என் அப்பாவோடு ஓர் உரையாடல்

முதலில் என் அப்பா மௌனமாக இருந்தார், பிறகு அவர் சொன்னார், ‘முதலாவது: உனக்கு அருமையான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. இரண்டாவது: உன்னால் ஒரு எளிமையான கதை சொல்ல முடிகிறது என்பதை நான் பார்க்கிறேன். ஆகவே, நேரத்தை வீணடிக்காதே.” பிறகு அவர் சோகத்தோடு சொன்னார், “மூன்றாவது: அப்போது நான் என்ன நினைக்கணும்னா, அவனோட அம்மா, அவள் தனியாவே கிடக்கிறாள், அவள் அப்படியே விடப்பட்டு விட்டாள். தனியாவே. ஒருவேளை நோயாளியாகவுமா?”

நான் சொன்னேன், “ஆமாம்.”

“பாவமான ஸ்த்ரீ. பாவமான பொண்ணாக முட்டாள்களின் காலத்தில் பிறந்து, முட்டாள்கள் நடுவே வாழ நேர்ந்து போச்சு அவளுக்கு. அது முடிவு. அதுதான் முடிவு. அதை நீ எழுதினது சரிதான். முடிஞ்சு போச்சு.”

நெடுந்தூர ஓட்டக்காரி

க்ரேஸ் பேலி நியூயார்க் மாநகரத்தில் வாழ்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர் மற்றும் அரசியல் போராளி. தன் வாழ்நாளில் மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்ட க்ரேஸ் பேலி சிறுகதை வடிவத்தின் சாத்தியங்களை விரிவாக்கியவர் என்று கொண்டாடப்படுகிறார். பெண்களின் உலக இருப்பைப் பற்றிய நுட்பமான, ஆழமான பார்வை பேலியின் சிறுகதைகளில் பிரமிக்கவைக்கும் ஒளியுடன் வெளிப்படுகிறது. பெண்களின் உரிமைக்காகவும் போர்களுக்கு எதிராகவும் தன் வாழ்நாள் முழுவதும் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த க்ரேஸ் பேலி, எளிய மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தியே தன் படைப்புகளைக் கட்டமைத்ததார். இந்த இயல்புகளை ‘நெடுந்தூர ஓட்டக்காரி’ சிறுகதையிலும் காணலாம்.

தேவைகள்

இப்படி ஏதாவது சிறுமையாகச் சொல்லி வைப்பது இருபத்தி ஏழு வருடங்களாக அவரது வழக்கம். அது ஒரு குழாய் ரிப்பேர்க்காரரின் அடைப்பு நீக்கும் வளைகம்பி போல என் காதுகள் வழியே தொண்டைக்குள் இறங்கி என் இதயத்துக்குப் போகிற வழியில் பாதி தூரம் வரை போய்விடும். அப்போது அவர் போயிருப்பார், நானோ தொணடையை அடைத்து மூச்சுத் திணற வைக்கும் கருவியோடு அமர்ந்திருப்பேன்.