எம். எல். – அத்தியாயம் 8

சுதந்திரம் வந்து இத்தனை வருடங்களாகி விட்டன. யாரும் பெரிய முன்னேற்றமடைந்த மாதிரித் தெரியவில்லை. ஜனங்கள் எதையாவது விற்பனை செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள். இல்லையென்றால் மாதச் சம்பளத்துக்கு வேலை செய்து காலத்தை ஓட்டுகிறார்கள். யாருக்கும் போதுமான வருமானம்கூட இல்லை. அதனால்தான், ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுகிறோம் என்று வாக்குறுதி கொடுத்த கட்சிக்கு, அதை நம்பி ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தார்கள். காங்கிரஸ் போய் தி.மு.க. வந்தும் ஜனங்களுடைய வாழ்க்கையில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. சர்க்கார் இலவசமாகப் பள்ளிக்கூடங்களை நடத்துகிறது, ஆஸ்பத்திரிகளை நடத்துகிறது, இவை மட்டும் போதுமா? துணிமணி, வீடு, சாப்பாடு எல்லாம் …

கரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்

படத்தின் நாயகன் “கே” ஒரு நகலர் பொம்மையை தன் வீட்டில் வைத்திருக்கிறான். அந்த பொம்மையின் பெயர் “மகிழ்ச்சி” (Joi). அது “கே” என்ன விரும்புகிறானோ அந்த ஆடையை அணிகிறது. “கே” செத்தால் தானும் உடனே மரிக்க நினைக்கிறது. “கே” என்னும் நகலனை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறது. “கே” என்ன நினைக்கிறானோ, அதை அப்படியே கிளிப்பிள்ளை போல் திரும்பி உறுதி செய்து அவன் முன்மொழிந்த எண்ணங்களை மறுமொழிகிறது. இது அத்தனையையும் சொந்தமாக சிந்தித்து நிதானமாக யோசித்து தன்னுள்ளே விவாதித்த பின் தீர்மானித்தது போல் நம்பகமாக “கே”யின் முடிவுகளை ஆதரித்து அவனை குஷியாக்குகிறது. கடையில் இந்த “மகிழ்ச்சி”யை “காதல்” கொன்றுவிடுகிறது.

சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம்

‘தான் எந்த வீட்டுக்கு சொந்தம்’ என்று சாவித்திரியை யோசிக்க வைத்தது.
தனியே படுத்து அசை போடுகிறாள். கண் தெரியாத மாமியார்… தடவித் தடவி நடக்கிறாளாமே! கணவன் செத்துவிட்டால் மாட்டுப்பெண் என்ற கடமையும் செத்து விடுமா? கிருஷ்ணமூர்த்தி இருந்தால் இப்படி நடப்போமா? புது இடம் என்று நாம் சங்கோஜப் படக் கூடாதென்று எத்தனை அரவணத்த ஜென்மம் அவள்!
பாராட்டுவதைக் கூட செல்லமாகச் செய்த அந்த வீட்டுக் கடமையில் இருந்து நான் நழுவுகிறேனா? சாவித்திரி கண்ணீரால் தலையணையை நனைக்கிறாள்.

புதரை அடுக்கும் கலை

ஆகவே, இறுதிச் சடங்கு நடக்கும் இடத்தில் ஆன்டி உரை மேசையின் பின்னே நின்று டானியைப் பற்றிப் பேசினார்….ஆன்டி அந்த விதிகளைப் பேசினார்: “உங்கள் அண்டை வீட்டுக்காரருக்கு உதவி தேவையாக இருக்கையில், போய் உதவுங்கள். அண்டை வீட்டுக்காரர்கள் சேர்ந்து வேலை செய்கையில், எல்லாரும் முடிக்கும் வரை, யாரும் முடித்து விட்டதாக ஆகாது.” ….
அந்த நாளையின் மற்றும் அவரது நீண்ட வருடங்களின் களைப்பும் அவரை முழுக்காட்டுகையில், அவருடைய பாட்டனார் காட்லெட் தன் ஞானத்தின் வெற்றியையும், அதன் சோகத்தையும் ஒரே வாக்கியத்தில், “கடவுளே ஆமாம், ஒரு மனிதன் ஒரு நாளில் எத்தனை செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும்.” என்று அவரிடம் சொன்னதை ஒரு மாலையில் சில சமயம் அவர் நினைவு கூர்வார். 

