நீலக்கற்றாழையும் டெக்கீலாவும்

டெக்கீலாவில், 100 சதவீத ஆல்கஹால் அளவுடன் இருக்கும் அசல் டெக்கீலா மற்றும் மிக்ஸ்டோ எனப்படும் செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட 51 சதவீத ஆல்கஹால் அளவுள்ள மலிவான டெக்கீலா என இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன . இவ்விரண்டில் பழமையாக்குதலின் அடிப்படையில் பிற வகைகள் உருவாகின்றன.

எண்ணும் எழுத்தும் பெண்ணெனத் தகும்

கணினித் துறையில் சாதித்த பல பெண்களின் பெயரைப் பலரும் அறியக்கூட இல்லை. இக்கட்டுரையில் நாம் உரிய கவனம் பெறாத திறமைசாலிகளான சில பெண்களைப் பற்றிப் பார்ப்போம்.

அணுக்கரு இணைவு – கதிரவனைப் படியெடுத்தல்

This entry is part 4 of 7 in the series பூமிக்கோள்

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சோலார் நெபுலா எனப்படும் வாயு மற்றும் துகள்கள் நிறைந்த சுழலும் பெரு மேகம், வரம்பு மீறிய ஈர்ப்பு விசையால் தகர்ந்து, பின் தற்சுழற்சியால் தட்டையான வட்டத் தட்டாகிப் பெரும்பாலான (99.8%) உட்பொருட்கள் தட்டின் மையத்துக்கு ஈர்க்கப்பட்டுப்பின் அந்த மையமே சூரியனாகியது.

விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள்

This entry is part 25 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

இன்று உயிரினத் தொழில்நுட்பம் வளர்ந்து, அடிப்படையில் மரபணுக்கள் எல்லா உயிரனங்களுக்கும் ஒன்றுதான் என்று தெரிய வந்ததோடு அல்லாமல், அவற்றை எப்படி மாற்றியமைப்பது என்றும் புதிய உத்திகள் வந்துள்ளன. இதன் பயனாகப் பல புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

டால்கம் பவுடர்

This entry is part 23 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

டால்க் (talc) என்பது மெக்னிஷியம் சிலிகேட் கலந்த களிமண்ணாக இயற்கையில் கிடைக்கிறது. (அட, களிமண்ணையா முகத்தில் இத்தனை நாள் பூசி அழகுபார்த்தோம்?) அத்துடன், சோளப் பொடியையும் கலந்து டால்க் உருவாகிறது.

பனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1

This entry is part 7 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

உலகின் மிக மோசமான காற்றுத்தரம் உள்ள நகரங்களில் ஒன்று டில்லி. பல ஆண்டுகளாக, டில்லி அரசாங்கம் டீசல் பஸ்களை இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி, காற்று மாசைக் குறைக்க முற்பட்டு வெற்றி பெறவில்லை. டில்லியின் மெட்ரோ ரயில் இந்த முயற்சியின் ஒரு பங்கு. டில்லியைப்போல இந்திய நகரங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னையின் நிலையும் இதேதான். ஆனால், டில்லியின் முக்கிய தோல்விக்கான காரணம் குளிர்காலத்தில், சுற்றியுள்ள வயல்கள் எரிக்கும் 500 மில்லியன் டன் பயிர்த்தூர்.

சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்

This entry is part 2 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

1970 –க்கு முந்தைய காலத்தில், இந்தியாவில் அதிக கார்கள் கிடையாது. இன்றைய இரு சக்கர ஊர்திகளின் எண்ணிக்கை, அன்றைய மக்கள் தொகையைவிட அதிகம். இரு சக்கர வாகனம் என்றால் பஜாஜ் ஸ்கூட்டர்கள் மட்டுமே உண்டு. பஜாஜ் ஸ்கூட்டர்கள் பால்காரர்களால், காலைப் பொழுதில், தாங்கள் கறந்த பாலை நகருக்குக் கொண்டு “சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்”

ப்ளாக் செயின் – ஓர் எளிய அறிமுகம்

தொகுப்புச் சங்கிலி மிக மிக பாதுகாப்பானது. இது கட்டாயம் மோசடி மற்றும் கையாடலைக் கணிசமாகக் குறைக்கும். தரவுகளில் திருத்தம் செய்வது மிகக் கடினம். மேலும் எல்லா பரிமாற்றங்களும் ஒரே பேரேட்டில் சேமிக்கப்படுகிறது. பரிமாற்றங்கள் இடைத் தரகர்கள் மற்றும் மூன்றாம் தரப்புகளின் தேவையை முழுவதும் இல்லாமல் செய்துவிடும்.
தொகுப்புச் சங்கிலி தொழில்நுட்பம் இன்றுள்ள தொழில்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உதாரணமாக நிதித் துறை, நீதித் துறை, கல்வித்துறை, இசைத்துறை என பல துறைகளில் மாற்றமும் முன்னேற்றமும் வருவதைத் தடுக்க முடியாது.

