ஒளியும் ஒலியும்

ஒளியினால் ஆன இந்த தூதுவலை சூரியனையும் பூமியையும் மட்டும் இணைக்கவில்லை. இந்த வலை நமது பிரபஞ்சம் முழுவதையும் இணைத்துள்ளது. நம் பூமி பால்வழித்திரளில் குடியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து ஆத்தூருக்கு ஐ.எஸ்.டி வருவது போல பல கோடி மைல்கள் அப்பால் உள்ள அடுத்த கேலக்ஸியில் இருந்து புவிக்கு தூதைச் சுமந்து வருகிறது ஒளி. அப்பால். அதற்கும் அப்பால். அப்பாலுக்கப்பால் உள்ள இடங்களில் இருந்து எல்லாம் வருகிறது.

லோக மாயை!

எலிவேடரிலிருந்து வெளியில் வரும் பொழுது பார்த்தாள், அந்த ரஷ்ய மூதாட்டி, கட்டிடத்தின் முன் கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்க் கொண்டிருந்தாள்.மேகா ஓட்டமும் நடையுமாக முன் கதவை அடைந்தாள்.

மிகச் சரியாக அதே நேரத்தில் கீழ் தளத்தைச் சேர்ந்த ஏதொ வீட்டிலிருந்து ஒரு இளம் தாய், தன் இரண்டு வயது குழந்தையுடனும், அதன் மூன்று சக்கர வண்டியுடனும்,அந்த கனமான கதவுடன் போராடிக் கொண்டிருந்தாள். இவள் கதவைப் பிடித்துக் கொண்டாள், பார்வை வெளியை விட்டு அகலவில்லை. அம்மா சைகிளுடன் வெளியே போனாள், நன்றியுடனும்,புன்னகையுடனும். அந்த குழந்தை உள்ளேயே நின்று கொண்டு வெளியே போக மறுத்தது. அம்மா,அதை வெளியே வரச் சொல்லி மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த மூதாட்டி, கட்டிட முகப்பிற்கும், நுழைவாயிலுக்கும் இடையில் இருக்கும் இருபது அடி தூரத்தில் பாதியை கடந்து விட்டிருந்தாள்.

மேற்கு வங்கத்தின் வழியில் செல்கிறதா தமிழ்நாடு?

ஏற்கெனவே, புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படாததாலும்,மத்தியகிழக்கு பகுதிகளில் நிலவும் சூழலாலும், ஐடி தொழிலில் ஏற்பட்டுள்ள சரிவாலும் தமிழ்நாடு வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ளது.இங்குள்ள கட்சிகளோ, இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மொழிவெறியையும், தில்லிக்கு எதிரான உணர்வையும் தூண்டுகிறார்கள். இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம்-காட்டுக் கொள்ளையன் வீரப்பனை ஆதரித்த சக்திகள் எல்லாம் கூடங்குளம்,நெடுவாசல் போராட்டங்களில் தீவிரமாக பங்கெடுப்பதுதான். அமெரிக்கா,ஐரோப்பா நாடுகளிலிருந்து நிதி பெறும் பல என்ஜீஓக்கள் இப்போராட்டங்களில் மிகவும் ஈடுபட்டுள்ளன.

இனிக்கும் முத்தம்

குனிந்து தரையைப் பார்த்தபடி உதட்டைப்பிதுக்கிக் கொண்டிருந்தவளை சிஸ்டர் திரும்பிப் பார்த்து புன்னகைத்தபடி மலரைப் பறித்து கூடையில் போட்டார். கொசுக்கள் எழுந்து பறந்து சூழ்ந்து வந்தன.

“காலையில அம்மாவோட சண்டைப் பிடிச்சியா?”

“இல்ல,”என்று பளிங்குக் கண்களைச் சிமிட்டினாள்.

“பின்ன ஏன் விளையாடப்பிடிக்கல?”

“வீட்டுக்குப் போனதும் பால் குடிச்சிட்டு தாத்தாவீட்டுக்கு போவேன்…இன்னிக்கு போகமுடியாது…அதனாலதான்….”என்று குனிந்தவளின் கைக்கூடையில்வெண்ணிற அடுக்குமல்லி விழுந்தது.

“ஊருக்குபோனா வரப்போறாங்க….”

“இனிமே வரவேமாட்டாராம்…”

அமெரிக்கர்களால் ஏன் சேமிக்க முடியவில்லை?

