மட்டுமல்லாது அவர்களைப் போலவே உணரத் தொடங்கினார் என்பதே அந்த மாற்றம்

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி…

இயற்கையான உறவில் மலரும் மகவு என்ற அமைப்பை நீர்த்துப் போகச் செய்து, அந்த உறவு தரும் கடமை, பொறுப்பு, அன்பு, வம்சம் என்று காலம்காலமாய் மனித இனமும், சட்டமும் பணிந்து கொண்டாடிய ஒன்றை, ஒப்பந்தங்களால் அடைவதில், சட்டச் சிக்கல்கள் எழத்தானே செய்யும்? யாருக்குச் சொந்தம் என்ற கேள்வியை எடுத்துக் கொள்ளுங்கள். பணத்திற்காக கருவை சுமந்தவர்களென்றாலும், அத்தகைய அனைத்துப் பெண்களும், தாங்கள் கற்பனை செய்தபடி, அந்தக் குழந்தையிடமிருந்து உடலால் பிரிந்திருப்பது எளிதல்ல என்ற இடத்திற்கு வந்து சேர்ந்து மனச் சோர்விற்கும் ஏக்கத்திற்கும் உள்ளாகிறார்கள்.

தப்பி ஓடுதல்

ஏழு வருடங்களாக, வருடத்துக்கு ஒரு புத்தகம் எழுதிய பிறகு, மான்கெல் வேறு செயல்திட்டங்களில் ஈடுபட்டிருந்தார், கூடவே இந்தத் தொடரை வேறு எங்கு செலுத்துவது என்றும் யோசித்திருக்கிறார். நடந்ததென்னவென்றால், தொடரின் கடைசி நூலான  நொந்திருந்த மனிதன் (The Troubled Man-2009), நன்றாக உருவாக்கப்பட்டு, காத்திரமான இறுதிக்கட்டத்து முடிச்சவிழ்ப்பு கொண்ட உளவுக் கதையாக அமைந்திருந்தது.  ஆனால் முந்தைய பத்தாண்டில் வெளியான மூச்சடைக்கும் வேகம் கொண்ட மர்மக் கதைகள் போலன்றி இது சில நேரங்களில் மெதுவாக ஊர்கிற கதையாக இருந்தது. 

கண்டறியாதன

நமக்கு சிலது தெரிவதில்லை, என்ன தெரியவில்லை என்பதை உணர்வதற்கும் வழி தெரியவில்லை. சில கேள்விகளுக்கு உள்ளார்ந்த விடை இல்லை. பொதுப் புரிதலுக்குள் அடங்காத அதை ஈஷா உபனிஷத் இவ்வாறு சொல்கிறது : ‘அது அசைகிறது, அசைவதில்லை; தொலைவிலும், அருகிலுமாக இருக்கிறது; உள்ளேயும் இருக்கிறது, வெளியேயும்’

கானலின் நீரோ, காட்சிப்பிழையோ?

This entry is part 10 of 14 in the series குடாகாயம்

பார்வையாளனின் மூளை படைப்பை எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும், அதை எப்படி அவருக்குக் கடத்துவது எனத் தனக்கென விதிகளை உருவாக்கிக்கொள்வதனால் நவீன ஓவியர் ஒரு தேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி (Neuroscientist) போலச் சிந்திக்கிறார்.  எதை வரைவது, எதை விடுப்பது அல்லது சிதைப்பது என்று அவர்  கருதும் பொழுது, அந்த விடுதலும் சிதைத்தலும் எப்படிப் பார்வையாளானின் மூளையால் இட்டு நிரப்பப்படும் அல்லது சரிகட்டப்படும் என்று அவர் தீர்மானித்தாக வேண்டும். 

சகுனங்களும் சம்பவங்களும் – 1

உளநோய் மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட் என்பாரும் இறையியல் நிபுணரும் ஆங்கில எழுத்தாளரும் ஆன “நார்னியாவின் காலவரிசைக்கதைகள்” (Chronicles of Narnia) எழுதிய சி.எஸ்.லூயிஸ் என்பாரும் சந்தித்துப் பேசிக் கொண்டால் எதைப் பற்றியெல்லாம் உரையாடி இருப்பார்கள்? கடவுள் இருக்கிறாரா? இருந்தால் உலகப் போர்களைத் துவங்க ஆசீர்வதித்து இருப்பாரா? மகள் தந்தையை கவனிப்பதும், நண்பனின் அன்னையை பாதுகாப்பதும் – எல்லாமே காமத்தின் அடிப்படையில் தானா?

