ஒளிநகல்

இது எந்த இடம்? எப்படி இங்கு வந்தேன்? டெக்ஸாஸிலிருந்து இங்கே ஏன் வந்தேன்? என்ன ஒரு குழப்பம்?எல்லாமே மாறித் தோன்றுகிறதே? என்னவோ நடக்கிறது, உள்ளிருந்து ஒரு ஊமைக்குரல் கேட்கிறது.புரியவில்லை கடவுளே, என்ன ஆகிக் கொண்டிருக்கிறது எனக்கு? எதிரே ஒரு கோயில்; ஸ்மரண் தன்னை அறியாமல் கை கூப்பினான்.அவனருகில் மாருதி கார் வந்து நின்றது.அழகிய இளம்பெண் ஒருத்தி இறங்கி‘ கெட்இன்’ என்றாள். இவன் திகைத்தான். அவளுடைய இறுக்கமான உடை இவனைப் போல பலரையும் இம்சித்திருக்கக்கூடும். ”இவள் யார்? ஏன் தன்னை காரில் ஏறச் சொல்கிறாள்?

சீனாவின் அடாவடிகளும் இந்தியாவின் சுணங்கலும் (குளக்கரை)

இந்திய அதிகாரிகள் இந்தியாவின் பெருங்கொள்ளையரைக் கைது செய்ய உதவுமாறு இண்டர்போலை அணுகிய போது இண்டர்போல் அந்த கோரிக்கைகளை அலசிப் பார்த்து அவற்றில் குறை உள்ளது என்றும் தன் அதிகாரிகளால் அந்தக் கோரிக்கைகளை ஏற்கவியலாது என்றும் தெரிவித்ததாகச் சில மாதங்கள் முன்பு செய்திகள் வந்ததைப் பார்த்திருப்பீர்கள். சில கொள்ளையர்கள் இந்திய அதிகாரிகள், அரசியலாளர்களின் உதவியால் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. இன்று வரை எந்தக் குற்றவாளியையும் இந்தியா திருப்பிக் கொண்டு வந்ததில்லை.
சீனாவின் செயல்களுக்கும் இந்தியாவின் கையறு நிலைக்கும் என்னவொரு வேறுபாடு?

‘திதி’ – கன்னடத் திரைப்படம் குறித்து

கி.ரா – வின் ஒரு கரிசல் நாவலை படித்து முடித்த ஒரு மனம் நிறை உணர்வு ததும்பியது படம் பார்த்து முடித்ததும். இத்தனை இயல்பாய், இத்தனை இயற்கையாய் ஒரு படம் எடுக்க முடியுமா?. படம் நெடுகிலும் கேமரா எங்கிருந்தது?. படத்தில் யாருமே நடிகர்கள் இல்லை. நோடேகொப்புலுவின் மனிதர்களையே படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் ராம் ரெட்டி. கதை கூட அங்கு நடந்த உண்மையான சம்பவம்தான். படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து, இறுதிக்காட்சி வரை ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகும், உண்மையும், இயல்பும்…ஒரு துளியும் செயற்கை கலக்காத, துருத்தித் தெரியும் காட்சிகளில்லாத…ஒரு அசல் கிராமம் மற்றும் அதன் மனிதர்கள். படத்தில் பின்னணி இசை என்ற ஒன்று கிடையாது.

மகரந்தம்: #மீ டூ இயக்கம்: பெண்கள் நிலை

ஹாலிவுடில் என்ன ஆனால் என்ன, என்னை அதெல்லாம் பாதிக்காது என்பது ஏராளமானவர்களின் அணுகலாக இருக்கும். அப்படிக் கருதினால் உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் எல்லாரும் எத்தனை பிழை செய்கிறீர்கள் என்று? உங்கள் வீடுகளுக்குள்ளும் ஊடகங்களிலும் வெளியாகி எங்கும் மக்களுக்கு ‘கேளிக்கை’யாகக் கிட்டுவன எல்லாம் இந்த ஹாலிவுடின் தயாரிப்புகள்தாம். அவை உங்கள் வாரிசுகளின் மனங்களை எல்லாம் வளைத்துத் தம் மதிப்பீடுகளை அவர்களிடம் பதிக்கின்றன.  உங்கள் பெண்களின் உடல் வடிவு, ஆண்களின் உடல் வடிவு ஆகியவை குறித்த பொது எதிர்பார்ப்புகள், சமூக உறவுகளில் நம் நடத்தைகள், எதிர்பார்ப்புகள், உறவுகளின் நியதிகள் என்று என்னென்னவோ ஹாலிவுட் படங்களால் மாற்றி அமைக்கப்படுகின்றன என்று தொடர்ந்து விளக்குகிறார்.  ஹாலிவுடின் தயாரிப்புகளைப் பார்க்க மறுக்கச் சொல்லி நம்மிடம் வாதிடுகிறார்.

