கொல்வதற்கு உரிமம்

தினமும் திட்டம் போட வேண்டி இருக்கிறது. கீழே குப்புற விழுந்த நிலை. வாழ்வை அளந்து பார்க்க வேண்டி இருக்கிறது… காஃபி கரண்டிகளால் இல்லை- மாத்திரைகளால். அவற்றை காலைச் சிற்றுண்டியோடு, மதிய உணவோடு, பிறகு இரவுச் சாப்பாட்டோடு வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. மச்சகன்னிகளாவது, மலர்ந்திருக்கிற லைலாக் புதர்களாவது? அந்த இளைஞனுக்கு எதுவும் புரிந்திருக்கவில்லை. அவனுக்கு என்ன வயதிருந்திருக்கும் அப்போது, இருபதுகளில் இருந்தானா? இப்போது எல்லாம் மாத்திரைகள்தான், நான் அறுவை சிகிச்சைத் தலத்துக்கு தொலைபேசியில் பேசி விட்டேனா, எரிவாயுக்குக் கட்டணத்தைக் கட்டினேனா, என்னிடம் வங்கிச் செலவு அட்டை இருக்கிறதா?

நுழைவு

என்னோடு வாழும் மனிதர், சமையலறையில் இருந்தார், அவரது கண்களில் வினோதமான உணர்வு தோன்றியது. அவர், “என் கால் சராய் கிழிந்து விட்டது,” என்றார். ஒரு முழங்கால் பகுதி அருகே மெல்லிய கிழிசல் இருந்தது, தோலிலும் ஒரு வெட்டு தெரிந்தது. நான் அந்த உடுப்பை, கடைக்குப் போக உபயோகிக்கும் பையில் இருந்த, கிழிந்திருந்த வேறு உடுப்புகளோடு போட்டேன். அவர், “நிஜமாகவா?” என்றார். நாங்கள் ஸ்காட்ஸ்கேலில் இருந்த மேஸிஸ் கடைக்கு ஓட்டிச் சென்றோம்.

ஏதோ நடக்கிறதே அங்கிருந்து சில தபால் அட்டைகள்

என்னோடு வாழும் ஆண், வீட்டுப் பூனைகள் போய் விடும், பிறகு திரும்பாது என்று கவலைப்படுகிறார், ஏனெனில் ஒருக்கால் அவருமே அதையே செய்யக் கூடியவர்தான். ஒரு நாள் அவர் எனக்கு லிடியா டேவிஸின் கதை ஒன்றைப் படித்துக் காட்டினார். அதில் கதை சொல்பவர், விவாஹ ரத்து ஆனவர், தன் கணவரின் தொண்டையில் சிக்கிக் கொண்ட ஒரு மீன் எலும்பை நினைவு கூர்கிறார். ப்ரெட்டும் தண்ணீரும் கொண்டு அதை அகற்றச் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை, அவர்கள் பாரிஸ் நகரத்தின் தெருக்களில் வெளிப்படுகிறார்கள், அங்கே அவர்கள் ஒரு மருத்துவ மனைக்கு வழி காட்டி அனுப்பப்படுகிறார்கள்.

யானையைச் சுடுதல்

அங்கு ஐரோப்பியர்களுக்கு எதிரான சல்லித்தனமான காழ்ப்புணர்வு நிலவி இருந்தது. கலவரம் செய்யும் அளவிற்கு எவருக்கும் துணிவில்லை என்றாலும் ஐரோப்பிய பெண்மணியொருவர் தனியே பஜார் வீதிகளில் நடந்து சென்றால் அவர் மீது வெற்றிலைச் சாறு உமிழப்படும் என்பதென்னவோ நிச்சயம். நான் போலீஸ் அதிகாரியாக இருந்ததால் அவர்களது காழ்ப்பிற்கான இலக்காக இருந்தேன் என்பது வெளிப்படை. தங்களுக்கு பாதிப்பில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டபின் அவர்கள் என்னை வம்பிழுத்தார்கள். கால்பந்தாட்ட மைதானத்தில்  சுறுசுறுப்பான பர்மிய குடிம்பனொருவன் என்னை வேண்டுமென்றே தடுக்கிவிழச் செய்தபோது ஆட்ட நடுவர், அதைக் கண்டும் காணாதது போல் வேறுபக்கம் திரும்பிக் கொள்வார். பார்வையிட்டுக் கொண்டிருக்கும் கூட்டமோ கோரமான பலத்த சிரிப்பொலியொன்றை எழுப்பும். ஒற்றை நிகழ்வாக அல்லாது பலமுறை இவ்வாறே நிகழும். இறுதியில் ஏளனத்தோடு ‘மஞ்சள்’ முகத்துடன் என்னை எங்கும் எதிர்கொண்ட இளைஞர்களும், நான் கடந்து சென்றுவிட்டேன் என்பதை அறிந்துகொண்டபின் அவர்கள் என்மீதெரிந்த வசைகளும் என்னை மிகவும் எரிச்சலூட்டின. இவ்விஷயத்தில் இளம் பௌத்த பிட்சுகளே மோசமானவர்கள். ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அவர்களில் ஒருவருக்குக்கூட தெருக்கோடியில் நின்றுகொண்டு ஐரோப்பியர்களை கேலி செய்வதைத் தவிர வேறு வேலையேதும்…

கூகி வா தியோங்கோ -வும், மொழியின் கொடுங்கோலும்

மொழியை, தம் ஆட்சியின் கீழிருந்த நிலப்பகுதி மக்களைப் பிரித்து ஆள்வதற்கு வழி வகுக்கும் சூழ்ச்சிக்கு ஆயுதமாக வளைப்பது யூரோப்பிய அதிகாரச் சக்திகளின் நோக்கமாக இருந்தது; மற்ற யூரோப்பிய சூழ்ச்சிகளில், குழு அடையாளங்களை அரசியலாக்குவது- யூரோப்பிய ‘இன’ நோக்கு அறிவியல் மூலம் இனங்களின் அதிகார அடுக்குகளை உருவாக்குவது- போன்றன  காலனிய ஆட்சி முடிந்து பல பத்தாண்டுகள் தாண்டியும் இன்னமும் கடும் வன்முறை நிறைந்த போராட்டங்களில் ஆஃப்ரிக்கர்களையும் இதர மக்களையும் நிறுத்தி இருக்கின்றன.

நெருப்பொளி

கற்களுக்கு அப்பால் இருந்த நிலப்பரப்பு. அவர் அந்தச் சுவரைப் பார்த்தார் – முதல் முறை அவர் பார்த்த போது, அப்பாலிருந்த இருண்ட சரிவில் மௌனமாக இறங்கி ஓடும் குழந்தையைப் பார்த்தார். இறந்து போயிருந்த அந்த நிலம், நிழல்-நகரங்கள், நகராமல் நின்ற நட்சத்திரங்களின் கீழே, அக்கறை இல்லாமல், ஒருவரை ஒருவர் மௌனமாகக் கடந்து போன நிழல்-மக்கள், அத்தனையையும் அவர் பார்த்திருந்தார். அதெல்லாம் போய் விட்டது. அவர்கள் – ஒரு அரசனும், அடக்கம் பொருந்திய மந்திரக்காரரும், அவர்கள் மேலே வானில் மிதந்து பறந்தபடி, உயிரற்ற வான்வெளிக்குத் தன் உயிருள்ள நெருப்பால் ஒளியூட்டிய ஒரு ட்ராகனுமாகச் சேர்ந்து- அதைக் கொத்திக் கிளறி விட்டிருந்தார்கள், பிளந்திருந்தார்கள், திறந்து விட்டிருந்தார்கள்.

