புத்திசாலியான முட்டாள்-II

1970களில் யூரி கெல்லர் ஒரு மகத்தான நிகழ்வாக அலையடித்தார். “மன சக்தியால்” அவர் கரண்டிகளை வளைத்தார். முத்திரையிடப்பட்ட உறைகளிலிருந்த சித்திரங்களை “ஞானப்பார்வையால்” கண்டறிந்து வரைந்தார். பிரிட்டனின் மிகச்சிறந்த அறிவியலாளர்கள் அவருடைய அதீதமன ஆற்றல்களுக்கு சான்று பகர்ந்தனர். ஜேம்ஸ் ராண்டி என்கிற தொழில்முறை மாயாஜால நிபுணர் கெல்லரை போலவே கரண்டிகளை வளைக்கும் வரை. ஆனால் ராண்டி அந்த வித்தைக்கு அதீதமனசக்தி தேவையில்லை என்பதையும் தேர்ந்த கையசைவுகளும் பார்ப்பவர்களின் கவனத்தை சிதறடித்து அதனை செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்பதுமே அவசியம் என விளக்கிய போது அறிவியலாளர்களின் முகங்களில் ஈயாடவில்லை.

புத்திசாலியான முட்டாள்-I

கார்டனர் முன் வைக்கும் எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். ஐசக் நியூட்டன் விவிலிய அடிப்படைவாத சிருஷ்டியை உண்மையென நம்பி அதனைக் குறித்து சில நுணுக்கமான கணித ஆராய்ச்சிகளைச் செய்தது; ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்கிய சர் ஆர்தர் கோனன் டாயில் சில பதின்ம சிறுமிகள் எடுத்த புகைப்பட தேவதைகளை உண்மையென நம்பி அது குறித்து ஒரு நூலையே எழுதியது அத்துடன் பாபி ஃபிஷரின் தீவிர யூத வெறுப்பு.

சாத்தியத்தை மீறிய சத்தியங்கள்

மனித ஜினோம் ப்ராஜெக்ட் ஆரம்பித்தபோது ‘இதனால் யூஜெனிக்ஸ் சாத்தியமாகும், நல்ல குடிமக்களைப் பிறப்பிக்க முடியும்’ என்றார்கள். பரம்பரை வியாதிகளைப் போக்குவதுடன், குற்றங்களைக் குறைத்து, சமுதாயத்தில் போக்கிரித்தனத்தை ஒழிக்க முடியும் என்று சொல்லப்பட்டது. 1989ல் ‘சயன்ஸ்’ பத்திரிகையின் தலையங்கத்திலேயே, ‘இனி மன நோய்கள் ஒழிந்துவிடும், ப்ளாட்பாரத்தில் படுத்துத் தூங்குபவர்கள் குறைந்துவிடுவார்கள்’ என்று சிவலிங்கத்தின் முன்னால் நின்ற மாணிக்கவாசகர் மாதிரி நெக்குருகினார்கள். நடந்ததா ?

விழப் போகிறது!

2004-ல் 2004FH என்ற பெயருள்ள 100 அடி அகலப் பாறை பூமியை மயிரிழையில் தப்பிச் சென்றது. 1992-ல் கைப்பர் வளையம் என்று புளூட்டோ வீட்டுக்கு அருகே மாபெரும் கற்களின் மாநாடு ஒன்று நடப்பதைக் கண்டுபிடித்தார்கள். இவற்றில் ஆயிரத்துக்கு மேற்பட்டவை, இங்கிருந்தே பார்க்கக்கூடிய அளவுக்குப் பெரியவை. இவற்றில் எது ஒன்று வந்து விழுந்தாலும் பூமிக்கு அத்துடன் ஜன கண மனதான்.

மரணமில்லாத மனிதன் மகிழ்ச்சியாக இருப்பானா?

மனித உடலுக்குத் தேவையான ஸ்பேர் பார்ட்களை வளர்த்து அறுவடை செய்யப் பண்ணைகள் இருக்கும். இவை முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இயங்கும். நாமக்கல்லில் ஒரு கிட்னி பண்ணை, நாகப்பட்டினத்தில் இதயப் பண்ணை. இப்போதே மனிதக் கருக்களிலிருந்து ஸ்டெம் செல்களைத் தயாரிக்க சீனா போன்ற நாடுகளில் சந்துக்கு சந்து ஆராய்ச்சி சாலைகள் உள்ளன. அவர்களிடம் ஃப்ரிஜ்ஜில் ஆயிரக் கணக்கில் உறைய வைத்த மனிதக் கருக்கள் இருப்பதால், முதலீடு செய்ய அமெரிக்க சேட்டுகள் பண மூட்டையுடன் அலைகிறார்கள்.