பாவம், மரணம், நரகம்

This entry is part 9 of 14 in the series குடாகாயம்

இடப்பகுதி ஒருவித தெய்வீகத் தன்மை கொண்டதாகவும், கருமை நிறத்தில் வலப்புறம் ஒருவித நரகம் போலவும், நடுப்பட்ட பெரும்பகுதி சுவர்க்கம்-நரகம் போன்றவற்றின் கலவையாகவும் தோன்றுகின்றன.  அவற்றைப் புரிந்துகொள்ள நாம் பகுதிகளைத் தனித்தனியே பார்த்தாக வேண்டும்.  முதலில் இடப்புறம்,  இது ஈடன் தோட்டத்தின் வடிவம்.  நம் கவனத்தை முதலில் ஈர்ப்பது கீழ்ப்பகுதி, இங்கே கர்த்தர் ஏவாளையும் ஆதமையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்,

கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்

This entry is part 4 of 14 in the series குடாகாயம்

ஸிஸிபஸின் தண்டனையைப் பலரும் ஓவியமாக வடித்திருக்கிறார்கள்.  இவைகளுக்குள்ளே முன் பொதுயுகம் 530-ல் சுட்ட களிமண் பானையில் வரையப்பட்டதே நமக்குக் கிடைத்தவற்றில் மிகப் பழமையானது.   பொதுயுகம் 1549-ல் இத்தாலியஓவிய மேதை டிஷியன் என்பவரால் திரைச்சீலையில் தைலவண்ணம் கொண்டு வரையப்பட்ட ஸிஸிபஸ் ஓவியங்களுக்குளே மிகச் சிறப்பானதாக அறியப்படுகிறது.

இமானுவல் கன்ட்டின்  உணர்வோங்குப் பெருநிலை

This entry is part 3 of 14 in the series குடாகாயம்

தமிழில் உன்னதத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட நான் இறையுணர்வு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.  பேரழகின் ஊடாக இணைந்திருக்கும் முடிவின்மையை அதன் முக்கிய வரையறையாகக் கொள்ளலாம். ஊடாக, அது எழுப்பும் அச்சம், இயலாமை, விந்தை எனப் பல்வேறு உணர்வுகளையும் ஒட்டுமொத்தமாகக் கொண்டது இறையுணர்வு.

தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே

பல்லாயிரம் ஆண்டுகளாக, உறவினர்களுடனும், விரிந்து பரந்த குடும்பத்துடனும், இணைந்து பணி செய்பவர்களுடனும், நண்பர்களுடனும், பயணத்தில் இருக்கும் வியாபாரிகளுடனும் மனிதர்கள் ஒன்றாக ஒரே படுக்கையில் உறங்கியிருக்கிறார்கள். பயணத்தின் போது முன்பின் அறியாதவர்கள் தன்னருகில் படுத்திருப்பதை அனுமதித்திருக்கிறார்கள். ஆனால், அதிர்ஷ்டம் காலை வாரியதென்றால், கூட படுத்திருக்கும் நபர், குறட்டை விடுபவராகவோ, உடல் வாசத்தைப் பரப்பி சங்கடத்தில் ஆழ்த்துபவராகவோ, பிறந்த மேனியில் தூங்குபவராகவோ அமையலாம்!

சொல்லா, காட்சியா, எண்ணங்கள்?

உள் உரையாடல் கொண்டவர்கள், தன்னைப் பற்றி, தன் உணர்வுகளைப் பற்றி, ஆசைகள், ஆவல்கள் பற்றி சிந்தித்த வண்ணமிருப்பார்கள். இந்தத் தன் மையமானது வெளியில் உரத்த குரலில் ஒலிக்கும். 1980ல் மனோதத்துவவாதியான பெர்னார்ட் ரைம், (Bernard Rime) நாம் ஏன் நம் எதிர்மறை எண்ணங்களை பிறரிடம் சொல்கிறோம் என ஆராய்ந்தார். கெட்ட அனுபவங்கள், அசை போடுவதோடு நிற்பதில்லை, அதை வெளிப்படுத்தும் இச்சையையும் கொண்டவை. நாம் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மற்றவரிடம் சொல்கையில், அவர் நம்மை விட்டு விலகிச் செல்கிறார்.

கான மயிலாட, மோனக் குயில் பாட

இந்தக் கணக்கீட்டின்படி, இந்த வெற்றிகரமான மீம்ஸ் போர்கள், சென்ற பத்தாண்டுகளாக அமெரிக்க அரசியலை வடிவமைத்து வந்திருக்கின்றன; ஆனால், அதில் நேரடியாக ஈடுபட்டவர்களின் வாழ்க்கையும் சிதைந்திருக்கிறது.  ஆக்ரோஷமான போராளிகள் குற்றச்சாட்டுக்களை, சிறை தண்டனையை, திவாலாகும் நிலையை, குடும்பத்தை, தங்கள் பெருமிதங்களை இழக்கும் அவலத்தை இப்போது சந்தித்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் கருத்து, மீம்ஸ் வடிவில் வெளிப்பட்ட கருத்து, நம் சமூகத்தின் குருதியில் புனலாகப் பாய்ந்து கொண்டுள்ளது. Learn to Code, It’s about Ethics in Journalism, Race is Real, It’s Ok to be white, Critical Race Theory, Let’s go Brandon, Blue Lives Matter, A Deep State Operates extra legally inside the US Govt. இவையெல்லாம் கவர்ச்சிகரமாக மக்களை ஈர்த்தன. பெரும்பாலானவை வெள்ளைத் தோலின் மேன்மையைப் பறை சாற்றும் வண்ணம் எழுதப்பட்டவை.

நீ உன்னை அறிந்தால்

டியர்ட்ர பாரெட்((Deirdre Barrett), ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் உளவியலாளராகப் பணியாற்றுகிறார். அவர் சொல்வது: ‘கனவுகளுக்குக் குறிகள் கிடையாது. கனவை பகுத்துச் சொல்பவரோ, அகராதிகளோ, கனவுகள் உணர்த்தும் செய்தி என்ன என்று சொல்ல முடியாது.’