கடினமான நாவல்களைப் புகழ்ந்து – வில் செல்ஃப்

என் படைப்புகளும்கூட எவ்வாறு உள்வாங்கப்பட்டன என்பதில் ஒரு விஷயத்தை கவனித்தேன். என் படைப்புகளுக்கு மட்டுமல்ல, ஐமர் மக்ப்ரைட் முதலான “நியூ டிஃபிகல்ட்” வகை எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் இது பொருந்தும்- விமரிசகர்கள் எங்களைப் புகழ்ந்தபோதும், எங்கள் பிரதிகளோடு ஒரு எச்சரிக்கை வாசகத்தைச் சேர்க்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறார்கள். ‘கடினம்,’ என்று சொல்கிறார்கள்- கூடவே அச்சுறுத்தும் உள்ளர்த்தமாய், -ஓர் எதிரொலி, டெர் ஸ்டெப்பென்வுல்ஃபின் தாக்கமாய் இருக்கலாம்-, “இந்தப் புத்தகம் அனைவருக்குமானது அல்ல,” என்கிறார்கள்.

சாவித்திரியின் சுயராச்சியம்

கு.ப.ரா. எழுதிய ‘சிறிது வெளிச்சம்’ கதை தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என்று நியாயமாகவே போற்றப்படுகிறது. இந்தக் கதையில் நாம் காணும் மௌன இடைவெளிகள், கச்சிதமான வடிவம், இயல்பான உரையாடல், துவக்கம் முதல் முடிவு வரை உள்ள சுவாரசியம் முதலியவை இன்று எழுதப்படும் எந்த ஒரு நவீன சிறுகதைக்கும் இணையானவை. இன்னும் ஒரு படி மேலே போய், டிசம்பர் 1942ல், ‘கலாமோகினி’ இதழில் பதிப்பிக்கப்பட்ட இந்தச் சிறுகதையின் நாயகி சாவித்திரி வேதனையில் வெளிப்படுத்தும் விடுதலை வேட்கை பெண்ணிய குரல்கள் ஓங்கி ஒலிக்கும் இன்றும்கூட மெய்ப்பிக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.
எழுத்தாளனே கதைசொல்லியாய் உள்ள இந்தக் கதையின் துவக்கத்திலேயே ஒரு பெண் இறந்து விட்டாள் என்பதை அறிந்து கொள்கிறோம். அவள் துன்பம் தீர்ந்தது என்ற ஆசுவாசமும், அவளைக் காப்பாற்ற முடியவில்லை என்ற துக்கமும் கதைசொல்லியின் முதல் இரு வாக்கியங்களில் வெளிப்படுகின்றன. தான் காப்பாற்றப்பட வேண்டியதில்லை என்பது அவளே தேர்ந்தெடுத்துக் கொண்ட முடிவு என்பதையும் பல முறை முயற்சி செய்தும் கதைசொல்லியால்

அறிவும் அறியாமையும் – அருண் ஷௌரியின் ‘டூ செயிண்ட்ஸ்’ நூலை முன்வைத்து

அருண்  ஷௌரியின் வாழ்வு துயர் தோய்ந்தது. அவரது மகன், cerebral palsyயாலும் மனைவி Parkinson’s Diseaseஆலும் அவதிப்படுகின்றனர். செரிப்ரல் பால்ஸி, உடல் இயக்கங்களை மெல்ல மெல்லச் சீரழிக்கிறது. பார்க்கின்சன்ஸ் டிசீஸ் மூளையின் செயல்பாட்டை மெல்லச் சீர்குலைக்கிறது. இரண்டுமே தொடர்ந்து முற்றி, முடிவில் மரணத்துக்கு இட்டுச் செல்லும் நோய்மை நிலைகள். “அறிவும் அறியாமையும் – அருண் ஷௌரியின் ‘டூ செயிண்ட்ஸ்’ நூலை முன்வைத்து”

