ஒரு தூரிகை

ஸியனூக் பதவியிலிருந்து கட்டாயப்படுத்தி அகற்றப்பட்டபோது, அவள் கம்போடியாவை விட்டு நீங்கியிருக்கிறாள், ஒருக்கால் ஸிஐஏ உதவியோடு வெளியேறி இருக்கலாம். அப்போது பௌல் பாட்டின் தலைமையில் கமேயர் ரூ(ஸ்)ஜ் தலைநகரைக் கைப்பற்றி, அதன் இருபது லட்சம் குடிமக்களைக் கிராமப்புறங்களில் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பத் துவங்கியபோது, அங்கே தனிச் சொத்து இல்லாத கூட்டுச் சமூகங்களில் ‘புது கமேர்களாக’ ஆக அவர்கள் பயிற்சி பெற வேண்டி இருந்தது! சுமார் பத்து லட்சம் பேர்கள் இதில் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய வருடங்களில் பெனாம் பென் நகரும், அதைச் சூழ்ந்திருந்த கிராமங்களும், அமெரிக்க பி-52 விமானங்களால் திட்டமிட்டுக் குண்டு வீச்சால் தாக்கப்பட்டிருந்தன. அதில் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருந்தனர்.

வேதனையின் புகைப்படங்கள்

இன்று வியட்நாம் புகைப்படங்கள் எதுவும் தினசரிகளில் இல்லை. ஆனால் இன்று காலை அளிக்கப்பட்ட குறிப்புகளுடன் அச்சிடப்பட்டிருக்கக்கூடிய புகைப்படம் ஒன்று இருக்கிறது. 1968ல் hueல் donald mccullin எடுத்த புகைப்படம் அது. ஒரு குழந்தையைக் கையில் ஏந்தி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் முதியவர் ஒருவரின் படம் அது. அவர்கள் இருவர் உடலிலும் கருப்பு-வெள்ளை புகைப்படங்களுக்கே உரிய கருப்பு ரத்தம் ஏராளமாய் வழிந்து கொண்டிருக்கிறது.

கவிதையின் நேரம்

உழைப்பென்று நான் குறிப்பிடுவது கவிதை எழுதுவதற்குத் தேவையான உழைப்பையல்ல. எழுதப்பட்ட கவிதையின் உழைப்பைப் பற்றியே பேசுகிறேன். ஒவ்வொரு உண்மையான கவிதையும் கவிதை என்ற கலைவடிவத்தின் உழைப்பிற்குப் பங்களிக்கிறது. வாழ்க்கை பிரித்து வைத்ததையும் வன்முறை கிழித்தெறிந்ததையும் உடனிணைப்பதே இவ்வோயாத உழைப்பின் பணியாகும். உடல் சார்ந்த வலியை அனேகமாகச் செயலால் குறைக்கவோ நிறுத்திவிடவோ முடியும். ஆனால் மற்ற மானுட வலிகளனைத்திற்கும் பிரிவின் ஏதோவொரு ரூபமே காரணமாக இருக்கிறது. இவ்வகை வலிகளை நேரடியாக மட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைவு. கவிதை எந்த இழப்பையும் ஈடு செய்துவிடுவதில்லை என்றாலும் பிரிக்கும் இடைவெளியை எதிர்க்கிறது :சிதறடிக்கப்பட்டதை மீண்டும் ஒருங்கிணைக்கும் தனது இடையறாத உழைப்பின் மூலம்.