உள்ளும் வெளியும் பாகம் -2

எல்லாம் உடம்புகளைப் பற்றியவை, உன் கதகதப்பான, மென்மையான உடல், என்றன அவை, உடல் என்ற சொல்லுக்கு தடிப்பான ஒலி இருந்தது, பிறகு ‘காதல்’, வேறென்னவிருக்க முடியும், அதே போன்ற தொண்டையின் ஆழத்திலிருந்து வரும் ஒலிப்போடு, ‘ஐ லஹ்ஹ்வ் யெர் பஹ்ர்டி’, அதனால் கடைசியில் அவள் அதை அணைத்தாள். லவ் எனும்போது அவர்கள் பாலுறவைச் சொன்னார்கள் என்றால் சரிதான், போகட்டும், ஆனால் காதல் என்றால் என்ன என்று யாருக்குமே ஏதும் தெரிவதில்லை. ஆனால் நாம் காதலிக்கும் ஒன்றுக்கான சொல், ஒரு சவத்தை வருணிக்கும் அதே சொல்லாக இருக்கையில், நாம் காதலிப்பது ஒரு சவம் என்பது போல ஒலிக்கிறது

உள்ளும் வெளியும்

கே ஃபாரஸ்ட் ஒரு நாள் அம்மாவுடன் அமர்ந்திருக்க வந்தாள், அன்று ஹாம்பிள்டனின் அங்காடிக்கு ஜில்லியால் போக முடிந்தது, அப்போது பில்லி வைஸ்லரின் பட்டறை வழியே போனாள், அவரிடம், பொழுது போக்காக ஏதும் பொருள் செய்ய, என்ன வகைக் களிமண்ணை வாங்கலாம் என்று கேட்டாள். நம்ப முடியாதபடி கனமாக இருந்த சிறு காகிதப் பையை பில் அவளிடம் கொடுத்தார், அதில் உலர்ந்த சன்னமான பொடி மண் இருந்தது. களிமண்ணுக்கான இரண்டு கத்திகளையும், ஒரு பழைய சுழல் மேடையையும் கொடுத்தார், அவள் எது செய்தாலும் அதை அவருடைய சூளையில் சுட்டுக் கொள்ளலாம் என்றார், அவர் அதை ‘சுளை’ என்று உச்சரித்ததை அவள் கவனித்தாள், ஆனால் தடிமனான உருக்களின் உள்புறத்தைச் சுரண்டி வெறும் இடமாக்க வேண்டும், இல்லையேல் அவை சூளையின் வெப்பத்தில் வெடித்துச் சிதறும் என்றும் சொல்லிக் கொடுத்தார்

நெருப்பொளி

கற்களுக்கு அப்பால் இருந்த நிலப்பரப்பு. அவர் அந்தச் சுவரைப் பார்த்தார் – முதல் முறை அவர் பார்த்த போது, அப்பாலிருந்த இருண்ட சரிவில் மௌனமாக இறங்கி ஓடும் குழந்தையைப் பார்த்தார். இறந்து போயிருந்த அந்த நிலம், நிழல்-நகரங்கள், நகராமல் நின்ற நட்சத்திரங்களின் கீழே, அக்கறை இல்லாமல், ஒருவரை ஒருவர் மௌனமாகக் கடந்து போன நிழல்-மக்கள், அத்தனையையும் அவர் பார்த்திருந்தார். அதெல்லாம் போய் விட்டது. அவர்கள் – ஒரு அரசனும், அடக்கம் பொருந்திய மந்திரக்காரரும், அவர்கள் மேலே வானில் மிதந்து பறந்தபடி, உயிரற்ற வான்வெளிக்குத் தன் உயிருள்ள நெருப்பால் ஒளியூட்டிய ஒரு ட்ராகனுமாகச் சேர்ந்து- அதைக் கொத்திக் கிளறி விட்டிருந்தார்கள், பிளந்திருந்தார்கள், திறந்து விட்டிருந்தார்கள்.

மனைவியின் கதை

அப்புறம் அவன் இங்கு வாழ வந்தான். அதைப் பற்றி என்னால் இவ்வளவுதான் சொல்லமுடியும், அது என் வாழக்கையின் சந்தோஷமான வருடம். அவன் என்னிடம் அப்பழுக்கற்ற நல்லவனாக இருந்தான். கடும் உழைப்பாளி, சோம்பல்பட்டதே இல்லை, பெரிய உடல், பார்க்கவும் நன்றாக இருந்தான். எல்லோரும் அவனை மரியாதையாகப் பார்த்தார்கள், என்னதான் அவன் இளைஞன் தானென்ற போதும். சமூகத்தின் கூட்டங்களில் அவனை அதிகமாகவும், அடிக்கடியும் பாட்டுகளை முன் நடத்திப் பாடக் கூப்பிட்டிருக்கிறார்கள். அவனுக்கு அத்தனை அழகான குரல், அவன் வலுவாக முந்தியிருந்து பாடி நடத்த, பின் தொடர்ந்து மற்றவர்கள் சேர்ந்துகொள்வார்கள், மேலும் கீழுமான குரல்களுடன். எனக்கு இப்போது உடலெல்லாம் நடுக்குகிறது, அதைப் பற்றி நினைத்தால், அதைக் கேட்ட்தை எல்லாம்

கல்மேடு

சிறிய உருவம் கொண்ட முதியவரான உள்ளூர்ப் பாதிரியார் மலைகளின் மேல் ஏறிச் செல்ல வேண்டும் என்பது வேடிக்கையான யோசனையாக இருந்ததால், அங்கு நீண்ட சிரிப்பலை எழுந்தது. தந்தை இஜியஸ் அனாவசிய கர்வம் இல்லாதவர்தான். ஆனாலும், சிரிப்பலையால் சற்றே மனம் புண்பட்டாரோ என்னவோ, கடைசியில், விறைப்பாகப் பேச ஆரம்பித்தார், “ஐயா, அவர்களுக்கு அவர்களுடைய கடவுளர்கள் உண்டு.”