மெய்ம்மை-கடந்த உலகில் உண்மை குறித்து…

நாம் எல்லாரும் தரவுகளைத் தெரிந்து கொள்வதிலோ, அவற்றின் உண்மையை உறுதி செய்து கொள்வதிலோ ஒரே அளவு ஆர்வம் காட்டுவதில்லை. நம் பார்வையை வலுவாக்கும் செய்திகளுக்கும் கருத்துகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம். அவற்றை விரும்பி பகிர்ந்து கொள்வதால் அவை கூடுதல் ஆற்றல் பெறுகின்றன. இணையம் உண்மையை அறியும் சாதனம் என்ற நிலையை எட்டாமல், எல்லாரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறியும் சாதனமாகி விட்டது. நிறைய பேர் பேசிக்கொள்ளும் விஷயங்களே கவனம் பெறுகின்றன, உண்மைக்கு இங்கு மதிப்பில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் களப்பணியாளர்களும் நிறுவன அமைப்புகளும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் தகவல்களையும் பரப்புவது இரண்டாம் சிக்கல். உண்மையறியும் சல்லடை இல்லாத உலகில்…

புத்தகங்களும் புனிதங்களும் – ரே பிராட்பரியின் ஃபாரன்ஹீட் 451

புத்தகங்களில் உள்ள விஷயங்களைக் கண்டு நாம் கொதிப்படைகிறோம் என்பது, அதில் உள்ள விஷயங்களின் நம்பகத்தன்மைக்கும் அப்பால், புத்தக வடிவில் வரும் காரணத்தால் மட்டுமே அதன் உள்ளடக்கத்துக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்துவிடுகிறது என்பதை நாம் அறிந்திருப்பதை உணர்த்துகிறது. பொய்களை எவரும் புறக்கணித்துவிட முடியும். ஆனால், அவை உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியம் இருக்கும்போதுதான் அந்தப் பொய்கள் ஏற்றுக்கொள்ளக் கடினமாகவும், உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் இருக்கின்றன.

சமயங்கள், சமயமற்ற இந்துக்கள், சமயசார்பற்ற அரசுகள்

சமூக விஞ்ஞானியாகவும், சுதந்திரச் சிந்தனையாளராகவும், பண்பாட்டு ஆய்வாளராகவும் வகைமைப்படுத்தி நான் அறிந்திருந்த பாலகங்காதராவின் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அவரை இந்துத்துவ சார்புச் சிந்தனையாளராகவும் நினைத்திருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை, அவர் செமிட்டிய சமயங்களையும் காலனியாதிக்கத்தையும் எதிர்மறை விமரிசனத்துக்கு உட்படுத்துக்கிறார் என்ற அளவில் அவரது சிந்தனைகள் இந்திய சிந்தனையை நவீன காலத்தோடு உரையாடும் சுதந்திர சிந்தனையாக மீட்டெடுக்க விரும்புவோருக்கு உதவலாம். மேற்குலகின் சமூக ஆய்வுத் துறைகளின் அணுகல்களின் அடிப்படைகள் பல நிலப்பகுதிகளின் சிந்தனையாளர்களாலும், மக்களாலும் விமர்சனம் செய்யப்பட்ட பின்னும், மறுபரிசீலனை செய்யப்படாது,‘உண்மைகளாக’க் கருதப்பட்டுப் பயன்படுத்தப்படும் முறைமையைக் கண்டனம் செய்வது கொஞ்சம் சாதகமான விஷயமாக இருக்கலாம். ஆனால் உலகின் அதுவரை சமயமற்றிருந்த பிற மக்கள் அனைவரையும் வெவ்வேறு சமயங்களாக செமிட்டியமும் அதன் வெளிப்பாடான காலனியாதிக்கமும்தான் திரட்டின என்று அவர் சொல்வது நிச்சயம் இந்துத்துவர்களுக்கோ, இந்திய சிந்தனையைப் புனருத்தாரணம் செய்ய விரும்புவோருக்கோ உதவாது. அதே சமயம், கருத்துலகில் முரணியக்கத்தை பாலகங்காதரா நிராகரிப்பது எதிர்பாராத ஒரு கொடையாக இருக்கலாம்.