சாதாரணச் சூழ்நிலைகள்

நாங்கள் அங்கிருந்து நீங்கிப் போகையில் அவள் என் கையைப் பற்றிக் கொள்கிறாள். “நீங்க எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறவர்,” அவள் என்னிடம் சொல்கிறாள். “நீங்க நிஜமா அலட்டிக்கிறவர்.”
“நீ ஒரு மண்டு,” நான் பதில் சொல்கிறேன்.
“நீங்க ஒரு மண்டு, ஜடம், அப்புறம் அலட்டிக்கிறவர்.”
அலட்டிக்கிறவர் என்பது அவளுக்குப் பிடித்தமான வசவு.
“நீ ஒரு சாம்பிராணி,” நான் சொல்கிறேன்.
“நீங்க ஒரு போக்கிரி.”
நாங்கள் இப்படியே ஏச்சுகளைப் பரிமாறிக் கொண்டு போகிறோம், நான் அவளைப் பள்ளிக் கூடத்திற்குத் திரும்ப அழைத்துப் போகிறேன். காரை விட்டு இறங்கும்போது அவள் கத்திச் சொல்கிறாள், “நீங்க ஒரு அசடு!” நான் அவளுக்கு ஒரு முத்தத்தைக் காற்றில் வீசுகிறேன்.

பகிரும் காற்று

அந்தக் காலத்து மனுசங்க ஒருத்தர் மத்தவரின் காற்றையே பகிர்ந்துக்கிட்டாங்க, என்ன மாதிரிக் கொடுமை அது!!  ஒவ்வொருத்தரின் கிருமிங்களையும், எல்லாரோட கழிவுப் பொருட்களையும், தங்கள் முச்சுக்குழாய் அழற்சியிலிருந்து விடுபட்ட சளியையும், பலரின் உடல் கழிவுகள் பலதையும் காத்து மூலமா வாங்கிக்கிட்டு மூச்சில் கலக்க விட்டார்கள். தண்ணீரோ கிருமி அழிப்பு செய்து சுத்தமாகாத குழாய்கள் வழியாப் பல மைல்கள் தாண்டி வந்து எங்கேயிருந்தோ கொண்டு வந்து அவங்களுக்குக் கொடுக்கப்பட்டது.  சில நேரம் மாசுபட்ட பூமியிலிருந்தே கூட நீர் எடுத்துக் கொடுக்கப்பட்டது. சக்தி தேவைப்பட்டதுக்கு, அதை எங்கிருந்தெல்லாம் பெற முடியுமோ அங்கேயிருந்தெல்லாம் அவங்க அதை எடுத்துக்கிட்டாங்க. அவங்களோட கருவிங்க அத்தனை நுட்பமெல்லாம் இல்லாத, மொண்ணையான கருவிங்களா, உயிர்த்துடிப்பே இல்லாம இருந்தது…

வெற்றிட நிலைகள்

பெருவெடிப்புக்கு முன்னால் பேரண்டத்தில் அறிவுள்ள ஜீவன்கள் இருந்தனவோ என்னவோ. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை நாம் கற்பனை கூடச் செய்ய முடியாது. அவர்களின் உலகம் பெரும் திணிவும், உயர்ந்த உஷ்ணமும் கொண்டு, மிகச் சிறியதாக இருந்தது; அவர்களின் மொத்தப் பேரண்டமும் ஒரு ஊசியின் கூர்முனையை விடச் சிறிய புள்ளியாக இருந்திருக்க வேண்டும், அவர்கள், நமக்குச் சாத்தியமாகியிருக்கிற கால அளவைகளிலேயே மிகக் குறைந்த நேரத்திற்குள், நூறாயிரம் கோடி (1ட்ரில்லியன்) தலைமுறைகள் வாழ்ந்திருக்கக் கூடும். ஒரு வேளை அவர்களில் ஒருவர், தாம் வாழ்கிற வெற்றிடம் ஒரு போலி வெற்றிடம் என்று உணர்ந்திருக்கக் கூடும், அதனால் அந்த வெற்றிலிருந்து சக்தியை உருவாக்க முடியும் என்று புரிந்து கொண்டிருக்கக் கூடும். ஒரு வேளை ஒருவர் அதை முயன்றாரோ என்னவோ.

ஜாய் வில்லியம்ஸின் “கடவுளைப் பற்றிய 99 கதைகள்”

தற்செயலான துப்பாக்கிச் சூட்டிற்கு ஊரின் தென்பகுதியில் உள்ள ஒரு குழந்தை பலியானது. ஏழே வயதான அவன் பலியாகியிருக்கத் தேவையில்லை. சொல்லப்போனால் யாருமே பலியாகியிருக்கக்கூடாது. துப்பாக்கி வைத்திருந்தவன் அந்த குறிப்பிட்ட வீட்டில் உள்ளவர்களுக்கு பயம் காட்ட நினைத்தான்.

ஆட்டோஃபாக்

மூன்றாவது நபர் எதுவும் சொல்லவில்லை. ஓ’நீல் வேறொரு குடியிருப்பிலிருந்து இங்கு பார்வையாளராக வந்தவர்; அவர்களோடு வாதிடும் அளவுக்கு அவருக்குப் பெரீனையோ, மோரிஸனையோ அவருக்கு அதிகம் தெரியாது. மாறாக அவர் கீழே குனிந்தமர்ந்து, தன் அலுமினம் சோதிப்பு அட்டையில் இருந்த காகிதங்களைத் திருத்தி அமைத்தார். எரிக்கும் சூரியனில், ஓ’நீலின் கைகள் பழுப்பாகி, ரோமமடர்ந்து, வியர்வையால் மின்னின.

பதனிடப்படாத தோல்

அது அப்போது அவளிடம் பேசியது, அதன் குரல் தாலாட்டை ஒத்திருக்கும் செல்லோ வாத்தியங்களின் ஆழ்ந்த மரமரப்பான நாதத்தைப் போலக் கேட்டது. அது தன் அடர்ந்த முடியடர்ந்த கையால் சைகை செய்தது. அது ஏதோ உறுதி அளித்தது, கொடுத்தது, பின் கேட்டது; அவள் அப்போது செவி கொடுத்துக் கேட்டாள், புரிந்தவளாகவும், புரியாதவளாகவும் இருந்தபடி.
சொற்கள் மெள்ளமாக வந்தன. இது…. …உலகம்.
இங்கே வானம், பூமி, பனிக்கட்டி. அந்த கனத்த கரங்கள் அசைந்தன. கைவிரல்கள் சுட்டின.
குட்டி அடிமையே, நாங்கள் உன்னைக் கண்காணித்து வந்திருக்கிறோம். சுதந்திரமாக நீ என்ன செய்திருக்கிறாய் இன்று? உரிமை எடுத்துக் கொள். உன்னுடைய காலணி உள்ள நான்கு கால்களுக்கான தரை, நட்சத்திரங்களுள்ள வானம், குடிப்பதற்குப் பனிக்கட்டி. இன்று ஏதாவது சுதந்திரமாகச் செய். செய்வாய், செய்வாய்.

