சில்லு பொருத்தப்படாத அந்த பெண் ஒரு பாதுகாப்புக் கேமரா பக்கமாகக் கடந்து சென்றாள் . நகரம் அவள் முகத்தை நுட்பமாக ஆராய்ந்தது .அவள் கண்களின் வெண் படலம் நீலஒளி வழித்தடத்தில் கருமையாக நிறம்மாறித் தெரிந்தது . கடும் ஜுரம் தாக்கிய உடலையும் , குளிரில் விரைத்துப்போன கை கால் விரல்களையும் அகச் சிவப்புக் (infra red ) கதிர்கள் காட்டின – அவள் உடனடி மருத்துவக் கவனிப்பு தேவைப்படக்கூடிய மனுஷி என்று அடையாளம் காணப்பட்டாள் .