சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊன்

சொக்குப் பொடி போட்டு கணித்திரை சிறைக்குள் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றன; ஒரேவிதமான தகவல்களைக் கொடுத்து பொய்களைக்கூட நிஜமென்று நம்ப வைக்கின்றன; நம்மிடையே பிரிவினையை உருவாக்கி, பிழையான சங்கதிகளின் மூலம் வெறுப்பை உருவாக்குகின்றன; வெறும் இதழியல் செய்தித்தாள் அமைப்பை மட்டும், கபளீகரம் செய்தது என்றில்லாமல், தனிமனிதரின் அந்தரங்கம், சுதந்திரம், குடும்பத்தின் நான்கு சுவருக்குள் நடக்கும் பிக்கல்/பிடுங்கல் போன்றவற்றையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன; அரசியலில் மூக்கை நுழைத்து சுதந்திர தேசங்களின் அதிபர் தேர்தல்களில் தகிடுதத்தம் நடக்க வைக்கின்றன; எந்நேரமும் கைபேசிகளின் கறுப்புத் திரையினைப் பார்க்க வைத்து வேறெதிலும் கவனம் செலுத்தவிடாமல் திறன்பேசிகளின் தாசானுதாசர் ஆக்கி வைக்கின்றன…

தீமை, சட்டங்களுக்குள்

தீமை என்றால் என்னவென்பதும் அது எப்படி இருக்கும் என்பதும் நமக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். போதுமான முன்னுதாரணங்களை வரலாறு, அண்மைய வரலாறும் இன்றைய வரலாறும்கூட, அளிக்கிறது. ஆனால் இன்று நாம் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சித்தரிக்க, அதன் மீது மீண்டும் ஒரு முறை நாம் நம் பார்வையைச் செலுத்துவது பயனுள்ளதாய் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது- பார்ப்பது என்ற சொல்லை உள்ளபடியே அதன் நேரடிப் பொருளில் இங்கு பயன்படுத்துகிறேன்.

தீமை என்பது குறித்த சிந்தனை தொன்மையானது, சமயங்கள் எல்லாவற்றின் முதல் சில அடிப்படை விதிகளில் தீமையை எவ்வாறு எதிர்ப்பது என்பது அடக்கம்.

இங்கு நாம் ரான் ஹவீவ் எடுத்துள்ள இந்த ஒளிப்படத்தைப் பார்க்கலாம்: நாம் எதைக் காண்கிறோம்?

பரத நாட்டியம் – இன்றைய சில பிரச்னைகள் ஒரு பேட்டி (1973)

இது 1973 இல் எப்போதோ நடந்த பேட்டி. தற்செயலாக ஓர் நாள் அம்பையின் நாட்டிய நிகழ்ச்சி ஒன்று நிகழவிருக்கிறது ஓரிரு நாளில் என்ற செய்தி மூன்றாமவர் ஒருவரிடம் கேட்டபோது ஆச்சரியமாயிருந்தது எனக்கு. பின் நான் அது பற்றிக் கேட்டபோது தான் அம்பை திரிவேணி கலா சங்கத்தில் நாட்டியம் பயின்று வருவது தெரிந்தது. அப்படியானால் நல்லதாயிற்று. பல வருஷங்களாய் என் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்விகள் பிரச்சினைகள் பல உண்டு. அவை முடங்கிக் கிடக்கின்றன; அவற்றை எழுதித் தருகிறேன், சாவகாசமாக யோசித்துப் பதில் சொல்லுங்கள் என்றேன். அப்படித்தான் பின்வரும் பேட்டியில் உள்ள ஒரு பாதி கேள்விகள் முதலிலும் பின்னர் கிடைத்த பதில்களை வைத்து மேற்கொண்டு மறுபாதிக் கேள்விகளும் எழுதித் தரப்பட்டன. அம்பை தந்த பதில்கள் எல்லாம் இங்கே. இன்றானால் சில கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டேன். பல இன்னும் நிறைய கேட்டிருப்பேன்.