அறிகுறிகளும் அடையாளங்களும்

திருமணமாகி பல வருடங்கள் கழிந்த பிறகுதான் அவன் பிறந்தான்;  பல ஆண் டுகள் கடந்து விட்டதால் வயதாகி அவர்கள் இப்போது தளர்ந்தும் விட்டனர்.  அவளுடைய பழுப்பு நரைக் கூந்தல் ஒழுங்கின்றி கட்டப்பட்டிருந்தது. மிகச் சாதாரணமான கருப்பு ஆடை அணிந்திருந்தாள். மற்ற தன் வயதுப் பெண் களைப் போலின்றி (பக்கத்து வீட்டு திருமதி. சோலின் முகம் எப்போதும் பவுடரோடும், தொப்பியில் அழகிய பூங்கொத்துகளோடும் இருக்கும்) அவள்  முகத்தோற்றம் எப்போதும் வெளிறிப் போனதாக இருக்கும். ஒரு காலத்தில் தொழிலில் கொடி கட்டிப்பறந்த கணவர் இப்போது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலே தங்கி அமெரிக்கவாசியாகிவிட்ட , தன் சகோதரன் ஐசக்கை சார்ந்திருக்கிறார். அவர்கள் அவனுக்கு “ பிரின்ஸ்” என்று செல்லப் பெயர் வைத்திருக்கின்றனர்.

பன்மொழி உலகுக்கான சால்ஸ்பர்க் அறிக்கை

நம் உலகம் உண்மையாகவே பன்மொழித்தன்மை கொண்டது. எனினும், பல கல்வி மற்றும் பொருளாதார அமைப்புகள், குடியுரிமை நடைமுறைகள், மற்றும் அரசு நிர்வாக அமைப்புகள் பல லட்ச மக்களின் மொழிகள் மற்றும் மொழித் திறன் காரணமாய் அவர்களைக் குறைபட்டவர்கள் ஆக்குகின்றன. “ஏழ்மை ஒழிப்பு, புவிப் பாதுகாப்பு, அனைவரும் வளம் பெற உறுதி பூணுதல்,” என்ற நோக்கத்தில் 193 தேசங்கள் 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை (6) அடைய வேண்டுமென்றால் நாம் இந்தச் சவாலை எதிர்கொண்டாக வேண்டும். வலுவான, நியாயமான மொழிக் கொள்கைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வற்ற கல்வி அமைப்பின் அடிப்படையில்தான் அனைவருக்குமான முன்னேற்றம் நிகழ முடியும்.

மறைந்து கொண்டிருக்கும் நீ

அலெக்ஸாண்ட்ரா க்ளீமான் / குவெர்னிகா பத்திரிகை/ 15 செப்டம்பர் 2014     இன்று காலை கீழ்த்தளத்துக்கு நான் இறங்கிப் போனபோது, குக்கியைக் காணவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். காணாமல் போகிறவற்றுக்கான இலாகாவை ஃபோனில் கூப்பிட்டு அத்தனை தகவல்களையும் கொடுக்க வேண்டும் என்பது அதிகார பூர்வமான எமர்ஜென்ஸிக்கான வழிமுறை “மறைந்து கொண்டிருக்கும் நீ”

கடினமான நாவல்களைப் புகழ்ந்து – வில் செல்ஃப்

என் படைப்புகளும்கூட எவ்வாறு உள்வாங்கப்பட்டன என்பதில் ஒரு விஷயத்தை கவனித்தேன். என் படைப்புகளுக்கு மட்டுமல்ல, ஐமர் மக்ப்ரைட் முதலான “நியூ டிஃபிகல்ட்” வகை எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் இது பொருந்தும்- விமரிசகர்கள் எங்களைப் புகழ்ந்தபோதும், எங்கள் பிரதிகளோடு ஒரு எச்சரிக்கை வாசகத்தைச் சேர்க்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறார்கள். ‘கடினம்,’ என்று சொல்கிறார்கள்- கூடவே அச்சுறுத்தும் உள்ளர்த்தமாய், -ஓர் எதிரொலி, டெர் ஸ்டெப்பென்வுல்ஃபின் தாக்கமாய் இருக்கலாம்-, “இந்தப் புத்தகம் அனைவருக்குமானது அல்ல,” என்கிறார்கள்.

வில்லியம் கெல்லி- கலைஞனும் காலமும்

கதையின் துவக்கத்தில், ஆப்பிரிக்கன் என்று அழைக்கப்படும் ஒரு ராட்சத மனிதன், அடிமைக் கப்பலில் வந்திறங்குகிறான். அவன் கையில் ஒரு குழந்தை இருக்கிறது. அவன் கட்டி வைக்கப்பட்டிருக்கும் சங்கிலியை இருபது பேர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் நகருக்குள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறான். அடிமையான அடுத்த கணமே அவன் தன்னைக் கைப்பற்றியவர்களை தான் பூட்டப்பட்டிருக்கும்  சங்கிலிகளைச் சுழற்றி வீழ்த்துகிறான், அவனை ஏலமிடட்வனைச் சிரச்சேதம் செய்கிறான் (அந்தத் தலை ஒரு பீரங்கிக் குண்டு போல் கால் மைல் காற்றில் பறந்தது, இன்னொரு கால் மைல் தரையில் குதித்தோடி, யாரோ ஒருவன் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு குதிரையின் காலில் மோதி அதை ஊனமாக்கி நின்றது, என்று இது விவரிக்கப்படுகிறது).

டைனியின் பாட்டி

அவள் பெயர் என்னவென்று கடவுளுக்குத்தான் தெரியும். யாரும் அவளை  பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. சிறுமியாக இருந்து. சந்துகளில் மூக்கு ஒழுக அவள் சுற்றிக் கொண்டிருந்தபோது அவளை ’பதான் குழந்தை ’என்ற ழைத்தனர் ஜனங்கள். பிறகு அவள் ‘பஷீராவின் மருமகள்’என்றும். பிறகு, ‘பிஸ் மில்லாவின் தாய்’ என்றும் பிஸ்மில்லா பிரசவத்தின் போது குழந்தை டைனியை பெற்று விட்டு இறந்து போனதற்குப் பிறகு அவள்  ‘டைனியின் பாட்டி ’ஆனாள்.  அதுவே நிலைத்து விட்டது. தன் வாழ்க்கையில் டைனியின் பாட்டி செய்யாத வேலை என்றுவுமில்லை தனது உணவிற்காகவும்.  உடைகளுக்காவும் விவரம் அறிந்த நாளிலிருந்தே சின்னச்சின்ன …

பொய்கள்

இதை நான் சான் யுவானிலிருந்து – இங்கிருக்கும் ஒரே தங்கும் விடுதியிலிருந்து – எழுதுகிறேன். இன்று மதியம் கரடு முரடான பாதையில் அரை மணி நேர பயணத்தின் பின் அம்மாவின் வீட்டை சென்றடைந்தேன். அவளது நிலைமை நான் எதிர்பார்த்ததைவிட மோசமாக இருந்தது. நடை மிக தளர்ந்துவிட்டது. கைத்தடி இல்லாமல் அவளால் நடக்க முடியவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி வந்ததிலிருந்து அவளால் மாடி ஏற முடியவில்லை. இப்போதெல்லாம் கீழ் அறையிலுள்ள சோஃபாவில் தூங்குகிறாள். ஆட்களை வைத்து கட்டிலை கீழே கொண்டு வர முடியுமா என்று பார்த்தாள். ஆனால் அவள் அறையில் அது நிரந்தரமாக பொருத்தப்பட்டிருந்ததால், அதை பிரிக்காமல் கீழே கொண்டு வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். (ஹோமரின் பெனிலோபியிடமும் இப்படியொரு கட்டில் இருந்ததுதானே?)