இந்திய அடுக்கு – எதிர்காலம், சர்ச்சைகள்

தன்னுடைய குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மேற்கொண்ட முயற்சிகள். இந்திய அடுக்கின் நோக்கம், இந்தியாவை ஒரு வல்லரசாக்குவதல்ல. மாறாக,, அதன் குடிமக்களுக்கு சரியான சந்தர்ப்பங்களை உருவாக்கும் முயற்சி. டாம் ஃப்ரீட்மேன் கூறியது போல, ”இந்திய மக்களின் பேரார்வத்தின் அளவு, ஒரு ஷாம்பெயின் பாட்டிலை 70 ஆண்டுகள் குலுக்கியதற்கு ஈடாகும். இந்த பாட்டில் திறக்கும் பொழுது, வெளிப்படும் வேகம் இவ்வுலகம் கண்டிராதது”

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி

மேலை நாடுகளில், மென்பொருள் துறையில், தனியார் முயற்சிகளில் இரண்டு வகையுண்டு. முதல் வகை, மைக்ரோசாஃப்ட், ஆரகிள் மற்றும் அடோபி போன்ற பெரு நிறுவனங்களை எதிர்த்துக் கிளம்பிய திறமூல மென்பொருள் இயக்கம் (open software initiative). இன்னொன்று, மென்பொருளை விற்று பணம் பண்ணுவதை அறவே விட்டு, வசீகரமான இலவச இணைய “இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி”

இந்திய டிஜிட்டல் புரட்சி

இந்திய அரசாங்கத்தின் நோக்கு, நாளொன்றிற்கு, 100 மில்லியன் ஆதார் அடையாளக் கோரிக்கைகளை 5 நொடிகளுக்குள் பதிலளிக்கும் சேவை. இத்தனைக்கும், இந்த 5 நொடிக்குள் நடக்கும் விஷயங்கள் மிகவும் நவீனமான ஒரு தொழில்நுட்பப் புரட்சி… முதலில், UDAI செய்த வேலை – முதல் ஆதார் எண் ஒதுக்குவதற்கு முன், ஆதாருடன் மின்னணு முறையில் எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை வெளியிட்டதுதான். பல்லாயிரம், சேவை நிறுவனங்கள் ஆப்பிள் ஆப்ஸ்டோர், மற்றும் கூகிள் ப்ளேஸ்டோரில் ஒரு சின்ன நிரலை உருவாக்கினால், போதும். அந்த நிறுவனத்தின் நுகர்வோர் இந்த நிரல் மூலம் தங்களின் அடையாளத்தை எளிதில் நிறுவனத்துடன் சரி பார்த்துக் கொள்ளலாம்.

இடையறாது தாக்கி மனவுறுதியைக் குலைக்கும் நவீன ஊடகங்கள்

இப்போது இத்தொழில்நுட்பங்கள் மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்று உணரும் தன்மையையே குலைத்து, இடையாறத சமூக ஊடகத்தாக்குதல் மூலம் செயலிழக்கவைக்கிறது. நம் வாழக்கையின் இயங்குதளங்களாக செல்பேசிகள் இருக்கின்றன. நம்மை, அவற்றைப் பாத்துக்கொண்டும், சொடுக்கிக்கொண்டுமே இருக்க வைக்கின்றது. இடையறாத கவனச்சிதறல் மனிதர்களின் ஐ.க்யூ எனப்படும் சிந்தனைத்திறன் அளவீடு பத்து புள்ளிகள் குறைந்துவிடுவதாக அறிகிறோம்.

இது தொடர்ச்சியாக போதை மருந்து உட்கொண்டு குறையும் அறிவுத்திறனை விட இரண்டு மடங்கு. ஒரே சமூகத்தில் ஒரே தெருவில் இரு வேறு நிதர்சனங்கள் உணரப்படுகிறது. ஜனநாயகம் திறனுடன் இயங்க பொதுவான நிலைப்பாடுகளை எடுக்க இது பெருந்தடையாக ஆகிவிடுகிறது.