சுருக்கமாக சொல்வதென்றால், அமெரிக்காவில் சேமிப்பு குறைவாயிருப்பது. சேமிக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள்; சேமிப்பதில் இஷ்டமில்லாதவர்கள் என்ற இரண்டு வகையினரால். சேமிக்க முடிந்தும் சேமிக்காமலிருப்பவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பலவழிகளுள்ளன. சேமிப்பு திட்டங்கள்,, செலவுக்கு முன்பே சேமிப்பில் ஓரளவு பணத்தை சேர்த்தல் போன்ற பல வழிகளுள்ளன. ஆனால், சேமிக்க இயலாதவர்களின் நிலையை நிவாரணம் செய்யக்கூடிய வழிகளான வரிக்குறைப்பு, பொருட்கள் விலை குறைப்பு, வருமான அதிகரிப்பு, பொருளாதார சலுகைகள் ஆகியவைகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக தெரியவில்லை. ஏழ்மையை எதிர்த்து போராட்டம் என்பது தீர்க்க முடியாததாக இருப்பது போல் அமெரிக்கர்களை சேமிக்க வைப்பதும் தீர்க்க முடியாததாகி விடுமோ என்று நினைக்க தோன்றுகிறது.

இந்தியர்களின் மரபணு வரைபடம் (ஜீனோமிக் மாப்பிங்)

எந்த ஒரு வர்த்தக நிறுவனமும் லாபத்தை எதிர் நோக்கியே தொடங்கப்படுகிறது. குளோபல் ஜீனும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் தொகை, புற்று நோய் புள்ளி விவரம், புதிய மருந்துகளை கண்டு பிடிப்பதற்காக ஒதுக்கப்படும் நிதி போன்றவைகளை கணக்கிட்டு இந்தியா புற்று நோய் மருந்து தயாரிப்பிற்காகவும், புற்று நோய் நிவாரரணத்திற்காகவும் வருடத்திற்கு 1.9 பில்லியன் டாலர் செலவழிக்கும் என்று இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் எதிர்பார்கின்றனர். இத்துடன், சீனா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளையும் சேர்த்துக் கொண்டால் ஒதுக்கப்படும் தொகை எட்டு பில்லியன் டாலருக்கும் மேலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வருடத்திற்கு 14 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் இந்த நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

ஓடு மீன் ஓட..

2017 ஆம் ஆண்டு, அனில் அம்பானி, ராகுல் பஜாஜ் போன்ற தொழிலதிபர்களை விடப் பெரிய பணக்காரர் ஒருவர் புதிதாக உருவாகியிருக்கிறார். அவர் ஒரு பலசரக்குக்கடை முதலாளி. மார்ச் மாதம் அவர் குழுமத்தின் பங்குகள் வெற்றிகரமாக பங்குச் சந்தையில் வெளியிடப்பட்டு, முதலீட்டாளர்களுக்கு 100%க்கும் அதிகமான லாபம் ஈட்டித் தந்திருக்கிறது மும்பை டீமார்ட் என்னும் சில்லறை வணிகக் குழுமத்தின் தலைவர் ராதாகிருஷ்ண தமானி தான் அவர்.

குளக்கரை

டிஜிடல் இந்தியா என்ற கனவை நடைமுறைபடுத்த மோடி அரசு மிக துரிதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணமற்ற வணிகம் என்பது டிஜிடல் இந்தியாவின் ஆதார கூறுகளில் ஒன்று. அது சீராக நடைபெற தொய்வில்லாத இணைய வசதி எப்போதும் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக வியாபார நிறுவனங்களுக்கு ஸ்திரமான இணைய சேவையும், தொடர்பும் இரவு பகலாக கிடைக்கும் என்ற நம்பிக்கை வர வேண்டும்.

அதே சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வரக் கூடிய காலங்களிலும், இடங்களிலும் இதே அரசு இணைய தொடர்புகளை முழுவதுமாக முடக்குவதும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக மக்கள் குறைந்த அவகாசத்தில் தங்களை ஒருங்கிணைப்பதற்கு செல்பேசி இணைய தொடர்புகளை தொடர்ச்சியாக அரசு பல இடங்க்களில் கடந்த 2 வருடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல வாரங்கள் முடக்கியுள்ளது.