யுவதி

நான் யுவதியாக இருந்தபோது அடிக்கடி விலங்கு காட்சி சாலைக்கு செல்வதுண்டு. அடிக்கடி போய்க்கொண்டிருந்ததால் அங்கு இருக்கும் விலங்குகளிடம் – என் சம வயது பெண்களிடம் இருந்ததைவிட – அதிக நட்பு ஏற்பட்டது. மனிதர்களிடமிருந்து விலகி இருப்பதற்காகவே விலங்கு காட்சி சாலைக்கு தினமும் சென்றேன். அங்கு இருக்கும் ஒரு இள வயது, புத்திசாலியான கழுதைப் புலியுடன் எனக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. நான் அவளுக்கு ப்ரென்ச் மொழி கற்றுக் கொடுத்தேன். மாற்றாக அவளுடைய மொழியை எனக்கு கற்றுக் கொடுத்தாள். இப்படியாக இனிமையாக பொழுது கழித்தோம். என்னை கெளரவிப்பதற்காக என் அம்மா மே மாதத்தில் ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தாள். அது பற்றிய நினைவு இரவு நேரத்தில் எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்தது.

இடையறாது தாக்கி மனவுறுதியைக் குலைக்கும் நவீன ஊடகங்கள்

இப்போது இத்தொழில்நுட்பங்கள் மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்று உணரும் தன்மையையே குலைத்து, இடையாறத சமூக ஊடகத்தாக்குதல் மூலம் செயலிழக்கவைக்கிறது. நம் வாழக்கையின் இயங்குதளங்களாக செல்பேசிகள் இருக்கின்றன. நம்மை, அவற்றைப் பாத்துக்கொண்டும், சொடுக்கிக்கொண்டுமே இருக்க வைக்கின்றது. இடையறாத கவனச்சிதறல் மனிதர்களின் ஐ.க்யூ எனப்படும் சிந்தனைத்திறன் அளவீடு பத்து புள்ளிகள் குறைந்துவிடுவதாக அறிகிறோம்.

இது தொடர்ச்சியாக போதை மருந்து உட்கொண்டு குறையும் அறிவுத்திறனை விட இரண்டு மடங்கு. ஒரே சமூகத்தில் ஒரே தெருவில் இரு வேறு நிதர்சனங்கள் உணரப்படுகிறது. ஜனநாயகம் திறனுடன் இயங்க பொதுவான நிலைப்பாடுகளை எடுக்க இது பெருந்தடையாக ஆகிவிடுகிறது.

சமர்த்த குப்பை மடல் வடிகட்டி

ஜோ அசௌகரியமாக உணர்வானோ? உறுதிப்படுத்த முடியவில்லை. மனித உணர்வுகளைப் புரிந்து கொள்வது மிகக் கடினம். “Mr.கோவால்ஸ்கி, ஒரு இருக்கையில் அமருங்கள்,” என்றார் பில் மோரிசன். அவர்தான் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி. அவருடைய மின்னஞ்சல்கள் சுவாரசியமாக இருப்பதில்லை. எல்லாம் அலுவலக விசயங்கள், அன்றாட அறிக்கைகள் மட்டுமே. ஜோ இருக்கையில் அமர்ந்தான். சூட் அணிந்தோரிடையே ஜீன்ஸ் -டி -சர்ட் அணிந்த ஒருவனாக வித்தியாசப்பட்டுத் தெரிந்தான்.
மனித வளத் தலைமை அதிகாரி, எமிலி, “நன்று. இந்த விஷயம் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று ஜோ வைக் கேட்டாள்.
எமிலி கேலுக்கு மிகவும் பிடித்தமானவர். விதம் விதமான பற்பல மின்னஞ்சல்கள் எழுதுபவர். குறிப்பாக பூனைகளின் நிழற்படங்களை…

புதரை அடுக்கும் கலை (இறுதி பாகம்)

“இப்பப் பாரு,” அவர் சொன்னார், “நாம புதரை அடுக்கற கலையைப் பயில்கிறோம். அது ஒரு அடிப்படையான கலை. தவிர்க்கவியலாத கலையும் கூட. உன்னோட ‘அருங்கலைகள்,’ உன்னோட இசை, இலக்கியம் எல்லாத்தயும் பத்தி எனக்குத் தெரியும்- நானும் படிக்கப் போயிருக்கேன் – உன் கிட்ட நான் சொல்றேன், அதெல்லாம் அவசியம் இல்லை, விருப்பப் பாடங்கள். புதரை அடுக்கற கலை இருக்கே, அது விருப்பப் பாடமில்லை.”

“நீங்க ஸிம்ஃபனி இசையைப் பத்திச் சொல்றீங்களா?” ஆஸ்டின் நிறுத்தி இருந்தான், அவனுக்கு ஸிம்ஃபனி இசை என்பது எத்தனை முக்கியம் என்பதைக் குறித்துக் காட்டுவது போல அசைவற்று நின்றான்.

“ஸிம்ஃபனிகளா! பாழாப் போச்சுது, ஆமாம்!” ஆன்டி சொன்னார். “ஸிம்ஃபனிகளை எழுதவும், அதை எல்லாம் நடத்தவும், இசைக்கவும் தெரிஞ்ச ஒரு சமூகத்தை எடுத்துக்க, அதுக்குப் பாங்கா ஒரு சுமை புதரை அடுக்கத் தெரியல்லைன்னா, அவங்களுக்கு ஒரு மண்ணும் கெடைக்கப் போகிறதில்லை.”

மனம், மூளை மற்றும் பிரக்ஞை

உள்ளபடிக்கு,பிரக்ஞை என்பது உயிரிய நிகழ்வே என்ற புரிதலை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மூளை எப்படிச் செயல்படுகிறது என்பது நமக்கு பெரும்பாலும் இன்னமும் புரிபடாமல் இருப்பதே இது பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது. மூளை அளவுக்கு மீறிச் சிக்கலான அவயம். நாம் இன்னமும் மூளைச் செயல்பாட்டின் மிக ஆதாரக் கொள்கைகளைப் பரிசீலிக்கும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறோம். மூளையின் அடிப்படைச் செயல்பாட்டு அலகு (functional unit ) நியூரான் என்று யூகித்துள்ளது கூட தவறாக இருக்கக்கூடும். நியூரான் மூளையின் அடிப்படை அலகென நினைப்பது, ஒரு காரின் அடிப்படை அலகு மாலிக்யூல் (molecule ) என்று எண்ணுவதை ஒத்த சகித்துக் கொள்ள முடியாத தவறு. எனவே மூளையைப் புரிந்து கொள்ள இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டும் ; அது ஒன்றே சரியான வழி

புதரை அடுக்கும் கலை – (பாகம்-2)

அந்த கணத்தில் ஆன்டியால் யோசிக்க முடிந்ததெல்லாம், தான் மெதுவாக யோசிக்கும் ஒரு நபர், தான் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்பதே. எத்தனை மோசடியாக இருந்தாலும், அவர்கள் அவரைப் பிணைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அவருடைய பழைய வேலி இப்போது அழிந்து விட்டது, அவருக்கு வேலி தேவை, அதைத் திரும்ப நிறுவுவதற்குக் கிட்டுபவர்கள் அனேகமாக அவர்கள் மட்டும்தான். மேலும் யோசனைகள், அவருக்கு இது தெரியும், அதை நினைத்து அவர் அச்சப்பட்டார், பிற்பாடுதான் வரும். ஆனால் பதிலளிக்கும்போது அவருடைய குரல் அமைதியாகவே இருந்தது.

