ஒளியினால் ஆன இந்த தூதுவலை சூரியனையும் பூமியையும் மட்டும் இணைக்கவில்லை. இந்த வலை நமது பிரபஞ்சம் முழுவதையும் இணைத்துள்ளது. நம் பூமி பால்வழித்திரளில் குடியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து ஆத்தூருக்கு ஐ.எஸ்.டி வருவது போல பல கோடி மைல்கள் அப்பால் உள்ள அடுத்த கேலக்ஸியில் இருந்து புவிக்கு தூதைச் சுமந்து வருகிறது ஒளி. அப்பால். அதற்கும் அப்பால். அப்பாலுக்கப்பால் உள்ள இடங்களில் இருந்து எல்லாம் வருகிறது.
ஆசிரியர்: இளையா
அறிதலின் பேரிடர்
இந்த அறிதல் முறைமையின் அடிப்படையில் அடுத்து வரும் இன்னொரு புதிய பறவையை கவனிக்க ஆரம்பிக்கிறோம். அது வாயிலின் வழியே பறந்துவந்து அமர்ந்து கூ..கூ..கூ என்று இனிமையாக கூவுகிறது. சிலர் அந்த இசையில் மெய்மறக்கிறார்கள். வேறு ஒரு கூட்டம் முன்பு வந்த காகத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மரங்கள், விலங்குகள் என்று வரும் ஒவ்வொன்றையும் அவதானிக்கிறோம். இவ்வாறு சுவரின் அந்தப்புறம் இருந்து வரும் அனைத்து பொருட்களையும் இந்தப்புறம் அமர்ந்து அவதானிக்கிறோம். அந்த சிறுசிறு அவதானிப்பில் இருந்து கட்டி எழுப்பிய கோபுரங்கள்தான் இன்று நாம் காணும் ஒவ்வொரு அறிவுத்துறையும்.
நியூட்ரினோ
நம் சூரியனிலிருந்து கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் பூமியை வந்தடைகின்றன. சூரியனில் ஏற்படும் அணுக்கரு வினைகள் ஆற்றலை உமிழ்கின்றன. வெய்யோனின் ஆழத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள்– அதாவது புரோட்டான்கள்- இணைந்து ஹீலியம் அணுக்கருவை உண்டாக்குகின்றன. இந்த வினையில் உள்ள நிறை வித்தியாசம் ஆற்றலாக வெளிப்படுகிறது. மேலும் இந்த வினையில் எலக்ட்ரானின் எதிர்துகளான இரு பாசிட்ரான் துகள்களும் மற்றும் இரு நியூட்ரினோ துகள்களும் வெளிப்படுகின்றன.
இயற்பியலும் தத்துவமும்
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரு புதிய கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கொள்கை. இரண்டாவது குவாண்டம் கோட்பாடு. கரும்பொருள் நிறமாலையை (Spectrum of Blackbody Radiation) கிளாசிக்கல் அறிவியல் கொண்டு விளக்கமுடியவில்லை. நியூட்டனின் இயக்கவியல், தெர்மோடைனாமிக்ஸ், மின் காந்தக் கொள்கை எதுவும் இந்த நிகழ்வை விளக்க உதவவில்லை. புது கருத்தாக்கங்கள் தேவைப்பட்டன. மாக்ஸ் பிளாங்க் என்பவர் குவாண்டம் ஆற்றல் என்ற புது கருத்துருவைக் கொண்டு விளக்கினார்.