கண் விழித்த கானகம்- பொய்களும் சுயமயக்கங்களும்

‘கண் விழித்த கானக’த்தின் இலக்கியத் தகுதியைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும் அத்தனை அலட்சியம் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில், இன்று ஜார்கண்ட் மாநிலமாக அறியப்படும் பகுதியில் பழங்குடியினத் தலைவர் ஒருவர், சென்ற நூற்றாண்டின் துவக்கங்களில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து நிகழ்த்திய ஆயுதப் போராட்டத்தை விவரிக்கும் நாவல் இது. இன்று இந்தியப் பாராளுமன்றத்தில் உள்ள ஒரே ஆதிவாசித் தலைவரின் உருவப்படம், 1870 முதல் 1900 வரை முப்பதாண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த பிர்ஸா முண்டாவின் படம்தான்.

பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா – இரு காந்தியர்கள்

பி.எஸ். ராமையாவின் சிறுகதைகளின் இலக்கியத்தரம் இன்று கேள்விக்குரிய ஒன்றாகக்கூட இல்லாத நிலையில், அவரது கதைகளைப் பற்றிய திறனாய்வுக்கு என்ன இடம் இருக்க முடியும்? ஒன்று, சி.சு. செல்லப்பாவின் கணிப்பு சரியானது என்று காலத்தால் மெய்ப்பிக்கப்படக்கூடும், அல்லது, செல்லப்பா தான் சரியென்று நினைத்த விஷயத்தை நிறுவுவதில் எத்தகைய அர்ப்பணிப்பு கொண்டவராக இருந்தார் என்பதற்கான இலக்கிய ஆவணமாக இது அமையக் கூடும். வாசகர்களும் விமரிசகர்களும் காலமும் மட்டுமல்ல, ராமையாவாலும்கூட கைவிடப்பட்ட கதைகள் இவை.

பெரிய வீட்டின் ஒரு சிறிய பிறைக்குள்… – ஆதவனை வாசிப்பதில் உள்ள அடிப்படைச் சிக்கல் – ஓர் உரையாடல்

“ஆதவனை நான் தாழ்வாகக் கருதவில்லை. ஆனால் அவர் பெரும் ஆகிருதி உள்ள எழுத்தாளர் அல்ல. அ.மி சமகாலத்தில் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு காடா விளக்கின் புகை கக்கலில் முகம் ஒளியூட்டப்பட்டும், இருண்டும் தெரிய, உண்டிகளை விற்கும் ஒரு தெருமுனைத் தள்ளு வண்டி வியாபாரியை அ.மி தீட்டும் சித்திரத்தின் எளிய உறுதியை ஆதவனால் அடைய முடியாததற்குக் காரணம், அவர் கூடதிகமாக உளநிலைச் சிக்கல்களை இழை பிரிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தியது என்று நினைக்கிறேன்.”

யந்திர மொழிபின் மாந்திரிக பயன்பாடுகள்

மனிதனை எழுத்து தனிமைப்படுத்துகிறது என்று சொல்கிறார் டேவிட் அப்ராம் – வாய்மொழி சமூகங்கள் தம்மைச் சுற்றியுள்ள உலகின் அங்கங்களாகத் தம்மை உணர்கின்றன, அங்கு ஒவ்வொரு இலையும் இலைகளை ஊடுருவி விழுந்தசையும் ஒவ்வொரு ஒளிக் கீற்றும் பொருள் பொதிந்தவையாக விவரிக்கப்படுகின்றன. இந்த உலகம் ரகசியங்களற்ற உலகம் – இது கணத்துக்குக் கணம் தன்னைப் புதிதாய் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இயற்கையை மனிதன் இவ்வகையில் நேரடியாக அறிவும் தருணங்கள் இலக்கியப் படைப்புகள் பலவற்றில் எழுச்சிமிகு மொழியில் விவரிக்கப்படுகின்றன. எழுத்துச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட இத்தகைய அனுபவங்கள் நமக்கும் அன்னியமானவையல்ல.