பருவநிலை மாற்றத்துக்கு இந்தியா அளிக்கக்கூடிய விலை

இந்த ஆய்வு குறித்த விவாத பகுதியில் (‘Discussion’) கட்டுரையாளர்கள் அளிக்கும் பரிந்துரைகள் சிக்கலானவை- ஒவ்வொரு தேசமும் தன் கார்பன் உமிழ்வுகளின் மீது தன் கார்பன் சமூகவிலையைச் சுமத்தினால் (கார்பன் வரி என்று சொல்லலாம்), பயன் ஓரிடம் பாதிப்பு ஓரிடம் என்ற நிலையில் 5% மாற்றம்தான் ஏற்படும் என்கிறார்கள் (இந்தியாவின் கார்பன் சமூகவிலை 22% என்பதற்காக அது 22% கார்பன் வரி போட்டு பயனில்லை, அதன் உமிழ்வு கிட்டத்தட்ட 5% மட்டுமே. ஆனால் அதே சமயம் 30%க்கு மேல் கார்பன் உமிழும் சீனா 7% மட்டுமே கார்பன் சமூகவிலையும் கார்பன் வரியும் போட வேண்டியிருக்கும், இதனால் பயனில்லை.)

மித்ரா

மேனகா மித்ராவின் மீது தண்ணீரை ஊற்றிவிட்டு ஓடினாள். இவள் பின்னால் துரத்திக்கொண்டே ஓடினாள். அடுத்தவள்…அடுத்தவள் என்று விளையாட்டு வேகமெடுத்த நேரத்தில் சிஸ்டர் வந்து, “பொம்பளப் பிள்ளைகளா நீங்கள்…குளிக்கற எடத்தில இந்த ஆட்டமா …” என்று கத்தினார்.
முன்பக்கம் விளையாடியவர்கள் அமைதியாக, பின்னால் இவர்கள் எதையும் உணராமல் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
“அந்த ரெண்டு குமரியும் இங்க வா.”
“அப்படியே போய் க்ரௌண்டில் முட்டிப் போடு.” என்றார்.
இருவரும் பெட்டிக்கோட்டோடு முட்டிப்போட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
“இப்பவும் சிரிப்பா…நல்லா ஆடுங்க …” என்றபடி சுபாஷினி சென்றாள்.

அறச்சீற்றமும் அற ஆதாரமும்

ஒரு ஜென் கதை சொல்கிறார். சமுராய் ஒருவன் ஞானி ஒருவரிடம் சொர்க்கம் என்றால் என்ன, நரகம் என்றால் என்னவென்று விளக்கச் சொல்கிறான். உன்னைப் போன்ற முட்டாளுக்கு எல்லாம் அதை ஏன் நான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும், என்று கேட்கிறார் ஞானி. இதனால் ஆத்திரமடையும் சமுராய் கத்தியை எடுத்துக் கொண்டு அவரைக் கொல்லப் பாய்கிறான். “இதுதான் நரகம்,” என்கிறார் ஞானி. சமுராய் ஒரு கணம் தாமதிக்கிறான், உண்மை உறைக்கிறது. “இதுதான் சொர்க்கம்,” என்கிறார் ஞானி. கோபம் என்பது அவலம், அறியாமை, ஞானம் அதன் எதிரிடை. மேலும், ஆத்திரப்படுபவன் சுலபமாய் சூத்திரதாரிகளின் கைப்பாவையாவான்.

ரிச்சர்ட் தேலரின் Misbehaving: The Making of Behavioral Economics – புத்தக விமர்சனம்

மனித மனம் அங்கே ஒரு கணக்கு போடுகிறது. 1200 ரூபாய் சாமான் ஒன்று அறுநூறு ரூபாய்க்கு கிடைக்கும்போது பெரிய தொகை ஒன்று தள்ளுபடியாவதுபோல் தோன்றுகிறது. (பாதிக்குப் பாதி மிச்சம் செய்கிறோம்). ஆனால் 35000 ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும்போது ஒப்பீட்டளவில் அதே அறுநூறு ரூபாய் நமக்கு அவ்வளவு பெரிய தள்ளுபடியாய் தெரிவதில்லை. என்றைக்கு இருந்தாலும் என்ன வாங்கினாலும் அறுநூறு ரூபாயின் மதிப்பு அறுநூறு ரூபாய்தானே? ஆனால் நடைமுறையில் மனித மனம் அப்படி யோசிப்பதில்லை.