தானோட்டிக் கார்கள் – சட்டங்களும் ஒழுங்குமுறைகளும்

ஒழுங்குமுறையிலிருந்து எதுவும் ஒரு சட்டமாக மாறுவது என்பது மிகவும் சிக்கலான ஒரு வாகன நிகழ்வு. உயிர் சம்பந்தப்பட்டிருப்பதால், தீர முழுவதும் விசாரித்து முடிவுக்கு வரும் வரை, பல மாநில, தேசிய சட்ட அமைப்புகளில் ஆமை வேகத்தில் நகர்ந்து சட்டமாக மலர்வதற்குள் பல்லாண்டுகள் ஆகி விடுகின்றன. இதே அமைப்புகள் மிக வேகமாக வளர்ந்து வரும் தானோட்டிக் கார்களை எப்படிச் சீரமைக்கப் போகின்றன? தானோட்டிக் கார்களுக்குச் சாலையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லையா? எப்படி கூகிள், டெஸ்லா மற்றும் பல தயாரிப்பாளர்கள் தங்களுடைய கார்களைப் பொதுச் சாலைகளில் சோதனை செய்கிறார்கள்?

விஞ்ஞான வளர்ச்சியினால் உங்கள் வேலை போகுமா?

முதலில் நடக்கக்கூடிய சமுதாய மாற்றம், தானோட்டிக் கார்களால், வாகனம் ஓட்டுபவர்களின் வாழ்வாதாரம். ஆண்டு முழுவதும் எளிதாகப் பயணிக்கவல்ல பகுதிகளில் இவ்வகைச் சரக்குப் போக்குவரத்து தானோட்டி லாரிகளுக்கு மாறும் வாய்ப்புள்ளது, இதே பகுதிகளில், ஊபர் மற்றும் சில டாக்ஸிச் சேவைகளும் தானோட்டிக் கார்களுக்கு மாறலாம். அரசாங்கங்கள், தொழிற்சங்க அமைப்புகள் என்று மிகவும் சிக்கலானப் பிரச்னையாக, இது மாறலாம். லாரி நிறுவனங்கள் மற்றும் ஊபர் போன்ற அமைப்புகளுக்கு, வாகனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். சரியான மேலாண்மையுடன், ஒவ்வொரு மணி நேரமும் காசு பண்ணலாம். தொழிலாளர்க் கொந்தளிப்பு இதனால், பல வருடங்கள் நீடிக்கும் வாய்ப்பும் உள்ளது. தானோட்டி வாகனங்களால், நிறைய லாபம் இருப்பதால்,

லாப்டாப் கொண்டு உங்கள் கார்களைத் தானோட்டிக் கார்களாக்கலாமா?

படிக்கும் பலருக்குச் சற்றுக் கசப்பாக இருக்கக்கூடும். அதிகக் கம்பித் தொலைப்பேசிகள் சார்ந்த கட்டமைப்பு பெரிதாக இல்லாமல், செல்பேசி தொடர்பியலில் மேற்கத்திய நாடுகளை விட முன்னேறிய இந்தியா ஏன் இந்தத் தொழில்நுட்பத்திலும் முன்னேற முடியாது? விஷயம் தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல; போக்குவரத்து ஒழுங்கு சார்ந்தது. அத்துடன், பல தரப்பட்ட போக்குவரத்து அமைப்புகள் (ஆட்டோ, பைக், ஸ்கூட்டர், மாட்டுவண்டி, ரிக்‌ஷா) ஒரே சாலையைப் பயன்படுத்தும் இந்தியாவில், கணினிகள் குழப்பமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. பல ஆண்டுகள் மேற்குலகில் சோதனைக்குப் பின்னரே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சோதிக்க முடியும். அப்படியே இந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், இந்தியாவில், இந்த ஒழுங்கு ஓரளவு உள்ள நெடுஞ்சாலைகளில் மட்டுமே பயன்படும்.