வாசகர் மறுவினை

நீங்கள் குறிப்பிட்ட ’ரே’ என்ற உச்சரிப்பு பிரபலமாக ஒரு காரணம் இவர் குடும்பம் மரபு இந்துக் குடும்பம் இல்லை. ப்ரம்மோ சமாஜ் என்ற ஒரு கிளைக் குழுவைச் சார்ந்தவர்கள் இவர்கள். இந்த சமாஜிகள் பாதிக் கிருஸ்தவர்கள் போல என்பது என் நினைவு. சோதிக்க வேண்டும். யூரோப்பியப் பண்பாட்டின் தாக்கப்படி இந்து சமுதாயத்தை (மரபுக் குழுக்களை, பழக்க வழக்கங்களை) விமர்சித்து, ஏக இறைத் தத்துவத்தை மெச்சி, பற்பல செமிதிய நம்பிக்கை/ பழக்கங்களைத் தம் பழக்கமாக மாற்றிக் கொண்டு, அதே நேரம் இந்து மரபை முற்றிலும் அழிக்காமலும் வைத்திருந்த கூட்டம் இது என்று படித்த நினைவு. நீங்கள் சுட்டுகிற ரொபீந்த்ரநாத் தாகூரும் இந்த ப்ரம்மோ சமாஜிதான்…

தெய்வமரம்

பெரிய சாலையில் மாலைஒளி படும்படி அமர்த்தலாக அமைந்திருந்தது “மங்களவிலாஸ்” வீடு. மழைக்கும் வெய்யிலுக்கும் சோர்ந்து காரைகள் பெயர்ந்த பழையபாணி வீடு. அந்த இடம் வந்ததும் தன்னையறியாமல் தலைதூக்கிப் பார்த்துவிடுவது சிவமணியனின் வழக்கம். ஏதோ ஒரு பய உணர்ச்சியோடுதான் அந்த வீட்டிற்குள் நுழைவான் சிவமணியன். அந்த வீடு தரும் அமைதியின்மையை அவனால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. முத்தையாவிற்குப் பரம்பரையாக வந்திருக்கும் சொந்த வீடு அது. முத்தையா சாந்தியைத் திருமணம் செய்து கொண்டு வந்தபின்னே வீட்டிற்கு வண்ணப்பூச்சு அடிக்கப்பட்டது. அதற்குமுன் இதைவிட மோசமாக இருந்தது. காம்பவுண்ட் சுவரைத் தாண்டி நீண்ட வாசற்படியில் சரியாகக் கண் தெரியாத முத்தையாவின் அம்மா எப்போதும் அமர்ந்திருப்பாள். உள்ளே வருபவர்களை நோக்கி அவள் எதையோ சொல்கிறாள் எனத் தோன்றும். மாறாத கண்களுடன் வெற்றிலை பாக்கு மெல்வதை உள்ளே வருபவர்கள் தாமதமாகப் புரிந்துக் கொள்வார்கள். இன்று அந்த இடத்தில் முத்தையா அமர்ந்திருந்தார்.

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 3

“எங்க குடும்பமே இசைக் குடும்பம் தான்.  நாங்க எல்லோரும் ‘ப்ராடிஜீஸ்’.  ஆனா இவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வரதுக்கு எவ்வளவு பாடுபட்டிருக்கேன் தெரியுமா? என் கம்பெனியோட டர்ன் ஓவர் இப்போ ஃபைவ் க்ரோர்ஸ்.  நான் ஆரம்ப நாள்ல அவ்வளவு கஷ்டப் பட்டேன்.  அப்ப ஒரு முடிவு பண்ணேன்.  இந்த மாதிரி டாலண்ட் உள்ள பசங்களுக்குத் தான் முன்னுரிமை.  இங்க டாலண்ட் ப்ரமோஷன்னு ஒரு ப்ரோக்கிராம் இருக்கு.  உங்க பையனைப் பொறுத்த மட்டில ஆரம்பப் பாடம்லாம் தேவையில்லை.  அந்தப் ப்ரோக்ராம்ல போட்டுடுங்கோ.  பத்தாயிரம் ரூபா.  பீஸைக் கட்டிடுங்கோ” என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.