வாய்ப்புகள் என்னவாக இருக்கும்?

பலரும் என் சகோதரியின் கைகளைப் பார்த்து அவற்றை நேசிக்கத் துவங்குகிறார்கள். அவளால் ஒரு செங்கல்லை இரண்டாக உடைக்க முடியும். எங்கள் சகோதரனுக்கு 30 வயதாகிற போது, அவன் அவளோடு தங்கி இருக்க வந்தான். தான் மணந்திருத்த பெண்ணை விட்டு விலக அவன் முடிவு செய்திருந்தான், என் சகோதரி வாழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு சிறிய ஏரியில் மூழ்கி இறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவள் சொன்னாள், “அது முழுக்க உளை சேறாக இருக்கிறது, நீ ரொம்ப தூரம் உள்ளே இறங்கி நடந்தால்தால் ஏதோ கொஞ்சம் ஆழம் கிட்டும், அதில் மூழ்குவது உனக்குப் பெரும் பாடாக இருக்கும்.” எங்கள் சகோதரன் தலையைப் பின்னே சாய்த்துப் பெருஞ்சிரிப்பாகச் சிரித்தான்.

மஹாராஷ்டிராவின் சின்னம்

இந்த அணில் மஹாராஷ்டிர மாநிலத்தின் அடையாளமாக சொல்லப்படும் உயிரினம். சாதாரண அணிலின் முதுகில் இராமர் போட்ட மூன்று கோடுகள் என்றால், இந்த அணில் உடலெங்கும் பழுப்பு, செம்மஞ்சள், அரக்கு, கருப்பு என்று பல்வேறு வண்ணங்கள் கலந்து காணப்படுகின்றன. மலபாரின் ஜாம்பவான் அணில் குறித்த குறிப்பை இங்கே பார்க்கலாம்; படிக்கலாம்.

நட்பு

மறு நாள் அகமத் அழுவதை நிறுத்தியிருந்தான். எனவே எப்படியாவது தப்பி விடலாம் என்று நினைத்தேன்.
பி.டி பீரியடில் எல்லாரையும் புட்பால் விளையாடச் சொன்னார்கள். நான் வரப் போகும் ஆபத்து தெரியாமல் ஓரமாக ஓய்வெடுத்தேன்.
அகமத் குட்டியாக இருந்தான். எல்லார் பின்னாலும் ஓடினான். ஒரு நிலையில் பந்து அவனிடம் வந்த போது என்ன செய்வது தெரியாமல் முழித்தான். எல்லாரும் அவனைப் பார்த்துக் கத்தினார்கள்.

தான்சேன்

குருவிகளை கொல்லலாம் தவறில்லை..இல்லை இல்லை உளறுகிறேன்.அப்பா சொன்னது வேறு..குற்றவாளிகளை கொல்லலாம் தவறில்லை..அவர்கள் என்றும் திருந்துவதில்லை தான்சேன்..நூறுமுறைக்கு மேல் என்னிடம் அப்பா சொன்னது..அவர் சொல்லும் போது என் கண்களை உற்று நோக்கி என் சித்தம் அலையாதபடி என்னை அவர் சொற்கள் நோக்கி குவியச்செய்தபடி சொல்லுவார்..குற்றம் அவர்களது இயல்பு..அவர்கள் குற்றவாளிகளாகவே பிறக்கிறார்கள்.ஆம் இதை நீ நம்பித்தான் ஆக வேண்டும்..நான் என் இத்தனை வருட அனுபவத்தில் சொல்கிறேன்..அவர்கள் வளர்ப்பு குற்றத்தின் அளவுகளைத்தான் தீர்மானிக்கிறது.சின்னது பெரியது என..அவ்வளவே..அவர்கள் எந்த நல்ல பெற்றோர்களை பெற்றிருந்தாலும் நல்ல சூழ்நிலைகளில் வளர்ந்திருந்தாலும் அவர்கள் குற்றவாளிகளாகவே வளர்வார்கள்.அவர்களை கொல்ல நீ தயங்க வேண்டியதே இல்லை..