தானோட்டிக் கார்கள் – தொழில்நுட்ப அறிமுகம்

பெரும்பாலும் அறிவு என்றால் என்னவென்று சொல்வது கடினம். மேலும், சில சமயம், நாம் ‘மூளை இருக்கா?” என்றும் சொல்வதுண்டு, அறிவுக்கும் மூளைக்கும் சம்பந்தம் உண்டு என்று நாமறிவோம். ஆனால், இந்தச் சம்பந்தத்தைத் தெளிவாகச் சொல்ல பெரும்பாலும் தடுமாறுவோம். மனித மூளை மிகவும் சிக்கலானது – மனித அறிவு என்பதும் அதைவிடச் சிக்கலானது. மனித மூளை, பல்வேறு விஷயங்களைச் செய்யும் ஒரு முக்கிய உறுப்பு. ஆனால், மனித மூளையைப் பற்றிய உடலியலுக்கு இங்கு இடமில்லை. இந்தப் பகுதியில், மனித அறிவின் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம். இந்தப் புரிதலே தானோட்டிக் கார்களின் மென்பொருளைப் புரிந்து கொள்ள உதவும்.

தானோட்டிக் கார்கள் – தானியக்க வரலாறு

திடீரென்று தானோட்டிக் கார்கள் ஒன்றும் முளைத்து விடவில்லை. பல திரைப்படங்கள் மற்றும் விஞ்ஞானக் கதைகள் இவற்றைப் பற்றிக் கடந்த 60 ஆண்டுகளாகக் கற்பனை செய்து வந்துள்ளன. ஹாலிவுட் திரைப்படமான ஸ்பீல்பர்கின் Back to the Future, Minority Report (2002) திரைப்படங்களில், கார் தானே செலுத்திக் கொள்ளும். அதே போல, Total Recall (1990), Demolition Man, I Robot (2004), The Car (1967) போன்ற ஹாலிவுட் திரைப்படங்களும் தானோட்டிக் கார்களை நல்லனவாகவும், கொடுமை எந்திரங்களாகவும் கற்பனை செய்து பொது மக்களின் சிந்தனையைச் செதுக்கியுள்ளன. இந்தக் கட்டுரை சினிமாவைப் பற்றியது அல்ல – எப்படி, படிப்படியாக கார்களில் தானியக்கம் தோன்றியது என்பதைப் புரிந்து கொள்வதைப் பற்றியது

கென்யாவில் பன்னாட்டு மலர் வர்த்தகக் கண்காட்சி- 2016

“நீங்க டச்சு கத்துக்கணும் வெங்கி. இத்தனை வருஷமா இந்த பூ துறையில இருந்துகிட்டு, டச்சு இன்னும் கத்துக்கலைனா கொஞ்சம் வெட்கப்படணும்; தெரியாம இருக்கிறது தப்பில்ல; கத்துக்கிட்டா இந்த துறையிலிருக்கும் உங்களுக்கு நல்லது; உங்க உலகம் பெரிசாயிடும். நட்பு வட்டம், வாய்ப்புகள், துறைசார் அறிவு அதிகமாகும்” – ஒரு வருடம் முன்பு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது செந்தில் அண்ணா சொன்னபோதுதான் உறைத்தது. ஆமாம், இத்துறையில் இருபது வருடங்கள் அனுபவங்கள் ஆகியும் ஏன் எனக்கு இது தோணவேயில்லை என்று யோசித்தேன்.

‘அது’கள்

செல்பேசித் திரையில் அரும்பிய தகவலைப் பார்த்துச் சிரித்தாள் ஆஷா. ஓர் இனம் புரியாத சந்தோஷம். ’அது’ அனுப்பிய மின்னஞ்சல். “லட்சுமி, ஸ்டார்ட் ஆயிடு.” என்று ரஜினி காரிடம் பேசிப் பார்த்திருக்கிறோம். கார் நம்மிடம் திருப்பிப் பேசும் காலம் வந்து விட்டது. மிகச் சமீபத்தில் வாங்கிய அவளுடைய கார். அவ்வப்போது தன் நிலவரம் குறித்து மின்னஞ்சலோ, குறுஞ்செய்தியோ அனுப்புகிறது. டயரில் காற்று குறைந்தால் ஆஷாவுக்கும், தலை போகிற பிரச்சனையாயிருந்தால் நேரடியாக சர்வீஸ் டீலருக்கும் தகவல் அனுப்பி விடுகிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை கம்ப்யூட்டர் என்றால் இயந்திர மனிதன் என்றே…