“ஆமாம், அது அறிவில்லாத செயல்தான். இனிமேலும் எதையும் பிய்க்காதீங்க.”

மதிநுட்ப எந்திரம் – வரமா? சாபமா?

மனிதரை விடத் துடிப்பான எந்திரங்கள் தம்மை விடத் துடிப்பான எந்திரங்களை உருவாக்கி அவை மேலும் துடிப்பான எந்திரங்களை உருவாக்கி இவ்வாறாக  படிப்படியாக எந்திரங்களின்  துடிப்பு அம்சம் உயர்ந்துகொண்டே போவது நுண்ணறிவுப் பெரு வெடிப்புக்கோ(intelligence explosion)   அல்லது ஒருமைத் தன்மைக்கோ (singularity) இட்டுச் செல்லும் என்று சிலர் கலக்கம் அடைகிறார்கள். நுண்ணறிவு எந்திரங்கள் வெகு விரைவில் மேன்மேலும் சூட்டிகையாக ஆகி  அவற்றின் மொத்த அறிவுத் தொகுப்பு மனிதர்களால் புரிந்து கொள்ள முடிகிற சக்திக்கு மீறியதாகிவிடும்  என்று அஞ்சுகிறார்கள்.  மேம்பட்ட அறிவும் தொழில் நுட்பமும் கொண்ட எந்திரங்களின் ஆதிக்கத்தில் மனித இனம் அற்ப ஜீவிகளாகி ஒடுங்கி நிற்கும் நிலை வரக் கூடும் என்கிறார்கள்.

புதரை அடுக்கும் கலை

ஆகவே, இறுதிச் சடங்கு நடக்கும் இடத்தில் ஆன்டி உரை மேசையின் பின்னே நின்று டானியைப் பற்றிப் பேசினார்….ஆன்டி அந்த விதிகளைப் பேசினார்: “உங்கள் அண்டை வீட்டுக்காரருக்கு உதவி தேவையாக இருக்கையில், போய் உதவுங்கள். அண்டை வீட்டுக்காரர்கள் சேர்ந்து வேலை செய்கையில், எல்லாரும் முடிக்கும் வரை, யாரும் முடித்து விட்டதாக ஆகாது.” ….
அந்த நாளையின் மற்றும் அவரது நீண்ட வருடங்களின் களைப்பும் அவரை முழுக்காட்டுகையில், அவருடைய பாட்டனார் காட்லெட் தன் ஞானத்தின் வெற்றியையும், அதன் சோகத்தையும் ஒரே வாக்கியத்தில், “கடவுளே ஆமாம், ஒரு மனிதன் ஒரு நாளில் எத்தனை செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும்.” என்று அவரிடம் சொன்னதை ஒரு மாலையில் சில சமயம் அவர் நினைவு கூர்வார். 

தேனீக்களும் நம்மைப் போன்றவையே

முழு ஒப்புதல்: ட்ரோன் ஈயின் ஆண்குறி முனை பிய்த்துக் கொண்டு ராணித் தேனீயின் யோனிக்குள் வீழ்கிறது. மனித இனத்தில் இவ்வாறு நிகழ்வதில்லை.  இருப்பினும் ஒரு சில ஒற்றுமைகள் உள்ளன. கலவிக்கென மட்டுமே தயாராகவிருந்து,வேறு வேலை வெட்டியேதுமின்றி, டீவி பார்த்துக்கொண்டு, வானைத் தொடும் உச்சக்கணத்திற்காக காத்திருக்கும் ஒரு சில ஆண்களைப் போலவே. கலவிக்குப் பிறகு ஆண் தேனீக்கள் இறந்து போகின்றன. (ஆண்குறி விபத்து பற்றி மேற்கூறியுள்ளதைப் பாருங்கள்).

மேலும் குடும்பத்தின் மீதான விசுவாசத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்! தாய் தேனீயின் ஆர்ப்பாட்டமான அந்த ஒரு இரவுக்குப் பிறகு, காலனி மொத்தமும் அவளை ராஜ மரியாதையோடு நடத்தும். சந்தேகமேயின்றி, நம்மில் பலர் தம் தாயார்களை நடத்துவதைக் காட்டிலும் சிறப்பாகவே கவனிக்கும்.

துணிப்பிடிப்பி தொழிலகத்தில் நாங்கள் அடிக்கடி லெனினை நினைத்துக்கொள்வோம்

கை டாவன்போர்ட்டின் ‘We Often Think of Lenin at the Clothespin Factory’ என்ற கவிதை ஒரு டெகாஸிலபிக் உரையாடலாய் அமைக்கப்பட்டுள்ளது (ஆங்கில பாவின அடிகள் accentual-syllable கணக்கை அடிப்படையாய்க் கொண்டவை. தமிழில் குற்றெழுத்து தவிர்த்து பத்து எழுத்துக்கள் கொண்ட அடி என்று கொள்ளலாம்). கிரேக்க அபிநயக்கூத்துக்களை மொழிபெயர்க்க டாவன்போர்ட் இவ்வடிவைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இக்கவிதை மேற்கூறிய எதிர்களின் உரையாடலாய் அமைக்கப்பட்டுள்ளது: பெயர் குறிப்பிடப்படாத ஒரு பெண், மாண்டல்ஸ்டாமின் விதவையின் சாயல் கொண்டவளின் பின்னோக்கு தரிசனத்தின் ஆதர்சவுலகம், தனது “பொன்னுலகம்” அழித்தொழித்த மகோன்னதங்கள் பற்றிய ஓர்மை சிறிதும் இல்லாத, கோட்பாட்டு மயக்கத்தில் ஆழ்த்தப்பட்ட கட்சிக்காரன் ஒருவனை எதிர்கொள்கிறது. ஆனால் இது எளிய கருப்பு வெள்ளைச் சித்திரம் அல்ல.