“பையன் இன்னும் வளரலியே சார்.  இன்னும் கொஞ்சம் மெச்சூரிடி இருந்தாத் தேவலயில்லையா. . . . . . ” என்று நான் இழுத்தேன்.

“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை.  சங்கீதத்திலேயே மூழ்கியிருக்கறவா அப்படித்தானிருப்பா.  அவன் வயசுக்குத் தேவையான மெச்சூரிடி நிறைய இருக்கு.  மத்ததெல்லாம் தானா வந்துரும் என்றார்.

புதரை அடுக்கும் கலை (இறுதி பாகம்)

“இப்பப் பாரு,” அவர் சொன்னார், “நாம புதரை அடுக்கற கலையைப் பயில்கிறோம். அது ஒரு அடிப்படையான கலை. தவிர்க்கவியலாத கலையும் கூட. உன்னோட ‘அருங்கலைகள்,’ உன்னோட இசை, இலக்கியம் எல்லாத்தயும் பத்தி எனக்குத் தெரியும்- நானும் படிக்கப் போயிருக்கேன் – உன் கிட்ட நான் சொல்றேன், அதெல்லாம் அவசியம் இல்லை, விருப்பப் பாடங்கள். புதரை அடுக்கற கலை இருக்கே, அது விருப்பப் பாடமில்லை.”

“நீங்க ஸிம்ஃபனி இசையைப் பத்திச் சொல்றீங்களா?” ஆஸ்டின் நிறுத்தி இருந்தான், அவனுக்கு ஸிம்ஃபனி இசை என்பது எத்தனை முக்கியம் என்பதைக் குறித்துக் காட்டுவது போல அசைவற்று நின்றான்.

“ஸிம்ஃபனிகளா! பாழாப் போச்சுது, ஆமாம்!” ஆன்டி சொன்னார். “ஸிம்ஃபனிகளை எழுதவும், அதை எல்லாம் நடத்தவும், இசைக்கவும் தெரிஞ்ச ஒரு சமூகத்தை எடுத்துக்க, அதுக்குப் பாங்கா ஒரு சுமை புதரை அடுக்கத் தெரியல்லைன்னா, அவங்களுக்கு ஒரு மண்ணும் கெடைக்கப் போகிறதில்லை.”

நான்கு கவிதைகள்

பெரிய பொறாமைக்காரன் நான்
எந்த அளவுக்கெனில் ஒரு பாராட்டுக்காக
அத்தனை கால உங்கள் நட்பையே சந்தேகிக்கும் அளவிற்கு
இதற்காக வெகு காலமாய் தனித்திருக்க செய்த தண்டனையில் பிழையில்லை

ஒவ்வொரு நாளும் 69 கொலைகள்: மெக்சிகோ

சென்ற மாதத்தில் மட்டும் 2,371 பேர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று மெக்சிகோ கருதுகிறது. போதை மருந்து கடத்தல், மாஃபியா ஆள் கடத்தல், அரசியல் அதிகார ஊழல் என்று இந்த வருடத்தில் இருபதாயிரத்திற்கும் மேலான கொலை சம்பந்தமான புகார்களின் மேல் புலன் விசாரணையை நடத்தி வருகிறது மெக்ஸிகோ. செய்தி: “ஒவ்வொரு நாளும் 69 கொலைகள்: மெக்சிகோ”

