எங்கள் ரயில் டெல்லிக்கு 28 மணிநேரம் தாமதமாகச் சென்றது. அந்த 3 நாள் பயணம் ஒருவழியாக முடிந்தபோது எனக்கெல்லாம் வாழ்க்கையே வெறுத்துப் போனது. ஊருக்கு போயி மூணு நாள்ல கடிதம் வரும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா ஊருக்கு போகவே மூணு நாளா ? என்ன கொடுமை இது! பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல விரைவு ரயில்களில் பயணம் செய்திருக்கிறேன். நம்மூர் கொங்கன் ரயில் பாதையில் 100 கி.மீ வேகம் செல்லும் ரயிலில் பயணித்தேன். ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரிலிருந்து நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டெர்டாம் சென்ற ரயில் 220 கி.மீ வேகத்தில் சென்றது பிரமிப்பாக இருந்தது. பின்னர் பிரான்ஸ், பெல்ஜியம், ஜப்பான் என்று பல நாடுகளில் பயணங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் ஷாங்காய் நகரின் விமான நிலையத்துக்கு செல்ல அங்குள்ள மக்லேவ் ரயிலில் ஏறினேன். 42 கி.மீ தொலைவு கொண்ட அந்தப் பயணம் வெறும் 6 நிமிடங்களில் முடிந்தது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியையும், அந்த நாட்டின் மீது பொறாமையையும் ஏற்படுத்தியது.
Author: கிஷோர் மஹாதேவன்
மெய்நீட்சி (AR): இல்லை, ஆனால் இருக்கு
நீங்கள் வாசிக்கும் செய்தித்தாளில், இந்தியப் பிரதமர் பாராளுமன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு பற்றிய கட்டுரை வந்திருக்கிறது என்றால், அந்தக் கட்டுரைக்கு ஒரு QR குறியீடு இருக்கும். அதன் திசையில் உங்கள் நுண்ணறிப்பேசியை காட்டினால் பிரதமரின் சொற்பொழிவு பற்றிய விவாதங்களையோ, அல்லது சொற்பொழிவின் காணொளிக் காட்சியையோ பார்க்கலாம். … மெய்நீட்சி பொதுமக்களிடம் பிரபலம் அடைந்தது தொலைக்காட்சியில் தான். உதாரணமாக கிரிக்கெட் ஒளிபரப்பில் ஹாக்-ஐ (hawkeye) என்றொரு தொழில்நுட்பம் உண்டு. பேட்ஸ்மேனின் காலில் பட்ட பந்து ஸ்டம்ப்பை அடித்திருக்குமா என்று கணிக்க உதவும் தொழில்நுட்பம். பந்து காலில் படும் காட்சியை வைத்துக்கொண்டு, பந்தின் போக்கு (trajectory) எப்படி இருந்திருக்கக்கூடும் என்று வரைபடம் இட்டுக்காட்டும். அந்த வரைபடத்தின் மூலம் பேட்ஸ்மேன் ‘அவுட்’ அல்லது ‘அவுட் இல்லை’ என்று அம்பயர் தீர்ப்பளிப்பார்.