அறத்தை தொலைக்கும் அறிவியல்

1940களிலேயே ஜெர்மனியில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. பெண்களுக்குச் சிகரெட் விற்கத் தடை விதிக்கப்பட்டது. ராணுவ வீரர்களும், போலிசாரும் யுனிபாரம் அணிந்து இருக்கையில் புகைக்கத் தடை விதிக்கப்பட்டது. புகையிலை விளம்பரம் தடுக்கப்பட்டது. உலகில் இன்னமும் கூட பல நாடுகளில் இத்தகைய கடுமையான தடைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை செய்த ஹிட்லர், சிகரெட்டை ஒரேயடியாகத் தடை செய்யாத காரணம் சிகரெட் விற்பனையில் கிடைத்த வரி வருமானம் தான். உலகப் போரை நடத்த, சிகரெட் வரி அவசியமாக இருந்ததால், ஹிட்லர் அதைத் தடை செய்யாமல் விட்டுவிட்டான். போரில் நாஜி ஜெர்மனி தோற்றபின் அவர்களது ஆய்வுகளை மேற்கத்திய நாடுகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தன. 1950கள் முழுக்கச் சிகரெட்டுக்கும் புற்றுநோய்க்கும் இருக்கும் தொடர்பை ஆராய்ந்து வரும் அறிவியல் ஆய்வுகளை அமெரிக்க விஞ்ஞானிகள் சங்கம் மறுத்தும் நிராகரித்தும் வந்தது.

அனுமன் போல் பறக்கும் கார்கள்

தானியங்கி ஸ்மார்ட் கார்களை தயாரிக்கும் முயற்சியில் உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் களமிறங்கிவிட்டன. மேலே குறிப்பிட்டுள்ள வசதிகளில் சிலவற்றை இப்போதே தங்களது உயர்ரக கார்களில் பயன்படுத்தி பரிசோதிக்கத்தொடங்கிவிட்டன. இதில் சுவாரசியமாக கார் தயாரிப்பில், நாம் கேள்விப்படாத மூன்று நிறுவனங்கள்தான் ஸ்மார்ட் கார்களில் முக்கிய பங்களிக்கப்போவதாக நிபுணர்கள் கணிக்கிறார்கள். அவை கூகுள், டெஸ்லா மற்றும் உபர். இவர்கள் ஒவ்வொருவரின் திட்டம்…

அணு விவாகம்

கல்பாக்கத்தில் இருந்து ஆரம்பித்து உலகெங்கிலும் ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் அணு மின் நிலையங்களும் சரி, செர்நோபில், புகுஷிமா போல விபத்துக்குள்ளாகி பேரிடர் நிகழ்வித்த அணு மின் நிலையங்களும் சரி, மின்சார உற்பத்திக்கு அணுவைப்பிளக்கும் (Nuclear Fission) தொழில்நுட்பத்தையே நம்பி இருக்கின்றன. ஒழுங்காய் இருக்கும் குடும்பத்தை உடைத்துப்போடும் விவாகரத்தை போல, அணுவைப்பிளந்து இரண்டாக உடைக்கும்போதும் பல மோசமான பின் விளைவுகள் ஏற்படும். அத்தகைய விளைவுகளை சரியாக கையாள்வது மிக அவசியம். கூடங்குளத்தின் தயவில் சமீபத்தில் இந்த விளைவுகளைப்பற்றி சரியும் தவறுமாய் ஊடகங்கள் நிறைய விவாதித்திருக்கின்றன.

மாநில மின்வாரியங்களின் சுமை

2015-ம் வருடம் செப்டம்பர் மாத கணக்குப் படி 4.5 லட்சம் கோடிகள் கடன் சுமையை இந்த நிறுவனங்கள் மொத்தமாக வைத்துள்ளன. இதில் 70%, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களின் மின்வாரியங்களால் சுமக்கப்படுகின்றன. வாக்கு வங்கி மின்சார அரசியல், அரசியல் சார்புள்ள நிர்வாகங்கள், திறமையற்ற நிர்வாகிகள் போன்ற காரணிகளே இத்தகைய சுமைக்கு காரணிகளாக இருக்க முடியும்.

ஏன் மேகக் கணினியம் & எப்படி மேகத்திரளில் பிணையலாம்?

மேகக்கணிமையின் பயனர்களை நுகர்வோர்கள், வணிகப்பயனர்கள் என்று பிரிக்கலாம் என முன்பே சொல்லியிருந்தேன். இப்பகுதியில் இவ்விருவகைப் பயனர்கள் மேகக்கணிமையை நோக்கி எவ்வாறு நகர்வது என்று கொஞ்சம் பார்க்கலாம். ’நகர்வது’ என்றால்? …மேகக்கணிமையைப் பாவிப்பதென்பது, தெரிந்த ஒரு விஷயத்திலிருந்து தெரியாத ஒன்றுக்குப் போவதுபோலத்தான். அதனாலேயே, இந்த மாற்றம் குறிப்பிடத்தகுந்த ஒரு செயல்பாடாகிறது. இம்மாற்றத்தையே நகர்வு என்று குறிப்பிடுகிறேன்.

