ஜோசியர்கள், அகதிகள் & காந்தி

ஃபிரெஞ்சு புகைப்படக்காரர் ஹென்ரி கார்ட்யெ பிரசன் (Cartier-Bresson) இந்தியாவில் பல்லாணடுகள் செலவழித்திருக்கிறார். இவர் நம் மகாத்மா காந்தியை படங்களாகப் பதிவு செய்தவை உலகப் புகழ்பெற்றவை. காந்தியைத் தவிர ரமண மகரிஷியின் ஆசிரமம், கதகளி குருகுலத்தின் நடனப்பயிற்சி, காஷ்மீரத்தின் இயற்கை, அகமதாபாத் நகரத்தின் சந்து பொந்துகள் எல்லாம் உண்டு. அவற்றை “ஜோசியர்கள், அகதிகள் & காந்தி”

மைட்டோகாண்ட்ரியாவும் உங்களின் அம்மாவும்

மைட்டோகாண்ட்ரியா என்பது செல்லின் ஒரு நுண்ணுறுப்பு ஆகும். இது செல்லுக்குத் தேவையான ஆற்றலைத்தருவதால் இதை ‘செல்லின் ஆற்றல் நிலையம்’ என்கிறோம். இவை செல்லின் சைட்டோபிளாசத்தில் விரவிக்காணப்படுகின்றன. மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டே உண்கிறோம்; தூங்குகிறோம்; சிந்திக்கிறோம்; நேசிக்கிறோம்… அவை எங்கிருந்து வருகின்றன? எப்படி உருமாறுகின்றன? எவ்வாறு நோயைக் கண்டுபிடித்து உங்களை ஆரோக்கியமாக “மைட்டோகாண்ட்ரியாவும் உங்களின் அம்மாவும்”

மகரந்தம்

எட்வர்ட் மன்ச் வரைந்த அதிபுகழ் பெற்ற ஓவியமான அலறல் (ஸ்க்ரீம்). அதைக் குறித்து அவர் இவ்வாறு தனது கையேட்டில் எழுதுகிறார்: ‘என்னுடைய இரு நண்பர்களுடன் சாலையில் நடந்தேன். சூரிய அஸ்தமனம் ஆனது. ஆகாயம் ரத்தநிறமானது. மனச்சோர்வு என்னைத் தொட்டதை உணர்ந்தேன். என் நண்பர்கள் என்னைவிட்டு முன்னே நகர்கிறார்கள். என் மார்பில் திறந்த காயம் இருப்பதை போல் பயம் கவ்விக் கொண்டது. சோர்வாக கைப்பிடியில் தளர்ந்தேன். கருப்பும் நீலமும் கலந்த மலையிடைக் கடல் நுழைவழி தெரிந்த நகரத்தின் மேகங்களில் இருந்து ரத்தம் சொட்டி உதிர அலை அடித்தது. இயற்கையினூடே மாபெரும் அலறல் துளைத்து வந்தது.’ அந்த ஓவியத்தைப் பார்த்தால் யாரோ அலறுவதை சித்தரிப்பது போல் இருக்கும். ஆனால், அந்த ஓவியம் தான் மட்டுமே கேட்ட ஓலத்தை, மற்றவர்களுக்குக் கேட்கக் கிடையாத அலறலைக் குறிக்கிறது. அது போல் புத்தாக்கங்களைக் கொணர கொஞ்சம் சித்தம் கலங்கியிருக்க வேண்டுமோ என எண்ணும் கட்டுரை

எம். எல். – அத்தியாயம் 6

விவேகானந்தா பிரஸைத் தாண்டி மேலமாசி வீதியில் நுழைந்ததும் பையிலிருந்த சில்லரைகளை எண்ணினான். அதை வைத்துதான் இந்த மாதம் பூராவும் ஓட்ட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் எப்போது சம்பளம் கொடுப்பார்கள் என்று தெரியாது. சில மாதம் பதினைந்தாம் தேதிகூடக் கொடுத்திருக்கிறார்கள். சம்பளம் போட மறந்துவிட்டார்களோ என்று நினைப்பான். கோபால் பிள்ளை வீட்டுக்குப் போனதும், நேரே வெளிப்புற மாடிப்படி வழியாக அவர் அறைக்குப் போகவில்லை. கீழ்ப் பகுதியில் குடியிருந்த பெரியவர் ராமசாமியைப் போய் முதலில்  பார்த்தான்.