மாரி மைனி

‘யய்யா மதியா?ன்னு அதே கேள்விய திருப்பி கேட்டுச்சு. ‘ஆமா நான் மதிதான் பேசுதேன், நீங்க யாரு?’ன்னு கேட்டேன். ‘நான்தான்ய்யா மைனி பேசுதேன், சாந்தி மைனி.. மறந்திட்டியா?’ன்னு அந்த கொரல கேட்டதும் தண்ணிக்குள்ள குதிச்சதும் வருமில்லையா அப்படியொரு அமைதி எனக்குள்ள வந்துச்சு. காது ரெண்டையும் பொத்திக்கிட்டா எப்படியிருக்கும் அப்படி இருந்துச்சு ‘ எப்படி இருக்கீங்க மைனி’ உங்கள் எப்படி மைனி நான் மறப்பேன்’ன்னு சொன்னேன். என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ’நல்லா இருக்கேன் மதி.. அத்த எப்படி இருக்கு.. பாஸ்கர் எப்படி இருக்கான், செல்விக்கு எத்தனை பிள்ளையளு?’ என்று மைனியின் கொரல் என் காதெல்லாம் நிரம்பிப்போச்சு. ‘எல்லாரும் நல்லா இருக்காங்க மைனி?, நீங்க குமாரண்ணன், பிள்ளையளு எல்லாம் எப்படி இருக்கிய?ன்னு நான் கேட்டாளும் எனக்கு மைனியத் தாண்டி யாரப் பத்தியும் விசாரிக்கனுமுன்னு தோணலை.

ஓவியம் வரைய – மைக்ரோசாஃப்ட் எக்செல்

73 வயதில் டட்சுவோ ஒரியுச்சி ஓவியம் வரைந்து தன் ஓய்வுக் காலத்தைக் கழிக்க நினைத்தார். கடைக்குச் சென்று தூரிகைகள் வாங்குவதற்கு பதில் மைக்ரோசாப்ட் எக்ஸெல் நிரலியைத் திறந்தார். வண்ணங்கள் தீட்டி தன் படைப்பை, அட்டவணைச்செயலி கொண்டு உருவாக்குவதை இங்கே காணலாம்:

மனம், மூளை மற்றும் பிரக்ஞை

உள்ளபடிக்கு,பிரக்ஞை என்பது உயிரிய நிகழ்வே என்ற புரிதலை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மூளை எப்படிச் செயல்படுகிறது என்பது நமக்கு பெரும்பாலும் இன்னமும் புரிபடாமல் இருப்பதே இது பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது. மூளை அளவுக்கு மீறிச் சிக்கலான அவயம். நாம் இன்னமும் மூளைச் செயல்பாட்டின் மிக ஆதாரக் கொள்கைகளைப் பரிசீலிக்கும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறோம். மூளையின் அடிப்படைச் செயல்பாட்டு அலகு (functional unit ) நியூரான் என்று யூகித்துள்ளது கூட தவறாக இருக்கக்கூடும். நியூரான் மூளையின் அடிப்படை அலகென நினைப்பது, ஒரு காரின் அடிப்படை அலகு மாலிக்யூல் (molecule ) என்று எண்ணுவதை ஒத்த சகித்துக் கொள்ள முடியாத தவறு. எனவே மூளையைப் புரிந்து கொள்ள இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டும் ; அது ஒன்றே சரியான வழி