கல்வி மற்றும் ஆராய்ச்சி உலகம்: கருவிகளின் இணையம்

கல்வித் துறையில் கருவிகளின் ஆட்சி ஏராளமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது சரியான யூகம் இல்லை. தொழில்நுட்பப் புரட்சிக்கு அடிப்படைக் காரணமான கல்வித்துறையில் அதிகம் தொழில்நுட்பத் தாக்கம் இல்லாதது ஒரு வினோதமான விஷயம். இன்றும் உலகெங்கும் கல்வி வழங்கும் முறை 100 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போலவே தான் உள்ளது. மேற்குலகு பள்ளிகளில், மற்றும், பலகலைக் கழகங்களில், இன்றுள்ள மிகப் பெரிய போதனை மாறுதல்கள்…

கருவிகளின் இணையம் – பொதுப் பயனுடைமை உலகம் – பகுதி 14

தண்ணீரின் அளவு எத்தனை என்று பல அரசாங்கங்கள் பலாண்டுகளாக பதிவுகள் வைத்து வந்துள்ளார்கள். ஆனால், கருவிகள், இந்த நீர் சக்கர மேலாண்மையை இன்னும் நன்றாகக் கட்டுப்படுத்த பல விதங்களிலும் உதவும். அவ்வப்பொழுது, அனைத்து உலக நகரங்களிலும், சில நாட்கள் ஏராளமான குளோரின் வாசம் குடிநீரில் நாம் முகர்ந்திருக்கிறோம். இதற்கு என்ன காரணம்? ஒரு புயலோ, அல்லது பெரு மழையோ பெய்தால், நதி நீர் அல்லது ஏரி நீரின் தூய்மை குறைந்ததை மெதுவாக ஒரு வேதியல் நிபுணர் ஒரு சாம்பிள் எடுத்து, அதை ஒரு ஆராய்ச்சிசாலையில் ஆராய்ந்து, தூய்மை அளவு மோசமாகிவிட்டதைப் பற்றி கதறி (☺), மேலாண்மை உடனே, குளோரின் அளவை அதிகரித்து, நிலமையைச் சமாளிப்பார்கள். இதற்கு சில நாட்களாகி விடுகிறது. இங்குதான் கருவிகள், ஆராய்ச்சிசாலையாய், நதியின் பல நிலைகளிலும் நமக்கு நீரில் எத்தனைக் கரைந்த பிராணவாயு உள்ளது, எத்தனைக் கரைந்த மற்ற ரசாயனங்கள் உள்ளன என்று சொல்லிய வண்ணம் இருக்கும். ஒரு கணினி பயன்பாடு, நீரில் தேவையான ரசாயனங்கள் குறைந்தவுடன், உடனே அறிவிக்கும். எதற்கும் காத்திருக்காமல், சில நீர் சுத்த சமாச்சாரங்களை சரிப்படுத்தி விடலாம். குடிநீர் தரக் கட்டுப்பாட்டிற்கு இது ஒரு மிகப் பெரிய உதவியான விஷயம்.

ஈராக்கில் தொழில் தொடங்கலாமா!