இந்தியாவின் வண்ணம்

புகைப்பட வித்தகர் டோனி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை படம் பிடித்திருக்கிறார். அதில் கிடைத்த அனுபவங்களையும் படங்களையும் இங்கே பதிவு செய்கிறார்.

அடிமுடி ஒன்றில்லாத பேரண்டம்

பிரபஞ்சம் முடிவிலியா? அல்லது அதன் வரம்புகளை அறிவியல்பூர்வமாக வரையறுத்துவிட்டோமா? நாம் இருக்கும் இடத்தில் இருந்து 46 பில்லியன் ஒளி வருடங்களைப் பார்க்க இயலுகிறது. ஆனால், இப்போதைக்கு நம்மால் இவ்வளவுதான் அளவிட முடிகிறது. நம் அகிலத்தை அளந்து முடித்து விட்டோமா? அண்டம் என்பது முடிவே இல்லாததா? ஈதன் விடை காண “அடிமுடி ஒன்றில்லாத பேரண்டம்”

தானோட்டிக் கார்கள் – போக்குகள் மற்றும் எதிர்காலம்

இந்தத் தொழில்நுட்பம் எப்படி நம் சமூகங்களைப் பாதிக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஆயினும், இன்று நமக்குத் தெரிந்த போக்குகள், சவால்களை வைத்துச், சில யூகங்களை முன் வைக்க முடியும். இதில் எத்தனை யூகங்கள் உண்மையாகும் என்று சொல்வது கடினம். நம்முடைய இந்தப் போக்கு பற்றிய யூகங்களைச் சில ஐந்து ஆண்டுகள் வாரியாகப் பிரித்துப் பார்த்தால், சற்று தெளிவு பிறக்கலாம். இதில் சொல்லியுள்ள யூகங்கள் ஒரு ஐந்து ஆண்டு இடைவெளியிலிருந்து அடுத்த ஐந்தோ அல்லது பத்தாண்டு இடைவெளிக்கோ நடைமுறை பிரச்னைகளைச் சார்ந்து மாறலாம்.

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை

என் மகன் ஆதித்யா பாடிய கல்யாணி நினைவுக்கு வருகிறது. அப்போது அவனுக்குப் பத்து வயதிருக்கலாம். “தல்லி நின்னு நேர” என்கிற கல்யாணி ராகப் பாட்டை அநாயாசமாகப் பாடினான். அப்போதுதான் அப்பாடலை முதன் முதலில் கேட்கிறேன். அவன் அந்தப் பாட்டை யார் பாடிக் கேட்டான் எப்போது கற்றுக் கொண்டான் என்பதெல்லாம் எனக்குப் புரியாத புதிர்தான் இன்று வரை. அந்தக் கச்சேரியில் அவன் பாடிய பாடல்களை அதற்கு முன் நான் கேட்டதில்லை. அப்போதெல்லாம் ‘அவன் பாடும்போது அந்தப் பாட்டு உண்மையிலேயே வாக்கேயக்காரர்களால் பாடல் பெற்றதா அல்லது இவன் இட்டுக் கட்டிப் பாடுகிறானா’ என்கிற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு. இவனுடைய பாடல் தொகுப்பைச் சொல்ல வேண்டுமென்றால் இவன் எப்படி இவற்றைக் கற்றுக் கொண்டான் என்று சொல்ல வேண்டும். அதற்கு முன் இவன் வளர்ந்த விதத்தைச் சொல்ல வேண்டும். அதற்கு இவன் பிறந்த சூழ்நிலையைச் சொல்ல வேண்டும்.

