கிறுக்குத்தனம் அடங்க மறுத்துத் தன் தலையை மீண்டும் மீண்டும் உயர்த்தும்போதெல்லாம் அக்கணமே அதை இரக்கமில்லாமல் அடக்குபவர்கள் ஸீபால்டின் பாத்திரங்கள். வாழ்வுடன் உறவு பூணுதல் என்ற விஷயத்தை அவர்கள் மிகவும் எச்சரிக்கையாய்த் தவிர்க்கிறார்கள் என்பதால் அவர்கள் ஒரு நோய்மையாய், ஒரு சுயவாதையாய், சோக உணர்வுடன் இணக்கம் பாராட்டுகிறார்கள், அது அவர்களை ஆட்கொள்வதற்கு எளிதில் இணங்கி விடுகிறார்கள். ஸீபால்டின் படைப்பில் தான்தோன்றித்தனமான கணப்பித்துக்கும் இருண்மையான யதார்த்தத்துக்கும் இடையில் ஓர் ஊசலாட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது.
Author: அ.சதானந்தன்
சித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்
தறிகெட்டு இயங்கும் மரபணுக்களின் அசாதாரண செயல்களை விவரிக்கும் கேன்சரின் கதை அது. நிறைய யோசித்தபின், மறுபுறம் மரபணுவின் இயல்பான செயல்பாட்டைப் பேசும் இன்னொரு கதை இருப்பதை உணர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த யிங் (Ying) கதையை பாலன்ஸ் செய்ய வந்திருக்கும் இந்த யாங் (Yang) கதை அதே சுவையுடன் வெகு நன்றாகவே வந்திருக்கிறது. கிரேக்க தத்துவஞானிகளில் துவங்கி கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளின் கதையை இந்தப் புத்தகம் சொல்கிறது. ஆங்காங்கே மன நோய்கள் விரவியிருக்கும் தன் குடும்ப வரலாற்றினூடே முகர்ஜி, மென்டல் மற்றும் டார்வின் போன்ற மகத்தான விஞ்ஞானிகளின் ஆய்வுகளில் துவங்கி மன நோய்களுக்கு மரபணு காரணமாகுமா என்று கேட்டுக் கொண்டு இன்று ஆய்வு செய்யப்படும் CRISPR/Cas-9 வரை வந்துவிடுகிறார்.
வில்லியம் கெல்லி- கலைஞனும் காலமும்
கதையின் துவக்கத்தில், ஆப்பிரிக்கன் என்று அழைக்கப்படும் ஒரு ராட்சத மனிதன், அடிமைக் கப்பலில் வந்திறங்குகிறான். அவன் கையில் ஒரு குழந்தை இருக்கிறது. அவன் கட்டி வைக்கப்பட்டிருக்கும் சங்கிலியை இருபது பேர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் நகருக்குள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறான். அடிமையான அடுத்த கணமே அவன் தன்னைக் கைப்பற்றியவர்களை தான் பூட்டப்பட்டிருக்கும் சங்கிலிகளைச் சுழற்றி வீழ்த்துகிறான், அவனை ஏலமிடட்வனைச் சிரச்சேதம் செய்கிறான் (அந்தத் தலை ஒரு பீரங்கிக் குண்டு போல் கால் மைல் காற்றில் பறந்தது, இன்னொரு கால் மைல் தரையில் குதித்தோடி, யாரோ ஒருவன் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு குதிரையின் காலில் மோதி அதை ஊனமாக்கி நின்றது, என்று இது விவரிக்கப்படுகிறது).