பருவநிலை மாற்றத்தின் கலங்க வைக்கும் உண்மை

இதுவரை நிகழ்ந்துள்ள உமிழ்வுகள் மட்டுமே உலகளாவிய தட்பவெப்பத்தை தொழில்மயமாவதற்கு முற்பட்ட நிலையோடு ஒப்பிட 1.5°C டிகிரி மேல் உயர்த்த வாய்ப்பில்லை. மனிதனால் ஏற்படும் புவிவெப்ப வாயுக்களின் உமிழ்வு உடனடியாக சூன்யத்தைத் தொட்டால், இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள 1°C என்ற அளவுக்கு மேல் தொடர்ந்து வெப்பமடைவதுஎன்பது அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் 0.5°C என்ற அளவே உயரக்கூடும் என்று ஐபிசிசி அறிக்கை கூறுகிறது. அதாவது, நாம் உடனே செயல்பட்டால், நிலைமையைச் சரி செய்யும் தொழில்நுட்பச் சாத்தியம் உண்டு. இதைச் சாதிக்கும் வகையில் வலுவான உலகளாவிய கொள்கைத் திட்டம் எதுவும் இல்லை என்பதே குறை.

மறைந்த நகரங்களும் பருவநிலை மாற்றமும்

ஹங்கேரிக்கு கிழக்கே இருந்த ஸ்டெப் புல்வெளிகளில் வரட்சி ஏற்பட்டபோது வேட்டைக்கார ஹனர்கள் மேற்குத் திசைக்கு தள்ளப்பட்டார்கள், அவர்கள் ரோமானிய பேரரசை அழித்தார்கள். எரிமலைகள் வெடித்தபோது புரட்சிக்கு முந்தைய பிரான்சில் பயிர்ச் சாகுபடி குறைந்தது, பசியால் தீவிரமாய் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. ஆனால் மனித வரலாற்றில் பருவநிலை ஒற்றைக் காரணியாக கிட்டத்தட்ட எப்போதும் இருந்ததில்லை.

பருவநிலை மாற்றத்துக்கு இந்தியா அளிக்கக்கூடிய விலை

இந்த ஆய்வு குறித்த விவாத பகுதியில் (‘Discussion’) கட்டுரையாளர்கள் அளிக்கும் பரிந்துரைகள் சிக்கலானவை- ஒவ்வொரு தேசமும் தன் கார்பன் உமிழ்வுகளின் மீது தன் கார்பன் சமூகவிலையைச் சுமத்தினால் (கார்பன் வரி என்று சொல்லலாம்), பயன் ஓரிடம் பாதிப்பு ஓரிடம் என்ற நிலையில் 5% மாற்றம்தான் ஏற்படும் என்கிறார்கள் (இந்தியாவின் கார்பன் சமூகவிலை 22% என்பதற்காக அது 22% கார்பன் வரி போட்டு பயனில்லை, அதன் உமிழ்வு கிட்டத்தட்ட 5% மட்டுமே. ஆனால் அதே சமயம் 30%க்கு மேல் கார்பன் உமிழும் சீனா 7% மட்டுமே கார்பன் சமூகவிலையும் கார்பன் வரியும் போட வேண்டியிருக்கும், இதனால் பயனில்லை.)