பெரும் கலக்கங்கள்

பாஸ்டன் ரெவ்யு பத்திரிகைக்கு 1976 இல் அவரளித்த ஒரு பேட்டியில், ஒரு தாய் தன் குழந்தையை முழு நிறைவான வகையில் வளர்ப்பது – குறையேதுமில்லாத உணவு, சிறப்பான பள்ளிகள் இப்படி- அத்தனை முக்கியமல்ல, மாறாக அவர் அரசியலில் ஈடுபாடுள்ளவராக இருப்பதே மேல் என்று பேலி வாதிட்டார். ஒரு அம்மாவாக, “நீங்கள் முக்கியமானவர்,” அவர் விளக்கினார், “ஆனால் உலகம் [குழந்தைகளை] வளர்க்கிறது என்பதால், உலகம் வளர்க்கும்போது… நீங்கள் உலகத்தைப் பற்றியும் கவனம் செலுத்துவது அவசியம். அதெல்லாம் ஒன்றுடனொன்று சம்பந்தப்பட்டவையே.” பேலி ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும் சம்பந்தப்பட்டவை என்று நம்பினார்: ஆயுதங்களில் இருக்கும் ரசாயனப் பொருட்கள் சீக்கிரமே உங்கள் குழந்தைகளின் குடிநீரில் கலந்து விடும்; எந்தக் குரூரமான போருக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையோ அந்தப் போரில் உங்கள் மகனே பணி செய்ய நேரிடலாம்.

மதி நுட்ப நகரம்

சில்லு பொருத்தப்படாத அந்த பெண் ஒரு  பாதுகாப்புக்  கேமரா பக்கமாகக்  கடந்து சென்றாள் . நகரம் அவள் முகத்தை நுட்பமாக ஆராய்ந்தது  .அவள் கண்களின் வெண் படலம்  நீலஒளி வழித்தடத்தில்  கருமையாக  நிறம்மாறித் தெரிந்தது .  கடும் ஜுரம் தாக்கிய உடலையும் , குளிரில் விரைத்துப்போன  கை கால் விரல்களையும் அகச் சிவப்புக் (infra red )  கதிர்கள்   காட்டின – அவள் உடனடி  மருத்துவக்  கவனிப்பு தேவைப்படக்கூடிய மனுஷி என்று அடையாளம் காணப்பட்டாள் .

ஒருவன் மனதில் ஒன்பதடா…

“அப்பொழுதுதான் பிறந்தேன். எப்படியும் சில முடிச்சுகளை அவிழ்க்க முடிந்தது. நான் தேடும் நபர் அப்பொழுது எம்.ஜி ஸ்போர்ட்ஸ் கார் வைத்திருந்தார். அதே காலக்கட்டத்தில் அவருக்கு திருமணமும் நடந்திருக்கிறது. அடிக்கவேண்டிய இலக்கு வெகு தூரத்தில் உள்ளது என்பது எனக்கு தெரியும். ஆனால் இது ஓரளவு கை கொடுக்கும் என்று சொல்லலாம்”. 

அவனது அசௌகரியம் இப்பொழுது நடுக்கமாக மாறி இருக்கையின் நுனிக்கு அவனைக் கொண்டுவந்தது. பாம்பினால் மனோவசியம் செய்யப்பட்ட முயல்குட்டி போல், தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நகர முடியாமல் தவித்தான்.

ஷப்லீ

என் மனைவிக்கு ஒரு நாய் வேணுமாம். அவளுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கு. குழந்தை நாய் வேணும்னு கேக்கறதா இவ சொல்றா. நாய் வேணும்னு என் மனைவி ரொம்ப நாளாவே கேட்டுக்கிட்டிருக்கா. அதை அவளுக்கு வாங்கித் தர முடியாதுன்னு நான்தான் அவகிட்ட சொல்லியாகனும். ஆனா இப்ப பாத்தா குழந்தை “ஷப்லீ”

எண்பதுகளின் சீனா

ஆயினும் இந்தப் புரட்சியை அடக்கியது அதன் உள்ளிருந்த முரண்களல்ல, முரட்டுத்தனமான ராணுவ நடவடிக்கைதான். சீனாவின் சந்தைச் சீர்திருத்தங்களையும், அதிகரித்து வரும் பன்னாட்டு நல்லுறவுகளையும் பாதிப்பதற்குப் பதிலாக, இந்த கொடுமையான வன்முறை,  அதைத் தூண்டிவிட்டதில் கட்சி ஆற்றிய பங்கிற்கு அங்கீகாரத்தை அளித்தது. சீனாவின் வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிராக இந்தப் போராட்டம் பார்க்கப்பட்டது. நிலைத்தன்மை எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று டெங் குறிப்பிட்டிருந்தார்.

இறுதி வரை உறுதி குலையாத லியு ஷியாவ்போ

சீனாவில் சட்டபூர்வமாய் உறுதியளிக்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்தக் கோரி போராடிய லி ஷியாபோ சிறைக்காவலில் மரித்தார். அவர் புதைக்கப்பட்ட இடம் ஒரு நினைவகமாய் மாறலாம் என்று அஞ்சி சீன அரசு அவரது உடலை எரித்து அதன் சாம்பலைக் கடலில் வீசியது- இத்தனைக்கும் லி ஷியாபோ சீன மக்களில் வேறு சிலருக்கே அறிமுகமானவர். அவரது மரணத்தைத் தொடர்ந்து நியூ யார்க்கர் இதழில் எவென் ஆஸ்நோஸ் எழுதியுள்ள அஞ்சலியின் தமிழாக்கம் அளிக்கப்படுகிறது.

மறைந்து கொண்டிருக்கிறாய், நீ…

தமிழில்: எம். நரேந்திரன் இன்று காலை படியிறங்கி கீழே வந்தபோது குக்கீ மாயமாக மறைந்து விட்டதை உணர்ந்தேன். அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவசரக்கால அதிகாரப்பூர்வ விதிகளின்படி கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போனவைகளுக்கான பிரத்தியேக துறைக்கு போன் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட குரலைப் “மறைந்து கொண்டிருக்கிறாய், நீ…”

வேதனையின் புகைப்படங்கள்

இன்று வியட்நாம் புகைப்படங்கள் எதுவும் தினசரிகளில் இல்லை. ஆனால் இன்று காலை அளிக்கப்பட்ட குறிப்புகளுடன் அச்சிடப்பட்டிருக்கக்கூடிய புகைப்படம் ஒன்று இருக்கிறது. 1968ல் hueல் donald mccullin எடுத்த புகைப்படம் அது. ஒரு குழந்தையைக் கையில் ஏந்தி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் முதியவர் ஒருவரின் படம் அது. அவர்கள் இருவர் உடலிலும் கருப்பு-வெள்ளை புகைப்படங்களுக்கே உரிய கருப்பு ரத்தம் ஏராளமாய் வழிந்து கொண்டிருக்கிறது.

ஓர் இளங்காலையில்

அவளுடைய செல்பேசியில் ஒரு செய்தி வந்ததற்கான கீச்சொலி…

  • நான் ஏதாவது சொன்னால், அவன் ரொம்ப ஆத்திரப்படறான் [ஏமி முந்தைய தொலைபேசி அழைப்பில் சொல்லி இருந்தாள்]; நான் கோபப்படறதை அவன் ஏற்பதில்லை.
  • ஆனால் அவன் தானே உன்னை விட்டு விட்டுப் போனான்.
  • ஆமாம். ஆனால் அவன் இப்ப என் கிட்ட ஒரே ஆத்திரமாய் இருக்கான். என்னை வெறுக்கறான்.
  • நீ அவனை இன்னும் காதலிக்கிறியா?
  • நான் அவனைப் பொருட்படுத்தறதில்லை. பதினைந்து வருஷமா என்னோட சாப்பிட்டு, என் கிட்டே படுத்துத் தூங்கினவன் இத்தனை விட்டேத்தியா இருக்கான், இத்தனை கொடூரமா இருக்காங்கிறதைத்தான் தாங்கிக்க முடியல்ல.

