செங்கோட்டை நாராயணன் கசமுத்து சட்டநாதன் கரையாளர்

நா.க.ச. லெட்சுமணன் கரையாளர் அவர்களின் மகனான லெ. சட்டநாதன் (L.S.) கரையாளர் அவர்கள் 25-01-1910-இல் பிறந்தார். சட்டம் பயின்ற இவர் காந்தியின் தலைமையை ஏற்று இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1940 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதி, காலை பத்தரை மணிக்கு சங்கரன் கோவிலில் வெள்ளையருக்கு எதிராக அறவழியிலான போராட்டத்தை முன்னெடுத்தார். இதன்காரணமாக 14-12-1940 முதல் 23-05-1941 வரை வேலூர் மற்றும் திருச்சி ஆகிய சிறைகளில் ஐந்து மாதகால கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார். தன்னுடைய சிறை அனுபவங்களை “1941 – திருச்சி சிறை” எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.

விடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை

எனும் இயக்கத்திலிருந்து பிரிந்து யுகாந்தர் எனும் இயக்கத்தை நிறுவி செயல்பட்டார். மேடம் பிகாஜி ருஸ்தம் காமா, எம். பி. டி. ஆச்சார்யா மற்றும் பலர் பாரிஸ் இந்தியர் சங்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். சாவர்க்கர், வ. வே. சு. ஐயர், எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி மற்றும் வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆகியோர் அபினவ் பாரத் சமீதி எனும் இயக்கத்தின் கீழ் செயல்பட்டனர். எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி, தர்மராஜய்யர், வாஞ்சிநாதன், சாவடி அருணாசலம் பிள்ளை மற்றும் பலர் பாரத மாதா சங்கம் எனும் அமைப்பினை உருவாக்கிச் செயல்பட்டு வந்தனர். தென்காசியில் தொடங்கப்பட்ட பாரத மாதா சங்கமே தென்தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதலும் கடைசியுமான புரட்சிகர ….விடுதலை இயக்கம் ஆகும்.