வசந்த மண்டபம்

ஒரு குட்டி முதலாளி போன்ற வாழ்க்கை. சித்தூருக்கு முன்னால் இரண்டு கிலோமீட்டரில் கிராமம். மெயின் ரோட்டை ஒட்டி ஒரு ஏக்கர் நிலம். அதில் தான் லாரி புக்கிங் ஆஃபிஸ் இருந்தது. வழக்கமான புக்கிங் ஆஃபிஸ்களைப் போலத்தான் தூசி படிந்து பழைய பொருட்களுடன் ஒழுங்கு இல்லாமல் கிரமம் இல்லாமல் கிடந்தது. வசிக்கும் இடத்திலும் பணி புரியும் இடத்திலும் தேவையில்லாததை நீக்க வேண்டும் என்பது முதல் விதி. அதுவே பாதி சிக்கலைத் தீர்க்கும். வாழ்க்கையில் தேவையில்லாததைத் தான் சேர்த்துக் கொள்கிறோம். தேவையில்லாததைச் சேர்த்துக் கொள்வதைத் தான் வாழ்க்கை என நம்பிக் கொண்டிருக்கிறோம். புற ஒழுங்கு கொண்டுவரப்படும் போது பணி ஒழுங்கு நிகழ்கிறது. நான் அப்போது வயதில் சிறியவன். கடுமையான உடல் உழைப்புப் பணிகளுக்கு அப்போதுதான் பழகியிருந்தேன். தொழிலாளர்களால் என்னை ஏற்க முடியாது. என்னுடைய எல்லைகளை அவர்களுக்கே உரிய விதத்தில் சுட்டிக் காட்டுவார்கள். பேச்சில் லேசான அவமரியாதை இருக்கும்.

புதையல்

வகுப்பறையின் முதல் பெஞ்சின் கீழ்கம்பியில் அரையடி உயரத்தில் இடதுகாலை தூக்கிவைத்து, வலதுகாலை கீழேஊன்றி நிமிர்ந்து நின்று, “சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா..”, என்று தன்சங்குக்குரலில் முதல்வகுப்பில் கோபிகாமேடம் கவிதை வாசித்துமுடித்து, “பாரதி வரிசையா சொல்றத பாத்தீங்கன்னா… ஒருகுழந்தை படுத்திருந்து , எழுந்து, நடந்து ,ஓடி வந்து முத்தம் கொடுத்து, பின்னாடி மெல்ல சிணுங்க, அதை சமாதனப்படுத்தி அதுவெளிப்படுத்துகிற அன்பில் தெய்வத்தை உணரமுடியும். அதுக்குபிறகு கவிதைமறக்காது. அதுவும் உங்களுக்கு பழக்கமான குழந்தை மனதில வந்திடுச்சுன்னா கவிதை அவ்வளவுதான்”, என்றார்.

அன்றே ஏனோ வகுப்பில் அனைவருக்குமே அவர்மீது பிடிப்பு உண்டாகிவிட்டது. மூன்றாமாண்டு தொடக்கவிழாவில்,“நீ பெத்த பிள்ளைய இன்னொருத்திக்குன்னு ஊர் சொல்ல குடுப்பியா?உன் கவிதையே நீயே வாசி”…

தெலுங்குச் சோழர்கள்

தென்னிந்திய வரலாற்றைப் பொருத்தவரை, ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களாகத் தெலுங்குச் சோழர்களைச் சொல்லலாம். இருப்பினும் , அவர்களைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. பெரும் பேரரசுகளின் வரலாறுகள் குறிப்பிடப்படும் போது போகிற போக்கில் தெலுங்குச் சோழர்களும் இடம்பெறுவதே வழக்கம். இவர்கள் சோழர்களின் வம்சாவளியினர் என்பது தெரிந்த செய்தியாக இருந்தாலும், இவர்களுடைய ஆட்சி எந்தக் காலத்தில் ஆந்திராவில் உருவானது? சோழர்களுக்கும் இவர்களுக்குமான உறவுமுறை எத்தகையது என்பது பற்றியெல்லாம் அதிகம் ஆராயப்படவில்லை.

தெலுங்குச் சோழர்களின் தோற்றத்தைப் பற்றியே பல விதமான கருத்துகள் உள்ளன. சோழர்கள் என்று இவர்கள் தங்களைக் கூறிக்கொள்வதினால் தமிழகச் சோழர்களின் வம்சாவளி என்று பெரும்பாலானோர் கருதினாலும், சிலர் இவர்களை ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்த பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என்றும், சிலர் சாளுக்கியர்கள் வழிவந்தவர்கள் என்றும் கூறுவது உண்டு. ஆனால், இவர்கள் சோழர்கள் வம்சாவளியினர்தான் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் கல்வெட்டு ஆதாரங்களும் இலக்கிய ஆதாரங்களும் அடங்கும். சோழன் என்பதின் தெலுங்கு வடிவம்தான் சோடன் என்பது.