கூந்தப்பனை – வேர்களின் நீரூற்று

சு.வேணுகோபாலைக் குறித்து என் மனதில் ஆழப் பதிந்திருந்த எண்ணம் இதுதான்: சமகால எழுத்தாளர்களில் அவர் மட்டுமே காமத்தின் உக்கிர அனுபவத்தை முழுமையாகத் தன் எழுத்தில் வெளிப்படுத்துகிறார் என்று ஒரு நண்பர் கூறியிருந்தார். கூந்தப்பனையை வாசிக்கும்போதும், அது குறித்து சிந்திக்கும்போதும் காமத்தை மையமாகக் கொண்டே இதிலுள்ள கதைகளை வாசித்துப் புரிந்து கொண்டிருந்தேன். ஆனால், காமத்துக்கு அப்பால், அதன் அறம் குறித்த அக்கறையும் மனித ஆன்மாவின் மெய்ப்பாடு குறித்த கவலையும் சு.வேணுகோபாலின் எழுத்தின் உள்ளார்ந்த (ஆனால் நேரடியாகப் பேசப்படாத) உணர்வாக இருக்கிறது என்று அறிகிறேன். […] இத்தொகுப்பில் உள்ள கதைகளை நீதிக் கதைகள் என்று சொல்ல முடியாது என்றாலும், இவற்றின் அடிப்படையில் உள்ள நீதி விசாரணையே இவற்றை இலக்கியமாக்குகிறது என்று நினைக்கிறேன். பிரபஞ்ச நியதியை மனித வாழ்வோடு பிணைக்கும் எழுத்து அபூர்வமாகவே காணக் கிடைக்கிறது. சு.வேணுகோபாலின் கூந்தப்பனை, அதன் அத்தனை குறைகளோடும், இன்றைய காலகட்டத்தில் அவ்வகைப்பட்ட எழுத்தின் உயர்ந்த சாத்தியங்களைத் தொடுகிறது என்று சொல்லலாம்.

முறுக்கேறும் உண்மைகள் – அகலிகை எதிர்கொள்ளும் உருக்குலைவும் உறைநிலையும்

கல்லிகையில் கௌதமரை சமயமாகவும் இந்திரனை முதலாளித்துவமாகவும் உருவகித்திருக்கிறார் ஞானி. அகலிகை உழைக்கும் வர்க்கத்தின் உருவகமாக இருக்கிறாள். இந்த உருவகத் தன்மைகளுக்கு ஏற்றபடி ஞானியின் அகலிகை பகலில் கௌதமருக்கு மனைவியாகவும் இரவில் இந்திரனின் காதலியாகவும் இருக்கிறாள். கௌதமரிடம் கிடைக்காத இன்பத்தை இந்திரனிடம் பெற்றுக் கொள்கிறாள் அவள்.

ஜனனி

“கண்ணிலிருந்து திரை கிழிந்து விழுகையில் உலகமே பீங்கான் சக்கரங்களின் மேல் நம் கண் முன் தேர் போல் நகர்ந்து திரும்பும் கம்பீரத்தையும், அதன் பெரும் உடலையும், அது திரும்ப முடியாமல் திரும்புவதில் துளிக்கும் சோகச் சாயையையும் நாம் அதனுள்ளிருந்து கொண்டே பார்க்க முடியும்”. இதுதான் உண்மையின் தன்மை என்கிறார் லாசரா.

