பார்வையாளனின் மூளை படைப்பை எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும், அதை எப்படி அவருக்குக் கடத்துவது எனத் தனக்கென விதிகளை உருவாக்கிக்கொள்வதனால் நவீன ஓவியர் ஒரு தேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி (Neuroscientist) போலச் சிந்திக்கிறார். எதை வரைவது, எதை விடுப்பது அல்லது சிதைப்பது என்று அவர் கருதும் பொழுது, அந்த விடுதலும் சிதைத்தலும் எப்படிப் பார்வையாளானின் மூளையால் இட்டு நிரப்பப்படும் அல்லது சரிகட்டப்படும் என்று அவர் தீர்மானித்தாக வேண்டும்.