குறுகத் தரி
இன்று பல நானோ பொருட்கள் ஆய்வுப் பட்டறையிலிருந்து தெருவுக்கு வந்துவிட்டன. வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏ ஸி போன்ற நுகர்வு பொருட்களில் நானோ சில்வர் தொழில்நுட்பம் பயன்படுகிறது. கொலுசு வடிவில் வெள்ளி பெண்களின் பிரியமான தோழன். நானோ வடிவில் நல்ல கிருமி நாசினி. வாஷிங் மெஷினில் உள்ள சில்வர் அயனிகள் அழுக்குத் துணிகளில் உள்ள பாக்டீரியாவை கொல்கின்றன. இந்த அயனிகள் துணிகளின் மீது ஒரு மெல்லிய படலமாகப் படிந்து ஒரு மாத காலம் வரை பாக்டீரியாவுடன் தொடர்ந்து போராடி ஒரு பாதுகாப்பு வளையத்தை அளிக்கின்றன. .ஃபிரிட்ஜ் மற்றும் ஏ ஸி யில் உள்ள சில்வர் நானோ கோட்டிங் பாக்டீரியாவைக் கட்டுபடுத்துகின்றன. அழகுசாதனப் பொருட்களில் உள்ள நானோதுகள்கள் ரசாயனங்களை பொதி போல சுமந்து சென்று சருமத்தின் அடியில் உள்ள செல்களுக்கு போஷாக்கை அளிக்கின்றன…
முடிவற்ற படிகளில் ஏறுதல்
இந்த அகாடமியின் குறிக்கோள்கள் வளரும் நாடுகளில் அறிவியல் ஆய்வை மேம்படுத்ததுதல், வளர்ச்சியடைந்த நாடுகளுடன் அறிவியல் ஒப்பந்தங்கள், இளம் விஞ்ஞானிகளுக்கு விருதும், ஊக்கமும் அளித்தல் போன்றவை ஆகும். இன்னும் இருபது வருடங்களில் அறிவியலில் வளரும் நாடுகளின் பங்களிப்பு 30 சதவீதம் இருக்க வேண்டும் என்பது சி என் ஆர் ராவின் கனவு.
புதிர் அவிழும் கணங்கள்
ஃபெர்மா 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை. இவர் இரு காரியங்கள் செய்தார். ஒன்று உலகமே அறியும். இன்னொன்று யாருக்குமே தெரியாது. ஃபெர்மா சிக்கலான கணக்குகளுக்குத் தானே விடை கண்டுபிடிப்பார். பின் கணக்குகளின் விடைகளை நன்றாக அழித்து துடைத்துவிட்டு கணக்குகளை மட்டும் மற்ற கணிதவியலாளர்களிடம் சுற்றுக்கு விடுவார். அவை விடைகளுக்குப் பதிலாக பகையையும் வெறுப்பையும் சுமந்துகொண்டு வரும்.
ஒரு புதுவகை அறிவியல்
கணிதத்தின் இந்த 300 வருட பெரும் வெற்றியை கடவுள் கணக்கு வாத்தியாராகத்தான் இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கொண்டாடினர். இப்போது காலம் மாறிவிட்டது. அவர் ஏன் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியராக இருக்கக்கூடாது?
பெருவெடிப்பும் பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சும்
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அணுக்கரு துகள்களும் எலக்ட்ரான்களும் இணைந்து அணுக்கள் உருவாகின. அதன் பிறகு இந்தப் பிரபஞ்சம் ஒளி ஊடுருவிச் செல்லும் வெளியாக ஆனது. அதற்கு முன் ஒளி மீண்டும் மீண்டும் (பருப்பொருள்) துகள்களினால் சிதறக்கடிக்கப்பட்டது. அவை துகள்களுடன் பிணைக்கப்பட்டிருந்தது போன்ற ஒரு நிலை. பெருவெடிப்பில் இருந்து 380000 வருடங்கள் வரை பிரபஞ்சம் இந்த நிலையில் இருந்தது. எந்தப் புள்ளிகளிலிருந்து ஒளி வெளியை சுதந்திரமாக ஊடுருவ ஆரம்பித்ததோ அந்தப் புள்ளிகளை இறுதி ஓளிச்சிதறல் பரப்பு என்று கூறலாம். இந்தப் பரப்பிலிருந்து வெளியை ஊடுருவ ஆரம்பித்த ஆதி ஒளித்துகள்கள்தான் இன்று வெளியெங்கும் பரவியுள்ளது.