ரத்தி பாய்க்கு வாக்குச்சாவடிக்கு போக வேண்டும். புதிய மந்திரி அவளுடைய ஜாதிக்காரன். இப்போது அவளுடைய கடன் வட்டியோடு அடைக்கப்பட்டுவிடும். கங்கா பாயும் சந்தோஷமாக அவருடைய கிராமத்தில் நெல் அறுவடை செய்து புடைத்துக் கொண்டிருப்பாள். தயவு செய்து மயக்கத்தாலான இந்த போர்வையை என் மேலிருந்து அகற்றி விடுங்கள்.
Author: இஸ்மத் சுக்தாய்
டைனியின் பாட்டி
அவள் பெயர் என்னவென்று கடவுளுக்குத்தான் தெரியும். யாரும் அவளை பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. சிறுமியாக இருந்து. சந்துகளில் மூக்கு ஒழுக அவள் சுற்றிக் கொண்டிருந்தபோது அவளை ’பதான் குழந்தை ’என்ற ழைத்தனர் ஜனங்கள். பிறகு அவள் ‘பஷீராவின் மருமகள்’என்றும். பிறகு, ‘பிஸ் மில்லாவின் தாய்’ என்றும் பிஸ்மில்லா பிரசவத்தின் போது குழந்தை டைனியை பெற்று விட்டு இறந்து போனதற்குப் பிறகு அவள் ‘டைனியின் பாட்டி ’ஆனாள். அதுவே நிலைத்து விட்டது. தன் வாழ்க்கையில் டைனியின் பாட்டி செய்யாத வேலை என்றுவுமில்லை தனது உணவிற்காகவும். உடைகளுக்காவும் விவரம் அறிந்த நாளிலிருந்தே சின்னச்சின்ன …