முறுகல் தோசை மனிதன்

நான்தான் நடுத்தர வயதின் மண்ணாங்கட்டி ஆகிக் கொண்டிருக்கிறேன் என்பதல்ல. என் நண்பர்கள் பலரும் – அதில் பலர் அக்மார்க் அறிவு ஜீவிகள் என்றே சொல்லத் தக்கவர்கள் – தங்களுக்கும் இதே பிரச்னை இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். ஸ்காட் கார்ப் போன்ற வலைப் பூவினரும் இதையேதான் சொல்கிறார்கள். ‘நெட் வந்த பிறகு என் படிக்கும் பழக்கம் மாறிவிட்டது. அதுகூடப் பரவாயில்லை; ஆனால் என் சிந்திக்கும் விதமே மாறிவிட்டதே!’ என்று அங்கலாய்க்கிறார்கள். ‘இனிமேல் என்னால் ஒரு டால்ஸ்டாய் நாவலைப் படிக்க முடியாது. ஒரு ப்ளாக்கூட நாலைந்து பாராவுக்கு மேல் இருந்தால் வயிறு நிரம்பிவிடுகிறது. மேலோட்டமாக சாம்பிள் பார்த்துவிட்டு அடுத்த சுட்டிக்குப் போய்விடுகிறேன்’.

மாய உறுப்புகள் நிறுவிய ஞான தரிசனம்

எதனை இந்த உலகத்தின் துயர் துடைக்காத தத்துவம் என்கிற மாதிரியாக ரூபர்ட் ஷெல்ட்ரேக்கும் எந்த தத்துவ சிந்தனையின் வெற்றியால் இந்தியாவில் அறிவியல் தேக்கநிலையை அடைந்தது என அவுட்லுக் கட்டுரையாளரும் கருதினார்களோ அதே தத்துவசிந்தனை துயர் துடைக்கும் செயல்முறையை உருவாக்கியதை நாம் காண்கிறோம். இந்திய தத்துவத்தின் ஒரு பெரிய கண்டடைதலே மாயை என்பது. இது உலகமே பொய் என்பதாக கடந்த இருநூறு ஆண்டுகளின் பொதுபுத்தியில் பதியவைக்கப்பட்டது. ஆனால் மாயை என்பது எப்படி நாம் புலன்களால் அடையும் ஒவ்வொன்றும் கட்டமைக்கப்படுகிறது என்பதை சுட்டுவது. அதனை தத்துவத்திலும் வாழ்க்கை முறையிலும் ஒரு கூறாக மாற்றியதன் மூலம் இந்திய ஞான மரபு ஒரு வலிமையான பண்பாட்டை உருவாக்கியது.

மனிதன் 2.0 எப்படி இருப்பான்?

ஆன்லைன் வாசகர்கள் ட்விட்டர் பற்றி அறியாமல் இருக்க முடியாது. ‘என்னுடைய பூனை பிங்க்கி காலையிலிருந்து பர்ர்..ர் என்று சப்தம் எழுப்புகிறது’ என்பது போன்ற மானாவாரியான செய்திகளுக்கிடையே சில சமயம் முத்து ரத்தினங்களும் சிக்குவதுண்டு. திடீரென்று ட்விட்டருக்கு ஞானம் பிறந்து, நீங்கள் என்ன மாதிரியான செய்திகளைப் படிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு, மலச்சிக்கல் பூனைகளையெல்லாம் வடிகட்டிவிட்டுக் கொடுத்தால்? அப்போது தகவல் ஓவர்லோடினால் வரும் நிரந்தரமான அரைப் பிரஞ்ஞை நிலையிலிருந்து மீண்டு, கௌதம புத்தர் போன்று எல்லாம் அறிந்த ஓர் உணர்வு நிலையை எட்டுவோம்.

மண் உண்ணும் செம்மலும் மாண்புடைத்தே

”அசுத்தம் ஏன் நல்லது” புத்தகத்தை எழுதிய டாக்டர் மேரி ரூபுஷ், நாம் குப்பை மேட்டிலேயே குடியிருக்க வேண்டும் என்று ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால், அவர் பாக்டீரியாக்கள் நமக்கு வெளியேயும், உள்ளேயும், நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் பரவியிருப்பதைச் சரியாகவே சுட்டிக்காட்டுகிறார். பெரும்பாலான நுண்ணுயிர்கள் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்துவதில்லை என்பதோடு, ஜீரண மண்டலம் போன்றவற்றில் குடியிருக்கும் நுண்ணுயிர்கள் நம் ஆரோக்கியத்திற்கு அவசியமான சத்துப் பொருள்களையும் உற்பத்தி செய்கின்றன.