மூன்றாவது சிலுவை

“கரைய பாத்தியாடே ! பசுங்கொப்பையெல்லாம் வாரிக்கிட்டு வரதப் பாரு. இனிமே கூடத்தாமிடே செய்யும். நீ ஒன்னும் பயப்படாண்டா கேட்டியா. யான் இடுப்புல ஒத்த கயித்த மட்டும் கட்டிகிடுதேன் இந்தா இந்த முனயை அந்த வேம்பில கட்டிட்டு கயித்த நீயும் பிடிச்சுக்டே- ஒரு வேளை வாரிட்டுன்னா!”.
ம் அப்புறம் இதுகள ஒவ்வொன்னா அக்கரைக்குக் கடத்திடுதேன். பெறவு இடுப்புக் கயித்த எதுக்க இருக்கப் பின்ன மூட்டுல கட்டிருவேன். மெதுவா அத பிடிச்சிக்கிட்டு நீயும் வந்திரு என்னா ?” என்று சொல்லி சிரித்தவரை மரிராசு மருண்டு போய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நான்கு கவிதைகள்

விபத்தில் வீங்கிய கை
அடிபட்ட நாயைப்போல
எப்போதும் அழுகிறது
“டேய், சும்மா இரு” என்று
செல்லமாக அதட்டினாலும்
உடம்பைக் குறுக்கி
பிருட்டத்துக்கு அடியில்

என்ன நடக்கிறது ஹெராக்ளிட்டஸ் நதியில்?

ஓடும் நதியோடு கூடப் போகாது கரையில் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு என்ன செய்கிறது இந்த மரம்?
எதை அறியக்
கடுந்தவம் நோற்கிறது?
தன்னை அறியவா?
தான் இருக்கும் விதம் ஓடும் நதியில் தேடித் தேடி இன்னும் தெளிவாகவில்லையா?

குளக்கரை

தமிழ்த் திரைப்படத்தில் வரும் பாலியல் வன்முறைக் காட்சிக்குப் பின், ஒரு பஞ்சாயத்து கூடும். அதில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்ணை அதை நிகழ்த்தியவன் மணம் செய்துகொள்ள வேண்டும் என்ற (வழக்கமான) விசித்திரமான தீர்ப்புக் கூறப்படும். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு தீர்ப்பை அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகண நீதிமன்றம் அளித்துள்ளது. பாலியல் வன்முறை மூலம் பிறந்த ஒரு குழந்தையை அதன் தாயோடு, அந்த வன்முறையை நிகழ்த்தி அவளைக் குழந்தைக்குத் தந்தையாக்கியவனும் பராமரிக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. இது தவறான தீர்ப்பு என்றும், தனது கட்சிக்காரரை இரண்டாவது முறையாக சட்டம் தண்டித்துள்ளது என்றும் அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

பிறழ்வச்சத்தின் ஆரங்கள்: டலிலோவின் ஹோம் ரன்

“நீங்கள் பாஸ்டன் வந்து எத்தனை காலம் ஆகிறது?”: அப்போதுதான் அறிமுகமாகிப் பழகிக் கொண்டிருப்பவர்கள் பொதுவாய்ப் பேசிக்கொண்டிருக்கும்போது எப்போதும் கேட்கும் தவிர்க்க முடியாத இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நான் சிறிது அவகாசம் எடுத்துக் கொள்ளும் கட்டத்தை நெருங்கி விட்டது என் ஆயுள். ஆம், எனக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது, நான் பாஸ்டனுக்கு குடிபெயர்ந்தும் பல நாட்களாகிவிட்டன.