பூமணி – அள்ளக் கிடைக்காத அம்பாரம்

பூமணியின் சிறுகதைகளில் ஒருமையைக் கண்டுபிடிப்பது கடினம். சில கதைகள் கிராம வாழ்வைப் பேசுகின்றன, சில நகர வாழ்வை, சில கதைகள் சாதி குறித்து, சிலவற்றில் சாதி பற்றிய பேச்சே கிடையாது. சில கதைகள் சிறுவர்கள் பார்வையில் சொல்லப்படுகின்றன, சில பெண்களின் பார்வையில் என்று ஒவ்வொரு கதையும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது.

தாந்திரிகம்- யோகம், போகம், அர்த்தநாரீஸ்வரம்

பெண்களுக்கு எதிரான, பெண்மையை அடிமைப்படுத்தும் சமூக அமைப்பாக மேற்கத்திய அமைப்பு இருக்கிறது, அது பெண்ணை ஒரு குழந்தைத்தனமான சார்நிலையில் வைத்திருக்கிறது- மாறாக இந்திய மரபு ஆண் பெண் பேதங்களைக் கடக்க உதவுவதாக இருக்கிறது: இங்கு பெண்ணியம் என்பது ஆண்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒன்றல்ல- தாந்திரிக மரபில் எவரும் முழுமையான ஆண்களாகவும் பெண்களாகவும் இருப்பதாகக் கருதப்படுவதில்லை.

இரு புத்தகங்கள்- புலன்வழிப் பாதை: அறிவு, ஆற்றல் மற்றும் அறம் குறித்த விசாரணைகள்

நித்ய கன்னியை உருவகக் கதையாகப் படிப்பதில் தவறில்லை. நாவலில் ஓரிடத்தில் இந்த புதிரான பகுதி வருகிறது, இது கவனிக்கத்தக்கது- இந்தப் பத்திகள் நாவலை பெண்ணுரிமைக்கு ஆதரவான குரலாக மட்டும் இருப்பதிலிருந்து காப்பாற்றி, பிரதியின் இயல்பு குறித்த சில கேள்விகளை எழுப்பி, அதை மிக நவீனமான வாசிப்புகளுக்குக்கும் உட்பட்டதாக மாற்றுகிறது- இந்தப் பத்திகள் ஒரு படைப்பின் ஆக்கத்தில் துவங்கி அது இருவகை தீவிர வாசகர்களாலும் தவறாக வாசிக்கப்பட்டுத் தன் உண்மையான வாசகனை அடைவதை உருவகிக்கின்றன;

ஊழல் ஒழிப்பு : சிங்கப்பூர் குறித்து சில சிந்தனைகள்

இன்று சிங்கப்பூரில் லஞ்சம் கேட்பதோ, வாங்குவதோ கூடாது. அப்படி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்-கணிசமான அபராதம் விதிக்கப்படுவதோடல்லாமல், நீண்ட காலம் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம், ஏன், முறைகேடாகச் சேர்த்த சொத்து முழுமையும் பறிமுதலும் செய்யப்படலாம்- முறைகேடாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தர முடியாத நிலையில் இருப்பதாக ஒருவர் கை விரித்தால், அதற்கு பதிலாக அவருக்குச்சிறை தண்டனை நீடிக்கப்படும்! அவரைச் சார்ந்தவருடைய வங்கி மற்றும் அனைத்து கணக்குகளையும் கூட அரசு விசாரிக்கலாம்.

இரு புத்தகங்கள்

பொதுவாக தியானத்துக்கு கற்பனையைத் தடையாகச் சொல்வார்கள். ஆனால் அசோகமித்திரனின் இந்தக் கதைகளில் விசாரத்துக்குரிய நெய்யொழுக்கு காணப்படுகிறது- அவரது கதைகளை நெறிப்படுத்தப்பட்ட மனதின் கட்டற்ற கற்பனை என்று சொல்லலாம்: வாழ்விலிருந்து கிளைத்தாலும் வாசிப்பில் கிளைத்தாலும் அசோகமித்திரனின் கற்பனை வெகு விரைவிலேயே அவரது சிந்தனைக்கு இயல்பான தனியொரு வண்ணம் பெற்று வளர்கின்றன: அவரது கற்பனை எப்போதும் இருப்பின் ஆதாரங்களை தொடர்ந்து விசாரித்தவண்ணம் இருக்கின்றது.

