பலரும் என் சகோதரியின் கைகளைப் பார்த்து அவற்றை நேசிக்கத் துவங்குகிறார்கள். அவளால் ஒரு செங்கல்லை இரண்டாக உடைக்க முடியும். எங்கள் சகோதரனுக்கு 30 வயதாகிற போது, அவன் அவளோடு தங்கி இருக்க வந்தான். தான் மணந்திருத்த பெண்ணை விட்டு விலக அவன் முடிவு செய்திருந்தான், என் சகோதரி வாழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு சிறிய ஏரியில் மூழ்கி இறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவள் சொன்னாள், “அது முழுக்க உளை சேறாக இருக்கிறது, நீ ரொம்ப தூரம் உள்ளே இறங்கி நடந்தால்தால் ஏதோ கொஞ்சம் ஆழம் கிட்டும், அதில் மூழ்குவது உனக்குப் பெரும் பாடாக இருக்கும்.” எங்கள் சகோதரன் தலையைப் பின்னே சாய்த்துப் பெருஞ்சிரிப்பாகச் சிரித்தான்.
Author: லாரி ஸ்டோன்
நுழைவு
என்னோடு வாழும் மனிதர், சமையலறையில் இருந்தார், அவரது கண்களில் வினோதமான உணர்வு தோன்றியது. அவர், “என் கால் சராய் கிழிந்து விட்டது,” என்றார். ஒரு முழங்கால் பகுதி அருகே மெல்லிய கிழிசல் இருந்தது, தோலிலும் ஒரு வெட்டு தெரிந்தது. நான் அந்த உடுப்பை, கடைக்குப் போக உபயோகிக்கும் பையில் இருந்த, கிழிந்திருந்த வேறு உடுப்புகளோடு போட்டேன். அவர், “நிஜமாகவா?” என்றார். நாங்கள் ஸ்காட்ஸ்கேலில் இருந்த மேஸிஸ் கடைக்கு ஓட்டிச் சென்றோம்.
ஏதோ நடக்கிறதே அங்கிருந்து சில தபால் அட்டைகள்
என்னோடு வாழும் ஆண், வீட்டுப் பூனைகள் போய் விடும், பிறகு திரும்பாது என்று கவலைப்படுகிறார், ஏனெனில் ஒருக்கால் அவருமே அதையே செய்யக் கூடியவர்தான். ஒரு நாள் அவர் எனக்கு லிடியா டேவிஸின் கதை ஒன்றைப் படித்துக் காட்டினார். அதில் கதை சொல்பவர், விவாஹ ரத்து ஆனவர், தன் கணவரின் தொண்டையில் சிக்கிக் கொண்ட ஒரு மீன் எலும்பை நினைவு கூர்கிறார். ப்ரெட்டும் தண்ணீரும் கொண்டு அதை அகற்றச் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை, அவர்கள் பாரிஸ் நகரத்தின் தெருக்களில் வெளிப்படுகிறார்கள், அங்கே அவர்கள் ஒரு மருத்துவ மனைக்கு வழி காட்டி அனுப்பப்படுகிறார்கள்.