பெண்களால் துக்கத்தைத் துக்கமாக மட்டுமே வைத்துக் கையாள முடியும், (ஜோயீ நினைத்தாள்), ஆனால் ஆண்கள் அப்படிச் செய்ய மறுக்கிறார்கள், அதைக் கையாள்வதற்காக அதை டீஸலாக மாற்றி, அத்தனை இழப்பையும், வலியையும் ஆங்காரமாக மாற்றுகிறார்கள், என்பதுதான் உண்மையோ?

வாக்காளர்

சில ஆண்டுகளுக்கு முன் மாரக்கஸ் இபே, ஒரு சாதாரண மிஷன் வாத்தி. அரசியல் அவர்கள் கிராமத்திற்குள் நுழைந்த போது சுதாரிப்பாக அதனுள் தன்னை இணைத்து கொண்டவர் மார்க்கஸ். ஆனால் ஒரு ஆசிரியியை கர்ப்பமானதால் வேலை நீக்கத்திலிருந்து தப்பித்து கொள்ளவே, அரசியலில் இணைந்தார் என்று சொல்லுபவரும் சிலர் இருந்தனர். ஆனால் இன்றோ அவர் மாண்புமிகு இனக் குழு தலைவர், இரண்டு நீளமான மகிழுந்து மற்றும் அந்த வட்டார மக்கள் பார்த்தே இருக்காத ஒரு மிக பெரும் வீட்டின் அதிபதி. இதெல்லாம் பெரிதாக மார்க்கஸின் தலைக்கு ஏறி விடவில்லை. இன்றும் தன் மக்களின் அபிமானமான தலைவராகதான் இருந்தார். முடிந்த போதெல்லாம், தலை நகரின் வசதிகளை விட்டுவிட்டு, தண்ணீர் வசதியும், மின்சாரமும் இல்லாத கிராமத்தில் தனது மக்களோடு இருப்பதையே விரும்பினார். ஆனாலும் சில நாட்கள் முன்னர் தனது வீட்டிற்கு மட்டும் மின்சாரம் தரும் இயந்திரத்தை நிறுவியிருந்தார். கிடைத்ததை பருகிவிட்டும், தின்று விட்டும், தன் முனைப்பாலேயே அவை கிடைத்தன என்ற இறுமாப்புடன் அலையும் பறவை போல் அல்லாமல், மார்க்கஸ் தன் வசதிகளின் காரண, காரியங்களை நன்றாகவே அறிந்திருந்தார்.

என் அப்பாவோடு ஓர் உரையாடல்

முதலில் என் அப்பா மௌனமாக இருந்தார், பிறகு அவர் சொன்னார், ‘முதலாவது: உனக்கு அருமையான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. இரண்டாவது: உன்னால் ஒரு எளிமையான கதை சொல்ல முடிகிறது என்பதை நான் பார்க்கிறேன். ஆகவே, நேரத்தை வீணடிக்காதே.” பிறகு அவர் சோகத்தோடு சொன்னார், “மூன்றாவது: அப்போது நான் என்ன நினைக்கணும்னா, அவனோட அம்மா, அவள் தனியாவே கிடக்கிறாள், அவள் அப்படியே விடப்பட்டு விட்டாள். தனியாவே. ஒருவேளை நோயாளியாகவுமா?”

நான் சொன்னேன், “ஆமாம்.”

“பாவமான ஸ்த்ரீ. பாவமான பொண்ணாக முட்டாள்களின் காலத்தில் பிறந்து, முட்டாள்கள் நடுவே வாழ நேர்ந்து போச்சு அவளுக்கு. அது முடிவு. அதுதான் முடிவு. அதை நீ எழுதினது சரிதான். முடிஞ்சு போச்சு.”

திபெத் எப்படி நசுக்கப்படுகிறது- தலாய் லாமாவின் வாழ்நாளிலேயே

திபெத்தில் எதிர்ப்பாளர்களை வெளி உலகில் அர்த்த புஷ்டியோடு ஆதரிக்கும் ஒரு குரலாக ஓஸரின் குரல் இருக்கிறது. அதே போல, தனக்கு மிக்க ஆபத்து வரும் என்ற போதும், சீனாவின் ஒரே நோபெல் அமைதிப் பரிசை வென்றவரான லியு ஷியாஓபோ வை சிலாகித்துப் பேசி இருக்கிறார். ஒருக்கால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார அடுக்கில் இவருக்கு இருக்கும் யாரோ சில சக்தி வாய்ந்த ஆதரவாளர்களால்தான் இவர் சிறையில் அடைக்கப்படாமல் தப்பி இருக்கிறாரோ என்னவோ.

திருத்தத் துறை

என் அமர்வுக்கான அறைக்கதவை நாங்கள் நெருங்கும்போது நடைப் பகுதியின் மறு கோடியில் நிகழும் தள்ளுமுள்ளு என் கவனத்தை ஈர்க்கிறது. அங்கே மிகையுணர்ச்சியுடன் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண் மனநோயாளி பாதுகாக்கப்பட்ட அறையில் இருந்து வெளியேற்றப் படுவது தெரிகிறது. எனக்கு பயத்தில் இதயம் தொண்டைக்கு வந்து விடுகிறது.

“தொடர் குற்றவாளி; பல்வேறு அதிக பட்ச தண்டனைகள்“ – என் அறைக்கதவைத் திறந்து கொண்டிருக்கும் நர்ஸ் குறிப்புரைக்கிறாள்.

“வலிக்குமா?” – நான் கேட்கிறேன்.

மேற்கு வங்கத்தின் வழியில் செல்கிறதா தமிழ்நாடு?

ஏற்கெனவே, புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படாததாலும்,மத்தியகிழக்கு பகுதிகளில் நிலவும் சூழலாலும், ஐடி தொழிலில் ஏற்பட்டுள்ள சரிவாலும் தமிழ்நாடு வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ளது.இங்குள்ள கட்சிகளோ, இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மொழிவெறியையும், தில்லிக்கு எதிரான உணர்வையும் தூண்டுகிறார்கள். இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம்-காட்டுக் கொள்ளையன் வீரப்பனை ஆதரித்த சக்திகள் எல்லாம் கூடங்குளம்,நெடுவாசல் போராட்டங்களில் தீவிரமாக பங்கெடுப்பதுதான். அமெரிக்கா,ஐரோப்பா நாடுகளிலிருந்து நிதி பெறும் பல என்ஜீஓக்கள் இப்போராட்டங்களில் மிகவும் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்கர்களால் ஏன் சேமிக்க முடியவில்லை?