தானோட்டிக் கார்கள் – தொழில்நுட்ப அறிமுகம்

பெரும்பாலும் அறிவு என்றால் என்னவென்று சொல்வது கடினம். மேலும், சில சமயம், நாம் ‘மூளை இருக்கா?” என்றும் சொல்வதுண்டு, அறிவுக்கும் மூளைக்கும் சம்பந்தம் உண்டு என்று நாமறிவோம். ஆனால், இந்தச் சம்பந்தத்தைத் தெளிவாகச் சொல்ல பெரும்பாலும் தடுமாறுவோம். மனித மூளை மிகவும் சிக்கலானது – மனித அறிவு என்பதும் அதைவிடச் சிக்கலானது. மனித மூளை, பல்வேறு விஷயங்களைச் செய்யும் ஒரு முக்கிய உறுப்பு. ஆனால், மனித மூளையைப் பற்றிய உடலியலுக்கு இங்கு இடமில்லை. இந்தப் பகுதியில், மனித அறிவின் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம். இந்தப் புரிதலே தானோட்டிக் கார்களின் மென்பொருளைப் புரிந்து கொள்ள உதவும்.

அம்மா…

கிளம்புவதற்காக சற்று நகர்ந்தபின் அம்மாவை திரும்பிப் பார்த்தேன். கூடாது என்று தடுத்த உறவினர்களையும் வெட்டியானின் சைகைகளையும் மீறி மீண்டும் திரும்பிப் பார்த்தேன். திரும்பிப் பார்க்கக் கூடாதா? திரும்பிப் பார்த்தல் அன்றி இங்கு வேறென்ன இருக்கிறது? அடுத்த நொடியின் மீதேறி நிற்க, அதனடியில் இந்த நொடியும், இதுவரையிலான நொடிகளும் தானே ஆதாரம்? திரும்பிப் பார்க்கக்கூடாதாம்…திரும்பிப் பார்த்தேன்…
திரும்பிப் பார்த்தலே காலத்தின் வினை என்பதால் விரும்பி மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். கர்மவெளியில் காற்றுவழியில் அம்மாவின் அடுத்த பயணம் துவங்கி விட்டது என்று அறிவிப்பது போல் புகை மேலெழும்பி பரவத்துவங்கியிருந்தது.

கடலிற்கான உரம், இரும்பு

நாம் சின்னப்பிள்ளையாக இருக்கையில் எதையேனும் போட்டு உடைத்துவிட்டு‌, பின்னர் யாரும் பார்த்து திட்டப் போகிறார்களே என்று அதை மீண்டும் பழையபடி ஆக்க முயன்று, முடியாமற்போய் கையைப் பிசைந்தபடி நின்றிருப்போம் அல்லவா? அப்படித்தான் பூமியை செய்து வைத்திருக்கிறோம். ஆரம்பித்த ஜோரில் ஜே‌ ஜே என்று‌ எல்லாவற்றையும் அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்து, “கடலிற்கான உரம், இரும்பு”

சித்திர சுவர் நெடுஞ்சேனை

தேவரையும் மருள் கொள்ளச்செய்யும் அழகுடைய பெண்கள், அணிகலன் கள் அணியாமல், பூக்களை உதிர்ந்து விட்ட, இலையுதிர் கால கொம்புகள் போல் அவ்வூர்வலத்தில் சென்றார்கள்.

தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர்,
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார்.

இப்படி காட்சிகளை மாபெறும் உயரத்தில், பிரமாண்டத்தில் வானை மறைக்குமாறு சொல்லிவருகின்ற கம்பர், ஓர் இடத்தில் சரசரவென இறங்கி, இயல்பாக, எளிய ஆனால் புன்னகைக்க வைக்கும் ஓர் சித்திரத்தைக் காட்டுகிறார்.

தசம்

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று முதுமொழிக்காரர் கூடலூர்க்கிழார் இயற்றியது. பத்து அதிகாரங்கள். ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து குறள் தாழிசைச் செய்யுள்கள். அதிகாரத் தலைப்புகள் சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து, நல் கூர்ந்த பத்து, தண்டப் பத்து என்பன.

எளிய பத்தில் ஒரு பாடல்- ‘உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது!’

மிக்க உணவை விரும்புகிறவருக்கு மிகுந்த நோய் எளிதில் உண்டாகும் என்பதாம் பொருள். கொங்கு நாட்டில் ஒரு கல்யாண விருந்தில் உட்கார்ந்தால் நிறையப் பேர் நோயாளிகள் என்பது தெரியும். நல்கூர்ந்த அதிகாரப் பத்தில் ஒரு பாடல், ‘சொல் செல்லா வழிச் சொலவு நல்கூர்ந்தற்று’ என்கிறது.

தன் சொல் மதிக்கப்படாத இடத்தில் ஒன்றைச் சொல்லுதல் வறுமையுறும் என்பது பொருள். இந்தப் பாடலில் ‘சொலவு’ என்றொரு பழைய ஆனால் இன்று நமக்கு நூதனமாகத் தெரியும் புதிய சொல்லை அறிமுகம் ஆகிறோம். சொலவு என்றால் சொல்லுதல் என்று அறிந்து கொள்கிறோம். சொலவு எனும் சொல்லின் உடன் பிறப்புகளே சொலவம், சொலவடை என்று உணர முடியும்.