பல பிரிவுகளாக ஆந்திராவின் தென்பகுதியை ஆண்ட தெலுங்குச் சோழர்களின் கல்வெட்டுகள் பெரும்பாலும் இந்த வரிகளோடுதான் துவங்குகின்றன:

எம். எல். – அத்தியாயம் 10

“எனக்கு ஆயுதப் புரட்சியிலே எல்லாம் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. தெலுங்கானாவிலே என்ன நடந்தது?… ஆயுதப் புரட்சி அது இதுன்னு நம்ம ஜனங்களை வீணா பிரச்னையிலே மாட்டி விடாதீங்க…”

“ஏன் இப்போ எங்க நக்ஸல்பாரியிலே நடந்திருக்கே…”

“அது ஆயுதப் புரட்சியா?… நான் நக்ஸல்பாரியிலே நடந்ததை ஏத்துக்கலை. நிலச் சீர்திருத்தம் நடந்தா அங்கே பிரச்னை சரியாகிரும். அங்கே நடந்தது விவசாயிகளுக்கும் நிலச் சொந்தக்காரர்களுக்கும் மத்தியிலே நடந்த குத்தகை தகராறு,” என்றார் கோபால் பிள்ளை. சாரு மஜூம்தார் உரக்கச் சிரித்தார்.

“மிஸ்டர் கோபால் பிள்ளை, அதை அவ்வளவு எளிதா ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. நீங்க பேசறது உங்க பார்ட்டி லைன். ரொம்ப விவாதிக்க வேண்டிய விஷயம் இது. இந்தியக் கம்யூனிஸ்ட்களாலே ஒண்ணும் சாதிக்க முடியாது. நான் உங்க பார்ட்டியிலே இருந்தவன்தான். யூனியன்லே எல்லாம் ரொம்ப வருஷம் இருந்து அடிபட்டவன். ஒரு கூலி உயர்வுகூட யூனியனாலே வாங்கிக் கொடுக்க முடியல…

மகரந்தம்

18-19 ஆம் நூற்றாண்டுகளில் அடிமை முறையை பெரும் ஆர்ப்பரிப்புடன், கிருஸ்தவத்தின் நம்பிக்கையோடும் கைக் கொண்டிருந்த தென் மாநிலங்கள் இந்தக் கருப்பின மக்கள் தம் இரும்புப் பிடியிலிருந்து தப்பி தொழில் பேட்டைகளுக்கு வட/ மத்திய மாநிலங்களுக்குப் போனதை இன்னமும் பெரும் நஷ்டமாகக் கருதுகிற அரசியலையே தம் மாநிலங்களில் ஆட்சியில் அமர்த்துகிறார்கள். தெற்கு மாநிலங்கள் மைய அரசுக்கு எதிராகப் பிடித்த கொடி (கான்ஃபெடரேட் கொடி என்று அழைக்கப்படுவது) இன்னமும் ஏராளமான தென் மாநிலங்களில் கொண்டாடப்படும் சின்னம்,, தனியார் மட்டுமல்ல மாநில அரசுகளே கூட இந்தக் கொடியை பற்பல நகரங்களில், தலை நகரங்களில், ஏன் நீதி மன்றங்களில் கூட ஏற்றிப் பறக்க விடுவதைத் தம் பெரும் சாகசமாகக் கருதும் அவலம் இன்னும் தொடர்கிறது.