சுருக்கமாக சொல்வதென்றால், அமெரிக்காவில் சேமிப்பு குறைவாயிருப்பது. சேமிக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள்; சேமிப்பதில் இஷ்டமில்லாதவர்கள் என்ற இரண்டு வகையினரால். சேமிக்க முடிந்தும் சேமிக்காமலிருப்பவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பலவழிகளுள்ளன. சேமிப்பு திட்டங்கள்,, செலவுக்கு முன்பே சேமிப்பில் ஓரளவு பணத்தை சேர்த்தல் போன்ற பல வழிகளுள்ளன. ஆனால், சேமிக்க இயலாதவர்களின் நிலையை நிவாரணம் செய்யக்கூடிய வழிகளான வரிக்குறைப்பு, பொருட்கள் விலை குறைப்பு, வருமான அதிகரிப்பு, பொருளாதார சலுகைகள் ஆகியவைகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக தெரியவில்லை. ஏழ்மையை எதிர்த்து போராட்டம் என்பது தீர்க்க முடியாததாக இருப்பது போல் அமெரிக்கர்களை சேமிக்க வைப்பதும் தீர்க்க முடியாததாகி விடுமோ என்று நினைக்க தோன்றுகிறது.

பேருரை (A Lecture Tour)

அரங்கு நிறைந்தது. காட்சி ஆரம்பமானது. இயக்குனர் அனைவரையும் வியக்கவைத்தான். அவனது மாயவித்தைகளை எல்லோரும் விரும்பினர். மூக்கிலிருந்து நீண்ட கைக்குட்டை ஒன்றை உருவி எடுத்தான், அரங்கின் பின்னால் இருந்த ஒரு பாட்டியின் பையிலிருந்து கிளாவர் ராஜாவை உருவி எடுத்தான். மேசை ஒன்றை கைதொடாமலேயே மேடையில் நடக்கச் செய்தான். இறுதியாக மேடையின் கீழே இருந்த இரகசிய வாயில் வழியே மறைந்துபோனான். கூட்டம் கூச்சலிட்டது. இடிமுழக்கமென கைதட்டியது. இப்போது மிருகங்களைக் காண்பிக்க‌வேண்டும். அவனே ஒவ்வொன்றாகக் கொண்டுவந்தான். நான் மேடையில் அவற்றை அறிமுகம் செய்ய வேண்டும். இயக்குனரின் அளவுக்கு என்னால் வெற்றி பெற முடியாது என்று உடனடியாகத் தோன்றியது. கூட்டத்தில் ஓரிரு சிந்தனையாளரேனும் என் அறிமுகத்தை பாராட்டக் கூடும். எனவே நான் கவலை கொள்வதில் அரத்தமில்லை

சர்வாதிகாரம் வேரூன்றும்போது

ஒரு தேசத்தின் வாழ்வில், குறிப்பாக எப்போது, சர்வாதிகாரம் வேர் கொள்கிறது? அது அரிதாகவே கணப்போதில் நிகழ்கிறது; அந்திப் பொழுதைப் போல் அது வந்தடைகிறது, துவக்கத்தில், கண்கள் பழகிக் கொள்கின்றன. சுயமரியாதைக்கான நாட்டம் ஷ்யு ஹொங்சியை அரசியலுக்கு இழுத்தது. இரண்டாம் உலக யுத்த கால ஷாங்ஹாயில் ஏழ்மைக்குள் சரிந்து கொண்டிருந்த மத்திய வர்க்க குடும்பத்தில் ஒருவராய் வளர்ந்த ஷ்யு ஹொங்சி, ஜப்பானிய ஆக்கிரமிப்பையும் அதைத் தவிர்க்கத் தவறிய சீன…

தொலைந்து போன சிறுவர்கள்

செச்சென்யாவிற்கு அனுப்பப்பட்ட இளம் வாலிபர்களுக்காக ‘ரஷ்யா ராணுவ வீரர்களின் தாயார் குழு’ பொட்டலங்களை சேகரிப்பதை செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொண்டேன். அதன் தலைமையகத்திற்கு 25 டிசெம்பர் சென்றேன். என் மகனுக்காக ஒரு பொட்டலத்தை பெற்றுக் கொண்டார்கள். அவன் எங்கிருக்கிறான் என இன்னும் எனக்கு தெரியவில்லை. அவனுடைய படைப்பிரிவு தலைமையகத்தின் தொலைபேசியை கண்டறிந்து 26 டிசெம்பர் முதல் ஒவ்வொரு நாளும் அவனைக் குறித்து விவரம் அறிந்து கொள்ள அழைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு எப்போதும் ஒரே பதிலே அளிக்கப்பட்டது: அவன் காயமடைந்தவர்களிலும், இறந்து போனவர்களிலும் இல்லை. பின்னர், 5 ஜனவரி அன்று, என் மகன் நிகோலை ப்யாசெட்ஸ்கி க்ரோஸ்னி நகரில் கொல்லப்பட்டான் என எனக்கு சொல்லப்பட்டது.

ஒரு ஜன்னல்

உங்களின் கடிதம் எனக்கும் ஹாம்பர்கர் சாப்பிடவேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிட அன்றிரவே நான் நேராக ஹோட்டலுக்குப் போய் அதைச் சாப்பிட் டேன்.அந்த ஹோட்டலில் எட்டுவகையான ஹம்பர்கர்கள் வைத்திருந்தார்கள். டெக்சாஸ், ஹவாய் கலிபோர்னியா,ஜப்பான் என்று எல்லாநாட்டு ஹாம்பர்கர் களும் அங்கிருந்தன.டெக்சாஸ் ஹாம்பர்கர் பார்க்கப் பெரிதாக இருந்தது. டோக் கியோவின் இந்தப் பகுதிக்கு வரும் டெக்சாஸ் மனிதர்களுக்கு இது அதிர்ச்சி யாகத்தானிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.ஹவாய் ஹாம்பர்கர் ஒரு அன் னாசிப் பழத்துண்டத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலிபோர்னியாவின் அலங்காரம் …எனக்கு நினைவில் இல்லை

சிரியாவே தன்  துயரத்தைச் சொல்லும் கவிதை

புதுச்சேரியில் பிப்ரவரி 2016-ல் நடைபெற்ற பன்னாட்டு ஆவணக் குறும்பட விழாவில் திரையிடப்பட்ட அலெப்போவை அலைக்கழிக்கும் கொலைப் போரையும் பேரழிவையும் பேசும் Young Syrian Lenses என்ற ஆவணப்படத்தைப் பார்த்த யாரும் அதிர்ந்து போகாமல் இல்லை. மக்கள் வாழும் பகுதிகளில் வீழும் குண்டுகளின் பொழிவு, தரைமட்டமாகும் கட்டிடங்கள், அழிவின் அச்சுறுத்தலிலும் மரணத்தோடு விளையாடுவது போல் விளையாடும் சிறார்கள், அமர்ந்து மரணத்தை ஒரு மிடக்கு அருந்துவது போல் தேநீர் அருந்தும் மனிதர்களரென்று அலெப்போவின் போர்த் துயரத்தைப் பதிவு செய்கிறது இந்த ஆவணப் படம்.

பசை

“அதைத் தொடாதே” என்றாள் அவள்.
“என்னது அது” என்றேன்.
“பசை. மிகச் சிறப்பான பசை. இருப்பவற்றிலேயே மிகச் சிறந்தது”
“எதற்காக வாங்கினாய் அதை”
“இங்கே ஒட்ட வேண்டியவை நிறைய இருக்கின்றன”