பேருரை (A Lecture Tour)

அரங்கு நிறைந்தது. காட்சி ஆரம்பமானது. இயக்குனர் அனைவரையும் வியக்கவைத்தான். அவனது மாயவித்தைகளை எல்லோரும் விரும்பினர். மூக்கிலிருந்து நீண்ட கைக்குட்டை ஒன்றை உருவி எடுத்தான், அரங்கின் பின்னால் இருந்த ஒரு பாட்டியின் பையிலிருந்து கிளாவர் ராஜாவை உருவி எடுத்தான். மேசை ஒன்றை கைதொடாமலேயே மேடையில் நடக்கச் செய்தான். இறுதியாக மேடையின் கீழே இருந்த இரகசிய வாயில் வழியே மறைந்துபோனான். கூட்டம் கூச்சலிட்டது. இடிமுழக்கமென கைதட்டியது. இப்போது மிருகங்களைக் காண்பிக்க‌வேண்டும். அவனே ஒவ்வொன்றாகக் கொண்டுவந்தான். நான் மேடையில் அவற்றை அறிமுகம் செய்ய வேண்டும். இயக்குனரின் அளவுக்கு என்னால் வெற்றி பெற முடியாது என்று உடனடியாகத் தோன்றியது. கூட்டத்தில் ஓரிரு சிந்தனையாளரேனும் என் அறிமுகத்தை பாராட்டக் கூடும். எனவே நான் கவலை கொள்வதில் அரத்தமில்லை

யாருமற்ற சாலையில்

சற்றுத் தொலைவில்
பறவை ஒன்று நடந்தபடியே
சாலையைக் கடந்தது
அது பூமியில் தன் மெல்லிய
கால்தடம் பதித்து நடந்ததை
அந்த பச்சை பிரபஞ்சம்
பார்த்துக் கொண்டிருந்தது.

மின்னணு வன்முறை

ஆகவே உங்கள் பிள்ளைகள் எந்த பள்ளியில்படிக்கவேண்டும் ,அவர்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து முடிவு செய்யும் நீங்கள் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் சற்றே கவனியுங்கள்.

இவ்வகை விளையாட்டுகளின் தொழில்நுட்பத்தில் கவரப்பட்டு மின்னணு விளையாட்டுகளின் மீதான ஒரு தீரா மோகத்தையும் விளையாடியே ஆகவேண்டும் என்ற பிடிவாத குணத்தையும் ஏற்படுத்தும். இவைகளில் இருந்து அவர்களை மீட்பது கடினம் எனினும் புதிர்விளையாட்டுகள் ,ஓட்டம் மற்றும் சாகச விளையாட்டுகள் , கிரிக்கெட் , கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் மூலம் தற்காலிகமாக அவர்களை திசை திருப்பலாம். இவையும் ஒரு அளவுடன் இருந்தால் நலம் ,ஏனெனில் மின்னணு விளையாட்டுகள் அனைத்துமே மூளையை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டவையே.

ஒளிக்கடமை

நசீம் தான் என்னை அறைக்கு கொண்டு வந்து விட்டார். நீண்ட அரை மணி நேரப் பயணம். அவர் காலமான அவருடைய மூத்த மகள் பற்றி அப்பொழுது தான் பேச ஆரம்பித்தார்.

“நாங்கள் முதலில் டௌன் டவுன் அருகில் தான் இருந்தோம். ஆனால் என் மூத்த மகளுக்காக நாங்கள் நகர எல்லைக்கு மாற வேண்டியிருந்தது மற்றவர்களுக்கு தொங்கரவு இல்லாமல் இருக்க”

“அவளுக்கு கண் சரியாக தெரியாது, காதும் அப்படியே. எங்களை அவள் முழுமையாக பார்த்திருக்கிறாளா என்று தெரியாது. தீவிரமான கோபத்தில் இருந்த அவளை ஆசுவாசப் படுத்த அவளுக்கு மிகப்பெரிய ஒளிப் பிம்பகளையும் இரைச்சலான ஒலியையும் சேர்ப்பிக்க வேண்டி இருந்தது. 35mm திரை, மிக அதிக வோல்ட்ஸ்சில் அதிரும் போஸ் ஸ்பீக்கர்கள் மற்றவர்களை பாதிக்கு மில்லயா”