அமெரிக்கத்தனங்கள் பலவற்றின் அறிமுகங்கள் போலவே என் ஷ்லாக்பல்வுஸ்ட்ஸைன் ஞானோதயமும் (Schlagballewusstsein, பேஸ்பால்-ஓர்மை, ஜான் அப்டைக் உருவாக்கிய சொல்) பாஸ்டன் ரெட் சாக்ஸ்களுக்கும் நியூ யார்க் யான்கீஸ்களுக்கும் இடையே அமெரிக்கன் லீக் சாம்பியன்ஷிப் சீரிஸில் கடும் போட்டி நிலவிய அந்தப் பித்தேறிய ஆண்டுகளின் பாஸ்டன் நகரில்தான் தோன்றியது. 1999ஆம் ஆண்டு ஏழாவது ஆட்டத்தின் எட்டாவது இன்னிங்ஸில் ரெட் சாக்ஸ் எதிர்பாராத வகையில் பிட்டுக்கொண்டபோது துவங்கி (யான்கீஸ் அந்த ஆண்டு பதினொன்றாவது ஆட்டத்தின் பிற்பகுதியில் தொடரை வென்றார்கள்), அடுத்த ஆண்டு மூன்று ஆட்டங்கள் பின்தங்கி இருந்த ரெட் சாக்ஸ் அதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பரபரப்பான வெற்றிகள் பெற்று முன்னிலையடைந்தபோது வலுப்பெற்று, விமோசனமே கிடையாது என்று நினைத்துக் கொண்டிருந்த “பாம்பினோவின் சாபம்” முடிவுக்கு வரும் வகையில் 2004ஆம் ஆண்டு இறுதியில் வர்ல்ட் சீரிஸ் வென்றபோது உச்சம் தொட்டது. அவை வீரம் சொறிந்த நாட்கள், யான்கீஸ், ரெட் சாக்ஸ் அணிகளுக்கிடையே நிலவிய பகைமையை விவரிக்க ஒரு நவீன ஹோமர் பிறந்து வர வேண்டும்.

புலன் விசாரணை

இன்று புரட்டாசியின் மழை அதிகாலை. மெல்லிய குளிர் மாறி விடியவிடிய புழுக்கம் ஏறிவருகிறது. மென்குளிர் காற்று. வாசலில் மண்ணோடு குழைந்த நீரின் மணம் உணர்ந்து புன்னகைத்தேன்.கோலம் வரையும்வரை வேறுமணத்தை எதிர்பார்த்து ஏமாந்தேன். வெந்நீரா?தண் நீரா? என்று மனம் சோழி போட்டு பார்த்துக் கொண்டிருந்தது. நீராவி வெண்புகையாக எழுந்து மேற்கே கொல்லிமலைக் குன்றுகளை பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டிருந்தது. கிழக்கே பச்சைமலைக்குன்றுகளுக்கு மேல ஒளியெழ இன்னும் நேரமிருக்கிறது.

இருளில் அமைதியிலிருக்கிறது

கருங்குயில் கீதம், ககன வெளி நடனம்

ஒன்றை நோக்கி ஒன்று செல்கையில் அவற்றின் தீவிரம், அவை வெளிப்படுத்தும் ஆற்றல், இயற்பியலுக்கு (Physics), அதிலும் முக்கியமாக தூலத்தைக் கடந்ததின் (Metaphysics) ஒரு பகுதியான பேரண்டத்தின் பிறப்பை அறிய ஒரு வழி. மொத்தமான எடையில், அதாவது, ஆதவனைப் போல சுமார் 29 மடங்கு மற்றும் 36 மடங்கு எடை கொண்ட அவை, ஒரே கருந்துளையாக இணைந்து ஆதவனைப் போல் 62 மடங்கு எடையாகி 3 மடங்கு ஈர்ப்பு அலைகள் கொண்டு மிகுந்தன. காலவெளியில் ஈர்ப்பு அலைகள் என்பவை ஒலி அலைகள் அல்ல; அவை நடுக்கங்கள்-நில நடுக்கங்களைப் போல் ஓரிடத்திலிருந்து வேறிடம் கடக்கும் போது  மெலிதாகி விடுகின்றன.