அப்படி இருக்க இந்த மாநிலங்களுக்கு முன்னாள் அடிமை முறையிலிருந்து தப்பிய கருப்பினத்தவர் மறுபடி திரும்பும் அவலம் நேரக்காரணம் உலக முதலியமும், அமெரிக்க முதலியமும் தம் நலனை மட்டுமே கருதும் அற்பத்தனம்தான். இன்று பல தென் மாநிலங்களில் நகரங்களில் கருப்பின மக்கள் பெருகி விட்டது அம்மாநிலத்து அரசியலில் சில சிக்கல்களையாவது ஏற்படுத்துகிறது.

வெண்முரசு நாவல் – சொல்வளர்காடு – ஒரு பார்வை

பாண்டவர்களுக்கு பெரும் அவமானத்தில் முடியும் சபாபர்வத்தின் பின் வாசகன் மனதில் எழும் கேள்வி ஒன்றுண்டு. இந்த அவமதிப்பை, கீழ்மையை, அதையும் தாண்டி, பாண்டவர்களுக்குள்ளும், திரௌபதிக்கும் அவர்களுக்கும் இடையேயும் உருவாகும் மன வேற்றுமையை அவர்கள் எப்படி கடந்து சென்றிருப்பார்கள் என்பதும், ஒவ்வொருவருக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டதாக மாறியிருக்கும் என்பதே  கேள்வி. அதற்கு மூல நூலில் பெரிய விளக்கமில்லை. அவ்வப்போது  பீமனும், திரௌபதியும் வெளிப்படுத்தும் சீற்றங்களைத் தவிர கிட்டத்தட்ட எதுவுமே நடக்காதது போலவே அவர்கள் தங்கள் வீழ்ச்சியைக் கடந்து செல்கின்றனர். ஆனால் சொல்வளர்க்காடு நாவலின் ஒரு முக்கியமான அம்சம், திரௌபதி தர்மனிடம் கொள்ளும் விலக்கமும், அதை எதிர்கொள்ள முடியாத அவரது தவிப்பும், பின் அதைக் கடக்க தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளுதலும் ஆகும்.

ஹிப்போலிடோஸ் & ஆல்கெஸ்டிஸ்

ஆல்கெஸ்டிஸ் நாடகம், வாழ்க்கை மரணத்துடன் குழம்புவதால் இரண்டாகப் பிளக்கும் தீமை ததும்பும் பெரிதான மைய வீட்டொன்றில் நிகழ்கிறது. அதில் ஹிட்ச்காக்கை நினைவுபடுத்தும் ஏதோவொன்று இருக்கிறது. ஹிட்ச்காக்கின் Shadow of a Doubt படத்திலும் இதைப் போன்ற ஒரு வீடு வருகிறது.  மற்றவர்களின் மெய்ம்மைகளும், ஏன் தங்கள் சொந்தத் தேவைகளும்கூட அதில் வசிக்கும் இல்லத்தோர்கள் கண்களுக்கு புலப்படுவதில்லை.  அவர்கள் மத்தியில் ஒரு கொலைகாரன் இருக்கிறான் என்பதுகூடத் தெரியாமல் குருடர்களாக அவர்கள் வாழ்கிறார்கள். ஹிட்ச்காக்கைப் போல் யூரிபிடீஸிலும் கொலைகாரன் யாரென்று முதலிலேயே நாம் தெரிந்து கொள்கிறோம்;  குற்றத்தின் தாமதப் பரிவர்த்தனையின் வழியே மர்மம் அதிகரிக்கிறது. ஆனால் இரு படைப்புகளிலுமே குற்றம் நடைபெறாமல் முறியடிக்கப்படுகிறது. அதன் பிறகு கதையின் முடிச்சுக்களை அவிழ்க்கும் வகையில் ஒரு எளிமையான முடிவு வருகிறது. ஆனால் நம் மனங்களோ விசித்திரமான வகையில் இன்னமும் சிக்குண்டு தவித்துக் கொண்டிருக்கின்றன.