கு.அழகர்சாமி கவிதைகள்

(1)

ஒரு குட்டிப் பையன்
ஓட்டமாய் ஓட்டுகிறான்
குட்டி சைக்கிளை-
இன்னொரு குட்டிப் பையன்
இன்னொரு குட்டி சைக்கிளில்
படுவேகமாய்ப் பயணிக்கிறான்-
இருவருக்கும் போட்டி என்றில்லை.
யார் முந்தி
யார் பிந்தி
என்றெல்லாம் இல்லை.
பறவைகள் தமக்குள்
போட்டி போட்டுக் கொண்டா
பறக்கின்றன?
உற்சாகத்திற்கு
தனிமையை விட
உற்ற ஒரு துணை தேவை.


(2)

அடைந்து விட்டன
பறவைகளெல்லாம்-
அந்தச் சின்னப் பையன் இன்னும்
சைக்கிளில் சவாரித்துக் கொண்டிருக்கிறான்.
இன்னும் வீடு திரும்பாத ஒரு பறவையாய்
அவனைப் பார்த்துக் கொண்டே
இன்னும் காத்திருக்கும் மரத்தைப்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்
வீடு திரும்பாமல் இன்னும் நான்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “கு.அழகர்சாமி கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.