விலங்குகளின் அறம்

சிம்பன்ஸீ குரங்குகளும் யானைகளும் தங்கள் நட்பு மற்றும் சுற்ற வட்டத்தில் இழப்புகள் நேரும்போது வருந்துகின்றன. கொரில்லாக்கள் இறந்தவர்களுக்காக இரங்கி அழுகின்றன. பாஸ்டன் பிராங்க்ளின் ஜூவில் புற்றுநோயால் இறந்த தன் துணைக்காக ஒரு கொரில்லா ஓலமிட்டு தன் நெஞ்சில் அறைந்து கொண்டது. இறந்த கொரில்லாவுக்குப் பிடித்தமான பண்டத்தை அதன் கையில் தந்து அதை எழுப்பப் பார்த்தது. மாக்பை என்ற சிறு பறவைகள், தம் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கும்போது அவற்றை எழுப்ப முயற்சி செய்கின்றன; அதன் அருகில் சுள்ளிகளை வைத்து அஞ்சலி செலுத்துகின்றன. இறந்த நரிகள் புதைக்கப்படுகின்றன. யானைகள் உடல் ஊனமுற்ற சக யானைக்காக நிதானித்து அதையும் தம்முடன் அழைத்துச் செல்கின்றன

உரிமையை மீட்கும் பெண்கள்

பெண் விடுதலை என்பதை ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்தே தமிழகத்தில் உள்ள பெண்ணியலாளர்களில் பெரும்பாலானவர்கள் செயல்படுவதாக ஒரு தோற்றம் இருக்கிறது. அப்பட்டமான உண்மையை சொல்வதானால், பெண் விடுதலை என்பது வன்முறையிலிருந்து விடுதலை என்ற நிலையை அடையவே வெகு தூரம் போக வேண்டியிருக்கும் போலிருக்கிறது. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் பங்கு, சம உரிமை, சம வாய்ப்பு என்பதெல்லாம் போக்கு காட்டும் கோஷங்களாக வெற்றி பெற்று, உலகெங்கும் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் தீனக்குரலை மறைத்து விட்டிருக்கின்றன.

போர் – நினைவுகள், சாட்சியங்கள்

என்னைப் பொருத்தவரை இலக்கியமும் கலையும் இறுதியில் மானுடம் குறித்தவை. ஒரு நாவலை நான் எழுதி முடிக்கையில், அதிலிருந்து எதையாவது நான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும், அல்லது இந்த உலகில் மனிதராய் வாழ்வதன் அர்த்தத்தைக் குறித்து என் மண்டைக்குள் ஏதாவது குடைந்துகொண்டிருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதுதான் அறம் என்றால், ‘ஆம்’ என்பதே என் பதில்.

புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’

காஞ்சனையின் கோர வடிவையும் தாண்டி கதை சொல்லிக்கு அவளது முகத்தில் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி தெரிகிறது. காஞ்சனையின் குரூபம் பார்வையைப் பறிக்கும் கண்களில் இருக்கிறது, ஆவியை உட்கொள்ளும் பற்களில் இருக்கிறது. அவ்வளவே. இந்த தனி அவயங்களைத் தாண்டிய முகத்தின் மொத்த தோற்றத்தைக் காண்கையில் கதை சொல்லிக்கு மோக லாகிரி எழும்புகிறது.