மனிதன்+

பரிணாம இட்லிப் பானையில் மெல்ல மூளை வெந்து பக்குவப்படும் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஃபாஸ்ட் ட்ராக்கில் நாமே நம் பரிணாமத்தை அமைத்துக்கொள்ளலாம். இந்தப் போக்கு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. இண்டர்நெட்டில் புகுந்தவுடன் ஒரு தேன்கூட்டின் அறிவு போல் ஒத்து யோசித்து ஒரே மாதிரி செயல்படுகிறோம். ஒரே எம்.பி-3 பாட்டை லட்சம் பேர் பதிவிறக்கம் செய்கிறோம். அதிக நேரம் தூங்காமல் விழித்திருக்க, கவனத்தைக் கூர்தீட்டிக்கொள்ள, மருந்துகள் இருக்கின்றன. (சாப்பிடாதீர்கள்.)

சிதலும் எறும்பும் மூவறிவினவே

இந்தப் பரிசோதனைகள் அனல் பறக்கும் விவாதங்களைக் கிளப்பின: எறும்புகளால் காற்றில் வரும் ஓசைகளைக் கேட்க முடியுமா? அல்லது பியானோவைப் போன்ற திடப் பொருள்களின் வழியாக உருவாக்கப்படும் அதிர்வுகளை மட்டுமே அவற்றால் உணரமுடியுமா? அவை தங்களுக்குள் ‘பேச’, ஒலிகளை மேற்கண்ட எந்த வழியிலேனும் எந்த அளவுக்கு உபயோகிக்கின்றன? இவை பற்றிய உண்மைகளை நாம் இன்னமும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம்.

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே

கண்ணுக்குத் தெரியாத ஏஜெண்டுகளால் நாம் கட்டுப்படுத்தப்படுகிறோம் என்ற நம்பிக்கை நம்மை ஆவிகளின் உலகுக்கு அப்பாலும் இட்டுச் செல்கிறது. உயிர்களை மேலிருந்து கீழாக (ஒரு படியமைப்பில்) படைத்த ஒரு ’புத்திசாலித்தனமான வடிவமைப்பாளன்’கூட நம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஏஜெண்டே.

அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – இறுதிப் பகுதி

குளோபல் வார்மிங் என்ற அறிவியல் கருதுகோள் இன்றைய உலக அரசியலின் ஒரு பகுதியாக வெற்றிகரமாக நிறுவனப்படுத்தப்பட்டு விட்டது. குளோபல் வார்மிங் என்ற பெயரில் வெளியிலிருந்து வரும் அத்தனை அழுத்தங்களையும் பாரதம் நிராகரிக்க வேண்டும்.

கல்லா நீள்மொழிக் கதநாய்

ஒருவர் செய்வதைப் பார்த்து அதேபோலச் செய்யமுயலும் திறனுள்ள சில மிருகங்களுக்குப் பேசும் சக்தி உண்டு என்று தாங்கள் நிரூபித்திருப்பதாக விஞ்ஞானிகளிலேயே ஒரு பிரிவினர் அறிவிக்கக்கூடும். அப்படி நடந்தால், அது பற்றி நாம் வியப்படையக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – பகுதி 2

அரசியல் கலப்பற்ற அறிவியலாக இந்த விவாதம் இருந்திருந்தால் டாக்டர். மான் குழுவினரின் MBH98 வரைபடம் அடுத்த சில ஆண்டுகளிலேயே தவறான வழிமுறைகளை அடிப்படையாக்கியது என்று தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும்தான். ஆனால் குளோபல் வார்மிங் 1970லிருந்தே படிப்படியாக அரசியலாக்கப்பட்டு, 1988இல் IPCC மூலம் நிறுவனப்படுத்தப்பட்டு இருந்தது.

அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – பகுதி 1

பூமிப்பந்து சூடடைவது என்பது ஏதோ 20-30 வருட காலக்கணக்கில் முடிவு செய்யக்கூடியது அல்ல. ஏனெனில் பூமியின் வயது பல பில்லியன் வருடங்கள். பூமிப்பந்து எரிகுழம்பு வழிந்தோடும் பரப்பாக இருந்திருக்கிறது. பனியுகத்தில் பனிப்பாளங்களால் நிரப்பப்பட்டு இருந்திருக்கிறது. பிறகு மீண்டும் சூடாகியிருக்கிறது. பனிப்பாளமாய் இன்று இருக்கும் ஐஸ்லாந்தில் ஒருகாலத்தில் வைக்கிங்குகள் விவசாயம் செய்திருக்கிறார்கள்.

அறிவியல் கல்விக்கான சமுதாயத்தேவை

பிராந்திய இயற்கை வளங்களையும் அதனுடன் தன் வாழ்வு பின்னிப்பிணைந்து கிடப்பதையும் சிறிதும் உணராமல் நம் மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளிவந்து பட்டமும் பெற்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு அறிவியல் என்பது முற்றிலும் மேற்கத்திய விஷயம்; வெள்ளைக் கோட்டுடன் வெள்ளைத் தோலுடன் இணைந்த ஒரு பண்பாட்டு அன்னியம்.