விலக்கப்பட்ட கனி

மாணவர்களுக்கு தாவரங்களின் லத்தீன் பெயர்களை அவற்றின் பொருளை அறிந்து நினைவில் வைத்துக் கொள்வதற்காக பயிற்சியளிக்கையில் தமிழில் அவற்றின் பொருளை சொல்லுவது பெரிதும் பயனளித்தது. கூடவே  இந்த துறையின் பல சுவாரஸ்யங்களை பல புதிய தகவல்களை எல்லாம்  இணைத்து சொல்லுகையில் வகுப்பறையின் இறுக்கமான சூழல்மாறி, இரு மொழிகளிலான கற்பித்தலும் கற்றலும் எளிதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது.