‘கொஞ்சம் சிறுசா’

பழுவேட்டையருக்கு உள்ளம் பொங்கியது. அடுத்தடுத்து வெறிகொண்டவர் போல் Savage Detectives வாசித்து முடித்து, 2666-ம் வாசித்துக்கொண்டிருந்தார். “எம்புட்டு பெரிய வீரன்டா.. நீ எழுத்தாளன் டா..” என்று வாய்விட்டுக் கூறினார். நெஞ்சு விம்மி அடைத்தது. …
நிஜத்தில், தாம் எவரையும் கொல்லவில்லை என்றால் தமது கதைகளில் இப்படி யாரை எல்லாம் அறச்சீற்றம் கொண்டு போட்டுத் தள்ளியிருக்கிறோம் என யோசிக்கத் தொடங்கினார். .

இந்திய மருத்துவத்தின் அடுக்குகள் 

இந்திய மருத்துவம் என அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகள் என்று ஆயுர்வேதத்தையும் சித்த மருத்துவத்தையும் கூறலாம். இந்த கட்டுரையின் பேசுபொருள் ஆயுர்வேதத்தை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும் சித்த மருத்துவத்திற்கும் பொருந்தும். இன்றைய காலகட்டங்களில் மரபான ஆயுர்வேதம், நவீன ஆயுர்வேதம், வணிக ஆயுர்வேதம், தன்னார்வத் தேர்வாக பின்பற்றப்படும் வீட்டு உபயோக ஆயுர்வேதம் என பொதுவாக ஆயுர்வேதம் நான்கு தளங்களில் புழக்கத்தில் உள்ளன என கூறலாம் என்கிறார் மானசி திரோத்கர்.

திமிங்கிலம்

உலகம் தழுவிய பேரழிவு எனும் பெரும் சோகத்தில் அவர்களுக்கென சிறு பங்கை ஒதுக்கிவிட்டு அவரவர் பணிகளுக்கு திரும்பியிருந்த போது, ஒருவாரம் கழித்து சிறு மிதவையை பற்றிக்கொண்டு உயிருடன் கரையடைந்தான். அப்போது திமிங்கிலம் என தலைப்பிட்டு பிரபல ப்ராக்ருதிஸ்தான் பத்திரிக்கை அவன் பிழைத்த நம்பவியலாத கதையை செய்தியாக்கியது. அந்தச் செய்தி கட்டுரை இப்படி துவங்கியது “திமிங்கிலம் பிரம்மாண்டமானது, அதனாலேயே தப்பவியலாதது, தின்று கொழித்து வளர்வது எனினும் இன்றியமையாதது”. இந்தக் கனவு அல்லது உருவெளித்தோற்றம் அவனுக்கு நன்கு பரிச்சயம் தான். எத்தனையோ வருடங்களாக மீள மீள உறக்கம் உண்ணும் அதே கனவு. இந்த கனவின் செல்திசையை, அதன் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அவன் நன்கறிவான். மரித்துப்போய் கல்லறைகளில் அறிதுயிலில் கிடக்கும் மூதாதைகளின் மட்கும் உடல்களை…

எல்லைகள் கடந்த எழுத்து

சென்ற ஆண்டு ரெய்த் உரைகளில் க்வாமி அந்தோணி அப்பையா ‘பிழையான அடையாளங்கள்’ எனும் தலைப்பில் விரிவாக உரையாற்றி இருக்கிறார். மனிதன் எல்லாவற்றிலும் ஒரேயொரு அடையாளத்தை மட்டுமே பேணியாக முடியும் என்பதில்லை என கருதுகிறார். ஒரே நேரத்தில் தான் ஒரு கானாக்காரன்னாகவும், ஆங்கிலேயனாகவும், அமெரிக்கனாகவும் இருக்க எந்த தடையும் இல்லை என்கிறார். அடையாள சிக்கல்களுக்கு தீர்வாக உலகம் தழுவிய மானுடத்தை முன்வைக்கும் ‘காஸ்மோபோலிடனிசத்தை’ முன்வைக்கிறார். ‘அமேரிக்கா’ காஸ்மோபோலிடன்களின் கனவு என கூறலாம். முத்துலிங்கத்தின் இலங்கைகாரி காணும் ‘அமெரிக்க’ கனவும் இது தான்.

பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்

நேயர் விருப்பம் போல “சாலா..கருப்பு நிலா பாடேன்..சாலா முத்தான முத்தல்லவோ பாடேன்” என ஒவ்வொருவராக பட்டியல் இட்டுகொண்டிருந்தார்கள். வள்ளி தூங்கினபாடில்லை. சிணுங்கி அழ துவங்கினாள். “அவளுக்கு அவ அய்யா பாடுனத்தான் தூக்கம்” என்றான் நானா. கால் நீட்டினால் சுவரிடிக்கும் அந்த வீட்டில், சம்மந்தியார்கள் மத்தியில் பாட அவருக்கும் சங்கட்டமாக இருந்தது. கொஞ்சிக்கொண்டு தூளியை அமைதியாக ஆட்டினாலும் அவள் தூங்காமல் ராங்கி செய்தாள். “சும்மா பாடுங்க அண்ணே” என்றாள் சம்மந்தியம்மா. அதே கட்டைக்குரலில் “ஆயர்பாடி மாளிகையில்..” என துவங்கி மூச்சிரைக்க பாடி முடிப்பதற்குள் வள்ளி உறங்கிவிட்டிருந்தாள்.

கடவுளின் வெண்கல கரமும், நீல நிற ஜீன்ஸ்களும்

ஸ்வெட்லான அலேக்சிவிச் சென்ற காலத்து சோவியத்தில் வளர்ந்தவர். தன்னை ஒரு ‘சோவோக்’ என்றே கருதுகிறார். ”அவருடைய பல்குரல் எழுத்துக்கு, நம் காலத்து வேதனைகளுக்கும் துணிவுக்குமான சின்னமாக” 2015 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் அவருடைய ‘Second Hand Time – Last of the Soviets’ எனும் நூலுக்காக கிடைத்திருக்கிறது. 1991- 2013 வரையிலான காலகட்டங்களில் ஸ்வெட்லானா பல்வேறு சோவியத் மனிதர்களை சந்தித்தபடி இருக்கிறார். இந்நூல் அவர்களுடனான உரையாடல்களின் தொகுப்பு.

ஆயுர்வேதமும் அறிவியலும் – 1

ஆயுஷ் மருத்துவர்களை நவீன மருத்துவம் புரிய அனுமதிப்பதால் என்ன சிக்கல் வரும்? நவீன மருத்துவர்கள் ‘மருத்துவ தரம்’ இழிந்து போவதை குறித்து எழுப்பும் சிக்கல்கள் ஒரு புறமிருக்கட்டும், மிக முக்கியமாக அது ஆயுஷ் மருத்துவ முறைகளை மொத்தமாக அழிக்கும். நவீன மருத்துவம் புரிய அரசாங்க அனுமதியுள்ள மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இதுவே நிகழ்கிறது. நவீன மருத்துவத்திற்குச் செல்ல செலவற்ற பின்வாசல் வழியாக இவை மாறிவிடும். உண்மையிலேயே ஆர்வம் உள்ள மருத்துவர்கள் சிறுபான்மையினராக எங்கோ ஒடுங்கிப் போயிருப்பார்கள்.

காளிங்க நர்த்தனம்

மாணிக்கத்திற்கு முப்பதோ முப்பதைந்தோ வயதிருக்கலாம். இந்திரா சவுந்தரராஜன் கதைகளின் வழியாக சித்தர்களின் உலகம் அவனுடைய பதின்ம வயதுகளில் பரிச்சயமானது. அங்கிருந்து கோடு பிடித்தாற்போல் மேலேறி ஜோசியம், சித்த மருத்துவம், யோகம், தியானம், யக்ஷி வசியம், ரசவாதம் என எதையெதையோ எங்கெங்கோ சென்று பயின்று வந்தான். புத்தகங்களைப் படித்து அவனே என்னென்னவோ முயன்றும் பார்த்தான். மண்டையோடுகளை வீட்டுக்குள் கொண்டு வந்தவன் ஏதோ வலிப்பு நோய்க்கு பற்பம் செய்கிறேன் என்று கிளம்பியது வரை ராமலிங்கப் பிள்ளை அவனை பெரிதாகக் கண்டித்ததில்லை

ஆரோகணம்

அந்த உயரத்திலிருந்து கீழ் நோக்கினால் எவருக்காயினும் மனம் சில கணங்கள் அதன் உச்ச விசையில் ஓடியடங்கும். எந்த நொடியும் விழுந்து விடுவோம் என்ற பயமும் அந்த உயரத்தின் பிரமிப்பில் கடந்து வந்த தொலைவை நோக்க வேண்டும் என்றொரு குறுகுறுப்பும்.  பாற்கடலை கடைந்த போது பொங்கிய நுரைத் துளிகள் எல்லாம் உறைந்த மலையாகிவிட்டன போலும், பனி மலையல்ல முடிவற்று நீளும் பனிக் கடல் என்று எண்ணிக்கொண்டார் அந்தக் கிழவர். வாழ்க்கையும் நினைவுகளும் எல்லாம் எங்கோ தொலைவின் அடிவானக் கிடங்கில் சென்று ஒளிந்துக் கொண்டன. காலமும், தேசமும், தொலைவும் எதுவும் அவருக்கு புலப்படவில்லை. ‘பட்’ ‘பட்’ இரண்டுமுறை அந்த ஒலியை செவிக்கு வெகு அருகில் கேட்டவுடன், அத்தனை ஆண்டுகளாக அந்தக் கனத்தை எதிர்கொள்ளும் போது உதிர்ப்பதற்காக சுமந்து இருந்த சொல்லை முணுமுணுக்க முயன்றது மட்டும் மங்கிய நினைவாக எஞ்சியிருந்தது.

ஒற்றன்

மனிதர்களையும் அவர்களது குணாதிசயங்களையும் நுணுக்கமாக பின்தொடர்கிறது அவருடைய மனம். சிறு சிறு சங்கடங்களையும் கவனிக்கிறது. வரிசையில் நிற்கும் பெண்ணின் காலத்தால் பிந்திய புகைப்படம் அவளுக்கு எழுப்பும் சங்கடத்தை உணர்த்துகிறார். ‘எனக்கு மனிதர்கள் பிரச்சனையாக இருக்கவில்லை. நிறையவே மனிதர்கள். கருப்பு, சிவப்பு, மஞ்சள், மாநிறம், கண்ணை பறிக்கும் வெள்ளை, ஆங்கிலம், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், கொஞ்சம் தெரிந்தவர்கள், நிரம்ப படித்தவர்கள், படித்தவர்கள் போலப் பாவனை செய்பவர்கள். ஆனால் துக்கம், சங்கடம் என்று வந்தபோது எல்லாரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள்.’

ஒரு குடும்பம் சிதைகிறது – எஸ்..எல்.பைரப்பா

எழுதப்பட்டு பலகாலத்திற்கு பின்னர் இன்று அது ஒரு பெண்ணிய பிரதியாக நிலைபெற்றிருக்கிறது என்கிறார் ஜெயமோகன். மனிதர்கள் மனிதர்களை கொன்றொழிப்பது எத்தனை விசித்திரமோ அப்படி பெண்ணின் இழிநிலைக்கு அவளே காரணமாவதும் பெரும் விசித்திரம்தான். அன்பும், தாய்மையும், கருணையும், புத்திசாலித்தனமும் ததும்பும் நஞ்சம்மா ஒரு முனை என்றால் மறுமுனையில் குரோதமும் முட்டாள்தனமும் நிரம்பிய கங்கம்மா.

நேர்காணல் – சங்கீதா ஸ்ரீராமுடன்

அங்கு பெரும்பாலும் மரம் நடச் சொல்வது, பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மட்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரித்தல், பெருநகரத்து நீர்வழிகளைச் சுத்திகரிக்கக் கோரிப் போராடுவது போன்ற மத்தியவர்க்கச் செய்ல்பாட்டாளரிய நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டு வந்தேன். ஆனால் அது ஒரு நல்ல அனுபவம். நிறைய நட்புகள் கிடைத்தன. இங்குத் தான் சூழலியல் சார்ந்த பாலபாடங்களைக் கற்றேன்.

அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை

ஆனால் எல்லாவற்றையும் கடந்து, எங்கோ எப்பொழுதோ ஒரு புள்ளியில் மனிதர்கள் வெறும் புள்ளிவிவரங்களாகவும், மரணங்கள் வெற்று எண்ணிக்கைகளாகவும் கணக்குகளாகவும் மற்றுமொரு சம்பவமாகவும் மாறி விடுகின்றன. ஆனால் மனிதனுக்கு வேறு மார்க்கமும் இல்லை. அவனும் சித்த தெளிவுடன் பிழைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு இருக்கிறதே!

மருத்துவர் இல. மகாதேவன் – பிஷக் உத்தமன் (மருத்துவர்களில் தேர்ந்தவன்)

நவீன உடற்கூறியல், உடலியங்கியல், நோயறிதல் போன்ற அறிவியல் துறைகளில் அபார திறமை கொண்ட அதே வேளையில் பாரம்பரியமான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகளிலும் அபார தேர்ச்சி கொண்ட ஆளுமைகள் இன்று இந்திய அளவில் வெகு சிலரே இருக்கக்கூடும். பெரும்பாலான நவீன மருத்துவர்களிடத்தில் பாரம்பரிய மருத்துவம் பற்றி மிகப் பிழையான கற்பிதங்கள் மட்டுமே இருக்கின்றன. இப்பக்கத்தில் ஆண்டிசெப்டிக் லோஷன் கொண்டு கை கழுவுவதுகூட ஆயுர்வேதத்தை அழித்துவிடும் எனக் கருதும் தூயவாதிகள். எவ்வகையிலான எளிய தர்க்கத்துக்கும்கூட ஆயுர்வேதம் உட்படுத்தப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.

சரக சம்ஹிதை

சரகர் கவிமனமும் உள்ளுணர்வும், தத்துவ நாட்டமும் கொண்ட ஆசான் அதன் காரணமாகவே சரகர் பிற ஆயுர்வேத ஆசான்களிடமிருந்து வேறுபடும் நுட்பமான தருணங்கள் பல உண்டு. சரகர் எனும் சொல் சர எனும் சம்ஸ்க்ருத வேர்சொல்லில் இருந்து உருவானது, சர என்றால் அலைந்து திரிந்தல் (சரியான சொல் நடமாட்டம், வழிதல் ) என பொருள் கொள்ளலாம், நாடெங்கும் தேசாந்திரியாக அலைந்து திரிந்ததால் அமைந்த காரணப்பெயர்தான் சரகர்.

தரம்பால் எழுதிய ’காந்தியை அறிதல்’

‘காந்தியை அறிதல்’ எனும் தரம்பாலின் புத்தகத்தில் ஏழு கட்டுரைகள் உள்ளன. எப்படிப்பட்ட சுயராஜ்ஜியம் காந்தியின் லட்சியமாக இருந்தது? தொழில்நுட்பம் குறித்த எத்தகைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் காந்தியின் சிந்தனையின் அடிப்படையாக இருந்தன? காந்திய லட்சியம் எப்படிப்பட்டது? காந்தியின் வாழ்வு நமக்கு உணர்த்தும் படிப்பினைகள் எத்தகையவையாக இருக்கின்றன? எதிர்காலத்தில் காந்தியம் எவ்வகைப்பட்ட வளர்ச்சி காண்பதாக இருக்க முடியும்? இந்நூலில் காந்தியம் குறித்த பல முக்கியமான, அடிப்படை கேள்விகளை விவாதிக்கிறார் தரம்பால்.

அகிம்சையின் வெற்றி

வன்முறையைத் தவிர்க்கும் அமைதிவழி எதிர்ப்புகள், குடிமக்கள் சமுதாயத்தின் எழுச்சிகள், ஒத்துழையாமை இயக்கங்கள் ஆகியன வரலாற்றில் என்ன பங்கு வகித்திருக்கின்றன, என்ன மாறுதல்களைக் கொணர்ந்திருக்கின்றன என்பனவெல்லாம் முறையான சோதனைக்கோ, ஆய்வுக்கோ ஆட்படுத்தப்படவில்லை. மாறாக ஆயுதப் புரட்சிகளெல்லாம் இறுதியில் வெல்கின்றன என்பது போன்ற ஒரு கருத்து சகஜமாக வன்முறை எழுச்சிகளையே அரசியலாகக் கொண்டவர்களிடமும் இருப்பதை நாம் எங்கும் காண்கிறோம். அது தற்செயல் இல்லை.