ஈராக்கில் போலிஸ் ரிப்போர்ட் பெறுதல் என்பது சாத்தியமே இல்லை. ஒரு சிறு எடுத்துக்காட்டாக இத்தாலியைச் சேர்ந்த ஒரு கம்பனி பாஸ்ராவை ஒட்டியுள்ள ஓரிடத்தில் எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய் அமைக்கும் பணிக்கு வந்தது. அவர்களின் கொடவுனில் இருந்து ஐந்து லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களும், புத்தம் புது ஏர்கண்டிஷனர்கள் பலவும் காணாமல் போயின. எடுத்தவர் யாரெனத் தெரியும். ஆனால், சொல்ல முடியாது. சொன்னால் மறுநாளே கொலை செய்யப்படுவீர்கள். போலிஸில் சென்று பொருட்கள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தால் யார் மீது சந்தேகம் என எழுதிக்கொடுக்கச் சொல்வார்கள். நீங்கள் கொஞ்சம் தைரியமான ஆளாய் இருந்து ஈராக்கியின் பெயரையோ அடையாளத்தையோ சொன்னால் அவர்களே திருடிச்சென்றவனிடம் நம்மை காட்டிக்கொடுப்பதுடன் நாம்தான் திருடி விற்றுவிட்டோம் என்ற திசையில் கேஸைக் கொண்டு செல்வார்கள். மேலும், போலிஸ் பேப்பர் என்ற ஒன்று கிடைக்கவே கிடைக்காது. போலிஸின் அறிக்கை இன்றி காப்பீடு நிறுவனங்களும் இழப்பீடுகளைத் தராது.
இதே நிலைதான் வாகன விபத்துகளுக்கும். முழுக்க முழுக்க கட்டைப்பஞ்சாயத்து முறையே ஏதேனும் விபத்து நேர்ந்துவிட்டால். இஸ்லாமிய முறைப்படி பழிக்குப்பழியாக பதில் கொலை, அல்லது ரத்தப்பணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் உறுப்பினரிடமிருந்து வசூலிக்கப்படும்.
மத்திய கிழக்கில் பிற நாடுகளில் இந்தப் பணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனமே கொடுத்துவிடும்.

உற்பத்தி மற்றும் தயாரித்தல் உலகம்

யூரோப்பில், இந்தத் தொழில்நுட்பத்தை, Industry 4.0 என்று அழைக்கிறார்கள். இவர்களது (குறிப்பாக, ஜெர்மானியர்கள்) பார்வையில், RFID தாங்கிய கருவிகள் தொகுப்பு மற்றும், தொடர் செயலாக்கத் தொழில்களை தலைகீழாக மாற்றும் சக்தி கொண்டது. தேவைக்கேற்ப, என்ன பொருட்களைத் தயாரிப்பது என்று மனிதர் முடிவெடுக்க வேண்டாம். பொருட்களே முடிவெடுக்கும். இன்று ஒரு குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில், ஒரு ஷிஃப்டில் ஒரு வகை பானம்தான் தயாரிக்க முடியும். இத்தகைய முன்னேற்றம் வந்தால், சந்தையின் தேவைக்கேற்ப திரும்ப வரும் பாட்டில்கள், அருந்தப்பட்ட பானத்தை நிரப்பிவிடலாம்! அதுவும் நொடிக்குள்.

இல்லங்களில் கருவிகள்

சின்னக் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், பெற்றோர்கள், இதைப் பெரும்பாலும் ஒரு அவசியமானத் தேவை என்று நினைக்கிறார்கள். மகப்பேறு விடுமுறை அதிகம் இல்லாமல் தவிக்கும் தாய்மார்கள், பிஞ்சுக் குழந்தைகளை வீட்டில் செவிலித் தாயிடம் (babysitter) விட்டுச் செல்லும் பொழுது, குழந்தையின் நலம் பற்றி அறிய விடியோ மிகவும் உதவுகிறது. இந்த விடியோ காமிராக்கள் ஒவ்வொரு நிமிட நிகழ்வுகளையும் பதிவு செய்வதால், வீட்டுத் திருட்டு முயற்சிகளைத் தடுக்க உதவுகிறது. ஆனால், சமீப காலமாக, சில இணைய விஷமிகள், (internet hackers) தலைகீழாக, இணையம் மூலம், வீட்டில் நடப்பதைக் கண்காணிப்பது, இந்த முறைகளின் பாதுகாப்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. வளரும் இந்தக் கருவி இணைய முயற்சிகளில், பெரிதும் அடிபடுவது, பாதுகாப்பின்மையற்ற வீட்டுக் கருவிகள்.