விளிம்பில் உலகம்

வாசிப்பு தவறாக இருக்கும் போது, எவ்வளவுக்கெவ்வளவு நம் வாசிப்பு உறுதியாக இருக்கிறதோ, எவ்வளவுக்கெவ்வளவு அதன் நம்பகத்தன்மையில் நாம் முதலீடு செய்திருக்கிறோமா, அவ்வளவுக்கவ்வளவு பேரழிவை சந்திக்க வேண்டி வரும். அரசியல் இயக்கம் குறித்த புரிதலிலும் இதுதான் நடந்தது – ஜெர்மனியில். பொருளாதார கோட்பாடுகளை நிலை நிறுத்தியபோதும் இதுதான் நடந்தது – ரஷ்யாவில். சமூகவியலில் இத்தகைய போக்கைக் கண்மூடித்தனமாக நிகழ்த்தியபோதும் இதுதான் நடந்தது – சீனாவில். இன்று தொழிற்சாலை உற்பத்தியை, அது சார்ந்த அறிவுநுட்ப வளர்ச்சியை மட்டும் அறிவியல் என்று கருதி அந்த இயக்கத்தைப் பேரளவில் வாழ்க்கை முழுதும் நடைமுறைப்படுத்தும் பார்வை சூழியல் அழிவின் விளிம்பில் பூமியைக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது – மேலை நாடுகளின் தயவால்.

உலைகலனாகுமா தமிழகம்? – இறுதிப் பகுதி

அரசியல் கொள்கைகள் காரணமாக தொழிற்துறை முடங்கிக் கிடந்த நிலையில் ஓரளவு படித்த வங்காளிகள் கூட வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வேலை வாய்ப்பை நாடியும் வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்ளவும் சென்றனர். இதர வங்கத் தொழிலாளர்கள் ஆளும் அரசின் செல்லப் பிள்ளைகளாய் உற்பத்தியைப் பெருக்காமலேயே உண்டி பெருக்கி ஒரு வகையில் வீணான வாழவு வாழ்ந்தனர்.

உலைகலனாகுமா தமிழகம்? – கோவை நிகழ்வை முன்வைத்து

இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழகமெங்கும் கோவை நகரச் சம்பவங்கள் நிகழ்ந்து, அதன் பின்விளைவாக தொழில் முடக்கமும், வேலை வாய்ப்பின்மையும் சமூகக் கொந்தளிப்பும் ஏற்படுவதைத் தடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? இப்படி முன்கூட்டி நாசம் ஏற்படவிருப்பதை நமக்கு உணர்த்தும் வகையில் சமூகத்தில், பொருளாதாரத்தில், பண்பாட்டில் என்ன விதமான சக்திகளை நாம் உருவாக்க வேண்டும்?

வெறும் பலகையும், இரும்புத் திரையும்

மனித இயல்பு அடிப்படையில் களங்கமில்லாதது: எதுவும் போதிக்கப்படாத குழந்தைப் பருவத்திலும், நாகரீகத்தின் சுவடுகள் பதிக்கப்படாத வனவாசத்திலும் மனிதன் உள அளவில் அடையக்கூடிய வல்லமைகள் அளவிறந்து இருக்கின்றன என்ற கருதுகோளை நம்மில் பலர் ஏற்றுக் கொள்வோம் என்று நினைக்கிறேன். தரமில்லாத கல்வி அவனது அறிவை மேம்படுத்தத் தவறுகிறது, நாகரீகமயமாதல் தொழில்நுட்பச்சார்பை அதிகரிக்கின்ற காரணத்தால், அதன் தீவினையாய் அது மனித மனதை வக்கிரப்படுத்துகிறது என்ற வாதம் இந்தக் கருதுகோளின் நீட்சியே.

யாமறியும் மொழிகள்

அரேபிய மொழியில் சோதனையை செய்யும்போது ஏறத்தாழ எல்லா அரேபியர்களும் நல்லவர்கள், பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் கெட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதே சோதனை ஹீப்ரு மொழியில் நடத்தப்படும்போது அரேபியர்கள்தான் நல்லவர்கள், இஸ்ரேலியர்கள் கெட்டவர்கள் என்ற நிலையை அவ்வளவு தீவிரமாக எடுக்கவில்லையாம். நாம் என்ன மொழி பேசுகிறோம் என்பது நம் விருப்பு வெறுப்புகளையும் மாற்றுவதாக இருக்கிறது!