சஹாராவில் இருந்து அமெரிக்காவிற்கு

ஆப்ரிக்கப் புழுதிக்கும் அமெரிக்கச் செழிப்புக்கும் என்ன சம்பந்தம். நிறைய இருக்கிறது. வடக்கு ஆப்ரிக்காவின் மூன்றில் ஒரு பகுதியை அடைத்திருக்கும் சகாரா பாலைவனம் முழுக்கக் கொட்டிக் கிடப்பது மண். அந்தப் பாலைவனம் ஒரு காலத்தில் மழை தொடர்ச்சியாகப் பொழியும் பகுதியாக இருந்தது. ஒரு காலம் என்றால் உடனே மில்லியன் கணக்கில் எல்லாம் எண்ணாதீர்கள். ஆராய்ச்சிகள் 6000 வருடத்திற்கு முன்னர்தான் சகாரா முழு பாலைவனமாக ஆனதாகச் சொல்கிறார்கள். ஆனால் செத்தும் கொடுத்த சீதக்காதி கதையாய் அது அட்லாண்டிக் தாண்டி அமெரிக்காவிற்கு கொட்டிக் கொடுக்கிறது.

கடலிற்கான உரம், இரும்பு

நாம் சின்னப்பிள்ளையாக இருக்கையில் எதையேனும் போட்டு உடைத்துவிட்டு‌, பின்னர் யாரும் பார்த்து திட்டப் போகிறார்களே என்று அதை மீண்டும் பழையபடி ஆக்க முயன்று, முடியாமற்போய் கையைப் பிசைந்தபடி நின்றிருப்போம் அல்லவா? அப்படித்தான் பூமியை செய்து வைத்திருக்கிறோம். ஆரம்பித்த ஜோரில் ஜே‌ ஜே என்று‌ எல்லாவற்றையும் அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்து, “கடலிற்கான உரம், இரும்பு”

வாக்கு தவறாமை

“நீங்க குடுத்த காசுக்கு தென்ன மரச்சின்னத்துல ஒரு குத்து” என்று வாக்குச்சீட்டுகளில் சின்னத்தின் மேல் முத்திரையிட்டு பெட்டியில் போடும் தேர்தல் முறையை நாம் கடந்துதான் வந்திருக்கிறோம். மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தபின்பும் தோற்ற கட்சிகள் ஒரு தேய்ந்த ரெக்கார்டை ஓட்டுகின்றன. “எந்த பட்டன் அமுக்கினாலும் ஒரே கட்சிக்கு ஓட்டு விழும்படிச் செய்துவிட்டார்கள்” இந்தக் கூற்று எந்த அளவு சாத்தியம், அந்த வாக்குப்பதிவு இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது. கொஞ்சம் பார்க்கலாம்.

மருத்துவம் – அறிவும் அதிகாரமும்

தடுப்பு மருந்துகளால் பிள்ளைகள் இறந்து போயின என்கிறார்கள். இது மாதிரி பீதியைக் கிளப்ப நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தைகள் இறந்தது தடுப்பு மருந்துகளால் மட்டுமே என்று ஆதாரப்பூர்வமாக நிறுவ முடியுமா? கேட்டால் இவர்களே‌ மூடி மறைக்கிறார்கள் என்கிறார்கள். இவை எதுவுமே நிரூபிக்கப் படவில்லை. எல்லாமே தமிழ் கூறும்‌ நல்லுலகம் நன்கு அறிந்த ’நம்பகமான வட்டாரங்கள்’ (ரிலையபிள் சோர்ஸ்) சொன்ன கதை. இதனால் காப்பாற்றப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை பிரம்மாண்டமானது. தரவுகள் ரீதியாக இதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதன்மேல் நம்பிக்கையின்றி தடுப்பு மருந்துகள் போட்டுக்கொள்ளாமல் இருந்த ஆட்களையும் இந்த herd immunity என்னும் குழும நோயெதிர் திறன் காப்பாற்றி வந்திருக்கிறது.