அருளிச்செயல்களில் அணைகட்டுதல்

பாசுரத்தின் நான்கு அடிகளும் ‘வெற்பு’ என்னும் ஒரே எதுகை பெற்று வரும். வெற்பு என்பது மலையைக் குறிக்கும். இப்பாசுரத்தில் மந்தர மலையை எடுத்துக் கடலைக் கலக்கியதும், வானரர்களைக் கொண்டு மலைகளை எடுத்து தெற்குக் கடலிலே அணைகட்டியதும், மலையாலே சூழப்பட்ட இலங்கையின் அரணை அழித்ததும், கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்ததும் சொல்லப்படுகின்றன.

”வெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய், அதன்றியும்
வெற்பெடுத்து வேலைநீர் வரம்புகட்டி வேலை சூழ்

க்ரேஸ் பேலி – பெரும் கலக்கங்கள்

அவர் புழங்கிய ஆர்வலர் வட்டங்களில், அவர் சந்தித்திருந்த பெண்ணியவாதிகளில் சில இளைஞர்களைப் போல அல்லாது, பேலி தாய் என்னும் நிலையை நசுக்கும் அமைப்பாக ஒரு போதும் பார்த்ததில்லை. குழந்தை வளர்ப்பு என்பதை அவர் ஒரு வகை வேலை என்று புரிந்து கொண்டிருந்தார் – சலிப்பூட்டுவது, ஓய்ச்சலைக் கொணர்வது, நன்றியேதும் கொணராதது, இதை அவருடைய பல கதைகள் வெளிப்படுத்துகின்றன….இருப்பினும், குழந்தைகளைப் பராமரிப்பது என்பது கொணர்ந்த உணர்ச்சிகளையும், மனத் தெளிவுகளையும் அவர் பெரிதும் விரும்பினார். அவருடைய புனைவுகளில், குழந்தை வளர்ப்பின் எழிலையும், சாதாரணத் தன்மையையும் எல்லாம் கவனித்தபடியே, அதைப் பெருமையுள்ளதாகவே சித்திரித்தார். தாய் எனும் நிலை, பேலியைப் பொறுத்து, ஒரு கலவையான ஆசீர்வதிப்பு, மகிழ்ச்சியும் பெரும் சினமும் துக்கமும் கலந்து கிட்டும் ஒரு அனுபவம். அது உலக வாழ்வில் குறைகள் கொண்ட, ஆனால் இறுதியில் பயனளிக்கும் இன்னொரு வழி.

தேனீக்களும் நம்மைப் போன்றவையே

முழு ஒப்புதல்: ட்ரோன் ஈயின் ஆண்குறி முனை பிய்த்துக் கொண்டு ராணித் தேனீயின் யோனிக்குள் வீழ்கிறது. மனித இனத்தில் இவ்வாறு நிகழ்வதில்லை.  இருப்பினும் ஒரு சில ஒற்றுமைகள் உள்ளன. கலவிக்கென மட்டுமே தயாராகவிருந்து,வேறு வேலை வெட்டியேதுமின்றி, டீவி பார்த்துக்கொண்டு, வானைத் தொடும் உச்சக்கணத்திற்காக காத்திருக்கும் ஒரு சில ஆண்களைப் போலவே. கலவிக்குப் பிறகு ஆண் தேனீக்கள் இறந்து போகின்றன. (ஆண்குறி விபத்து பற்றி மேற்கூறியுள்ளதைப் பாருங்கள்).

மேலும் குடும்பத்தின் மீதான விசுவாசத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்! தாய் தேனீயின் ஆர்ப்பாட்டமான அந்த ஒரு இரவுக்குப் பிறகு, காலனி மொத்தமும் அவளை ராஜ மரியாதையோடு நடத்தும். சந்தேகமேயின்றி, நம்மில் பலர் தம் தாயார்களை நடத்துவதைக் காட்டிலும் சிறப்பாகவே கவனிக்கும்.