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ….

“இப்ப ஏதேதோ காரணங்களினால அந்த ஊர் பேரைச் சொல்றதுக்கே தயங்கறா மாதிரி ஆயிடிச்சு பாருங்க! அந்த கோவில் அழகு ஒண்ணு போதுமே! என்னோட ஒண்ணு விட்ட சித்தி ஒத்தங்க அந்தஊர்ல இருந்தாங்க! அவங்க பேரு பொன்னம்மா.பாக்க தங்கம் மாதிரி ஜொலிப்பா! நல்ல சேப்பு! அதான் அந்த பேரு வச்சாங்க போலிருக்கு!அவங்க கல்யாணத்துக்கு நான் போயிருந்தேன்.எனக்கு அப்போ ஆறு , ஏழு வயசிருக்கும்…..என் பக்கத்துல இருந்த ஒரு பாட்டி, இன்னொரு மாமிகிட்ட சொல்லிண்டு இருந்தா ‘இதென்னடி இது அட்சதையும் எள்ளையும் கலந்தாப்பல இருக்கே’ன்னா

மதி நுட்ப நகரம்

சில்லு பொருத்தப்படாத அந்த பெண் ஒரு  பாதுகாப்புக்  கேமரா பக்கமாகக்  கடந்து சென்றாள் . நகரம் அவள் முகத்தை நுட்பமாக ஆராய்ந்தது  .அவள் கண்களின் வெண் படலம்  நீலஒளி வழித்தடத்தில்  கருமையாக  நிறம்மாறித் தெரிந்தது .  கடும் ஜுரம் தாக்கிய உடலையும் , குளிரில் விரைத்துப்போன  கை கால் விரல்களையும் அகச் சிவப்புக் (infra red )  கதிர்கள்   காட்டின – அவள் உடனடி  மருத்துவக்  கவனிப்பு தேவைப்படக்கூடிய மனுஷி என்று அடையாளம் காணப்பட்டாள் .

இந்திய மருத்துவத்தின் அடுக்குகள் 

இந்திய மருத்துவம் என அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகள் என்று ஆயுர்வேதத்தையும் சித்த மருத்துவத்தையும் கூறலாம். இந்த கட்டுரையின் பேசுபொருள் ஆயுர்வேதத்தை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும் சித்த மருத்துவத்திற்கும் பொருந்தும். இன்றைய காலகட்டங்களில் மரபான ஆயுர்வேதம், நவீன ஆயுர்வேதம், வணிக ஆயுர்வேதம், தன்னார்வத் தேர்வாக பின்பற்றப்படும் வீட்டு உபயோக ஆயுர்வேதம் என பொதுவாக ஆயுர்வேதம் நான்கு தளங்களில் புழக்கத்தில் உள்ளன என கூறலாம் என்கிறார் மானசி திரோத்கர்.

ஒருவன் மனதில் ஒன்பதடா…

“அப்பொழுதுதான் பிறந்தேன். எப்படியும் சில முடிச்சுகளை அவிழ்க்க முடிந்தது. நான் தேடும் நபர் அப்பொழுது எம்.ஜி ஸ்போர்ட்ஸ் கார் வைத்திருந்தார். அதே காலக்கட்டத்தில் அவருக்கு திருமணமும் நடந்திருக்கிறது. அடிக்கவேண்டிய இலக்கு வெகு தூரத்தில் உள்ளது என்பது எனக்கு தெரியும். ஆனால் இது ஓரளவு கை கொடுக்கும் என்று சொல்லலாம்”. 

அவனது அசௌகரியம் இப்பொழுது நடுக்கமாக மாறி இருக்கையின் நுனிக்கு அவனைக் கொண்டுவந்தது. பாம்பினால் மனோவசியம் செய்யப்பட்ட முயல்குட்டி போல், தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நகர முடியாமல் தவித்தான்.

பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் சில தொழில்நுட்பப் பயன்பாடு

கொய்மலர்களின் தலைநகரான ஹாலந்தில், கொய்மலர் வளர்ப்பு கொஞ்சம் சுணக்கம் கண்டிருந்தாலும் (வளர்ப்பு மட்டும்தான்; வணிகமல்ல), கொலம்பியா, ஈக்வடார் மற்றும் கென்யா நாடுகளில் கொய்மலர் வளர்ப்பு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது. ரஷ்யாவின் ரூபிள் சரிவுக்குப் பின் ரஷ்ய ஏற்றுமதி 2014-லிலிருந்து குறைந்தாலும், இந்த ஆண்டு (2017) கொஞ்சம் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஆனாலும், ரஷ்யாவிற்கு கொய்மலர் ஏற்றுமதி, என்ணிக்கை உயர்ந்த அளவு, வணிக மதிப்பு அதிகம் உயரவில்லை; ரஷ்யாவின் கொய்மலர் இறக்குமதி எப்போது 2013-ற்கு முன்பிருந்த நிலைமைக்கு வரும் என்றுதான் எல்லா கென்ய ஏற்றுமதியாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்ய சரிவிற்குப்பின், ஆஸ்திரேலிய ஏற்றுமதியும், மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரித்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் புதிது புதிதாய் ஏதேனும் தொழில்நுட்பங்களும் அல்லது பழைய தொழில்நுட்பங்களில் ஏதேனும் புதிய மேம்பாடுகளும் வந்திருக்கின்றன. பரப்பளவுகள் அதிகரிக்கும் பண்ணைகளில், மேம்பட்ட கண்காணிப்பிற்கும், மேலாண்மைக்கும் இத்தொழில்நுட்பங்கள் இன்றியமையாததாகவும் ஆகிவிடுகின்றன. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்…

துயரத்தில் முடிந்த சுந்தரராமசாமியின் காவியம்

சென்றமாத அம்ருதாவில் லட்சுமி மணிவண்ணன் எழுதிய தொடர் பத்தியைப் பிடிக்க நேர்ந்தது. அதில் கமலா அம்மா, ‘நீங்கள் எல்லாம் அவரிடமிருந்து விலகிப்போகாமல் இருந்திருந்தால் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பார்’ என்று சொன்னதாக எழுதியிருந்தார். என் மனம் கலங்கிவிட்டது. அப்படிப் பிரிய நேர்ந்ததும் இயல்பானதுதான் என்றும் எழுதியிருந்தார். கமலா அம்மாவிற்கு என்னை நினைவிருக்குமானால் – எனக்கு அச்சு அசலாக நினைவிருக்கிறது. அந்த அன்னமிட்ட இதயத்தை நோக்கி ஒன்றை சொல்லிவிடு வேணு என்று என் அந்தராத்மா துடிக்கிறது. அம்மா, சுந்தர ராமசாமி போல இலக்கியக் களத்தில் நான் தனித்துவமாக வளர்ந்திருக்கிறேன். அப்படி வளர்வதைத் தான் அவரின் கட்டுரைகளும், படைப்புகளும் உணர்த்தின என்று மட்டும் இவ்விடத்தில் சொல்லிக்கொள்கிறேன். இந்தத் தமிழ்நாட்டில்தான் தன் சக படைப்பாளிகளை, இளம் படைப்பாளிகளை ரொம்ப கண்ணியத்துடன் வரவேற்றார். நிரம்ப அக்கறையுடன் அவர்களிடம் உரையாடினார். காது கொடுத்துக் கேட்டார். தன் தரப்புப் பார்வையைத் தெளிவாக முன்வைத்தார். கடிதங்கள் எழுதினார். அதற்கெல்லாம் மேலாக மிகுந்த அன்புடன் உபசரித்தார். இது தமிழ்ச்சூழலில் அபூர்வமானது. ஆனந்தமானது. இந்த இலக்கிய ஆனந்தத்தைத் தந்ததில் கமலா அம்மாவிற்கு அதிகப் பங்குண்டு. அவர் புன்னகையுடன் விலகிநின்று செய்தார். சு.ரா.விற்கு இருந்த பிடிவாதத்தைப் போன்றே அவரிடம் இலக்கியம் கற்று எழுதவந்த இளம் படைப்பாளிகளுக்கும் சில நியாயமான பிடிவாதங்கள் ஏற்பட்டன. எப்படியாயினும் சுந்தர ராமசாமி தமிழ் இலக்கியச் சூழலில் ஜென்டில்மேன்தான். அந்தப் பேறு இன்னொருவருக்கு இப்போதைக்கு இல்லை.