கடல்‌ மத்துகள்

பரிணாமவியலின் தந்தை எனப் போற்றப்படுகிற சார்லஸ் டார்வின். அவரின் கவனிப்பு என்னவெனில் உங்கள் வீட்டுப் பூனை, எலிகளைக் கட்டுக்குள்‌ வைத்திருக்கும். எலிகள் போன்ற கொரித்துண்ணிகள்(rodents) மகரந்தச் சேர்க்கை செய்கிற பூச்சி மற்றும் வண்டுகளின் கூட்டை கலைப்பவை. அப்படி எலிகளின் எண்ணிக்கை‌ கட்டுக்குள் இருக்கிறதெனில் நிறைய மகரந்தச் சேர்க்கை நடக்கும். நிறைய மகரந்தச் சேர்க்கை‌ நிறைய செடிகளை, நிறைய பூக்களை உருவாக்கும். இங்கிலாந்து ஒரு படி‌மேலே போய், வீட்டில் பூனை வளர்த்தல்‌ நாட்டின் வளமான ராணுவத்திற்கு அவசியம் என நம்பினார்கள்.

மரங்கள் தூங்குமா?

பூவுக்குள் இருக்கும் மகரந்தம்‌ உலர்வாக‌ இருந்தால், பூச்சிகள் உடலில் எளிதாக ஒட்டிக்கொண்டு மகரந்தச் சேர்க்கை நடைபெறும்‌. இரவில்‌ மூடிக்கொள்ளுதல் மூலம் அது தன் மகரந்தத்தை பனியில் இருந்தும், குளிரில் இருந்தும் காத்துக்கொள்ள முடியும். தாவரத்தின் இலைகள் மூடிக்கொண்டு இரவு கீழ்நோக்கி தொய்யும்போது, தாவரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் விலங்குகளை, அவற்றை வேட்டையாடும் விலங்குகளைக் காட்டிக்கொடுத்துவிடும்

தடயவியல் விஞ்ஞானம் – பாலிமரேஸ் செயின் ரியாக்ஸன் (PCR)

இதை DNA fingerprint என்கிறார்கள். இந்த இரண்டும் இன்றைய குற்றவியல் வழக்குத் தீர்ப்புகளில் பெரும் மாற்றங்களை உண்டாக்கியவை. இந்தக் கைரேகையை பவுடர் அடித்து அச்செடுத்து வைத்துக்கொண்டால் எவ்வளவு பேருடைய கைரேகையுடனும் எந்தச் சேதாரமும் இன்றி ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஆனால் இந்த டி. என். ஏ அப்படி இல்லை. அங்கே கிடைக்கும் முடி, சிலசமயம் சண்டை அல்லது போராட்டத்தில்‌ நகத்துக்கிடையில் சிக்கும் சதைத் துணுக்கு, இரத்தம், பாலியல் பலாத்காரம் எனில் விந்து போன்ற உடல் திரவங்கள்.

அத்திப் பழமும் கூட்டுவாழ்வும்

இந்தத் தாவரவியல் மிகவும் விந்தையானது. நிறைய முரண்களை உடையது. ஸ்ட்ராபெர்ரி என்று நாம் சாப்பிடும் பழம், பெர்ரி வகையைச் சேர்ந்தது அல்ல. ஆனால் வாழைப்பழம் பெர்ரி வகையைச் சேர்ந்தது. சீதாப்பழம் என்பது ஒரே பழம் அல்ல. அது ஒரு கூட்டுக்கனி. Compound fruit என்பார்கள். சீதாப்பழங்கள் என்று எழுதவேண்டுமோ. தெரியவில்லை. கொஞ்சம்‌ விலை அதிகமாக இருந்தாலும் அதிகமாகச் சாப்பிடப்படும்‌ அத்திப்பழம் மற்றப் பழங்களைப்போல் பூப்பூத்து சூல்கொண்டு பழமாவதில்லை. என் வழி தனி வழி என்று அத்தி மரம் தனி வழி வைத்திருக்கிறது.