கருவிகளின் இணையம் – கட்டமைப்பு உலகில் கருவிகள்

நாம் உலகின் எந்த நகரத்தில் வாழ்ந்தாலும், காலை வெளிச்சம் வந்தவுடன் எரியும் மின்விளக்குகளைப் பார்த்திருப்போம். சில மின் விளக்குகள் 11 மணி வரை அணைக்கப் படுவதே இல்லை. இந்த மின்சார விரயம் வரிப் பண விரயம் என்றுதான் சொல்ல வேண்டும். குறைந்த பட்சம், விளக்குகள் பகலொளியைப் பொறுத்து தானே மின்சாரத்தைத் துண்டிக்கும் தொழில்நுட்பம் பல்லாண்டுகளாக உள்ளது. இதை ஒவ்வொரு விளக்கிலும் சேர்க்கத் தேவையில்லை. நகர விளக்குகளைக் கட்டுப்படுத்தும் மின் கட்டுப்பாடு மையத்தில் சேர்த்தாலே போதும். அடுத்தக் கட்ட முயற்சியாக, சில மேற்குலக நகரங்கள் அசைவு உணர்விகளை சோதித்து வருகின்றன. மனித நடமாட்டம்/கார் ஓட்டம் இல்லாத வீதிகளுக்கு ஒளி தேவையில்லை. ஆனால், நடமாட்டம் இருந்தால், உடனே விளக்குகள் உயிர்பெறும். இதனால், இரவில் செலவாகும் மின்சாரத்தின் அளவையும் குறைக்கலாம். ஆனால், நகர் ஒன்றுக்குப் பல்லாயிரம் உணர்விகள் தேவையாவதால், இன்னும் உணர்விகளின் விலை குறையவேண்டும்.

கருவிகளின் இணையம் – பொதுப் போக்குவரத்துத் துறை

ஒரு ரயிலின் எஞ்சினோ அல்லது ஒரு லாரியோ, ஒவ்வொரு மைலுக்கும் பல வகை சூழ்நிலைகளைக் கடக்கிறது. இன்று, இத்தகைய சூழ்நிலைகளின் தரவு நம்மிடம் இல்லை. ஏதாவது ஒரு பாகம் வேலை செய்யாமல் நின்றாலே, என்னவாயிற்று என்று பார்க்கிறோம். இதனால், வருமுன் காக்காமல், பல நாட்கள் பழுது வேலையில் வாகனங்கள் பயனின்றிப் போகின்றன. டிஜிட்டல் உணர்விகள், ஒவ்வொரு மைலுக்கும் 10 மெகாபைட் வரை தரவுகளை (data) ஒரு மேகக் கணினி வழங்கிக்கு (cloud data server) கொடுத்த வண்ணம் இருக்கும், என்று கணிக்கப் பட்டுள்ளது உதாரணத்திற்கு, லாரியின் டயர்களில் டிஜிட்டல் வால்வுகள் சாலையின் தரத்திற்கேற்ப…

கருவிகளின் இணையம்: பொது மருத்துவம்

கருவிகளின் இணையம், நோயாளிகளுக்கும், அவர்களைக் கவனிக்கும் மருத்துவத் துறையினருக்கும் பயன்படும் ஒரு விஷயம். இத்துடன், பயண வசதிகள் குறைந்த பகுதிகளுக்கு, இவ்வகைத் தொழில்நுட்பங்கள் மிகவும் பயன்படும். தூரம் என்பது இணையத்திற்கு ஒரு பொருட்டே இல்லை. மிகப் பெரிய மருத்துவரிடம் சிகிச்சை பெற்று பல நூறு மைல்களுக்கு அப்பால் வாழும் நோயாளிகளுக்கு வீட்டிலிருந்தபடி சிகிச்சைக்கடுத்த மீட்சியைப் (post procedure recovery) பெறலாம்.

கடலில் எண்ணெய்க் கசிவு

கடலில் எண்ணெய்க் கசிவினால் ஏற்படும் விளைவுகள் என்ன? எண்ணெயில் இருக்கும் எடையில இலேசான பொருட்கள் ஆவியாகி காற்றில் கலந்துவிடும். அல்லது இயற்கையான உருமாற்றம் மற்றும் உயிரியல் தரவீழ்ச்சி (bio degradation) ஏற்பட்டு மறைந்துவிடும். ஆனால் அதிலுள்ள கனமான பொருட்கள் கடலிலேயே தங்கி, கடல் வாழ் உயிரினங்களின் உடலில் எண்ணெய்ப் பூச்சாகப் படிந்து விடுவதால், சுலபமாக நகர முடியாமலும், உணவு தேட முடியாமலும், மூச்சு முட்டியும் பல உயிரினங்கள் மடியும். அதுவும் பெட்ரோலியத்தில் பலவித நச்சுப் பொருட்கள் (toxic components) இருப்பதால் அவற்றை உட்கொள்ளும் உயிரினங்கள் இறந்து போவதொடல்லாமல் புதிய உயிர்கள் பிறப்பதையும் அவை தடுத்துவிடும். இதனால் பல உயிரினங்கள் நாளடைவில் மறைந்து போகும் அபாயம் இருக்கிறது.