மகரந்தம்

டாலர் இருந்தாலே போதும். 130 நாடுகளில் விசா இல்லாமல் பயணம் செய்ய உதவும் கடவுச்சீட்டைப் (பாஸ்போர்ட்) பெறலாம். செயிண்ட் கிட்ஸ் போன்ற கரிபியன் தீவுகள் தம் நாட்டின் கடவுச் சீட்டுகளை விற்கின்றன. மால்டா, மாண்டெநெக்ரோ போன்ற யூரோப்பியச் சிறு நகர அரசுகளும் இதில் இறங்கியுள்ளன. அமெரிக்காவே அரை மிலியன் டாலர் முதலீட்டுக்கு குடியிருக்க வழி செய்கிறதாம். இராக்கியர்கள், லிபியர்கள், சீனர்கள், மாஸ்கோவியர்கள் இன்னும் பற்பல நாடுகளின் மக்களுக்கு உதவும் மசை. அமெரிக்கர்கள் கூடப் பல நாடுகளில் நுழைய இந்த மாற்று கடவுச் சீட்டுகளைப் பயன்படுத்துகிறார்களாம். குஷ்னரும் சீன பிலியனேர்களும் இந்தத் திட்டத்தைத்தான்…

நரம்புத் தூண்டல்- மருத்துவ சாதனங்களும் சாதனைகளும்

மின்முனைகளை மூளையின் உட்பாகங்களின் பதிப்பது வலிப்பு, ஸ்கிட்ஸஃப்ரீனியா போன்ற வியாதிகளை கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் உதவும். சில மூளைபகுதிகளைத் தூண்டினால் வலியுணர்வைத்  துண்டிக்கலாம் என்பது  தற்செயலாக தெரிய வந்தது. அதன் பின் தலாமஸ்  எனும் மூளைப் பகுதியின் பல பாகங்களில் மின் நுனியை பொருத்துவதின் மூலம்  மருந்தினால் கட்டுப்படுத்த முடியாத, நீண்ட காலமாகத் தொடரும் வலியைக் குறைக்க முடியும் என்பது தெரிந்தது. … பார்க்கின்சன் வியாதியினால் ஏற்படும் நடுக்கத்தை செரிப்ரல் பெடன்க்குள் எனும் கீழ்ப்பாகத்தை வெட்டுவதின் மூலம் குறைக்க முடியும்.  ஒரு சமயம் இவ்வறுவை சிகிச்சையை கூப்பர் எனும் அமெரிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் செய்து கொண்டிருக்கும்போது  சிக்கலேற்பட்டு  தலாமஸ் பகுதி பாதிக்கப்பட்டது. அதனால் சிகிச்சை முடியுமுன்னரே நிறுத்தப்பட்டது. மயக்கம் தெளிந்த பின் அப்பிணியாளரின் கை நடுக்கமும்  இறுக்கமும் முற்றிலும் குணமானது தெரிய வந்தது.

கோரிப்பாளயத்தின் கதை

மதுரை மாநகரின் மையத்தில், தன்னை நாடி வரும் எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக, அவர்களின் பிணிகளைப் போக்கி ஆறுதல் அளிக்கும் ரட்சகனாக, எண்ணற்ற தனது கருணைக் கரங்கள் மூலமாக நிழல்பரப்பி அரவணைக்கும் ஆல விருட்சமாய் இருப்பது, “கோரிப்பாளையம் தர்ஹா”. தர்ஹாவோடும், தர்ஹாவைச் சுற்றியும் வளரும் நகரத்தின், அதன் மனிதர்களின் கதையைப் பேசுகிறது எஸ்.அர்ஷியா எழுதிய “சொட்டாங்கல்” என்னும் புதினம். சொட்டாங்கல் விளையாட்டில் ஒரு கல்லைத் தவற விட்டாலும் தோற்றதாகத் தான் அர்த்தம். அது போலவே மேலும் கீழுமாய் தூக்கியடிக்கப்படும் வாழ்க்கையில்…